புதுப்பெண்மையது - எதுவோ ??
ஆயிர மடங்கு அகிம்சையை
அணுவில் கொண்டு பிறந்தவளோ ??
ஆயிரங்கோடி அணுகுண்டின்
அசாத்திய ஆற்றல் கொண்டவளோ ??
தூங்கிக்கிடக்கும் ஆணினத்தைத்
தூக்கி விட வந்தவளோ ??
தூர இருக்கும் சூரியனை
தூக்கிலேற்ற வந்தவளோ ??
தூரல் போல நல்லன்பை
தூவிச்செல்ல வந்தவளோ ??
துயரங்களின் உயரங்களை
தூள்தூளாக்க வந்தவளோ ??
வாழ்க்கையின் வெறுமைகளை
வாள்வீசிக் கொல்பவளோ ??
வானுக்கும் மண்ணுக்கும்
வாசலாய் நிற்பவளோ ??
நின்று கொண்டால் இவ்வுலகை
சுழற்றி விட வந்தவளோ ??
ஆடாதிருக்கும் இப்புவியை
ஆட்டுவிக்க வந்தவளோ ??
நீள்வானின் இரவுகளில்
நிலவாக வந்தவளோ ??
நாள் காட்டும் தேதிகளில்
நடுவிலே நிற்பவளோ ??
மகளாய் உறவாய்
மகிழ்விக்க வந்தவளோ ??
தங்கையும் தமக்கையுமாய்
தாங்கிக்கொள்ள வந்தவளோ ??
அதிகாரியாய் குருவாய்
அறஞ்செய்ய வந்தவளோ ??
தோள் தரும் தோழியாய்
தோன்றின் புகழ் கொண்டவளோ ??
மனைவியாய் உன்னை
மறு உருச்செய்பவளோ ??
தாயாய் தன்னின்
தக்க சரிபாதி தருபவளோ ??
பூவுலகை புரட்டிடும்
புரட்சியது எதுவோ ??
இப்பூமியை மிரட்டிடும்
புதுப்பெண்மையது - அதுவோ !!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro