32
நாட்கள் அதன் போக்கில் நகர...
ஒரு நாள் அபி வீட்டில் தனியாக இருந்தாள்...
சரி, யாரும் வீட்டில் இல்லை...இன்னைக்கு நாம்ம நிம்மதியா தூங்களாம் என பல கனவுகளோடு தூங்க செல்ல...கதவு தட்டும் சத்தம் கேட்டது...
ச்சே...நமக்குனு வந்து வாய்க்குதுங்க பாரு...சிவபூஜைல கரடி நுழைஞ்ச மாதிரி..
(எதுக்கெல்லாம் இந்த டயலாக் சொல்லனும்னு விவஸ்தை இல்லாம போச்சி😉😉😉)
வரேன் என்று கதவை திறந்தவள் முன்னால் இருந்தவனை பார்த்து...
ஹேய்...நீ எப்ப டா வந்தே..
சொல்லவே இல்லை..
அதிசியமா இருக்கு என குதூகலிக்க...
ஃபர்ஸ்ட் உள்ளே வா டி என கூறி முன்னாள் சென்றான்..
ஏன் டா...டல்லா இருக்குறே...எதுவும் ப்ராப்ளமா?? என அபி கேட்க..
அவன் அமைதியாக இருக்கவும்...
டேய் விஷ்வா சொல்லு டா என அபி கத்த..
அடியேய்...நானும் ஸ்வேதாவும் லவ் பன்றோம் டி என அபிவின் தலையில் பேரிடியை இறக்கினான் விஷ்வாஞஞ..
டேய்...என்ன டா சொல்லுறே என அபி அதிர்ச்சியாக கேட்க... ப்ராமிஸ்ஸா யாரு கிட்டையும் நீ சொல்ல கூடாது என்று அபியிடம் சத்தியம் வாங்கியவன்...
இந்த லவ் மேட்டர் தெரிஞ்ச மூனாவது ஆள் நீ தான் டி என விஷ்வா கூற... அப்ப ஃபர்ஸ்ட் ரெண்டு பேர் யாரு டா என கேட்ட அபியிடம்...நானும் ஸ்வேதாவும் என்றான்...
அடப்பாவி...ஏன் டா...என்னை கோர்த்து விடுறே...உங்க வீட்டுக்குலாம் தெரிஞ்சா எனக்கு சமாதி கட்டிருவாங்க டா என பயந்தவளை...எதுக்கு டி...நீ பயப்பிடுறே...இந்த லவ்க்கு ஃபுல் சப்போர்ட் நீ தான் குடுக்கனும் என்று மறுபடியும் ஒரு இடியை அபியின் தலையில் போட்டான் விஷ்வா...
அடேய்...ஏன் டா...உங்க லவ்ல என்ன இழுக்குறே என கேட்ட அபியிடம்...நீ தான் ஸ்வேதாவ லவ் பன்னுனு ஐடியா தந்தா என்க...அடப்பாவி...அப்படி ஒரு பொண்ணு இருக்குனு நியாபகம் தானே டா படுத்துனேன்...அதுக்குள்ள நீ என்ன டா பன்னி வச்சி தொலைச்சிக்கிறே என கூறவும்...
ஈஈஈஈஈ...பொறுமை டி...என் காதல் கதையை சொல்லுறேன் என கூறியவன்.. சொல்ல ஆரம்பித்தான்...
(உங்களுக்கு நான் கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சிலே...வாங்க தங்கங்களா....கதை சொல்லுறேன்😉😉)
ச்சே...நம்மளுக்குனு ஃபோன் வந்துருச்சி...புது நம்பரும் வந்துருச்சி...இப்ப யாரை ஓட்டி ஏமாத்தலாம் என தீவிர யோசனையில் இருந்தாள்...பதினெட்டு வயதே நிறைந்திருந்த ஸ்வேதா...
சிறிது நேரம் யோசித்தவள் சரி என வாட்ஸ் ஆப்பில் நுழைந்து அங்கு இருந்த ஒவ்வொரு காண்டேக்ட்டாக பார்த்தவள்...இவன் தான் ஓட்டுறதுக்கு சரியான ஆளா இருக்கும் என மெஸேஜ் அனுப்ப ஆரம்பித்தாள் ஸ்வேதா...
ஸ்வேதா: ஹாய் டார்லூ...
விஷ்வா: ஹாய்...
ஹு ஆர் யூ??
ஸ்வேதா: உன் ஆளு டா...அதுக்குள்ள என்ன மறந்துட்டியா??
விஷ்வா: யுவர் நேம் ப்ளீஸ்??
ஸ்வேதா: நீயே கண்டிபிடி பார்க்கலாம்..
விஷ்வா: சுபா..
ஸ்வேதா: நோ..
விஷ்வா: தனு
ஸ்வேதா: நோ..
விஷ்வா: கோயமுத்தூர் ப்ரியா..
ஸ்வேதா: நோ😠😠😠
விஷ்வா: லாஸ்ட் மன்த் எஃப் பி ல பேசுனோமே...சாலு தானே...
ஸ்வேதா: இல்லை டா குரங்கு😕😕
விஷ்வா: குரங்கா??
அப்ப நீ ரீட்டா தானே...
ரீட்டா மட்டும் தான் என்னை குரங்குனு சொல்லுவா...
ரீட்டா செல்லம்...
ஸ்வேதா: அடேய்...பிசாசே...உனக்கு மொத்த எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட் டா...
கருமம் கருமம்...இப்படி அடுக்குறே...
விஷ்வா: ஹலோ...எனக்கு உன்னையும் சேர்த்து..நிறைய பேர் இருக்காங்க...ஃபர்ஸ்ட் நீ யாருனு சொல்லுரியா??
ஸ்வேதா: டேய்...ச்சீ...நான் உன் கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல டா பக்கி...உன் மச்சி ஸ்வேதா டா..
விஷ்வா: (ஐயையோ...அசிங்க பட்டியே டா)
ஈஈஈஈஈ... ஸ்வேதா மா...எப்படி இருக்குறே..மாமா, அத்தைலாம் நல்லா இருக்காங்களா??
ஸ்வேதா: ...குட்..நீ??
விஷ்வா: இருக்கேன்..
ஸ்வேதா: ஏன் சலிச்சிக்கிரே...உன் பேச்சுலையே நல்லா தெரியுதே...நீ எப்படி இருக்கிறேனு...
விஷ்வா: ஹிஹி...அது சும்மா பொய்...வீட்டுல சொல்லிறாதே..
ஸ்வேதா: ஹ்ம்ம்..
இப்படியே இவர்களின் பேச்சு போய்க்கொண்டே இருந்தது..
ஒரு நாள் விஷ்வாவின் கனவில்...டேய்... ஸ்வேதா அழகா இருப்பா டா... நம்ம குடும்பம்... அவளை நீ மேரேஜ் பன்னிக்கிட்டா சூப்பரா இருக்கும் என அபி சொன்னது நியாபகம் வர பதறியடித்து விழித்தான்...
அடுத்து ஸ்வேதாவிடம் பேசும் போதுலாம்... அபி சொன்ன வார்த்தை மட்டுமே விஷ்வா மனதில் இருந்தது...
ஒரு நாள் ஸ்வேதா தன் தோழிக்கு அனுப்புறேன் என தெரியாமல் விஷ்வாவிர்க்கு ஒரு மெஸேஜை அனுப்பி வைத்தாள்...
அதை பார்த்தவனோ... ஸ்வேதாவின் வார்த்தையில் மயங்கி கிடந்தான்...
ஸ்வேதா: ஹேய்...சாரி...மெஸேஜ் மாத்தி அனுப்பிட்டேன்...சாரி...சாரி...
விஷ்வா: வில் யூ மேரி மீ??
ஸ்வேதா: வாட்??
விஷ்வா: அந்த இழிச்ச வாயனா நான் இருக்க ஆசை படுறேன் ஸ்வே..
ஸ்வேதா: வாயா மூடு நீ...டோன்ட் சேட் மீ..
ஸ்வேதா ஆஃப்ளைன் போனதும், அவள் அனுப்பிய மெஸேஜை பார்த்த படி இருந்தான்...
அதில்..."ஹாஹா...மச்சி...எனக்கு சேரிலாம் கட்டவே தெரியாது...அதுக்கு தான் ஒரு இழிச்ச வாயன் வருவான்லே...அவன் கட்டி விடுவான்...எங்கரெண்டு பேருக்குமே நல்லது"...
சும்மாவே அபி சொல்லிய வார்த்தையில் நின்றவன் அவளின் தோழிக்கு அனுப்பிய உரையாடல் அவனிர்க்கு வந்ததும் ஏதோ செய்ய... ஸ்வேதாவிடம் அப்படி கேட்டு விட்டான்...
விஷ்வா எவ்வளவோ முயற்சி செய்தும் ஸ்வேதா மெஸேஜ் அனுப்பவில்லை...
மூன்று நாள் கழித்து...
ஹேய்... ஸ்வேதா...நான் தான் சாரி சொல்லிட்டேன்லே...தப்பு தான்...பேசு என விஷ்வா மெஸேஜ் அனுப்ப...
உங்க அம்மா நம்ம கல்யாணத்திற்கு சம்மதிப்பாங்களா மச்சான் என ஸ்வேதாவிடமிருந்து பதில் வந்தது...
அதை கவணித்தும் கவணிக்காத விஷ்வா சாரி ஸ்வே... ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிரு மா... எனக்கு உன்னை பிடிச்சிருக்கு... ஐ லவ் யூ என கூற... நீ தான் பல பேர லவ் பன்னிக்கிறியே என ஸ்வேதா கேட்க... நாளு பேர் தான் மா... மத்ததுலாம் சும்மா ஃப்ரெண்டிஸ் மா என விஷ்வா கூற...
கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்😕😕 என இழுக்கவும்...நீ மட்டும் என்னை கட்டிக்கோ...நான் எந்த பொண்ணையும் திரும்பி கூட பார்க்க மாட்டேன்...ப்ராமிஸ் என விஷ்வா கூற...முடியாது..முடியாது என கூறி மனதிர்க்குள் சிரித்தபடி ஃபோனை அணைத்து விட்டாள்...
சிறிது நேரம் யோசித்த படி இருந்தவன்...அதுலாம் அம்மா வ சம்மதிக்க வச்சிரலாம் என்றென்னியவன்...ஹேய்..ஹேய்..
அவ என்ன சொன்னா...நம்ம கல்யாணத்திற்கு அம்மா சம்மதிப்பாங்களானு கேட்டாளா...ஓஓஓ...அப்ப அக்ஸப்ட் பன்னிக்கிட்டாளே.. அடிப்பாவி...சாரி கேட்டும் கண்டுக்காம போறாலேனு நினைச்சா...இப்படி புலம்ப வைச்சிட்டாளே என்றென்னியவன் தன் காதலை ஸ்வேதாவுடன் அழகாக தொடர்ந்தான்...
.
.
இதான் அபி நடந்துச்சி...அவ தான் நாங்க லவ் பன்றத உன் கிட்ட சொல்ல சொன்னா...நீ சப்போர்ட் பன்னுவானு சொன்னா என விஷ்வா கூற... அபி முறைத்தாள்...
(இன்னுமா இந்த உலகம் என்ன நம்புது-அபி மைன்ட் வாய்ஸ்)..
டேய்...என்னதான் இருந்தாலும் நீ பன்றது தப்பு...நீ மத்த பொண்ணுங்கள லவ் பண்ணும் போது, நான் சப்போர்ட் பன்னேன் தான்...பட் இது அப்படி இல்லை...
ஸ்வேதா...என் மச்சினாலும் அவுங்க அம்மா முடிச்ச வகைல கீழ் ஜாதி..உங்க வீட்டுல உள்ளவங்க ஜாதி பார்க்குறவங்க... உன்னை கண்டிப்பா ஸ்வேதாக்கு மேரேஜ் பன்னி வைக்க மாட்டாங்க... சொன்னா புரிஞ்சிக்கோ... இதை இதோட மறக்குறது தான் உங்களுக்கு நல்லது என அபி கூற...
அதுலாம் முடியாது என விஷ்வா பதில் குடுக்க...
இங்கே பாரு...நீ மத்த பொண்ணுங்கள லவ் பன்றது...அத விட்டுட்டு வர்றது...பிரியிறது என உனக்கும் அவுங்களுக்கும் ஈஸியா போயிடுச்சி...ஆனா, நம்ம வீட்டு பொண்ணுங்க அப்படி இல்லை...
நீ ஸ்வேதாவ லவ் பன்னிட்டு பிரிஞ்சீனா அவலாள ஏத்துக்க முடியாது... அவ மனசார இன்னொரு பையன ஏத்துக்க மாட்டாள்.. நம்ம வீட்ட பத்தினு இல்லை.. நம்ம ஊர பத்தி உனக்கு தெரியும்..
அப்புறம் நீ உங்க வீட்டு பேச்ச மீற மாட்டேனு சொன்னா... அவ என்ன பன்னுவா... காலம்... இப்படியே இருக்காது... அதை புரிஞ்சிக்க ஃபர்ஸ்ட்... இது சரி பட்டு வராது... இதுனால நம்ம குடும்பம் பிரிஞ்சிற கூடாது என அபி கூற...
நான் சத்தியமா சொல்லுறேன் டி... ஸ்வேதாவ கை விட மாட்டேன்... என் வீட்டை எதிர்த்தாச்சிம் அவளை மேரேஜ் பன்னிப்பேன் என விஷ்வா கூறவும்..
வாய மூடு... உனக்கும் சரி... அவளுக்கும் சரி...கல்யாணம் பன்ற வயசு இல்லை.. அவள கூட்டிட்டு போய்... நீ என்ன டா பன்னுவா... அவள உன்னால எப்படி காப்பாத்த முடியும்... காலம் எப்படி கெட்டு கிடக்குது.. .நீ போய் ப்ளாட் ஃபோர்ம்ல உங்க வாழ்க்கைய ஆரம்பிப்பியா... ப்ராக்டிகல்லா யோசி... லவ் பன்ற ஆள பாரு... பொறுமையா இரி... எக்குதப்பா ஏதாச்சும் பன்னா... இந்த நியூஸ்ஸ டேடி கிட்ட சொல்லிருவேன் என கூற...
எம்மா தாயே...நீ அதை மட்டும் செய்ஞ்சிறாதே...கண்டிப்பா தப்பா எதுவும் பன்ன மாட்டேன் என விஷ்வா கூற... சிறிது நேரம் இருவரும் பேசிய படி இருந்தனர்...
ஆமா.. அக்ஸர்க்கும் உனக்கும் என்ன ப்ராப்ளம் டி என விஷ்வா கேட்க...
அதுவா என ஆரம்பித்தவள்..
ஆரம்பத்திலிருந்து நடந்த அணைத்தையும் விஷ்வாவிடம் சொல்லி கொண்டிருந்தாள் அபி...
இப்படி பட்டவனை எப்படி அபி மறுபடியும் நம்புறே என கேட்ட விஷ்வா... அவள் கூறிய சில பதிலில் பேச்சடைத்து நின்றான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro