Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

18

என்னங்க...நீங்க தானே கடை எடுக்கிறதா சொன்னீங்க.. இப்ப அக்ஸர் சொன்னதா சொல்றீங்க என சீதா கேட்டார்...

அக்ஸர்க்கு தனி கடைனு வந்துருச்சினா  நல்லா இருக்கும்னு சம்மந்தி தான் சொன்னார்.. அவரு நல்லா இருந்தா நமக்கு சந்தோஷம் தானே என  கூறவும் ஆமா என தலையசைத்தார் சீதா..
.
.
.
அபி டிவி பார்த்து கொண்டிருக்க அக்ஸரிடம் இருந்து கால் வருது..
.
.
காலி(call)ல்:

அக்ஸர்: ஹாய்

அபி: ஹாய்.. என்ன பன்றீங்க??

அக்ஸர்: கடைல தான்...நீ என்ன பன்னிட்டு இருக்கிறா??

அபி: என்ன... சன் மியூசிக், இசையருவி, ராஜ் மியூசிக்,
எம் கே ட் யூனுஸ், ஜெயா மேக்ஸ்...இதுலாம் தான்..

அக்ஸர்: புரியலயே..

அபி: ஈஈஈஈஈ...சாங்ஸ் கேட்டுட்டு இருக்கிறேன்..

அக்ஸர்: ஹ்ம்ம்..அப்புறம்..

( வானவிலில் வானவிலில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மழையினில் மேகம் தூங்க மலரினில் வண்டு தூங்க
உன் தோளில் சாய வந்தேன் சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுள்ளே அள்ளி அணைப்பேன்...

இந்த பாடல் வரிகளை அபி மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தாள்)

அக்ஸர்: ஹேய்...சூப்பர் சாங்க்ல...இதுல ஜோ அழகா இருப்பாலே...ப்ளேக் கலர் ட்ரெஸ்...அவ வொய்ட்டா இருப்பா...சூப்பரா இருப்பாலே...

அபி: ஹ்ம்ம்...ஆமா...ஆனா, அதை விட சூர்யா செம்ம ஹேன்ட் ஸம்மா இருப்பான்...
அப்படி ஒரு அழகு...ப்பா...அவனை மாதிரி யாரும் இல்லைலே..
(எங்ககிட்டயேவா...மனதிர்க்குள் சிரிக்கிறாள்)

அக்ஸர்: ஹ்ம்ம்...சரி...சரி..போதும்..

(செம்பொன் சிலையோ
இவள் ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ
இவள் பெண்பால் வெயிலோ

நான் உன்னை போன்ற பெண்ணை கண்ட தில்லை
என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை...

அபி இந்த பாட்டை பாடிட்டு இருக்குறாள்)

அக்ஸர்: ஈஈஈஈஈ...நம்ம கீர்த்தி😍😍..

அபி: விஜை என்னமா இருக்கிறான்... வேஷ்டி ல... ச்சான்ஸ் லெஸ்😍😍

அக்ஸர்: (இதுக்கு மேலே வாயவே திறக்க கூடாது...பக்கி...நம்மல கலாய்குது😕😕)

( பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...)

அக்ஸர்: ஹேய்...எனக்கு ஒரு டவுட் அபி..

அபி: என்ன??

அக்ஸர்: இல்லை...இதுல ஜெயம் ரவி ஒரு லைன் பாடுறான்லே...அதுக்கு உனக்கு மீனிங்க் தெரியுமா...

அபி: எந்த லைன்??

அக்ஸர்: அதான்...
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...

அபி: (ஒன்னுமே புரியலையே...தப்பான மீனிங்கா இருக்குமோ...சரி...சமாளிப்போம்)
ஹ்ம்ம்...அதுலாம் சொல்ல மாட்டேன்...இந்த மாதிரி பேசுனா அப்புறம் ஃபோன கட் பன்னிடுவேன்...

அக்ஸர்: ஹ்ம்ம்..சரி..சரி..கூல்..

அபி: ஹ்ம்ம்(ஹப்பா...அசிங்கம் படலே)

அக்ஸர்: சரி சரி...நாளைக்கு நான் வரேன்...நீ மை, லிப் ஸ்டிக்னு அள்ளி போடாமே சிம்பிளா நீட்டா இரி...அது எனக்கு போதும்..

அபி: ஹாஹா...நினைப்பு தான் பொலைப்ப கோடுக்குமாம்...உங்க முன்னாடி அப்படியே நான் வந்துருவனாக்கும்..

அக்ஸர்: ஹேய்... அதையும் நான் பார்க்கிறேனே... நாளைக்கு நான் உன்னை பார்த்துருவேன்... இட்ஸ் எ சேலஞ்ச்...

அபி: ஹ்ம்ம்... ஓகே... ஓகே... அதையும் பார்க்கலாம்..

அக்ஸர்: சரி...சரி..வேலை இருக்கு...நாளைக்கும் டைம் இருக்காது...

அபி: ஓகே...ஓகே.. டேக் கேர்... டாடா...
.
.
.
நாளைக்கு அக்ஸர் கண்ணுல பட்டுறவே கூடாதுனு யோசிச்சிட்டு இருக்குறாள்..

அக்ஸர் சொன்ன மாதிரி மெஸேஜ், கால்...எதுவும் இல்லை...

அக்ஸர் வரானு வீட்டைலாம் ஒதுக்கி வைக்கிறதுலே அவளுக்கும் நேரம் சரியா போகுது...

அடுத்த நாள் சாயங்காலம் ராமிடம் இருந்து கால் வருது...

காலி(call)ல்:

அபி: ஹ்ம்ம்...சொல்லுங்க ப்பா..

அப்பா: ஹ்ம்ம்...வந்துட்டு இருக்கிறோம் மா..

அபி: சரி ப்பா..
.
.
என்ன தான் இருந்தாலும் ஒரு படப்படப்பு இருக்கு அபிக்கு...

அம்மா... அவுங்க வந்துட்டு இருக்காங்களாம்... அப்பா சொன்னாங்க என அபி கூறவும் சீதா வரவேற்க சென்றாள்..

அபி... அவளின் அறை கதவை மூடிட்டு உள்ளே இருக்கிறாள்...

அவளின் அறை கதவு திறந்தால் நேராக வாஷ் பேஷன் இருக்கும்...அறைக்கு அருகிலே பொது கழிப்பறை இருக்கும்...

அபியின் அறையில் மட்டுமே சேர்ந்து குளியலறை(attached bathroom) இருக்கும்..

அக்ஸர் வர சத்தம் கேக்குது...அவன் வந்து கை கால் கழுவிட்டு இருக்கிறான்... அக்ஸர்க்கு தெரியும்... இது தான் அபா அறைனு...அவன் ஏற்கனவே வந்திருக்கிறான்..(அதுனால தான் அபி அறையவே பார்த்துட்டே இருக்கிறான்) அவன் போய் வீட்டுல உள்ளவங்களோட பேசிட்டு இருக்கிறான்..

அபி என ராம் கதவை தட்டவும்... சொல்லுங்க ப்பா என கதவை திறந்தாள்... கை நிறைய பையுடன் இருக்கிறார் அபி...

இந்தா மா...அக்ஸர் உனக்குனு வாங்கிட்டு வந்தது என கூறி அபியிடம் குடுக்கிறார் ராம்...

இவ்வளவா மா...ஏன் இப்படி...இவ்வளவு செலவு என எடுத்து பார்க்க...
அதில்... ஒரு க்ரீடிங்ஸ் அதுக்குள்ள டைரி மில்க் பப்ள்ஸ்...

அப்புறம் ஒரு ஜோடி டால்ஸ் மிதிவண்டில இருக்கிற மாதிரியும்...அது ஒரு பூந்தோட்டம்ல இருக்குற மாதிரியும் க்ரிஸ்டெல்ல செய்ஞ்சது...

அப்புறம் ஒரு பாக்ஸ் ஃபுல்லா கேக், ஒரு பாக்ஸ் ஃபுல்லா லட்டு...மிக்ஷசர், சீவல், முறுக்கு, தட்டை...இதுல மட்டுமே பதினெட்டு வகை...இதை பார்த்துட்டு அபி பேந்த பேந்த முழிக்கிறா...

என்ன ப்பா... உங்க மருமகன் என்ன லூஸா... இப்படி காஸ(rupees) தண்ணீர் மாதிரி செலவு பன்றாங்க என கோவமாக கேட்டவளை பார்த்து சிரித்தவர்...சரி மா...வந்து டீ போட்டுட்டு கூப்பிடு என கூறி ராம் சென்றார்..
.
.
அபி போய் சாயா(டீ) போட்டுட்டு அப்பானு கூப்பிடுறா...அவங்க பேசுற சத்தத்துல அபி கூப்பிடுறது கேக்கலை..

எட்டி எட்டி பார்த்து அப்பானு கத்துறா( சமையலறையும் ஹாலும் நேராகவும் அதே சமயம் இரண்டிர்க்கும் அதிகமான இடைவெளி இருக்கும்...பார்த்தாலும் சரியாக தெரியாது)

அவளுக்கு நேராக அக்ஸர்தான் நிற்கிறான் என ஒரு அழவு யூகித்தவள் உள்ளே சென்றாள்...

ராம் வந்து சாயாவை எடுத்து சென்றதும்... அவளின் அறைக்கு சென்றாள் அபி..
.
.
அக்ஸர் ஹாலில் இருக்கிறான் எனவும்  டீவியை ஆன் செய்து  பாடலை வைத்தாள்..

(தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...)

இப்பொழுது அபிக்கு புரிந்து விட்டது.. ச்சீ...கர்மம்...கர்மம் என நினைத்த படி இருக்க அக்ஸரிடம் இருந்து மெசேஜ் வந்தது...
.
.
வாட்ஸ் ஆப் இல்:

அக்ஸர்: செம்ம பாட்டுலே...

அபி: (ஹ்ம்ம்...உம் மூஞ்சி...ரிப்ளை பன்னலே)
.
.
அம்மா...கொஞ்சம் தைலம் எடுத்து தா மா என கூறி... மாப்பிளைக்கு தலை வலிக்குதாம்... உன்னை பார்த்தா போயிடுமாம்... வர சொல்லவா என ராம் கேட்கவும்...போங்க ப்பா என சிணுங்கியவள் தைலத்தை எடுத்து குடுத்தாள்...
.
.
வீட்டில் இருக்கும் மற்றொரு அறையில் அக்ஸரை ஹாரூன் ஓய்வு எடுக்க சொல்லவும்... அறைக்குள் சென்றவன் அபிக்கு கால் செய்தான்..
.
.
காலி(call)ல்:

அக்ஸர்: உன்னை பார்க்கனுமே

அபி: ஹ்ம்ம்...முடியாது...

அக்ஸர்: தலை ரொம்ப வலிக்குது டி...
இங்கே பக்கத்தில கடையே இல்லையே டி..

அபி: ஏன்.. கடை..

அக்ஸர்: ......

(அவன் சொன்ன பதிலில் அபிக்கே தலை வலித்தது)...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro