லிப்ஸ்டிக் (lipstick)
நிகழ்ச்சியின் நடுவில் குடும்பம் கூடியிருக்க
வெளிச்சமாய் ஒரு மூலையைத் தேடி
உதட்டின் மேல் படிந்த நீரைத் துடைத்துவிட்டு
கேமராவைக் கண்டு சிரித்தேன்
Instagramஇல் முதல் மெசேஜ் வந்தது
ஓரிரு முறை முகம் பார்த்து பேசியிருப்போம்
முகத்தில் மேக் அப் ஜாஸ்தி என
மேக் அப் பத்தி அவனுக்கு என்ன தெரியும்
இரு முறை கலர் பார்த்து நான்கு முறை பர்ஸ் பார்த்து வாங்கியவனா?
நிலவின் மேடு பள்ளங்களையும் மறைக்கும் foundation
ஆணின் கண்ணுக்கு மட்டும் குறைக் காட்டிவிடுமாம்
உலக அழகியை கூண்டில் நிறுத்தி சாமானிய ஆண் தீர்பளிக்கும் Instagramஇல்
எனக்கு கிடைத்த தீர்ப்பு மேக் அப் ஜாஸ்தி
- GuardianoftheMoon
[நம் முகத்தை, நம் அழகை, நம் வேலையை, நம் வாழ்க்கையை இப்போது எளிதில் எல்லோருடனும் பகிர்கிறோம். அதோட தாக்கம் பத்தி அதிகம் பேசுறதில்ல. பெண்ணை வீட்டிலேயே ஒளித்து வைத்திருந்த நம் சமூகம் இப்போது அவள் வெளியே, ஆன்லைனில் வந்து முகம் காட்டுவதை அபத்தமா நினைக்கிறது. உடனே கமெண்ட்ட். உடனே குறை சொல்றது.
அழகா இருக்கோம் என அற்ப சந்தோஷத்தில் ஒரு போட்டோ போட்டுவிட்டால் அதைக் குறைக் கூறவே முயல்கின்றனர். அதுவும் சுமார் மூஞ்சி குமார்களே அதிகம் கமெண்ட் பன்றது ஏதோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி. மேக் அப் போட தெரிந்தவர்கள் மட்டும் கமெண்ட் செய்ய தகுதி உண்டு.
மற்றவர்கள் வாயை திறக்க வேண்டாம். மேக் அப் நு மட்டும் இல்ல, எல்லா விஷயத்திலும். தெரிந்தவர்கள் மட்டும் அதைப் பற்றி பேசினால் போதும். தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு பின் பேசட்டும் அதுவரை அமைதியாய் இருங்கள். பெண்களுக்கு அறிவுரை கூறுவதில் முன்னாடி வந்து நிற்பது காமன் ஆகிட்டு.]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro