Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

41

"நானும் ஷிவானிய லவ் பன்றேன்" என அர்ஷா  கூறிய அடுத்த நொடி.. அமைதியாக கீழே பார்த்து கொண்டிருந்தவள்...
         அதிர்ச்சியாய் "என்ன??" என நிமிர்ந்தாள் அபி...

"ஹ்ம்ம்" என அசால்டாக தோளை குலுக்கியவனை, "என்ன சொல்லுறே?? அப்புறம் எதுக்கு என்ன மேரேஜ் பன்னிக்கிட்டே" என அபி பொறிய ஆரம்பிக்க... "இரி டி சொல்லுறேன்" என கூறி சொல்ல ஆரம்பித்தான்..

"நான் இங்க வந்த ஸ்டார்டிங்ல யாரும் சரியானு இல்ல.. பேசிருக்கவே மாட்டோம்... அவுங்க அவுங்க வேலைய அவுங்க அவுங்க பார்த்துட்டு இருந்துபோம்.. பக்கத்து வீட்டுல யாரு இருக்காங்கனு கூட கவனிக்கிறது இல்லை... ஒன்ஸ் நான் ஆஃபிஸ்க்கு போகுற வழில பைக் சரி இல்லனு நிப்பாட்டிருந்தேன்..
அப்ப ஏதோ சத்தம் கேட்டிச்சு...கொஞ்சம் தூரம் போய் பார்த்தேன்... அங்கே" எனவும்..
"என்ன ஆச்சி... ஏன் ஸ்டாப் பன்றே?" என அபி கேட்டாள்...

"ஹும்ம் இல்ல... அங்கே... நாலு பொண்ணுங்கள கை மாத்துனாங்க" என கூறியவனை... "வாட்?? அப்படினா என்ன?? புரியல" என்றவளிடம்.. "காலேஜ் படிச்சிட்டு இருந்த பொண்ணுங்கள லவ் பன்ன வச்சி ஏமாத்தி கூட்டிட்டு வந்து...கிடைக்குற காசுக்கு வித்துருவாங்க...அந்த பொண்ணுங்கள தப்பான இடத்துல வச்சு நல்லா காசு பார்ப்பாங்க" என்றவனின் கையை அபி பயத்தில் இறுக்கி பிடித்து கொள்ளவும்..."ஒன்னும் இல்லை அபி மா... நான் என் ஃப்ரெண்ட் ராகுல்க்கு ஃபோன் பன்னி விஷயத்த சொன்னேன்...அவன் போலிஷ கூட்டிட்டு வந்துட்டான்... அடிச்சு பிரிச்சி  மேய்ஞ்சிட்டாங்க... அந்த பொண்ணுங்களாம் சேஃப் தான்" என கூறினான்..

"ஓ" என்றவள்.. சிறிது நேரத்திர்க்கு பிறகு "ஆமா, இதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்மதம்...ஒரு வேலை ஷிவானி" என இழுத்தவளை..."இல்லை இல்லை...உன் காலி மண்டை எப்பையும் தப்பா தான் யோசிக்குமோ" என அபியின் தலையில் தட்டியவன்.."அந்த நாலு பொண்ணுல ஒரு பொண்ணு ஷிவானியோட கஸின்(cousin).. அவுங்க வீட்ல உள்ளவங்க இந்த விஷயம்லாம் தெரிஞ்சி நன்றி சொன்னாங்க.. அப்பதான் ஸ்ரேயா அம்மா வோட அறிமுகம் ஆச்சி.. ஷிவானி என் கிட்ட இது வர பேசுனது இல்ல.. பட் அவ நடவடிக்கைலயே... அவ என்ன லவ் பன்றானு நல்லா தெரியும்" என்றவனை...
"வாட்... அப்ப நீயும் லவ் பன்றேனு சொன்னா... இப்ப அவ லவ் பன்றானு சொல்லுறா" என புரியாமல் விழித்தவளை..
"ஹாஹாஹா" என சிரித்தான் அர்ஷா..

"சிரிக்காம சொல்லு டா பக்கி" என்ற அபியின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்தவன்.. "நான் உன்னை தவிர யாரயும் லவ் பன்னலே டி... நீ என்ன பன்றானு பார்க்க தான் அவள லவ் பன்றதா சொன்னேன்.. ஆனா, பேபி... உனக்கு வந்த கோவம் இருக்கே... ஹப்பப்பா... செம்மயா இருக்கு டி... என்ன ஒரு பதட்டம்.. பயம்" என கூறி கொண்டு போனவனை... "ஓய்... கனவு காணாதே.. அப்படிலாம் ஒரு பயமும் எனக்கு இல்ல... சரியா?? சும்மா கேட்டேன்.. அவ்வளவு தான்" என கூறி முகத்தை  திரும்பி கொண்டாள்...

"சரி பேபி... அதுலாம் போகட்டும்... மச்சான்க்கு இன்னைக்கு செம்ம மூடு வந்துருச்சு.. சோ" என இழுத்த அர்ஷாவை திரும்பி பார்த்தவள்... "இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்.. நீ என்ன சொன்னாலும் இதுல மாற்றம் இல்லை" என்றவன் எழுந்து சென்றான்...

அர்ஷா சென்ற திசையை  பார்த்த படி இருந்தவளுக்கு.. எங்கே இதயம் வெளியே வந்திடுமோ என்று எண்ணும்  அளவுக்கு பதட்டம் குடி கொள்ள... "நோ.. இந்த லூஸு ஏதோ உளறிட்டு போகுது... பக்கத்துல வந்தா மர்டர் தான்.. அபி.. பயப்புடாதே.. கூல்.. ரிலாக்ஸா இரி.. எதா இருந்தாலும் ஒரு கை பார்த்துக்களாம்" என எண்ணியவள் அமைதியாய் சமைத்து விட்டு வர.. இருவரும்  இரவு சாப்பிட்டு முடித்தனர்..

அபி வேகமாக தொலைக்காட்சியின் முன் அமர்ந்தவள்... என்ன பார்க்கிறோம் என  கூட தெரியாமல் ஒரு வித பதற்றத்தில் ஏதேதோ வைத்து பார்த்த படி இருந்தாள்..

"அபி" என அறையிலிருந்து அழைத்தவனிடம்.. "என்ன" என கேட்க.. பாவம்.. அது அவளுக்கே கேட்கவில்லை..
தொண்டையை சரி செய்தவள்.. "என்ன அர்ஷா" என கேட்கவும்.. "நான் உன் கிட்ட என்ன சொன்னேன்" என அர்ஷா கேட்டான்..

"என்ன.. அது.. அது வந்து" என அபி இழுக்க... "சொல்லு அபி.. நான் என்ன சொன்னேன்.. நீ என்ன செய்ஞ்சிட்டு இருக்கிறா" என முறைத்தவனை பார்க்க பயம் வர.. பதட்டத்தில் அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொன்டவளை.. ரசனையுடன் அவளை உற்று நோக்கி.. பயத்தில் அவள் முதுகில் வியர்த்திருந்த வியர்வை பார்த்தவனுக்கு.. சிரிப்பு வர... வாயை பொற்றிக்கொண்டு சிரித்த படி இரு கைகளையும் கால்களையும் விரித்து மடக்கி ஆட ஆரம்பித்தான்..

அவளோ... பதற்றத்தில் அர்ஷாவை கவனிக்காமல் இரு கைகளையும் பிசைந்த படி நிற்க.. இவனோ ஆடிக்கொண்டே.. "சொல்லு அபி" என கேட்க.. "அது வந்து" என அவனின் பக்கம் திரும்பவும்.. "என்ன?" என முறைத்தபடி கேட்டான் அர்ஷா..

"இல்ல அர்ஷா.. அது" என இழுத்தவளை...
"ஒரு க்ளாஸ் பூஸ்ட் கேட்டது தப்பா??.. அத கூட எடுத்துட்டு வர மாட்டிக்குரா??" என கேட்க... "ஹான்... என்ன?? அதுக்கா நீ என்ன கூப்பிட்டா?? பொய் சொல்லாத" என கேட்டவளிடம்.. "ஆமா அபி... அதுக்கு தான்.. நீ வேற எதுக்குனு நினைச்சா" என கேட்கவும் தடுமாறியவள்... "அது... அது.. அது" என இழுக்க.. "என்ன ஆச்சி மா?? ஏன் நீ இப்படி பயந்து போய்க்குறா" என எதுவும் தெரியாதது போல் தோளில் கை வைக்கவும்... "இல்ல அர்ஷா... அப்படிலாம் இல்லை... இதோ பூஸ்ட்  எடுத்துட்டு வரேன் " என கூறி தப்பித்தா போதும் என சென்று விட்டாள்..

"ஏன்  பேபி... உனக்கு என்ன பிடிச்சியுமே.. பிடிக்காத மாதிரி நினைச்சிட்டு இருக்கிறா?? உனக்கே தெரியலயா?? என்ன பிடிக்காதுனு சொல்றியே?? எந்த பெண்ணுக்கும் தனக்கு பிடிக்காத ஒருத்தன் தவறா பேசுனா கோபம் தான் வரும்... ஆனா, உனக்கு பதட்டம் தான் வந்துச்சி... அந்த பதட்டத்துல உன் வெட்கம் தான் டி எனக்கு தெரிஞ்சிச்சு... அதுவே சொல்லிருச்சி டி..  உனக்கு என்னை பிடிச்சிருக்குனு... அவன் மேல.. அந்த அக்ஸர் மேல உள்ள கோவத்துல நம்ம வாழ்க்கைய நீ நாசமாக்க பார்க்குரியே.. நான் சந்தோஷம் படனும்னு நினைச்சிட்டே எனக்கு கஷ்டத்த தரியே மா.. ப்ளீஸ் டா.. என் கிட்ட வந்துருடா.. உன்னை நீயே ஏமாத்திக்காதே டா" என எண்ணியபடி அறைக்கு சென்றான்..

ஏதேதோ யோசித்த படி புரண்டு புரண்டு படுத்தவள்... சரி.. நாளைக்கு பார்த்துக்கலாம் என ஏதோ முடிவெடுத்தவளாய் தூங்கினாள் அபி..

விடிந்ததும் வேகமாக எழுந்து அவசர அவசரமாக காலை உணவை தயராய் செய்தவள்... அர்ஷாவிர்க்கு தேவையானதையெல்லாம் வேக வேகமாக எடுத்து வைத்து  அவனை அனுப்புவதிலேயே குறியாக இருக்க... இவ என்ன இன்னைக்கு ஏதோ மாதிரி இருக்காவே.. இவ்வளவு பரப்பரப்பா திரியுரா?? என்னவா இருக்கும் என யோசித்தவன்.. சரி.. சரி... ஆஃபிஸ்க்கு டைம் ஆச்சி... நாம்ம கிளம்புவோம் என நினைத்தவன் அபிடம் கூறி விட்டு சென்றான்..

அவனை அனுப்பியதும்... வீட்டை ஒதுக்கி.. மதியம் சாப்பாடை தயார் செய்து முடித்தவள்... தனியாக இருப்பதால் சிறிது நேரம் பேசுவதர்க்காக ஷிவானியை அழைத்தாள்..

"நான் சொல்லுறத கேட்பியா ஷிவானி??" என கேட்ட அபியை கூர்ந்து பார்த்தவள்.. "என்ன விஷ்யம் கா?? ஏதோ தயங்குற மாதிரி இருக்கு" என ஷிவானி கேட்கவும்..
சற்று தடுமாறியவள்... "இல்ல... நீ அர்ஷாவ லவ் பன்றது எனக்கு தெரியும்" என அபி கூறவும்... அதிர்ச்சியாக பார்த்தவள் "இல்ல கா... அப்படிலாம் இல்ல" என தடுமாறினாள்..

"நீ பயப்புட ஒன்னும் இல்ல மா.. எனக்கு நல்லா தெரியும்.. ஒரு உண்மைய சொல்லனும்னா எங்க விருப்பம் இல்லாம தான் எங்க மேரேஜ் நடந்துச்சி.. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்ல.. நீ அர்ஷாவ லவ் பன்றா தானே... அவனை" என இழுத்து சற்று தடுமாறியவள்.. "அவனை நீ பார்த்துக்குவியா??" என கேட்டாள்...

"என்னக்கா சொல்லுறீங்க??" என அதிர்ச்சியாய் கேட்டவளை... "ஏதாவுது பன்னி நாங்க பிரிஞ்சிருவோம்... அப்புறம் நீ அர்ஷாவ கல்யாணம் பன்னிப்பியா.. அதுக்கு நீ இப்பவே அவன் மனசுல இடம் பிடிக்கனும்" என அபி கூறினாள்..

எதுவும் சொல்லாமல் அதிர்ச்சியாய் பார்த்தவளிடம்... "நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்ல.. நீ அவன லவ் பன்னிலே.. அவன் சந்தோஷம் உனக்கு முக்கியம் தானே... நீ தான் எனக்கு ஹெல்ப் பன்னனும்.. நீ அவனை கல்யாணம் பன்னிப்பியா??" என அபி கேட்க... சிறிது நேரம் யோசித்தவள்
"சரி கா" என சந்தோஷமாக சிரித்தாள் ஷிவானி..

"என்ன ப்பா சொல்லுறீங்க... விஷ்வா ஸ்வேதாக்கு  மேரேஜ் பன்னி வைக்க முடிவு பன்னீட்டாங்களா..  எப்படி?? என சந்தோஷமாக  கேட்ட அபியிடம்.. "ஆமா மா.. ஃபோர் ஏர்ஸ் கழிச்சு மேரேஜ் வைக்கிறதா முடிவு பன்னிக்கிறோம்... ஆனாலும், விஷ்வா பாவம் மா... நாலு வருஷம் நல்லா சம்பாதிச்சி அவங்க அம்மா வுக்கு வீடு கட்டி குடுத்துட்டு அவன் தங்கச்சிக்கு நூற் சவரன் நகை செய்ஞ்சி குடுத்துட்டு தான் அவன் ஸ்வேதாவை கல்யாணம் பன்னிக்கனுமாம்... அதுக்கும் விஷ்வா ஒத்துக்குட்டான்" என ராம் கூற.. "எப்படியோ ப்பா... அவன் ஆசை படி ஸ்வேதாவ அவன் மேரேஜ் பன்னிக்கிட்டா சந்தோஷம்" என கூறி அழைப்பை அணைத்தாள் அபி..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro