அவள்
அழகென்றாலே அவள் தானோ..
மலரினும் மென்மையானவள்
புயலினும் சீற்றம் கொண்டவள்...
அவளின் அன்ன நடையும் அழகு , திமிர் நடையும் அழகு...
தெத்து பல் சிரிப்பு அழகு
அவள் இதழ் சுழிப்பும் அழகு...
ஓர விழி பார்வையும் அழகு
சினம் கொண்ட சீர் பார்வையும் அழகு...
மெலிந்த அவள் தேகமும் அழகு
கொழுத்த அவள் சரீரமும் அழகு...
நீண்ட விரல்களும் அழகு
பொற் பாதங்களும் அழகு...
புடவை போர்த்தி வருவதும் அழகு, நவீன சட்டை குழாயும் அழகு...
அவள் நாணமும் அழகு
அவள் அழுகையும் அழகு...
பேதையவள் தத்தி வருவதும் அழகு , பெதும்பையவள் குறும்பும் அழகு...
மங்கையவள் நளினம் அழகு
மடந்தையவள் காதல் அழகு...
அரிவையவள் தாய்மை அழகு
தெரிவையவள் அமைதியும் அழகு...
பேரிளம் பெண்ணான அவள் முதிர்ச்சியும் அழகு.. ஓட்டை பல் சிரிப்பும் அழகு...
இன்னும் ..... !!
அழகென்றால் அவள் தானோ... பெண் அவள்.... 💕💕
( Just miss ladies... 😋 Nanum ponna poiten... Neenga la es ayiteenga 😆😆😝😝)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro