Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் - 1

விகோரமான மஞ்சள் வர்ண சாயம் பூசிய அந்த அந்தி சாயும் தருணத்தில் சேனை வீரர்கள் பலரும் குறுதி ஆற்றில் மடிந்து கிடக்க... ரதங்களின் உடைந்த சக்கரங்களின் நடுவிலே குதிரையின் காலுடைந்து கீழ் விழுந்திருந்த தளபதியாரின் கரங்கள் மண்ணில் வீழ்ந்திட... விகார காட்சிகளுடன் தென்பட்ட அந்த மகா கொடூரமான போர் களத்தில் மெல்ல அசைந்தது அங்கு முறிந்து விழுந்திருந்த ராஜ்ஜிய கொடி...

நேரம் கொடுக்க கூட நேரமில்லாமல் வாள்களால் ஒவ்வொருவரையும் விலாசி கொண்டு ராஜ உடையில் கோதுமை நிற புறவி ஒன்றில் அதிவேகமாய் சென்று கொண்டிருந்தான் ஒரு ராஜகுமாரன்...

அவனது கண்களில் தெரிந்த வெறியும் வாள் சுழற்றும் வேகமும் சிப்பாய்களை நடுங்கிட செய்தது... கழுகுகள் பறந்திட... பருந்துகள் இரை காக்க துடித்த அந்த விகாரமான தருணத்தில் தன்னை சுற்றியிருந்த அனைவரையும் தன் படையுடன் வீழ்த்தி விட்டு கழுகு சின்னம் பொதிகப்பட்டிருந்த அந்த சென்னிற கொடியை ஆகாயத்தில் தூக்கி நிறுத்தினான் அவன்....

இருள் குமிந்திருந்த அறை திடீரென பிரகாசமடைய... அந்த பெரும் மேடையில் கொடி ஏந்தி நின்றவனின் சித்தரிக்க பட்ட உருவம் பிரதிபலிக்க... அதற்கு முன் ஒரு கோட் சூட் அனிந்த நடுத்தர வயது ஆண் நின்று கொண்டிருந்தார்...

அந்த அரங்கில் பல இளைஞர்களும் சில நடுத்திர வயதினவர்களும்... அனுபவமிக்க அலுவலர்களும் நிறைந்திருந்தனர்... உலக நாடுகள் அனைத்தினது தொற்பொருள் ஆய்வாலர் சங்க தலைவர்களும் அந்த மேடையில் அமர்ந்திருந்தனர்.... இப்போது அந்த காட்சி மேடையில் ஒளிபரப்பானது அந்த கொடியேந்தி நிற்கும் வீரனின் பெயர்....

மேடையில் நின்றிருந்தவர் இந்தியாவின் தொற்பொருள் ஆய்வாலர் சங்க தலைவர் பரத்வாஜ் சிங் ...

பரத்வாஜ் : வெல்கம் லேடீஸ் அண் ஜெண்டில் மென்ஸ்... ஸ்விட்ச் ஆன் யுவர் ட்ரன்ஸ்லேட்டர்ஸ் ப்லீஸ் என்க... அங்கு கூடியிருந்த அனைவரும் அவரவர் முன்னிருந்த ஒரு சிறிய மைக்குடன் ஒன்றப்பட்டிருந்த ஹெட்போன்சை காதில் மாட்டி கொண்டனர்...

பரத்வாஜ் : இப்போ நாம இவ்ளோ நேரமா பாத்துக்குட்டு இருந்தது நம்ம புராணங்கல்ல சொல்லப்பட்டு இந்த உலகே வியந்து பார்க்க வச்ச " கனையேந்திர போர் " ... இந்த போருக்கு கனையேந்தர்னு பேரு வந்தது.. அந்த போர் நடந்த இடத்துனாலன்னு நெனச்சிட்டு இருக்கோம்... ஆனா இல்ல... இவ்வளவு நேரமும் நாம பாத்துக்குட்டு இருந்த சித்ரிக்கப்பட்ட காட்சியில கழுகு சின்ன கொடிய ஏந்தி நின்ற வீரர் தான் கனையேந்திரன்... கனையேந்திரன் அந்த போர்ல ஜெயிச்சதால தான் இந்த போருக்கு இந்த பெயர் வந்ததுன்னு ஒரு உண்மை இருக்கு...ராஜகுமாரன் கனையேந்திரன் மற்றவர்கள போல சாதாரண வீரன் இல்ல... நம்ம புராணங்கள் படி... ஒரு முக்கிய வீரர் குறிப்பேடு இருக்கு...

5000 வீரர்களுக்கு சமமான வீரர் ரதி என போற்றப்படுவார்...

10,000 வீரர்களுக்கு சமமான வீரர் அதிரதி என போற்றப்படுவார்...

60,000 வீரர்களுக்கு சமமான வீரர் மகாரதி என போற்றப்படுவார்...

12 மகாரதிகளுக்கு சமமான வீரர் அதிமகாரதி என போற்றப்படுவார்....

பரத்வாஜ் : இதுல மகாரதியா போற்றப்பட்டவர் தான் இந்த கனையேந்திர ராஜகுமாரன்... கனையேந்திரன விட சக்திசாலியா வேற எந்த ஒரு வீரனும் இது வர பிறக்கல... என கூறிய அடுத்த நொடி அந்த அரங்கில் ஓங்கி ஒலித்தது " ஒருத்தன் பிறந்திருக்கான் " என்ற ஒரு ஆணின் குரல்....

அனைவரும் அந்த குரல் வந்த திசையில் திரும்ப... மொழியே அவன் தமிழன் என பரத்வாஜிற்கு தெளிவூட்ட... ஆறடி உயரத்தில்... கட்டுக்கோப்பான உடலில் நேர்த்தியாய் உடையனிந்து ... தமிழன் தான் என்பதற்கு அடையாளமாய் முறுக்கிய மீசையுடன் வெள்ளை வேஷ்டியில் மிடுக்காய் நின்றான் அவன் யதுவந்தன்

பரத்வாஜ் : ஹு ஆர் யு மன்... என இவர் தன் உரையை அவன் கெடுத்ததால் சற்றே எரிச்சலுடன் கேட்க...

யதுவந்தன் : ஐம் யதுவந்தன்... ஆர்க்யாலஜிக்கல் சைன்ட்டிஸ்ட் ஃப்ரம் தமிழ்நாடு..

பரத்வாஜ் : சரி உனக்கென்ன வேணும்..

யதுவந்தன் : எனக்கு எதுவும் தேவையில்ல ஸர்... உங்களுக்கு தான் இப்போ என் விளக்கம் தேவை... என சாதாரணமாய் கூற...

அங்கு கத்த இயலாத பரத்வாஜ் புசுபுசுவென மூச்சை இழுத்து விட்டவாறு ...

பரத்வாஜ் : கோ அஹெட்... என அனுமதி கொடுத்தார்...

யதுவந்தன் : நீங்க நினைக்கிர மாரி அந்த புராண வீரகணக்கு அதிமகாரதியோட முடிவடைல... இன்னும் ஒரு கணக்கு இருக்கு... என்க... அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்கு அவன் உடையும் அவன் பேச்சும் ஏதோ அவர்களின் தற்பெருமையை குறைப்பதை போல் உணர்ந்து ட்ரன்ஸ்லேட்டரே ஆஃபானதை போல் காது கேட்காது அமர்ந்திருந்தனர்...

அஃப்கானிஸ்த்தானிலிருந்து வந்திருந்த தொற்பொருள் ஆய்வாலர் சங்க தலைவர் அவனது கூற்றில் ஏதோ உள்ளதாய் தோன்ற... அவரது ஆளுமை சக்தியை கொண்டு அனைவருக்கும் அது நன்கு கேட்கும் படி ஸ்பீக்கரை உயிர் பித்து வைத்தார்....

யதுவந்தன் : 24 அதிமகாரதிகளுக்கு சமமான அதாவது 14 லட்சம் வீரர்களுக்கு சமமான வீரர் மகாமகாரதி...

பரத்வாஜ் : ஹே நிறுத்து மேன்... அதிமகாரதின்னு யாருமே இல்ல...

யதுவந்தன் : இருக்கான் ஸர்... இருந்தான்... ஒட்டு மொத்த உலக கண்டங்களையும் கடல் தாண்டியும் தனி வீரனாய் எதிர்த்து நின்று தன் ஆளுமையினடியில் நிறுத்திய ஒரே மகாமகாரதியும் தமிழகத்தின் மாவீரனுமான மகராஜ முடி இளவரசன் ஆராத்திரிய சக்ரவர்த்தன் என நிமிர்ந்து நின்ற கூற... அவனின் இந்த கூற்று அந்த அரங்கே அதிர அளுத்தமாய் ஒலித்தது...

ஆராத்திரிய சக்ரவர்த்தன் என்ற பெயரை கேட்ட அனைவருள்ளும் ஒரு பிரளயம் உருவாக... இளைஞர்கள் அனைவரின் உடலும் சிலிர்த்தடங்கியது...

பரத்வாஜ் வாய் திறக்க இயலாமல் வாயடைத்து நிற்க... நாடுகளின் தொற்பொருள் மைய தலைவர்களின் இடையிலிருந்து இரு வேறு நாடுகளின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் பார்த்து கொண்டனர்...

யதுவந்தன் : நீங்க சொல்ற ராஜகுமாரன் கனையேந்திரன் எப்படி இறந்தார்னு உங்களுக்கு தெரியுமா ஸர்... என நேருக்கு நேர் கேட்டதற்கு பரத்வாஜின் தலை தானாக இடவலதாய் ஆட...

யதுவந்தன் : உலகறிந்திடா மாபெரும் இரகசியமிது... ராஜகுமார கனையேந்திரனும் மகராஜ முடி இளவரசன் ஆராத்திரியனும் ஒரே காலக்கட்டத்த சேந்தவங்கன்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா... என கேட்டதில் அங்கிருந்த பழருக்கும் உடலில் உதறலெடுக்க... இளைஞர்களுக்கு இரத்தம் சூடு பிடித்தது...

பரத்வாஜ் : ஹே நிறுத்து மேன்... விட்டா கனையேந்திரன வதம் செஞ்சதும் உன்னோட சோ கால்ட் இளவரசன் ஆராத்திரியன் தான்னு சொல்லுவ போல... என அலட்சியமாய் கேட்க... சற்றும் தாமதிக்காமல் வெளியேறியது யதுவந்தனின் பதிலடி...

யதுவந்தன் : வொய் நாட் ... என்றவனை பரத்வாஜ் மூக்கு விடைக்க பார்க்க... அந்த தலைவர் கூட்டணியில் இருந்த அவ்விருவரின் பார்வை மரியாதையுடன் அவனை தீண்டியது...

பரத்வாஜ் : பொழுது போக்குக்கு இங்க வந்தியா... கனையேந்திரனால தான் கனையேந்திர போர் நடந்துதுங்குரதுக்கான புராண சான்றுகள் இருக்கு... நீ சொல்றவன் இருந்தாங்குரதுக்கு என்ன எவிடென்ஸ் இருக்கு...

யதுவந்தன் : "அவனது நாமம் கிடைக்கப்பெற்ற பேருக்கும் புகழுக்கும் வேறூன்றி அவன் மரபில் உதித்த நம்மிள் தோன்றும் பெயரில்லா உணர்வின்றி வேறென்ன சான்று வேண்டும் அவன் புகழ் பாடிட.... "அப்டீங்குர வசனத்த நீங்க சொன்ன அதே புராணத்துல இங்க இருக்குர எல்லாரும் எல்லா மொழியிலையும் படிச்சிர்க்கீங்க இல்லையா... என புகல்பெற்ற அந்த வசனத்தை பற்றி கேட்டதும் அதை கட்டாயமாய் அறிந்திருந்த அனைவரும் அமோதிப்பதாய் தலையாட்ட....

பரத்வாஜ் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் மேன்... ராஜகுமாரன் கனையேந்திரன் மர்மமா இறந்த கூற்ற விளக்குரதுக்கு கீழ தான் இந்த புகல்பெற்ற வசனம் இருக்கும்... அதுவும் கனையேந்திரன தான் குறிக்கிது.... என இவர் மீண்டும் இடையில் புகுந்து குட்டையை குழப்ப...

யதுவந்தன் : ராஜகுமாரன் கனையேந்திரன பத்தி உலக மக்கள் எல்லாருமே தெரிஞ்சி வச்சிர்க்கோம்... ஆனா ஆராத்திரய சக்ரவர்த்தன பத்தி இங்க யாருக்கு என்ன தெரியும்... என கேட்டதற்கு பரத்வாஜால் வாயை திறக்க முடியவில்லை...

அஸம் மாநிலத்திலிருந்து வந்திருந்த ஒரு தொற்பொருள் ஆய்வாலினி எழுந்து நின்று கேள்வி எழுப்பினாள்...

அப்பெண் : நீங்க சொல்றதெல்லாம் சரி... நீங்க சொல்ற மாரி எங்களுக்கு ஆராத்திரிய சக்ரவர்த்தன பத்தி தெரியாதது உண்மை தான்... ஆனா நீங்க சொன்ன அந்த வசனத்துக்கும் ஆராத்திரிய சக்ரவர்த்தன்க்கும் என்ன சம்மந்தம்... என சரியாய் அவன் கூற்றை உணர்ந்து அவள் மொழியினில் கேட்க... அதை மொழிபெயர்த்தலின் மூலம் புரிந்து கொண்ட யதுவந்தனும் தன் உரையை தொடர்ந்தான்...

யதுவந்தன் : உலக நாடுகளோட அனைத்து மொழியிலும் இந்த புகழ்பெற்ற வாக்கியத்தோடு பொருள் அதே வாக்கியத்தை மொழி பெயர்த்து வந்ததா தான் இருக்கும்... ஆனா தமிழ் மொழியில இந்த வாக்கியத்துக்கு வேறொரு பொருளும் இருக்கு... அந்த வாக்கியம் தமிழ் மொழியிலிருந்து எழுந்ததுங்குர உண்மை நான் சொல்லி தெரியனும்னு இல்ல... என நிறுத்த... சுற்றியிருந்த அனைவரும் அவன் கூறப்போகும் பொருளிற்காய் காத்திருக்க... அந்த இரு வேறு நாட்டு தலைவர்களோ புருவம் சுருங்க அமர்ந்திருந்தனர்...

யதுவந்தன் : " மண்ணில் மறைந்த அவனின் நாமம் கிட்டிய புகழுரைக்கு நிகரகாது அவனை பற்றிய விளக்கங்கள்... "

இந்த கூற்றை செவி மடுத்த அனைவருக்கும் ஆராத்திரியனின் மீது அவர்களறியாது ஒரு பயத்திரை உருவாக... உறைகளிலே அவனை இமையத்தில் வைத்து மொழிந்திருக்கும் அக்காலத்தவர்களின் குணங்களையும் தைரியத்தையும் உணர்ந்து மகராஜ முடி இளவரசனை எண்ணி அஞ்சினர்...

யதுவந்தன் : மண்ணில் மறைந்த அவனின் நாமம்ன்னு குறிக்கிரது ஆராத்திரிய சர்வர்த்தன தான்னு இதுவர யாரும் ஒத்துக்கல... ஆனா உண்மைய யாராலையும் மாத்தவும் முடியாது இல்லையா... உலகறியா மாவீரன் அவன்... ஆராத்திரிய சக்ரவர்த்தன பத்தி யாருக்கும் தெரியாம இருக்கலாம்... ஆனாலும் இன்னை வரைக்கும் அவனோட ஒற்றை பெயருக்கே இருந்த.. இருக்குர.. இருக்க போற மரியாதையும் கம்பீரமும் பயமும் நிமிர்வும் இனிமே யாருக்கும் வராதுங்குரது தான் என்னோடைய கருத்து... கனையேந்திர ராஜகுமாரன உலக மாவீரன்னு சொல்றது வரலாற தப்பாக்குரதால என்னோட உரை அதை மாத்தும்னு நம்புறேன்... நன்றி... என்றதோடு அவனிருக்கையில் அமர்ந்து கொண்டான்...

பரத்வாஜின் பார்வை யதுவந்தனை கோவமாய் தீண்ட... மற்ற அந்த குறிப்பிட்ட இரு நாட்டு தலைவர்களின் பார்வை அவனை தீவிரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தது...

அந்த அரங்கத்தின் அமைதி சில நிமிடங்கள் நீடிக்க... அங்கு கூடியிருந்த அனைத்து நாட்டின தொற்பொருள் ஆய்வாலர்களின் மனதிலும் ஆராத்திரிய சக்ரவர்த்தன் என்னும் நாமமே ஒரு பிரளயத்தை உண்டு செய்திருக்க... அவன் வாழ்ந்த வாழ்கையில் அவனை நேரில் கண்ட அனைவரும் எப்படி இருந்தனரோ என அவனை தங்களே அறியாது மெச்சி கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்...

தன் வேக எட்டுக்களுடன் அந்த அரங்கிலிருந்து வெளியேறிய யதுவந்தனின் பின் அவன் நடைக்கு நிகராய் நடக்க இயலாமல் ஓடி வந்தனர் அவனது தனி உதவியாளர்கள்... இருவத்தி நான்கு வயது ஆணும்... இருவத்தி இரண்டு வயது பெண்ணும்..

அவன் : ஏ கவி... இந்த பாஸ் ஏன் டி இந்த ஓட்டம் ஓடுராரு... என்னால முடியல டி... என ஓட இயலாமல் தன் நண்பியிடம் புலம்ப.... கவி என செல்லப்பெயர் கொண்ட அவள் சங்கவி...

சங்கவி : ம்க்கும் அவரு நடந்து தான் டா போறாரு... நாம தான் ஓடுரோம்... நான் இங்கேயே உக்காந்துரேன் டா மதன்... என புலம்பியறு அமர போக... அவள் கையை இழுத்து மீண்டும் ஓட வைத்தான் மதன் என்னும் மதனவிஷால்....

இவர்கள் ஓடிய ஓட்டத்தில் சட்டென யதுவந்தனின் நடை தடைப்படவும் மதன் ப்ரேக் போட்டு ஓட்டத்தை நிறுத்த அவனை இடித்து கவி நின்றாள்...

யதுவந்தனின் முன் இலங்கை நாட்டு தலைவரும் அஃப்கானிஸ்தான் நாட்டின் தலைவரும் நின்றிருந்தனர்.. அவர்களை கண்டு அவனின் புருவம் வளைய... மரியாதை நிம்மித்தமாய் நிமிர்ந்து நின்றான்...

அஃப்கானிஸ்த்தான் தலைவர் துவாரகவிமான்... இலங்கை தலைவர் ஹஸ்வாக்மிஸ்கின்...

ஹஸ்வாக் : வெல்டன் யங்மேன்... உன்ட விளக்கத்திலும் செயலிலும் ஒரு அழுத்தமும் உண்மையும் இருக்கு... இண்டியா ஹெட் பரத்வாஜ் உன்ன ஏசினாலும் பொருமையோட அதிக தெளிவாவே கதைச்சப்பா.. ஐம் ப்ரௌட் ஆஃப் யுவர் சின்சியரிட்டி...

யதுவந்தன் : நன்றி ஸர்... என குறுநகையுடன் கூறினான்..

துவாரகன் : அண் ஐம் சோ ஹப்பி அண் அட்மைர்ட் பை யு மை சைல்ட்...

யதுவந்தன் : தன்க்யூ ஸர்... என் கிட்ட எதாவது கேக்கனும்னா கேளுங்க ஸர்... என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்...

துவாரகன் : ம்ம் க்ளெவர் மேன்... ஓக்கே நேராவே விஷயத்துக்கு வரோம்... மகாமகாரதி மகராஜ முடி இளவரசன் ஆராத்திரியன பத்தி உனக்கெப்டி இவ்ளோ தெரியும்...

யதுவந்தன் : தமிழ்நாடும் இலங்கையும் முன்ன குமரிகண்டம் அதாவது லேமூரியா கண்டத்தோட ஒன்றி இருந்த காலக்கட்டத்துல இருந்து இன்னைக்கு வர இருந்து வர ஒரு சின்ன கிராமத்துக்கு போனப்போ தான் ஆராத்திரியன பத்தி தெரிஞ்சிக்கிட்டேன் ஸர்...

ஹஸ்வாக் : ஆனா ஆராத்திரயன பத்தி ஆராய்ச்சி செய்றதுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தற வாய்ப்பில்லையேப்பா... பின்ன எப்டி இவ்வளவையும் கண்டுப்புடிச்ச...

யதுவந்தன் : சட்டப்படி எங்க ஒட்டு மொத்த டீமோட ஆராய்ச்சி செய்ய அவங்க அனுமதி கொடுக்கல தான் ஸர்... ஆனா நா தனி ஒருத்தனா பன்றத அவங்களால தடுக்கவும் முடியல... கிராம தலைவரோட அனுமதியோட அத ஆய்வு செய்ய ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ள இவ்வளவையும் தெரிஞ்சிக்கிட்டேன்...

துவாரகன் : வெல்டன்... வெல்டன்... ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. ஆராத்திரியனோட வரலாறு உலகத்துக்கு தெரிய வந்தா இந்த உலகத்தோட மறைஞ்சு போன அந்த மாவீரன் தமிழன்ங்குர பெருமையும் புகழும் எல்லாரு மனசுலையும் நிக்கும்... என ஏதோ ஒரு நம்பிக்கையுடன் கூறினார்...

யதுவந்தன் : அந்த இரகசியம் தெரிய வர்ரதுக்கு நிச்சயமா அனுமதிக்க மாட்டாங்க ஸர்...

ஹஸ்வாக் : ஏன்ப்பா இப்டி சொல்ற...

யதுவந்தன் : இரு நாட்டு தலைவர்களான உங்களுக்கே அனுமதி கிடைக்காதப்போ நா தமிழ்நாட்ல ஒரு ஆய்வாளன் மட்டும் தானே... என்க... இவனது கூற்றில் நாழ்வருமே அதிர்ந்தனர்...

துவாரகன் : நாங்க ஆய்வு செஞ்சிது உனக்கு எப்டி தெரியும்...

மதன் : அதான... இவருக்கு எப்டி டி இதெல்லாம் தெரியும்... என கவியின் காதை கடிக்க...

கவி : நா என்ன ஜோசியமா பாக்குகேன்... என்ட்ட கேக்குற... அவரே சொல்லுவாரு பாரு...

யதுவந்தன் : ம்ம் மகாமகாரதி மகராஜ முடி இளவரசன் ஆராத்திரியன்னு முழுசா நீங்க சொல்லும் போதே தெரிஞ்சிடுச்சு ஸர்... என்ன விட அதிகமாவே நீங்க ஆராய்ச்சி செஞ்சிர்க்கீங்கன்னு...

ஹஸ்வாக் : ஸ்மார்ட் பாய்... என புகழ்ந்தவர் அவனிடம் ஒரு ஓலையை போலான ஒரு பழைய புத்தகத்தை நீட்டினார்....

அதை வாங்கி பார்த்த யதுவந்தனின் மனம் சிலிர்க்க அவரை ஏறிட்டான்...

ஹஸ்வாக் : இது... நாங்க இருவத்திரெண்டு வர்ஷத்துக்கு முன்ன செஞ்ச ஆராய்ச்சியோட ஒரே பிடி... ஆனா எல்லாமும் இன்க்கம்ப்லீட்டடா தான் இருக்கும்... இதுக்கான சாவி இந்த உலகத்துல குமரி கண்டம் இருந்த இடத்துல தான் இருக்கு... ஆனா குமரி கண்டம் இப்போ இல்ல... இலங்கைலையோ தமிழ்நாட்லையோ எங்கையாவது இருக்கும்னு தேட முயற்சி செஞ்சம்... இலங்கைல எங்கையும் இல்ல... தமிழ்நாட்ல தேட வாய்ப்பே கிடைக்கல.... நீ தான் உன்ட ஆராய்ச்சில கண்டுப்புடிச்சு உலகத்துக்கு உணர்த்தனும்... என அவன் கையை இறுக்கி பிடித்து ஒரு நம்பிக்கையுடன் கூறினார்...

துவாரகன் : நீ சாதிப்பன்னு நம்புறோம் யங்மேன்... என அவனை அணைத்து கொண்டார்....

அந்த புத்தகத்தை பிரிக்க எண்ணிய எண்ணத்தை மூடி மறைத்தவன்

யதுவந்தன் : நீங்க எப்டி கெளம்ப போறீங்க ஸர்...

ஹஸ்வாக் : ஒரு சின்ன மீட்டிங் இருக்குப்பா... அப்பாய்ன்மென்ட் ஆடர் குடுத்துருக்கேன்... ஆரான் பப்லிக்கேஷன் மனேஜர் வந்ததும் தான் போகனும்...

துவாரகன் : எனக்கும் அதே தான் யங்மேன்... மீட்டிங் முடிஞ்சதும் கிளம்புவோம்...

யதுவந்தன் : ஓக்கே ஸர்... ஹவ்வ சேஃப் ஜர்னி என புன்னகையுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றான்...

மதனும் கவியும் அவர்கள் கூறியவை அனைத்தையும் எண்ணியவாறு இவனை பின் தொடர... அந்த நேரம் அவர்கள் முன் சீரி வந்து நின்றது ஒரு உயர்ரக மதிழுந்து... அதிலிருந்து டிப்டாப்பாய் உடையனிந்து நேர்த்தியாய் அதை சரி செய்து... அலையலையான கேசம் தரை புளர... கண்களை கவர்ந்த கட்டமான நீட்ட கன்னாடியுடன் ஸ்மார்ட் என புகழும் ஆற்றள் கொண்ட ஒருவன் இறங்கி யதுவின் முன் நின்றான்...

யது அவனை நிமிர்ந்து நோக்க... ஒரு முறை குனிந்து அவனுக்கு மரியாதை செழுத்தியவன்... " ஐம் ரிஷி... பர்செனல் அசிஸ்ட்டென்ட் அன் ஜெனரல் மேனேஜர் ஆஃப் ஆரான் மிஸ்ட்டிக்கல் பப்லிக்கேஷன்ஸ் " என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்....

கவியும் மதனும் ஒரு சேர " ஆரான் மிஸ்ட்டிக்கல் பப்லிக்கேஷனா " என வாயை பிளக்க... அதை கண்ணசைவில் மூட வைத்த யது ரிஷியை ஏறிட்டான்...

யது : நா உங்களுக்கு என்ன உதவி செய்யனும்...

ரிஷி : யு ஆர் மிஸ்டர் ஹஸ்வாக்மிஸ்கின் ரைட்.. என கேட்க...

யது : சாரி... ஐம் யதுவந்தன்... மிஸ்டர் ஹஸ்வாக்மிஸ்கின் ஈஸ் இன் தி ஆடிட்டோரியம்...

ரிஷி : ஹோ எக்ஸ்ற்றீம்லி சாரி ஸர்... அன் தன்க்ஸ் பார் தி இன்ஃபர்மேஷன்... என அவனிடம் பனிந்து விட்டு உடனே ஹஸ்வாக்கை தேடி சென்றான்....

யதுவோ தன் முன் ஒருவன் வந்தான் என்ற எண்ணமின்றி அவன் விலகியதும் இவனது பாதையில் நடக்க தொடங்கினான்...

மதன் : ஏ என்ன டி மனுஷன் இவரு.... எவ்ளோ பெரிய கம்பெனி அது... அதுலேந்து ஒருத்தன நேர்ல பாத்தும் பாஸ் பாட்டுக்கு போறாரு... ஒரு ரியக்ஷனில்ல... ஒரு ரிப்லையில்ல...

கவி : ஏன் டா ஒரு வருஷமா அவரு கூட தான இருக்க அவரு எதுக்கு தான் ரியக்ட் பன்னீருக்காரு... விட்டு தொல...

மதன் : அதுவும் சரி தான்... என சலித்து கொண்டே அரை கிலோமீட்டர் சென்றிருந்தவனை பின் தொடர்து ஓட தொடங்கினர்...

இதிலே நம் யது எவ்வளவு பெரிய சின்சியர் சிகாமனி என்பதை உணர்ந்து சொள்வீர்கள்... ஒபாமாவே வந்தாலும் ஓரமாய் கண்டுக்கொள்ளாமல் செல்பவனின் இரகம் தான் அவன்....

இருந்தும் ததிழின் மீதுள்ள தீரா பற்றின் காரணமாய் ஆராத்திரியனின் உண்மைகளை மீட்டு கொண்டு வரும் பாதையில் நம்பி களமிறங்கி விட்டான்... நமக்கு மட்டும் தானே தெரியும் அது தொடர்வண்டியை போல் நேராய் செல்லும் பாதையல்ல... நடுகடலினுள் பயணிக்கும் கப்பலை போல் திக்கு தெரியாத சிறு ஓடையினை கொண்ட பாதை...

சுற்றி சூழ்ந்திருந்த கும்மிருட்டில் தடவி தடவி சென்று கொண்டிருந்த அந்த பணியாள் ... பாப்பா பாப்பா... என அழைத்தவாறு அந்த ஒரு ஆள் செல்லும் அளவு இருந்த ஒரு வழி பாதையில் செல்ல... அவரின் தலைக்கு மேல் திடீரென ஏதோ தூசி கொட்ட... அதனூடே ஹுக்கு ஹுக்கு ஹுக்கு என்று விடாது கேட்ட இருமலில் பதறியவர் பாப்பா பாப்பா என மேலே பார்த்தார்...

இரு பக்கமும் இருந்த அந்த செவுருகளில் கைகளையும் கால்களையும் பிடிக்கு அழுத்தி கொடுத்து தேய்த்து கொண்டே குதித்தாள் அவள்...

விரித்திருந்த கருங்கூந்தல் ஆளை மயக்க... வில்லம்பாய் தைக்கும் விழிகளுடன் ... மாநிற பேரழகியாய்... செதுக்கி வைத்த சிலையாய் ... பார்ப்போரை மதி மறக்க வைக்கும் தேவதையாய் தலை நிமிர்த்தி புன்னகைத்தாள் நம் நாயகி நறுமுகையக்ஷவி

அவன் தொடர்வான்...


ஹாய் இதயங்களே... நான் உங்கள் தீராதீ... எப்டி இருக்கு இன்ட்ரோ... இது தான் 12 ஆம் கதை... ஹிஸ்ட்டாரிக்கல் ஃபிக்ஷன்... எழுத ரொம்ப ஆர்வமா இருக்கேன்... ஆனா அதுக்கான காலம் தான் இது இல்ல...

யது மற்றும் நறுமுகையோடு ஆராத்திரிய சக்ரவர்த்தன தேடி போற பாதையில் நிச்சயம் பயணிக்கலாம்....

நோட் : இது தற்போது தொடரும் கதையில்லை...

பிடிச்சிருக்கும்னு நம்புறேன்... பாப்போம்... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro