13
தினமும் இரவு படுக்கும் போது அக்ஸரிடம் இருந்து மெசேஜ் வரும்... அபியும் அதை எதிர்ப்பார்த்தே காத்திருப்பாள்...ஒரு நாள் வராட்டாலும் தூக்கம் தொலைந்து போனது அபிக்கு...
வாட்ஸப்பிஸ் அக்ஸர்க்காக காத்திருக்க விஷ்வாவிடம் இருந்து மெஸேஜ் வந்தது..
.
.
வாட்ஸ் ஆப் இல்:
விஷ்வா: மச்சி
அபி: சொல்லு டா
விஷ்வா: என்ன டி... அக்ஸர் கூட பேசுனதுல இருந்து என்னை கண்டுக்கவே மாட்டிக்றா..
அபி: ஈஈஈஈஈ...அப்படிலாம் இல்லை டா..
விஷ்வா: பொய் சொல்லாத பக்கி... நம்ம ஃபேமிலி குரூப்ல எப்பையும் நீ இருந்தா தான் கலகலப்பா இருக்கும்..
இப்ப குரூப்ல எல்லோரும் உன்னை கேக்குறாங்க..
நீ ஆன்லைன்ல இருந்தாலும் குரூப்க்கு ரிப்ளை பன்ன மாட்டிக்றே...
அபி: டேய்...அப்படிலாம் இல்லை டா..
விஷ்வா: சரி...உன்னையாச்சும் உனக்கு நியாபகம் இருக்கா??
அபி: ஈஈஈஈஈ
விஷ்வா: ஏன் டி...இழிக்கிறே..
அபி: இல்லை டா...என்னைய நானே மறந்து பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கேன் டா...
விஷ்வா: ஏன் டி??
அபி: ஹிஹி...
நேத்து நான் ரசம் வைக்க புளி ஊற போட்டேன் டா..
புளியை கரைச்சி சட்டியில ஊத்துறதுக்கு பதிலா வாஸ்பேஸன்ல ஊத்திட்டேன் டா😂😂😂
விஷ்வா: ஹாஹா😂😂😂...
முடியல டி...உனக்கு முத்தி போயிருச்சி..
அபி: 😂😂😂...சரி சரி...
ஆனாலும் நான் எல்லோர் கூடவும் பேசதான் செய்வேன்...ஓகே வா..
விஷ்வா: ஓஓஓஓ
அபி: சரி...சரி...அக்ஸர் மெஸேஜ் பன்றாங்க...நான் அப்புறம் பன்றேன்..
விஷ்வா: ஹ்ம்ம்...கிளம்பு கிளம்பு...காத்து வரட்டும்..
அபி: போடா பக்கி...
.
.
.
அக்ஸர்: ஹாய்..
அபி: ஹாய்..
அக்ஸர்: ஆன்லைன்ல இருக்கீங்க போல..
அபி: ஹ்ம்ம்...எஸ்...என் பாய் ஃப்ரெண்டு கிட்ட பேசிட்டு இருந்தேன்..
அக்ஸர்: ஓ...அப்டியா??
அபி: ஹிஹி... சும்மா... மச்சான் கிட்ட பேசிட்டு இருந்தேன்...
அக்ஸர்: எந்த மச்சான்??
அபி: அத்தை மகன்... அப்பாட தங்கச்சி மகன்... விஷ்வா..
அக்ஸர்: ஓஓஓஓஓ....
அபி: ஹிஹி...என்னை விட சின்ன பையன் தான்..
அக்ஸர்: ஹாஹா...உன்னை பத்தி எனக்கு தெரியும்...நீ நல்ல பிள்ளை..
அபி: ஹாஹா...அப்டியா??
அக்ஸர்: ஹ்ம்ம்...எஸ்..
அபி: எப்படி சொல்றீங்க?? நான் குட் கேர்ள்னு..
அக்ஸர்: உன்னை என் கூட பேசவைக்கவே படாத பாடு படுறேன்...நீ எப்படி மத்த பசங்க கூட பேசுவா😂😂..
அபி: ஹாஹா...கரேக்ட் தான்...
அக்ஸர்: ஹ்ம்ம்...ஆனா, நான் கொஞ்சம் பேட் பாய்...
அபி: ஹாஹா...அப்டியா??
பார்த்தா அப்டி தெரியலயே...
அக்ஸர்: ஹ்ம்ம்...எனக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க... பொண்ணுங்க கூட நல்லா கடலை போடுவேன்...
அபி: ஓஓஓஓ..
(பரவாயில்லையே...உண்மைய ஒத்துக்குறானேனு நினைக்கிறா)
அக்ஸர்: ஹ்ம்ம்...எஸ்..
ஆனால், அதுலாம் ஒரு காலம்...இப்ப அதுக்கு எங்க டைம்...சைட் அடிக்கிறதோட சரி..
அபி: ஹாஹா..
அக்ஸர்: ஹ்ம்ம்...தென்...
அபி: தெரியலே...
அக்ஸர்: ப்ச்ச்...கம் ஆன் அபி... ஏதாச்சிம் இன்னைக்கு நீயா கேக்கணும்...கேளு இல்லாட்டி ஏதாச்சிம் சொல்லு...
அபி: ஹ்ம்ம்... நம்ம என்கேஜ்மென்ட்ல வைச்ச சீர்ல நீங்க என்ன செலக்ட் பன்னீங்க..
அக்ஸர்: உனக்கு வைச்ச ட்ரெஸ்..
அபி: எனக்கு எட்டு ட்ரெஸ் வைச்சாங்க...நீங்க எந்த ட்ரெஸ் செலக்ட் பன்னீங்க...
அக்ஸர்: சேரி...
அபி: ஹ்ம்ம்...பட்டு புடவையா??
அக்ஸர்: எஸ்...
அபி: ஹ்ம்ம்..
( நம்ம கிட்ட காஸ்மெடிக்ஸ் அக்ஸர் செலக்ட் பன்னதா அக்ஸரோட அம்மா சொன்னாங்க..
அக்ஸர் சேரி எடுத்ததா சொல்றாங்கனு யோசிக்கிறா)
அக்ஸர்: ஹ்ம்ம்...நீ எனக்கு என்ன செலக்ட் பன்னுனா??
அபி: சேர்ட்..
(சோப், சேம்ப்ல இருந்து நிறைய ஐட்டம் செலக்ட் பன்னாலும் அதைலாம் சொல்ல மனசு இல்லை..)
அக்ஸர்: ஓ...சரி..
உனக்கு நான் எப்படி இருக்கனும்னு ஆசை படுறே??
அபி: நல்லா பாசமா இருக்கனும்..
அக்ஸர்: அவ்வளவு தானா...ஹ்ம்ம்..
அபி: உங்களுக்கு எப்படி??
அக்ஸர்: என்ன சொல்ல சாங்க்ல வரும்ல...அந்த மாதிரி நீ இருக்கனும்...
அபி: அப்படியா...அப்படி ஒரு பாட்டு இருக்கா??
அக்ஸர்: ஹாஹா...விளையாடாதே அபி..
அபி: நிஜமா தெரியாதுங்க..
அக்ஸர்: சரி...ஃப்ளிம் நேம் தங்க மகன்..
அபி: ஓஓஓஓ
அக்ஸர்: ஹ்ம்ம்...யூ டியூப்ல பாரு...பார்த்துட்டு சொல்லு...
அபி: ஓகே...நான் நாளைக்கு பார்க்குறேன்...
அக்ஸர்: ஹ்ம்ம்...ஓகே..குட் நைட்..
அபி: ஹ்ம்ம்... ஓகே.. டாடா
.
.
.
.
அடுத்த நான் சீதாவிர்க்கு ராம் கிட்ட இருந்து கால் வந்து டென்ஷனா இருக்காங்க...
அபி என்னனு யோசிச்சிட்டு இருக்குறா..
......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro