💞 தோல்வி 💞
தொட்டதெல்லாம் தோல்வியா??
துவளாதே தோழா!!
கடிகாரத்தை பார் 👀👉⏰
அதுவே நின்றாலும் நாளொன்றுக்கு இரண்டு முறை சரியான நேரம் காட்டும் போது..
கொண்ட தோல்வியால் கண்ணீர் சிந்துவது அறிவுள்ள நமக்கு அவமானமில்லையா?😣😣
வாழ்கையிலே மனிதன் வெற்றி மட்டும் தான் பெற வேண்டுமென்றால்??..
தோல்வி என்ற ஒன்றை இறைவன் படைத்ததன் காரணம் தான் என்னவோ?!!
பெற்ற தாயே மகன் கண்ணீர் சிந்துவதை வெறுக்கும் போது!!
அந்த தாயையே படைத்த தயாளன் தன் அடியான் தோல்வியால் துவண்டு போகவா அதனை படைத்திருப்பான்??
அறிந்துக்கொள்ளுங்கள்!!
தோல்வி என்பது நம் திறமையை செதுக்க வரும் சிற்பி தானே தவிர,.
நம் மதிப்பை மூழ்கடிக்க வரும் சுனாமியல்ல!!
உலகின் தலை சிறந்தவர்கள் எல்லாம் தோல்வியெனும் பாடத்தை தோற்று தோற்று படித்தவர்கள் தான் என்பது எப்பொழுதும் நினைவில் இருக்கட்டும்,!!
தோல்விகளையும் தோற்க செய்யும் தோழர்களாகவும்,..
கஷ்டங்களையும் கலங்க செய்யும் கன்னிகளாகவும்,..
தாங்கள் மாற வாழ்த்தி விடை பெறுகிறேன்,..
விரைவில் வேறு கவிதையோடு நம் சந்திப்பு நீளட்டும்,..😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro