💗💗நினைவுகள்💗💗
கண்ணே உன்னை கருவுற்றிருக்கும் வேளையிலே..
அந்த கடற்கரையில் அழகிய முழு நிலவொளியில்
கைக் கோர்த்து சென்றோம் நானும் என்னவனும்..
கரையில் அமர்ந்து காதலுடன் என் கணவரை பார்க்கையில் அவன் பார்வையோ படகில் இருந்தது..
அப்போது தான் புரிந்தது.. நடு இரவில் நிலவொளியில் படகில் பயணம் செய்ய வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவை நினைவாக்கவே அழைத்து வந்திருக்கிறான் என்று காதலை திருடிய கள்வன் ..
படகில் பயணிக்கும் வேளையிலே என் கணவரை கட்டி அணைத்து காதல் மொழி பேசியதும்..
அந்நேரத்தில் என் கருவிலிருந்த உன்னிடம் உன் தந்தை எனக்களித்த இந்த அழகிய பரிசுகளை பற்றி பகிர்ந்து கொண்டதும் உனக்கு நினைவிருக்கின்றதா என் கண்மணி?..
இப்படி என் காதலில் அவனும் அவன் காதலில் நானும் திளைத்திருந்த ஏகாந்த நிலையில்..
நாங்கள் ரசிக்க வேண்டிய நிலவொளியும் கடல் அலையும்..
எங்கள் காதலை ரசித்து கொண்டிருந்தது...
அன்று அளவில்லா ஆனந்தத்தில் திளைத்திருந்த எனக்கு தெரியவில்லை அதுதான் அவன் என்னுடன் இருக்கும் கடைசி நேரம் என்று...
இன்றும் முழு நிலவில் அதே படகில் எங்கள் காதல் பரிசாக அந்த கடவுள் தந்த உன்னுடன் பயணிக்கின்றேன்..
இனியும் பயணிப்பேன்...
என் மனது கவர்ந்த மன்னனின் நினைவுகளாவது என்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக...
💌@ramiramji ன் கதைக்காக எழுதிய கவிதை💌
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro