Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

39

காலை பத்து மணி அளவில் மைசூரில் வந்து இறங்கியவர்களை வரவேற்க்க வந்தான் அர்ஷாவின் நண்பன்...

"ஹ்ம்ம்...சொல்லாம கொல்லாம கல்யாணத்த முடிச்சிட்டு...இங்க வரத மட்டும் மெஸேஜ் பன்னிக்றியே டா" என ராகுல் கேட்க,.."அது ஒன்னும் இல்ல மச்சி...பெட்டிய தூக்க ஆள் வேணும்லே" என அர்ஷா பதிலில்..."அட பக்கி..."என அர்ஷாவின் முதுகில் அடித்த படி இருவரும் பேசிக்கொண்டிருக்க.. அபி அமைதியாக வந்தாள்...ராகுலின் காரில் ஏறி தங்களுடைய அப்பார்ட்மெண்ட்க்கு சென்று இறங்கினர்..

"யாரு சார்...இந்த பொண்ணு??" என அங்கே  உள்ள காவலாளி கேட்க.."நான் கட்டிக்கிட்ட பொண்ணு" என அர்ஷா சிரிக்கவும்..."ஒரு வார்த்தை கூட சொல்லலயே" என காவலாளி கேட்டார்..

"அடடா...அண்ணே...நீங்க வேற..எனக்கே தெரியாது...பொண்ணுக்கு என்ன ரொம்ப பிடிச்சிருச்சாம்...சும்மா ஊர்க்கு கூப்புடுற மாதிரி கூப்பிட்டு கட்டி வச்சிட்டாங்க...கடத்தல் கல்யாணம்ணா...நானும் பாவம் பொண்ணுனு வாழ்க்கை குடுத்துட்டேன்" என அர்ஷா கூறி கண்ணடிக்க..."அஹேன்..அஹேன்" என அபெ தொண்டையை கனைப்பது போல் செய்ய..."சரிண்ணே...மீதி கதைய அப்புறம் சொல்லுறேன்...வொய்ஃப் காலிங்" என கூறியவன்..."வா அபி" என சென்றான்..

"டேய் மச்சி" என்றபடி பின்னால் வந்த ராகுலிடம்..."என்ன டா" என்று கேட்க..."மேலே கொரிலா நிக்குது" என கூறி சைகை செய்ய...அர்ஷா மேலே பார்க்க...அங்கே சிவப்ப துப்பட்டாவை அணிந்து கொண்டு ஒருவள் முறைத்து கொண்டிருந்தாள்...அவளை பார்த்ததும் அபியின் தோளில் கை வைத்து தன் நெஞ்சோடு அணைத்த படி அர்ஷா செல்லவும்..
அபி விடுப்பட முயல...அர்ஷாவின் பிடியில் அது முடியாமல் போகவும்..
"டேய்...குரங்கு...கைய எடு டா..பக்கி...என்னை விடு டா" என அர்ஷாவிர்க்கு மட்டும் கேட்கும் படி திட்டியபடி வந்தவளை சட்டை செய்யாமல் நடந்தான்..

அவர்களின் ஃப்ளாட்க்குள் நுழையும் நேரம்.."வணக்கம்" என்று குரல் கேட்டு திரும்பி பார்த்து சிரித்தவன்."வணக்கம் மா" என்று கூறி சிறு நல விசாரிப்பிர்க்கு பின்..."இந்த பொண்ணு யாரு?" என கேட்டவர்...அவன் தலை சொரிவதை பார்த்ததும்..."ஹாஹா...என்ன பா...இப்படி வெக்கம் படுறா" என கேட்க..."அட...அதுலாம் இல்ல மா.. நீங்க வேற...ஷீ இஸ் மை வொய்ஃப்" என கூறவும்...இவ்வளவு நேரம் அருகில் இருந்து அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவள் பகீரென கண்கள் கலங்க தலை தூக்கி அர்ஷாவை பார்த்தாள்...

"ஒரு வார்த்தை கூட சொல்லாம மேரேஜ் பன்னிக்கிட்டீலே அர்ஷா" என கோவமாக திரும்பியவரை...சமாதானம் படுத்தினான்..

"நீ போ...நான் பொண்ணு கிட்ட பேசிக்கிறேன்" என கூறியவர்..."ஏன் மா... உன் பேர் என்ன மா??" என கேட்க..."அபி..." என கூற.."நல்ல பெயர்..அர்ஷாக்கு ஏத்த பொண்ணு தான்" என கூறியவர்..."ஷிவானி..ஜோடி பொருத்தம் அழகா இருக்குலே" என தன் அருகில் இருக்கும் மகளிடம் கேட்க..."ஹ்ம்ம்..ஆமா மா" என சிறு வலியுடன் கூறினாள்...

"சரி பா...ரொம்ப டையர்டா இருப்பீங்க..போய் ரெஸ்ட் எடுங்க...லன்ச்க்கு நம்ம வீட்ல தான் சாப்பாடு..வந்துரனும்" என கூறியவர்...சிரித்து விட்டு சென்றார்..

அவர்கள் வீட்டிர்க்குள் நுழைந்ததும் அபிக்கு தலையே சுத்தியது...வீட்டிர்க்குள்  நுழைந்ததும் கால் மிதியிலிருந்து அனைத்தும் தூசியாகவும்..அங்கு அங்கு பொருட்கள் சிதறியும்...கொடி மற்றும் நாற்காலியில் துணிகள் குமிந்தும் இருந்தது...சுற்றி முற்றி பார்த்தவள்..."என்ன டா இது...வீடா..இவ்வளவு கன்றாவியா இருக்கு" என முறைத்தவளை..."ஏன்...என்ன குறைச்சல்...நல்லா தானே இருக்கு" என்றவனை பார்த்தவள்..."உன் மூஞ்சி மாதிரி இருக்கு" என கூறி சென்றவளை.. "இப்ப எதுக்கு அபி...ரெஸ்ட் எடு..அப்புறம் க்ளீன் பன்னு" என கூறியவனை... திரும்பி பார்த்து முறைத்து விட்டு சென்றவள்... சிறிது நேரத்தில் ஒரு தொடப்புகட்டையை எடுத்து வந்து அர்ஷாவிடம் குடுத்தாள்..

"என்ன அபி இது" என்று கேட்பவனை.."வெலக்குமாரு டா...வீட்ட க்ளீன் பன்னு" என கூறிய படி ஒரு ஷோஃபாவை தட்டி சுத்தம் செய்து தொலைக்காட்சியை உயிர்பித்தவாரு அமர்ந்தாள்...

"எல்லாம் என் நேரம் டி" என புலம்பிவிட்டு வீட்டில் இருக்கும் தூசிகளை எல்லாம் தட்டி தூத்து விட்டு வந்து அபியின் முன் நின்று..."தூத்துட்டேன் அபி" என பல ஒட்றைகளுக்குள் மாட்டியபடி வந்து நின்ற அர்ஷாவை உற்று பார்த்தவள்.."பக்கெட்ல தண்ணி எடுத்துட்டு வரேன்...கழுவி விட்ரு" என எழுந்து சென்றவளை பாவமாக பார்த்து கொண்டிருந்தான்...

"சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டிப்பது நியாயமா?? நியாயமா??" என தொலைக்காட்சியில் ஓடும் பாடல்களை முனுமுனுத்தவாரு துள்ளி குதித்து  சென்றவள்..."ஆஆஆஆஆஆஆ" என கத்தினாள்..

அபின் கத்தலை கேட்டு பதறியடித்து வந்து பார்க்க...அவளோ இடுப்பில் கை வைத்து வலியில் முனங்கி கொண்டிருந்தாள்..

"என்னாச்சி மா" என பாவமாக பார்த்த அர்ஷாவை முறைத்தவள்...தரையில் போட்டிருந்த பல பலக்கும் கல்லை கையால் தொட்டு எடுத்து காண்பிக்க...தலையை சொறிந்தான்...

"இது தான் நீ தூத்து விட்ட இலட்சணமா..அவ்வளவும் தூசி" என முறைத்தவளை.."சரி எந்திரி மா" என கையை நீட்டியவனை தடுத்தவள்..எழுந்துக்க பார்க்க..வலியில் முகத்தை சுளித்தவாரு மறுபடியும் அமர்ந்தாள்...

அவளை பார்த்த படி இருந்தவனுக்கு ஏதோ பொறி தட்ட அமைதியாக சென்று அவள் அசரும் நேரம் அவளை தூக்கினான்...இதை சற்றும் எதிர்பாராதவள்..."டேய்..விடு டா...கீழே இறக்கி விடு டா..எருமை" என கத்தியவளை சட்டை செய்யாமல்..நெஞ்சோடு அணைக்க...வீட்டை சுத்தம் செய்வதால் மேலாடையை கலட்டியவன் வெற்று மார்போடு இருக்க..அவனை அப்பொழுது தான் சரியாக பார்த்தவள்...அவனின் கைக்குள் நெஞ்சோடு சாய்ந்தவாரு கண் சிமிட்டாமல் அவனையே பார்த்த படி இருந்தாள்...

அவளின் மாற்றத்தை கவனிக்காமல்...அறைக்குள் தூக்கி சென்றவன்..
என்ன...மேடம்..இவ்வளவு நேரம் திமுறுனான்ங்க...இப்ப அமைதியா இருக்காங்களே என யோசித்தவன்..
வைத்த கண் வாங்காமல் தன்னைப் பார்க்கும் தன் காதல் மனைவியை பார்க்க..அவளின் மூச்சு காற்று தன் மேல் படுவதில் தனக்குள் ஏற்படும் மாற்றத்தில்...என்ன செய்தால் தகும் என யோசித்தபடி இருந்தவன் பலதையும் நினைத்து திக்குமுக்காடி போனான்...

"மேடம்...இந்த பார்வையை நைட் வச்சிக்கோங்க...எனக்கும் வசதியா இருக்கும்...இப்ப நாம்ம இருக்கிற கோலத்துக்கு.." என கூறி கொண்டிருப்பவனின் வாயில் அவசரமாக கையை வைக்கவும் அவன் முத்திரையை பதித்தான்..

"டேய்..ச்சீ..எரும மாடு...இறக்கி விடு டா" என்றவளிடம்..."மாட்டேனே...இப்படியே சாய்ஞ்சிகோ"என்று மறுபடியும் நெஞ்சில் அணைத்தவனை அடிக்க ஆரம்பித்ததும் இறக்கி விட்டவன்...தைலம் இல்ல...பக்கத்து வீட்ல வாங்கிட்டு வந்துருரேன் என கூறி சென்றவன்...அதே வேகத்தில் திரும்பி வந்து...தேடிட்டு இருக்காங்க போல என உதட்டை சுளித்து அமர்ந்தான்..

"டேய்...யாரோ கதவ தட்டுறாங்க...போய் பாரு" என அபி கூறவும்..."டோர் ஓப்பன்ல தான் இருக்கு...உள்ளே வாங்க" என கூறியபடி அபியிம் வம்பு பன்னி கொண்டிருந்தான்..

"அர்ஷா...அங்க பாரு" என அபி கூறவும்  திரும்பியவனின் கைகளில்... கண்களில் சிறு கண்ணீருடன் தைலம் என கூறி குடுத்து விட்டு சென்றாள் ஷிவானி..























Jaymeeru இன் "எண்ணங்கள் அனைத்தும் ஏடுகளில்" (கவிதை) ku support seinga frndz


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro