அத்தியாயம் - 32 🤩
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் இதழ்களை நோக்கி குனிந்தான்..
அவனின் பார்வையை கண்டு விழித்தவள்..
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் கைகளை கிள்ளி விட்டாள்.. அவனின் பிடியில் தன்னை விடுவிக்க செய்த முயற்சி தான்..
ஆனால் பலனில்லை.. 👎
ஷ்ரித்திக்கின் பிடி தான் இரும்பு பிடியாக இறுக்கி இருந்ததே..
ஷ்ரித்திக்.. "ஸ்ஸ்ஆஆ.. ஏன் டி கிள்ளுன.. புஜ்ஜி.. ??" என்று விட்டு அவளை சுழற்றினான்.. 😍😍
"நானும் பாத்துண்டு தான்.. இருக்கேன்.. உங்க பார்வை நடவடிக்கை சரியில்லை.. கலியாணத்துக்கு முன்னாடி.. எவ்ளோ.. நல்லவளா இருந்தேள்.. ?? இப்ப.." என ஷிவாக்ஷி பேசிக் கொண்டிருக்கும் போதே அவளின் கண்ணத்தில் இதழ் பதித்தான்.. 😘😘 ஷ்ரித்திக்.. "ம்ஹ்ம்ம்ம்.. இப்ப.. ??" என ஊக்கினான்..
ஷிவாக்ஷிக்கு அதிர்வு.. தான்.. விரைவாக வெளி வந்தவள்.. அவனை பொய்யாக முறைத்தாள்.. "இப்ப அடிக்கடி கட்டி பிடிக்கறேள்.. ?? இப்படி இப்படி.. எல்லாம் பண்றேள்.. இப்ப எல்லாம் ரொம்ப கேட்டவளா மாறிட்டேள்.. விடுங்கோ.." என்றிட.. ஷ்ரித்திக் மீண்டும் அவனிதழ்களால் அவளை தீண்ட போக.. ஷிவாக்ஷி தன் கையால் அவன் இதழ்களில் வைத்து தடுத்தாள்.. 🤨
'இப்ப என்ன பண்ணுவ.. ??' என்பதை போல ஒரு பார்வையை வெட்ட.. 🤨🤨
ஷ்ரித்திக்.. தன் இதழை அணையிட்ட அவள் மென்பஞ்சு கரத்தில் பதித்து வைத்தான்.. 😘
"யூ ஆர் டூ பேட்.." என்று விட்டு.. அவனிடம் இருந்து விலக முயற்சித்தாள்.. 🥺🥺
கொஞ்சம் கூட நகர முடியவில்லை.. 👎👎
ஷ்ரித்திக்.. அவளின் வாடிய முகத்தை கண்டு.. "என்ன டயர்டா.. ?? அதுக்குள்ள.. ?? நான் பேடா.. ஆல் ரைட்.. உன்ன விட்டு தள்ளி இருந்தா தான்.. அந்த நல்ல பேரு கிடைக்கும்னா.. அந்த பேரு எனக்கு தேவையே இல்லை.." என்று ஷ்ரித்திக் கண்களில் குறும்பு கொப்பளிக்க மொழிந்ததும்.. ஷிவாக்ஷியை இன்னும் இறுக்கினான்.. 😍😍
"ம்ஹூம்.. நீங்க ரொம்ப மாறிட்டேள்.. விடுங்கோ.." என ஷிவாக்ஷி கெஞ்சலாக விளித்தாள்.. 🥺
"எது.. நான் மாறிட்டேனா.. ?? நான் ஆரம்பத்தில இருந்தே இப்படி தான்.. என்ன மேடம் இப்ப தான் பாக்கறீங்க.. தட்ஸ் இட்.. பட் நீங்க.. மாறிட்டீங்கன்னு மட்டும் ரொம்ப நல்லாவே தெரியுது.." என அவளிடம் இப்போது.. எடை போடும் பார்வையை வீசினான்.. 🤨🤨
இப்படி ஷ்ரித்திக் கதைத்ததும்.. ஷிவாக்ஷி.. சற்று திடுக்கிட்டாள்.. 'கண்டு கொண்டானோ.. ??' என்றவனை ஏற இறங்க பார்த்து விட்டு.. 'இல்லை.. இல்லை.. வாய்ப்பில்லை..' என தனக்குள்ளே.. பேசிக் கொண்டிருந்தாள்.. 😕
ஷ்ரித்திக்.. அவள் முன் சொடுக்கிட்டு.. "பேசி முடிச்சிட்டியா.. ??" என்கவும்.. 🤨
ஷிவாக்ஷி.. கேள்வியாக விழிக்க.. 🤔"இல்ல உனக்குள்ள பேசி முடிச்சிட்டியா.. ??" என்று விட்டு.. அவளையே.. நோக்கிக் கொண்டிருந்தான்..
"அதெல்லாம் இல்லை.. நான் போகனும் விடுங்கோ.." என்று பேச்சை மாற்றினாள்.. 😕😕 ஷிவாக்ஷி..
"பேச்ச மாத்தாத.. எங்க என்னை பாத்து சொல்லு.. ?? என்னை லவ் பண்ணற தான.. ??" என்ற
ஷ்ரித்திக் அவளின் தாடையை மென்மையாக பற்றி நிமிர்த்தி காதலாக நோக்கினான்.. 😍😍
அப்பார்வை அவளை கரைய செய்தது.. இதில் எங்கு வார்த்தை மீட்ட.. ஷிவாக்ஷி வார்த்தைகளை தடுமாறி கோர்த்துக் கொண்டு இருந்தாள்..
"அது.. அது.. அது.. ம்ப்ச் முதல்ல என்னை விடுங்கோ.. சொல்றேன்.." என ஷிவாக்ஷி இம்முறை சிணுங்கினாள்.. 😜
ஷ்ரித்திக்.. "நிஜமா சொல்லுவியா.. ??" என சந்தேகப் பார்வையோடே.. வினவினான்.. 🤨
"விட்டா தான் சொல்லுவேன்.." என இவளும் விடாப்பிடியாக இருந்தாள்.. 🤨
ஷ்ரித்திக்கும் அவனின் பிடியை தளர்த்தியதும்.. உடனே அதிலிருந்து வெளிவந்தவள்.. தன் இடையை இறுக்கி உண்டான வலியை அவனை விட்டு தள்ளி சென்ற படியே.. வளைந்து நெளிந்து கொண்டவள்.. அவனை பார்த்த படி "சொல்லுவேன்னு நினைச்சேளா.. வெவ்வெவ்வெவ்வே..." என இரு கைகளும் தலையில் வைத்து.. ஆட்டியபடி நாக்கை நீட்டி ஒழுங்கு காட்டி அங்கிருந்து ஓடினாள்.. 😜😜
ஷ்ரித்திக்.. "அடி கள்ளி.. உன்ன.." என்றுவிட்டு.. அவளை துரத்த.. அவனிடம் போக்கு காட்டிவிட்டு அகன்றாள்.. ஷிவாக்ஷி..
எத்தனை நாட்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் என நினைத்தவனின் இதழ்களை நிறைத்தது புன்னகைகள்.. 😀😍
ஷிவாக்ஷி.. கீழே படிகள் வழியே இறங்கி வரும் போதெல்லாம்.. ஷ்ரித்திக்கின் செயல்களே.. நினைவுக்கு வந்து.. கண்ணக்கதுப்பை செம்மையால் நிறைத்துக் கொண்டிருந்தது.. அதை மறைத்துக் கொள்ள பெரும் பாடு வேண்டியதாய் இருந்தது..
🥰🥰
கீழே இஷானி.. இவளுக்காக காத்திருந்தாள்.... ஆனால் ஷிவாஷியோ மனதில் ஏதோ நினைவில் உளன்றவளை.. கண்டு.. அவளின் தலையில் கொட்டி வைத்தாள்... 😂
"ஸ்ஸ்ஆஆ.. ஏன் மச்சி கொட்டுன.. ??" என தலையை தேய்த்த படியே வினவினாள்.. 🤨
"ஒரு பொம்படையா.. காலம் பரத்தில ஸ்நாணம் பண்ணின்டு.. உனக்காக.. காத்திண்டு இருந்தா.. ?? நீங்கோ.. பப்பரத்தான் மாதிரி மேல பாத்துண்டு வர.. ?? நான் என்ன இளிச்ச வாயின்னு... என் நெத்தில ஒட்டி இருக்கறதா.. நோக்கு நினைப்பா.. ??" என அப்படியே.. ஷிவாக்ஷி போலே பேசி அவளை பழித்து காட்டினாள்.. 🤨🤨
ஷிவாக்ஷி.. வாயை பிளந்து.. "அப்படியே பேசற டா.. சாரி.. டி.." என மொழிந்த விட்டு.. "நீ இளிச்சவாயின்னு.. நான் தனியா டேரக்டா வேற சொல்லனுமா.. ??" என இஷானியின் காலை வாரினாள்.. 😂
"ஏய்.." என இஷானி கத்த..
"ஹே..ஏ..ஹே.. ஏ.. ஹே.. ஏய்.." என யானையை பிளிறுவதை போல் ஷிவாக்ஷி செய்ய..
ருத்ரா.. குட்டி "த்த.. த்தூ.. ஒரமா போய் விளையாடுங்க.." என இருவரையும் முடுக்கினான்.. அப்போது தான் எழுந்து வந்தவன்..🤨
"அவமாஆஆனம்.." என்றிருவரும் ஒருசேர தலையை சிலிப்பிக் கொண்டனர்.. 😕😕
ஷ்ரித்திக்கின் தந்தை.. ராஜ தேவன்.. "என்னம்மா.. இஷானி.. காலங்காத்தல.. இந்த பக்கம்.. ஏதாவது விஷயமா.. ??" என படிகளில் இருந்து இறங்கிய படியே கேட்டார்.. 🙂
இஷானி பேச தொடங்கும் முன்.. "நான் சொல்றேன்.. நான் சொல்றேன்.." என ஷிவாக்ஷி முந்திக் கொண்டு.. "நானும் இஷாவும்.. வெளியே.. போயிண்டு.. அப்படியே நான் ஸ்கூலுக்கு போயிடலாம்னு இருக்கேன்.. அப்பா.." என மொழிந்தாள்.. 😀
"உனக்கு ஓன்பதரைக்கு ஸ்கூல்.. இப்பவே மணி எட்டரை.. டைமுக்கு எப்படி டா போவ.. ??" என சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த படியே கேட்டார்.. 😕
"நான் பெர்மிஷன் போட்ருவேனே.. ஒன் ஹவர் போட்ருக்கேன்.." என ஷிவாக்ஷி உற்சாகமாக மொழியவும்..
"ஒன் ஹவர் பெர்மிஷன.. டூ ஹவரா சேஜ் பண்ணிக்கோ.." என்றாணை யிட்டபடியே.. அங்கு வந்து சேர்ந்தான்.. ஷ்ரித்திக்.. 🙂
"டூ.. ஹவரா.. ஏன்.. ??" என்றவளின் கேள்வி முகத்திலும் நின்றது.. 🤨
"நீ வீட்டுக்கு வா.. நான் சொல்றேன்.." என்றபடியே கோர்ட்டின் பட்டனை கழட்டி விட்டு.. சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தான்.. 😎
புதிராக.. கூறுபவனையே.. ஒரு கணம் உறுத்து விழித்தாள்.. ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கும் சளைக்காமல் நோக்கினான்..
ஷ்ரித்திக்.. யாரும் நோக்கா நேரம் பார்த்து.. கண்ணடித்தான்..😉
இதை சற்றும் எதிர்பார்க்காத ஷிவாக்ஷி.. இதழ்களை பிரித்தாள்.. தடுமாறினாள்.. அனைவரின் முன்பு இயல்பாய் இருக்க எடுத்த முயற்சிகள்.. தோல்வியா.. ?? வெற்றியா.. ?? என்றவளுக்கு சொல்ல தெரிய வில்லை..
'என்ன விழிகள்.. அது.. ?? காந்த விழிகளா.. ?? அல்ல மாய விழிகளா.. ?? ஒரு சமயம் என்னை சுருட்டி காந்தமாய் இழுக்கிறது.. மறுசமயம்.. அவ்விழிகள் மெய்யை மறந்து வேறொர் உலகில் சஞ்சரிக்க செய்கிறது.. இம்மாய விழி..'
தன் முகசிவப்பை மறைக்க முடியாது தவித்து போனாள்.. இவையனைத்தும் ரசனையோடு ரசித்தது.. ஷ்ரித்திக்கின் விழிகள்.. 😍
தன்னை சமன் செய்து விட்டு.. தன்னவனுக்கு உணவை பரிமாறினாள்.. அதற்குள்.. மொத்த குடும்பமும் அங்கு வந்து சேர.. அனைவருடனும் உணவை முடித்து விட்டு சொல்லிக் கொண்டு வெளியே இஷானியுடன்.. புறப்பட்டாள்..
ஷ்ரித்திக்கும்.. உணவை முடித்து.. தன்னுடைய மகிழுந்தில்.. அலுவலகம் நோக்கி பயனமானான்.. 🙂😎
"நேற்று இல்லாத மாற்றம் என்னது.. ?? உன் மூஞ்சி ஏதோ என்னிடம் சொல்லுது.. ??" என்று இஷானி பாடுவதை போலே.. அவளிடம் செய்தி என்ன.. ?? என கேட்பது போலிருந்தது.. ஷிவாக்ஷிக்கு.. 😕
"பாடாத.. நாராசமா இருக்கறது.." என்று விட்டு முன்னே சென்றாள்.. ஷிவாக்ஷி.. 😕
"நான் தனியா பேச என்ன கேனச்சியா டி.. ?? உன்கிட்ட தான் கேக்கறேன்.. என்ன உன் மண்டை பின்னாடி.. ஏதோ ஒளிவட்டம் தெரியுதே.. ?? காரணம் என்னவோ.. ?? நான் நினைக்கிறேன்.. லவ் கிவ் செட்டாயிடுச்சா.. உன் ஆத்தாக்காரர கரெக்ட் பண்ணிடியா.. ??" என வினவிய இஷானிக்கு.. அவளின் முகம் யோசனையை தத்தெடுத்தது.. 🤔🤔
"இவளாண்ட.. சொல்லலாமா ?? வேணாமா.. ??" என மனதுள் பேசுவதை போல மொழிந்தாள்.. அருகே இருந்தவளோ.. "சொல்லி தொலையும் சாத்தானே.." என்று கூச்சலிட்டாள்.. 😠
ஷிவாக்ஷி.. தன் தோழியிடம் தன் காதலை பற்றி கூற முனைந்தாள்..
"நான்.. முதல்ல நினைச்சிண்டு இருந்தேன்.. நேக்கெல்லாம் கலியாணம் நடக்குமான்னு... அதை யோசிச்சாலே... என்னோட மைன்ட் டக்குன்னு வாய்ஸ் கொடுத்தறது.. வாய்ப்பில்லை ராஜான்னு.. கலியாணத்துக்கே அப்படி.. நமக்கு லவ்வு வாய்பில்லை.. குழந்தை.. லவுக்கே வாய்ப்பில்லை.. குழந்தை.. ம்ஹூம்.. ஆனா.. இப்ப.." என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே.. அவளின் நேத்திரம் என்றும் இல்லாத அளவு விரியச் செய்தது.. 😳
ஷிவாக்ஷி மனம் விட்டு உரையாடிய கூற்றை கவனமாக கேட்டு கொண்டிருந்த இஷானி.. அவளின் முக மாற்றாத்தை கண்டு புருவம் சுருங்கி.. அவள் பார்வை இருக்கும் திசையை அவளும் நோக்கினாள்.. ஆச்சரியத்தில்.. இஷானிக்கு.. விழிகள் மட்டுமன்றி இதழ்களும் விரிந்தது..😲
இருவரும் இணைந்து பார்த்தது ஒன்றும் இல்லை.. உலகிலே அதிக
விலையுயர்ந்த ரேஸ் பைக் .. டுகாட்டி 1299 சூப்ப்லெகரா..
இருவரும் அந்த பைக்கின் அருகே சென்று.. அதையே சுற்றி சுற்றி வந்தனர்.. அவர்களால் நம்ப முடியவில்லை.. இது நிஜமாக இங்கு எங்கள் இருவரின் கண்முன் தான் இருக்கிறதா.. ?? இஷானி.. ஷிவாக்ஷி.. இருவரும் மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு அடிக்கடி செல்வதால்.. இது பற்றி அனைத்தும் அத்துப்படி..
இருவரின் கால்களுமே.. தரையிலே இல்லை... குதித்து கொண்டிருந்தனர்.. கைகளுமே நிலையில் இன்றி.. இறக்கை கட்டியது போல் விசிறி கொண்டிருந்தது..
"இஷா... டுகாட்டி.. ஹான்ன்ன்ஆஆஆ.... ஐயோ.. நான் தொட்டுட்டேனே.. தொட்டுட்டேனே.. ஐயோ.. இத யாராண்ட.. சொல்லுவேன்.. ?? எப்படி சொல்லுவேன்.. ?? சொன்னாலும்.. நம்புவாளா.. ?? நம்புவாளா.. ?? நம்புவாளா.. ??" என்று ஷிவாக்ஷி அந்த பைக்கை தொட்டு பார்த்து பினாத்திக் கொண்டிருக்க.. 😜😜😜
இஷானி.. வாயை பிளந்ததை இன்னும் மூடவில்லை.. இறுதியாக.. நினைவுக்கு வந்து.. "அத்து.. டுகாட்டி.. டி.." என்றவள்.. இன்னும் பிரம்மிப்பின் பிடியில்.. 😲
இருவரும் இத்துனை பிரம்மிப்பு அடைவதற்கு காரணமில்லாமலா.. ?? இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிள்.. ஒரே ஒருவரிடம் மட்டும் தான் இருக்கிறது.. என்று தெரிந்து வைத்திருந்தார்கள்.. ஆனால் இன்னொருவரிடமும் இருக்கிறது.. அவர் நமக்கு நெருங்கியவர் என்ற எண்ணம் மகிழ்வை தந்தது..
"நம்பமுடியவில்லை.. இல்லை.. இல்லை.. 🎵🎶.." என ஷிவாக்ஷி அதற்கேற்றாற் போல.. பாடலை பாடினாள்.. 😜😜
இஷானி.. விழியோரமாக அவளை நோக்கி ஏளனப் பார்வையோடு.. 😏
"எவ்ளோ.. எக்ஸ்பென்ஸிவ் பைக்.. ஐ ஜஸ்ட் காண்ட் பிலீவ் இட்.. யூ நோ வாட்.. ?? இந்த பைக்க அட்லிஸ்ட் தூரத்தில இருந்தாவது பாத்திரமாட்டோமான்னு.. ஆசை இருந்தது.. பட் நௌவ்.. ஹோ காட்.. நான் இந்த பைக் மேல உக்கார்ந்து இருக்கேன்.. ம்ஹ்ம்ம்ம்.. இது யாரோடாத இருக்கும்.. ?? அத்து.." என்று அந்த மோட்டார் சைக்கிள் மேல் அமர்ந்து கைப்பிடியை பிடித்த படியே கேட்டாள்.. 😃
"வேற யாரு.. ?? என் ஆத்துக்காரரோடத தான் இருக்கும்..." என்றாள்... 🙃 ஷிவாக்ஷி...
"ஏன் ...? இங்க உன் ஆத்துக்காரர் மட்டும்தான் இருக்காளா... ? வேற யாரும் இல்லயா ...? சும்மா எல்லா என் புருஷனோடதுன்னு... சொல்லிட்டு இருக்காத.. ?" என்று இஷானி நக்கலாக மொழிந்தாள்... 😝
"பின்ன யாரோடது... ? நேக்கு தெரியும்... இது கண்டிப்பா ஆரு மட்டுந்தான் வாங்கிருப்பா... ஆருக்கு தான் இந்த மாதிரி எக்ஸ்பென்சிவ் பைக் ரொம்ப பிடிக்கும்.. இது நேக்கு ஃபெராரி கார்லையே.. தெரிஞ்சிடுத்து.." என ஷிவாக்ஷி மொழிந்த வேளையில் உன்னிப்பாக கவனித்த ஒன்றை அவளிடம் "ஹேய்.. வெயிட் அ மினிட்.. ஹூஸ் தட் ஆரு.. ??" என கண்ணடித்து கேட்க.. 😉
ஷிவாக்ஷி.. ஒரு கணம் தடுமாறினாள்.. இவளின் இமை சிமிட்டல்.. ஷ்ரித்திக்கின் கண்சிமிட்டல் நினைவுற செய்தது.. 😉😍
ஷிவாக்ஷியின் முகம் அந்திவானமாய்.. தயாராகிய வேளை.. சரியாக.. ஒரு பணியாள் அவ்விருவரிடம் வந்து சேர்ந்தான்..
"அம்மா.. என்னம்மா நீங்க.. ?? நீங்க இந்த வண்டியில உக்காந்தத.. ஷ்ரித்திக் ஐயா.. பாத்தாரு.. அம்புட்டு தான்.. என் வேலை போயிரும்.. இது அவருக்கு ரொம்ப பிடிச்ச வண்டி.. இது.." என எச்சரிக்கை செய்தார்.. அப்பணியாள்.. 🤨
பணியாளின் அச்சத்திற்கு காரணமின்றியா.. ?? அது ஷ்ரித்திக்கின் பிரியமான வண்டி... அதை சுத்தம் செய்ய கூட யாரையும் அனுமதிப்பதில்லை.. ஷ்ரித்திக்கே அதை பார்த்துக் கொள்வான்.. காவலுக்கு மட்டுமே பணியாளை நியமித்திருந்தான்..
ஷிவாக்ஷியோ.. "உங்கொய்யாவோட பொம்மனாட்டி.. நான் பாக்கறதால.. ஒன்னும் ஆயிடாது.. அப்பறம்.. நான் இத எடுத்துண்டு போறேன்.. உங்கொய்யாவாண்ட சொல்லிடுங்கோ... அண்ட்.. கவலப்படாதேள்.. உங்க வேலைக்கு நோ ப்ராப்ளம்.." என்று விட்டு.. ஷிவாக்ஷி.. அப்பணியாளிடம் இருந்து.. அந்த வண்டியின் சாவியை பெற்றுக் கொண்டு.. வண்டியை தள்ளிச் சென்றனர்.. இருவரும்..😝😝
அப்பணியாளுக்கு.. சிறு அச்சம் எட்டிப் பார்க்கும் போதே.. அலுவலகத்தில் இருக்கும் ஷ்ரித்திக்கிடம்.. இதை பற்றிய தகவலை தெரிவித்து விட்டான்.. அப்பணியாள்..
ஷ்ரித்திக்.. இன்று இன்னும் சில மணி நேரங்களில் ஒரு முக்கியமான ப்ராஜெக்டை கிளையண்ட் இடம் கொடுக்க வேண்டும்.. அதற்கான வீடியோ காண்ஃப்ரனஸ் மீட்டிங்கில் இருந்தான்.. தொடர்ந்து அழைப்பு வந்தபடியே இருந்தமையால்.. வேறு வழியின்றி அழைப்பை எடுத்து.. விரைவாக பேசினான்.. பணியாளின் மொழியை அவன் கேட்கவே இல்லை.. இவ்வேளையில் அவன் இதை பெரிதாக எண்ணவில்லை.. அவள் தன்னுடைய வாகனத்தை இயக்கக் கூட தெரியாது என்ற எண்ணம் தான் அவ்வாறு தோன்ற செய்தது.. "அவ்ளோ தானே.. என் பொண்டாட்டி தான.. ஜஸ்ட் லிவ் இட்.." என்று ஷ்ரித்திக் விரைவாக முடித்து கொண்டான்.. 😃 கிளையண்ட் உடனான பேச்சு வார்த்தையை தொடர்ந்தான்..
இருபது நிமிடங்களில்.. ஷ்ரித்திக்.. அந்த ப்ராஜெக்ட்டை நிறைவு செய்து கிளையண்ட்டிடம் ஒப்படைத்தான்.. அவர்கள் உடனான பேச்சு வார்த்தையை முழுமையாக திருப்திகரமாக நிறைவு செய்து.. நாற்காலியில் ஆயாசமாக சாய்ந்தான்.. ஷ்ரித்திக்.. 🙂
அது பொறுக்காமல்.. உள்ளே பரபரப்பாக... அனைத்து பொருள்களையும் கோப்புகளையும் தள்ளிவிட்டு அதகளம் செய்து நுழைந்தது.. விக்ரம்.. தான்... 😝
விக்ரமின்.. செயலில்.. ஒரு கணம் திடுக்கிட்டு போனான்..
"சொன்னப் பயலே.. ??" ஏன் டா.. ?? இப்படி... ?" என கடுகடுத்தான்.. ஷ்ரித்திக்..😠
"மச்சான்... வா மச்சான் போலாம்.... வாடா... வா.. டா.. போலாம்.. எந்திரா...எந்திரா.. எந்திரா.. எந்திரா.." என ஷ்ரித்திக்கின் கைகளை பற்றி இழுத்தான்... விக்ரம்.. 😃
"டேய்.. கிறுக்கு எங்கன்னு சொல்லிட்டு இழுத்துட்டு போ..." என ஷ்ரித்திக் ஒரு பக்கம் கத்திக் கொண்டு இருந்தான்... 🤨
"பங்கு உனக்கு தான் இந்த ரேஸ் எல்லாம் பிடிக்குமே.. இஷூக்கும் பிடிக்குமாம்.. அவ இன்னிக்கு ஏதோ ரேஸ்க்கு போறாளாம்.. லோகெஷன் ஷேர் பண்றேன்னு சொன்னா.. எனக்கும் பாக்கனும்னு ஆசை.. போலாம்.. வாடா.." என ஷ்ரித்திக்கை இழுத்துச் சென்று கொண்டிருந்தான்.. 😃 விக்ரம்..
"டேய்.. இப்ப தான் ப்ராஜெக்ட் கம்பிளீட் ஆகிருக்கு.. இன்னும் வேலை இருக்கு டா.. அத முடிக்கனும்.. டா.. உனக்கு தெரியும்ல.." என்று ஷ்ரித்திக் விக்ரமிடம் இருந்த தன் கையை விடுவித்த படி கூறினான்.. 😎
"தெரியும் டா.. அதான்.. நான் டிஸ்டர்ப் பண்ணல.. முடிஞ்சுடுச்சுல இப்ப வா.. நீதான்.. பெரிய ரேஸர் ஆச்சே.. வா போலாம்.." என பிடிவாதமாக இழுத்துச் சென்றான்.. விக்ரம்..
"சரி டா.. வரேன்.. இப்ப கைய விடு.." என ஷ்ரித்திக்.. கண்களுக்கு குளிர்ச்சி கண்ணாடியை அணிந்து.. மகிழுந்தில் ஏறி வண்டியை உசுப்பினான்.. 😎
விக்ரமும் அவனுடனே மகிழுந்தில் கிளம்பினான்.. 😃
இருசக்கர வாகன பந்தயத்தின் ரசிகர்கள் கூட்டத்தினோடு... அந்த மைதானமே.. ஆரவாரத்துடன் காணப்பட்டது.. வண்ண வண்ண காகிதங்கள் பறந்த வண்ணம்.. இருக்க போட்டியாளர்கள்.. தங்களின் இருசக்கர பந்தய வாகனங்களை சரி பார்த்துக் கொண்டே.. போட்டிக்கு தயாராயினர்..
ஷ்ரித்திக்கிற்கு ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றது போன்றொரு மாயை.. அவன் வாங்காத கோப்பைகள் இல்லை.. இம்மாதிரியான போட்டிகளில்.. ஷ்ரித்திக் தான்.. நாயகன்..
விக்ரம்.. அதை தெரிந்து சொன்னானோ.. ?? இல்லை தற்செயலாக சொன்னானோ.. ?? "பங்கு.. ஒரு ஃபைவ் இயர்ஸ் பேக் போன மாதிரி இல்ல.. நீ எல்லா ட்ராஃபியும் அள்ளிடுவ.. இல்ல.." என்று விக்ரம் உரைத்தான்.. நகையோடு.. 😀
ஷ்ரித்திக்கும்.. கண்ணாடியை கழட்டி அவனை கண்டு புன்னகைத்தான்.. குறுநகையோடு.. 😎😎
"சரி.. எங்க இஷானி.. ?? அப்ப புஜ்ஜியும் இங்க தான் இருக்கனும்.." என விசாரித்தான்.. ஷ்ரித்திக்.. 😎😎.. அவன் கண்கள் தன்னவளுக்காக அலைப் புரிந்தது..
"அதான்.. பங்கு கிளம்பனதுல இருந்து.. கால் பண்ணிட்டு இருக்கேன்... எடுக்கல.." என திறன் பேசியை நோண்டிய படி கதைத்தான்.. விக்ரம்.. 🙂🙂
"சுத்தம்.." என்று ஷ்ரித்திக் கண்மணிகளை மேலே சுழட்டினான்.. சோர்வாக.. 😕
அதே சமயம்.. பந்தயத்திற்கு காத்துக்கொண்டு இருந்த.. இருசக்கர வாகனங்களுக்கு துப்பாக்கியை சுட்டு போட்டியை துவங்கினர்..
துவங்கிய மறு வினாடி.. அனைத்து இருசக்கர வாகனங்களும் காற்றை கிழித்து சீறி பறந்தன.. அரங்கத்தில் இருந்த அனைவரும்.. "ஹேய்..." என உற்சாகமாக குரலெழுப்பினர்.. 😀😀
அத்துடன்.. இருசக்கர வாகன பந்தயத்தின் பிரியர்களின் ஆரவாரமும்.. உற்சாகமும் அவ்விடத்தையே நிறைய செய்வே..
அவ் உற்சாகம்.. அவ்விருவரையும் வந்தடைந்தது..
பந்தய வாகனங்கள்.. ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு.. சீறிப் பறந்து மதில் சுவரிலும் வாகனங்கள் தங்களின் சாகசங்களை காண்பிக்க துவங்கினர்.. அவ்வேளையில்.. அக்கணத்தில்.. இருவரின் விழிகளும்.. ஒன்றாக ஒன்றை நோக்கியது..
அதை கண்டு... ஷ்ரித்திக்கின் இருவிழிகளும்.. சிவந்து.. ஆத்திரத்தில் கொதித்தது... 😠😠
விக்ரமோ.. பெரும் ஆச்சரியத்திலும்.. கோபத்திலும் இருந்தான்..
ஏனெனில்.. ஷ்ரித்திக்கின் பிரியமான வாகனமான.. டுகாட்டி 1299 சூப்பர்லெகரா.. யாரோ ஒரு இளைஞன் ஓட்டுவதை கண்டு தான்.. இச்சினம்.. 😠😠
ஷ்ரித்திக்கின் கோபம்.. இப்போது.. ஷிவாக்ஷியின் மீது திரும்பியது.. பெருகியது..
😡😡
தன்னுடைய பிரியமான வாகனத்தை இதுவரை தன் உயிர் நண்பனான விக்ரமிற்கே தந்ததில்லை.. அப்படி இருக்கும் போது.. ஷிவாக்ஷிக்கு அவ்வனுமதியை அளித்தான்.. அது தன்னவள்.. என்றொரு உரிமையை அவளிடம் பதிக்கவே.. எவையணைத்தும் தனக்கு சொந்தமோ.. அவையணைத்தும் அவளையும் சாறும் என்று தெரிவிக்கவே...
ஆனால்.. என்னவளோ என்ன காரியம் செய்திருக்கிறாள்.. ??? என்று நினைக்க.. நினைக்க.. சினம் பெருகியதே ஒழிய குறைந்தபாடில்லை.. 😡😡
ஒரு விழியோ.. தன்னவள் எங்கே என தேட... மறு விழி யார் அந்த ஆடவன் என்று நோக்கியது... 🤨🤨
அவன் மனம் இக்கணத்தில் யோசிக்க தவறியது.. அவளுக்கு தான் ஆண் நண்பர்களே கிடையாதே.. என்ற மூளை இடித்துரைக்க தவறியது..
விக்ரமின் கோபத்திற்கான காரணமும் அதுவே.. பல நாட்கள் ஷ்ரித்திக்கிடம் கெஞ்சி இருக்கிறான்.. அவ்வாகனத்தை தனக்கு சில மணி துளிகள் தரும் படி.. ஷ்ரித்திக் ஒப்புக் கொள்ளவில்லை.. அவ்வாகனத்தின் அருமை தெரியாதவனா.. ?? விக்ரமிடம் காண்பிக்கும் போது கூட எட்ட இருந்து தான் காண்பித்தான்.. தன்னிடம் கூட அவ்வாகனத்தை எட்ட இருந்து காண்பித்தவன்.. இன்றோ.. அவ்வாகனத்தை யாரோ ஒரு இளைஞனுக்கு பந்தயத்திற்கு ஓட்ட கொடுத்திருக்கிறான்.. 😠 அவனின் கோபம் ஷ்ரித்திக்கின் மீது தான்..
அந்த முகமறியாதவனோ... ஷ்ரித்திக்கின் பைக்கில் முன் சக்கரத்தில் மட்டும் ஒட்டிக் கொண்டே நின்றபடி சாகசங்களில்.. ஈடுப்பட்டுக் கொண்டிருந்தான்..
இன்னும் பல பல சாகங்கள் செய்து கொண்டிருந்தான்.. அந்த இளைஞன்..
அரங்கத்தில் இருந்த அனைவரின் பார்வையும்.. அந்த முகமறியா இளைஞனிடமே..
இதை கண்டு.. விக்ரம் ஷ்ரித்திக்.. இருவரும் வாயடைத்து போயிருந்தனர்.. 😮😮
விக்ரமும் ஷ்ரித்திக்கும் செய்பவர்கள் தான்.. அதில் இவ்வளவு நேர்த்தி இருக்காது.. இப்போட்டியில்.. ஷ்ரித்திக்கின் வாகனம்.. முழுக்க முழுக்க.. அந்த முகமறியா இளைஞனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது..
அந்த இளைஞனின் சாகசங்கள் வியக்க வைத்தது.. அவையில் அனைவரும்.. அனைத்து வாகனங்களையும் முந்திக்கொண்டு ஓடும் அந்த இளைஞன் மேலேயே இருந்தது..
திடுமென வண்டியிலிருந்து சரிந்து விழுந்தது விட்டான்.. முகமறியா இளைஞன்..
ஒரு நொடி.. ஒரே ஒரு நொடி.. ஷ்ரித்திக்கின் மனம் அவனுக்காக வருந்தியது..
அதற்குள்.. தான் விழுந்து விட்டோம் என்றெண்ணாமல்.. எழுந்தோட துவங்கினான்.. முகமறியா ஆடவன்..
விக்ரம்.. "பங்கு.. உன்னோட ஃபேவரைட் பைக்.. யாரோ ஒருத்தன் ஓட்டிட்டு இருக்கான்.. நீ பாத்துட்டு சும்மா இருக்க.. ?? எனக்கு கூட குடுத்ததில்ல.. ?? ஆனா யாரோ ஒருத்தன் ஓட்டிட்டு இருக்கான்.. ??" என்று விரைவாக கேட்டு வைத்தான்.. 🤨🤨 ஆதங்கத்தோடு..
ஷ்ரித்திக்கும்.. எவ்வளவு விரைவாக கேட்டு விட்டான்.. மனதில் நினைத்ததை கேட்டே விட்டான்.. "ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட போல.. ??" என்றுவிட்டு.. "நான் குடுக்கல.. என் பொண்டாட்டி பண்ண வேலை.. என்ன பண்ண சொல்ற.. ?? ரேசிங் லாம்ப்க்கு போய்.. அவன கழுத்த பிடிச்சு கேக்க சொல்றியா.. ?? ரேஸ் முடியட்டும்.. அப்பறம் இருக்கு.." என்றவன் மொழிந்த வேளையில் ஆத்திரம் அதிகரித்து கொண்டே இருந்தது.. 😡😡
வெற்றி கோட்டினை தொடும் வேளையில் தான்.. அந்த முகமறியா இளைஞன் விழுந்ததே..
அதற்குள் விரைவாக எழுந்து வண்டியை இயக்கி சீறி பறந்தான்.. அந்த இளைஞன்.. 😠
ஷ்ரித்திக்கின் பக்கத்தில் இருந்த சிலர்.. "நீ வேணா பாரு.. அந்த பிளாக் ஜாக்கெட் போட்டு இருக்கிறவன் தான் ஜெயிப்பான்..." என்று அவன் புகழ் பாட 😀
இன்னொருவனோ.. "ஆமா.. அவ கீழே விழுந்துட்டோம்.. அப்படின்னு ஃபீல் பண்ணாம.. வண்டியை ஓட்டனும்னு மட்டும் தான் குறியா இருக்கான்.. மத்தவங்களும்.. ஸ்டன்ட்ஸ் பண்ணாங்க.. பட் இவன் வேற லெவல்.. இந்த மாதிரி பைக்ல ஸ்டன்ட் பண்ண முடியும்னு எனக்கு இப்ப தான் தெரியும்.." என்க.. 🙂
இன்னும் சிலர்.. என புகழைப் பாடிக்கொண்டே போக.. ஷ்ரித்திக்கிற்கு அப்படியொரு.. கோபம்.. 😠 தன் வாகனத்தை கொண்டு ஒருவன் பெயர் பெறுவதா.. ?? என்ற எண்ணம்.. சுயநலம்..
சுயநலம்.. தான்.. சில விஷயங்களில் அனைவரும் சுயநலத்தோடு தான் இருப்பர்.. அல்லவா.. ?? அது தீயவை என்று அம்மனிதருக்கு தெரிந்தாலும்.. அவர் மனம் வைத்தால் மட்டுமே திருத்திக் கொள்ள முடியும்.. இந்த மனிதனின் மனம் தானே நடக்கும் அனைத்து செயல்களுக்கும் மூலக்காரணம்..
அரங்கத்தில் அப்படியொரு அமைதி.. வெற்றியை ஈட்டப்போவது யார் என்று.. ரசிகர்கள் முகத்தில் இருந்த அமைதியின்மை.. ஆவலில் தவிக்கும் உணர்வுகள் சொல்ல.. 😕😕
அனைத்து வாகனத்தையும் முந்திக் கொண்டு.. சீறி பாய்ந்து வெற்றி தட்டிச் சென்றது.. சந்தேகமேயின்றி.. அந்த முகமறியா ஆடவனே.. 🥳🥳
ரசிகர்கள்.. அவனின் வெற்றியையே எதிர்பார்த்திருந்த மையால்... "ஹோ.. ஹோ.. ஹோஓஓஓஓஓ..." என அவன் வெற்றியை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடினர்... அரங்கமே அவ்வொலியால் அதிர்ந்தது..
ஷ்ரித்திக்கின் வாகனத்தை முன்சக்கரத்தால்.. ஸ்டைலாக நிறுத்தி.. தன் வெற்றியை.. இரு கைகளையும் உயர்த்தி கொண்டாடினான்.. 🥳🥳
இதை கண்டு ஷ்ரித்திக்கின் கோபம் பண்மடங்கானது.. 😡😡 ஷ்ரித்திக்கின் விழிகள்.. தன்னவளை தேடுவதை மட்டும் நிறுத்தவேயில்லை.. சிக்கினால் சிதைத்து விடும் நோக்கமிருந்தது.. அவ்விழிகளின் அனல் சொல்லியது..
அப்போது.. தன் முகத்தில் மாட்டியிருந்த தலை கவசத்தை கழட்யதும்.. அரங்கத்தில் இருந்த அனைவரின் முகமும் அதிர்வானது.. ஆச்சரியமானது.. 😳😳.. விழிகள் பிதுங்கும் அளவுக்கு..
ஓட்ட முடியுமா.. ?? இவரால் ஓட்ட முடியுமா.. ?? இப்படியும் வண்டியை ஓட்ட முடியுமா.. ?? முதலில் இவருக்கு ஓட்ட தெரியுமா.. ?? பல கேள்விகளை தாங்கியது பலரின் விழி.. 🙄😳 இறுதி கேள்வியை தாங்கியது மட்டும் ஷ்ரித்திக்கின் விழி.. 🙄🙄 உணர்வுகளை மறைக்க தெரிந்தவனோ.. அதிர்ச்சியையும்.. ஆச்சரியத்தையும்.. பிரமிப்பையும்.. அப்பட்டமாக முகத்தில் காட்டினான்.. 🙄🙄
ஆனால் அதில் எள்ளளவும்.. கோபம் இல்லை.. ஆத்திரம் இல்லை.. குரோதம் இல்லை.. மாறாக விழிகள் மகிழ்வையே மையாக்கி மயக்கியது.. 😃😃
அவன் மட்டுமா.. ?? விக்ரமும் தான்.. தன் நண்பனை நோக்கினான்.. விக்ரம்...
விக்ரம்.. அவனுடைய நான்கு வயதிலிருந்தே உடனிருக்கிறான்.. ஆனால் இத்தனை வருடங்களில்.. அவன் முகத்தில் தெரியாத.. மலர்ச்சி.. மகிழ்வு.. இன்றவன் முகத்தில் இன்பமானான்.. ஷ்ரித்திக் பேரின்பத்தில் இருந்தான்.. 😃😃
நீங்கள் கேட்கலாம்.. ஷ்ரித்திக்கின் அனல் விழிகள்.. இப்போது பனிவிழிகளானதா.. ?? எப்படி சாத்தியம்.. ?? எங்கே அந்த முகமறியா இளைஞன் என்ற கேள்வி எழுகிறதா.. ??
ஒரு சிறு திருத்தம்.. அது இளைஞன் அல்ல இளைஞி.. ஷ்ரித்திக்கின் பிரியமான வாகனமான டூகாட்டியை பந்தயத்தில் ஓட்டி வெற்றியை ஈட்டியது.. சந்தேகமேயின்றி.. அவனவளே தான்.. ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷி தான்.. தன்னுடைய தலை கவசத்தை ஸ்டைலாக கழட்டி... கைகளை உயர்த்தி.. வெற்றியை கொண்டாடினாள்.. வண்டியை விட்டு இறங்கி கெத்தாக நடந்தவளுக்கு.. இஷானியும் அவளருகே தலை கவசத்தை கழட்டியபடியே.. வர.. இருவரும் தங்களின் இடையை ஒரு சேர மோதி கொண்டு.. உற்சாகத்தை பகிர்ந்தனர்... 😃😃
இஷானியும் தான் பந்தயத்தில் இருந்தாள்.. ஷிவாக்ஷியின் முன்பு அவள் சிறு பிள்ளை இந்த பந்தயத்தில் மட்டும்.. இஷானியால்.. மூன்றாமிடத்தை தான் பிடிக்க முடிந்தது.. ஷிவாக்ஷிக்கு தெரியும் நெளிவு சுழிவுகள்.. இஷானிக்கும் தெரியும்.. ஷிவாக்ஷியின் வாயிலாகத்தான்.. ஆனால்.. அதை பயன் படுத்த மாட்டாள்.. காரணம் அச்சம் எட்டிப் பார்த்து.. அது அவளை செய்ய விடாமல் தடுக்கும்.. மற்றபடி நல்ல போட்டியாளர் தான்.. இஷானி..
ரசிகர்கள் அவளருகே வந்து ஆரவாரத்துடன் ஷிவாக்ஷியை அள்ளினர்... 😃😃
சரியாக அதே நேரத்தில்.. வெற்றியாளர்.. ஷிவாக்ஷி ஆரிஷ் என்று ஒலி பெருக்கியில் ஒலிக்க.. ஷிவாக்ஷிக்கு ஒரு நொடி.. தன்னவனின் முகம் மனக்கண்ணில் வந்து நின்றது.. 😍
ஷ்ரித்திக்கிற்கு பெருமிதம்.. தன்னவள்.. என்ற கர்வம்.. தன் பெயரும் அவள் பெயர் பின்னோடு ஒலிக்க.. அவனுள்.. சந்தோஷ ஊற்று.. 😃😃😎
ஷிவாக்ஷியின் இந்த கோலம்.. ஷ்ரித்திக்கிற்கு.. நவ நாகரீக பெண்ணாக தெரிந்தாள்..
ஷிவாக்ஷி.. கண்களுக்கு கூசாத வண்ணம் தான்.. உடையணிவாள்.. அவள் முகத்திற்கென்று.. தனியாக எந்தவொரு ஒப்பனையும் இல்லை.. அவளுடைய மொழியினில்.. ஒரே ஒரு பொட்டு தான் ஒப்பனை.. அதுவும் செயற்கையே என்பாள்.. இயற்கை ஒப்பனை.. முகத்தினில் புன்னகையே என்றிருப்பவள்... 😃
ஷ்ரித்திக்கிற்கு.. தன்னவளை நினைத்தாலே.. ஒரு பாடல் தானாய் உதடுகள் மெல்லும்..
"உடைகளின் நேர்த்தியினால்
இந்த உலகினை வென்றவள் நீ...
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ... 🎵🎶"
என்ற பாடல் தான் தோன்றும்.. ஷ்ரித்திக்கிற்கு...
ரைடிங் ஜாக்கெட் அணிந்து.. கைகளில் கையுறையாய்.. கால்களுக்கு கால் சட்டை பாதங்களில் ஹை ஹீல்ஸ் பூட்ஸ் என.. இருந்தமையால்.. யாராலும் அவளை பெண் என்று அடையாளம் காண முடியவில்லை.. அது மட்டுமன்றி.. கண்களுக்கு உறுத்தவில்லை.. மாறாக நவ யுக பெண்ணாய் தெரிந்தாள்.. முன் நெற்றி முடியை பஃப் போன்று வைத்து க்ளிப் குத்தி இருந்தாள்.. குதிரை வால் போல.. காற்றில் அசைந்தாடியது.. விரித்துவிட்ட நீண்ட கருங்கூந்தல்.. 😍
அவளின் வெற்றி கோப்பை பெற்ற மறுகணமே.. ஷ்ரித்திக்கும் விக்ரமும் வந்து சேர்ந்தனர்.. 🥳🥳
சிலர் களைந்து சென்றனர்.. சிலர் அங்கும் இங்குமாய் அவ்வரங்கத்தை சுற்றி திரிந்தனர்..
ஷ்ரித்திக்கை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை.. என்று சொல்லாமல் சொன்னது.. ஷிவாக்ஷியின் முகம்.. 😳
இஷானிக்கு பெரிதாய் எவ்வொரு அதிர்வும் இல்லை.. அவர்களை அழைத்தவளே.. அவள் தானே... 😀
இஷானி.. விக்ரமை கண்டதும்.. "விக்கி.. சொல்லு.. ரேஸ் எப்படி இருந்துச்சு.. ?? என் மச்சி கலக்கிட்டால்ல.. ??" என்று பந்தயத்தை பற்றி வினவினாள்.. அதே வேளை.. ஷிவாக்ஷியின் மறு பக்கத்தை அறியாத ஷ்ரித்திக்கிடம் பார்வையை வைத்து.. 😀
"அவளுக்கு என்ன.. செம்மையா ஒட்டுனா.. ?? ஷிவு.. சொல்லவில்லை.. பைக் ஒட்டுவேன்னு.. ஆக்சுவலி.. இஷானி பைக் ரேஸிங் விட உன்னோட ரேஸிங்ல தான்.. நான் மெர்சலாயிட்டேன்.. உனக்கு வண்டி ஓட்ட தெரியுமான்னு இருந்தேன்.. பட்.. பின்னி பெடல் எடுக்குற.. சூப்பர்.." என வெளிப்படையாக பாராட்டினான்.. 😀😀😀👍
ஷிவாக்ஷிக்கு என்ன சொல்வது என தெரியாமல்.. புன்னகைத்து வைத்தாள்.. 😁😁😁
ஷ்ரித்திக்கின் பார்வை தன் மீது ரசனையோடு பதிவதை கண்டு நெளிந்தாள்.. ஷிவாக்ஷி.. 😍
ஷ்ரித்திக்கின் மனம்.. நேற்றிரவு அவள் கூறியது.. கண் முன் நிழலாடியது.. 'நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன்னு நோக்கு தெரியுமா.. ?? என் ஸ்ருஷ்டி எவ்ளோ பெருசுன்னு தெரியுமா.. ?? நான் எப்படி எல்லாம் இருந்தேன்னு தெரியுமா.. ?? கலியாணத்துக்கு அப்புறம்.. நான் இவ்ளோ அழுமூஞ்சின்னு நேக்கு இப்ப தான் தெரியும்.. நீங்க இன்னும் என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்கவே இல்லை.. அதுக்குள்ள எப்படி லவ்..' என்று நேற்று மொழிந்தவை.. செவில் ரிங்காரமிட்டது.. 😎😎😎
அவள் மொழிந்ததன் அர்த்தம் தற்சமயம் தான் விளங்கிற்று.. அவளுக்கு இன்னும் என்னவெல்லாம் தெரியுமோ.. ?? என்றவன் மனம் ஆயாசமாய் எண்ணியது.. 😎 அதே சமயம் கோபமும் உருவானது தான்.. அதில் அவ்வளவு விரியம் இல்லை..
ஷ்ரித்திக் ஒன்றுமே சொல்லாமல்.. போகலாம் என்று கண்களாலேயே மொழிந்து செல்லவே.. ஷிவாக்ஷிக்கு சப்பென்னு ஆனது.. 😑
இஷானிக்கு புரிந்தது.. ஷ்ரித்திக்கின் மனம் நினைப்பதை..
ஷிவாக்ஷி.. "ஒரு ஷனம்.. ??" என்று விட்டு.. உள்ளே சென்று புடவையில் மாறி.. தலைமுடியை க்ளிப்பில் அடக்கி.. வந்தாள்.. புடவையை இஷானி தான் கட்டிவிட்டாள்... அப்படியே பள்ளிக்கு செல்லும் நோக்கத்தோடு.. 🙂
உடைகளின் நேர்த்தியில்.. ஷிவாக்ஷியை அடித்து கொள்ள முடியாது.. அவ்வளவு நேர்த்தியாக அணிந்திருந்தாள்..
ஷிவாக்ஷி வந்ததும்.. நால்வரும்.. பயனித்தனர்.. ஷ்ரித்திக்கின் இல்லத்தை நோக்கி.. ☺️☺️
ஷ்ரித்திக் மகிழுந்தை இயக்க.. ஷிவாக்ஷி அருகில் அமர்ந்திருக்க.. விக்ரமும் இஷானியும்.. பின் பக்கம் அமர்ந்திருந்தனர்..
ஷ்ரித்திக்.. மகிழுந்தை ஓட்டுவதிலே கண்ணாய் இருந்தான்.. 😎 ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் மீதே பார்வையை வைத்திருந்தாள்.. அப்படி இப்படி நகர்த்தவில்லை.. 🙄
ஏதேனும் சொல்வான்.. என்று எதிர்பார்த்தது.. அவளின் கருநீல விழிகள்.. அதை ஷ்ரித்திக்கும் அறிந்தே இருந்தான்.. 😎 தன்னிடம் இருந்து வரும் சொற்களுக்காக.. எதிர்பார்க்கும் விழிகளுக்கு.. ஆயிரம் முத்தங்களை வாரி இறைக்க வேண்டும்.. துடித்த மனதை அடக்கினான்..
இதை அன்று.. அனைவரின் முன் நடனமாடிய பொழுதிலே உணர்ந்திருந்தான்.. 😎
ஷ்ரித்திக்.. "நேத்து தான.. உடம்பு சரியாச்சு.. அதுக்குள்ள.. என்ன.. ?? இப்படி.. ??" என அதிகார குரலில் கோபம் போல.. வினவினான்.. 😠
அதில் அக்கறை தான் இருந்தது..
ஷ்ரித்திக்கிடத்திலிருந்து.. வந்த இம்மொழிகளை யாரும் எதிர்பார்க்கவில்லை.. ஏன் இஷானி கூட.. ??
இஷானி நினைத்திருந்தாள்.. ஷ்ரித்திக் எப்படியும் தனிமையில்.. அவளை பாராட்டுவான்.. என்றே தான்.. 🙄
ஷிவாக்ஷியிடம் பதிலில்லை.. மௌனித்திருந்தாள்.. 😕
ஷ்ரித்திக்.. "இங்க பாரு புஜ்ஜி.. நான் ஒன்னும்.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணுங்க சமையல் கட்டுல தான் இருக்கணும்னு நினைக்கிறவன் இல்ல.. ஆனா.. இப்ப தான்.. உடம்பு சரியாயிருக்கு.. அதுக்குள்ள.. நீ பைக்க எடுத்தது எனக்கு ரொம்ப கோபம்.." என ஷ்ரித்திக் கடுமையாக கதைத்தான்.. 😠
ஷிவாக்ஷி.. "இங்க பாருங்கோ.. இது சாதாரணம்.. எல்லா பொம்மனாட்டிக்கும் இருக்கறது தான்.. ஐ நோவ் வாட் ஐ'யம் டுயிங்.. நீங்க என்மேல் அக்கறையா இருக்கேள்.. சந்தோஷம்.. அத தப்புன்னு சொல்ல மாட்டேன்.. சொல்லவும் முடியாது.. ஆனா.. குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணாதேள்.. ஐ'யம் 22.." என ஷிவாக்ஷி மொழிந்ததில் கோபம் இல்லை வருத்தம் இல்லை.. அதில் அழுத்தம் தான் இருந்தது.. ☺️
"அப்படியா.. ?? பாரு.. புஜ்ஜி.. நீ சொல்லி தான் எனக்கே தெரியும்.." என நக்கல் போல சொன்னவன்.. சில மணித்துளிகளில்.. "ஏன்னு.. தெரியல.. ?? என் கண்ணுக்கு நீ குழந்தையா தான் தெரியுற.. ?? நீ ஐ'யம் 22 அப்படின்னு சொல்ற.. குழந்தை என்னிக்கு தான் குழந்தைன்னு ஒத்துக்கும்.. இப்ப கூட நீ சொன்னது அப்படி தான் இருந்துச்சு.." என ஷ்ரித்திக் மகிழுந்தின் ஸ்டீயரிங்கை திருப்பிய படி கதைத்தான்.. 😎
கண்கள்.. நேர் கோட்டில் இருந்தாலும்.. வார்த்தைகளில் அவ்வளவு காதல் புதைந்து இருந்தது..
ஷிவாக்ஷி மறுபக்கம் திரும்பி சாலையில் கவனம் செலுத்தி இருந்தாள்.. ஷ்ரித்திக்கின் மொழிகளில் சிவக்க துவங்கிய முகத்தை மறைக்கச் செய்த வழி தான் அது.. ☺️🥰
விக்ரம் இஷானி.. இருவரும் அவர்களின் உரையாடலையே கவனித்திருந்தனர்..
ஷிவாக்ஷியின் முகத்திருப்பல்.. ஷ்ரித்திக் தவறாய் எண்ணினான்.. ஒருவேளை தான் கூறியது தவறாய் அவளிடம் சென்றடைந்ததா.. ?? என்று தான்..
"நான் அக்கறையா இருக்கறது உனக்கு பிடிக்கலையா.. ??" என உணர்ச்சியற்ற குரலில் ஷ்ரித்திக்.. கேட்டது தான் தாமதம்.. 😏
ஷிவாக்ஷிக்கு... விழிநீர் திரையிட துவங்கியது.. 🥺🥺
ஷ்ரித்திக்கிடம் இம்மாதிரியான மொழியை எதிர்பார்க்கவில்லை.. அது அவளை என்னமோ செய்தது.. குறிப்பிட்டு கூற முடியா வலியை தந்தது.. மெல்ல மெல்ல உள் இழுத்துக் கொண்டே.. மொழிய துவங்கினாள்.. "ஏன் இப்படி பேசறேள்.. ?? நான் அப்படி சொன்னேனா.. ?? என் மேல இவ்ளோ அக்கறையா இருக்கற முத ஆள்.. நீங்க தான்.. இவ்ளோ ஏன்.. இஷா.. என் சின்ன வயஷுல இருந்து கூட இருக்கா.. அவ கூட என் மேல இவ்ளோ அக்கறை எடுத்திருக்க மாட்டா.. அதுக்காக.. அவளுக்கு என்மேல அக்கறை இல்லைன்னு சொல்லல.." என்றுரைக்கவும்.. இஷானி பாயவும் சரியாய் இருந்தது.. 😠
"ஹேய்.. உங்க லவ்ல என்னை ஏன்டி.. இழுக்குற.. ?? நான் உன்மேல அக்கறையா இல்லன்னு சொல்றீயா.. ?? நீ எதை மனசுல வைச்சுட்டு பேசறன்னு.. எனக்கு நல்லா தெரியும் அத்து.. நேத்து அவரு உன்னை தாங்கு தாங்குன்னு தாங்குனதை தானே சொல்ற.. ?? ஏன் நான் பண்ணமாட்டேன்னு நினைக்கறீயா.. ??" என்று இஷானி தன் தோழியை படபடவென பொறிந்து தள்ளினாள்.. 😠😠
இஷானிக்கு என்ன கோபம்.. என்றால்.. ஷ்ரித்திக்கிற்காக பேசுகிறாள்.. அவன் வருத்தம் கொள்கிறான்.. அவனை சமன் படுத்தும் பொருட்டு பேசுகிறாள்.. சரி என்று அவளும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.. ஷ்ரித்திக்கிற்காக தன்னை விட்டு கொடுத்து.. ஏன் பேசுகிறாள்.. ?? தன் நட்பை குறைவாக எதற்கு மதிப்பிடுகிறாள்.. ?? என்ற கோபம் தான்.. நியாயமானதும் கூட..
"இஷா.. உன்னை விட்டுக்குடுக்கிறதா.. நினைக்காத.. நான் உங்களை கம்பேர் பண்ணல.. உண்மையா சொல்றேன்.. நீ எனக்காக பண்ணுவ.. பண்ண மாட்டேன்னு.. சொல்லல.. ஆனா.. செய்யறதுக்கு முன்னாடி ஒரு ஷணம்.. ஒரு நிமிஷம்.. நீ கண்டிப்பா யோசிப்ப.. ஆனா இவா யோசிக்க மாட்டா.." என ஷிவாக்ஷி உறுதியான குரலில் மென்மையாக ஷ்ரித்திக்கை பற்றி புரிதலை எடுத்து வைத்தாள்.. ☺️🥰
அம்மொழிகளில் தேக்கி இருந்தது காதல் என்பதை மூவரும் அறியாமலா.. ??
ஆம்.. ஷிவாக்ஷி மொழிந்தது.. எவ்வளவு சரி.. இது தான் நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம்..
நட்பு ஒரு கோவில்.. அதை குறை கூற முடியுமா.. ?? மனிதனின் மனதை பற்றியே உரைக்க வேண்டும்..
நண்பர்கள்.. தோழர்கள்.. தோழிகள்.. தன் நட்புக்காக எந்த எல்லை வரையும் செல்வார்கள் தான்.. ஆனால் சில செயல்களில் இறங்க யோசிப்பார்கள் தான்.. சில கணம் அவர்களுக்கு தேவைப்படும் தான்.. ஆனால் இறங்கினால்.. பின்வாங்க மாட்டார்கள்.. அதை குறை என்று சொல்ல முடியாது..
காதலும் அதை போன்று தான்.. உண்மையான காதல்.. தன்னவளுக்காகவோ.. தன்னவனுக்காகவோ.. எதை வேண்டுமானாலும் செய்து விடுவார்கள்.. என்னவொன்று யோசிக்காமட்டார்கள்.. இறங்கி விடுவார்கள்..
ஆதலால்.. தான்.. இறுதிக்காலத்தில் துனைவியின் துணை எவ்வளவு இன்றியமையாதது.. நாளை பின்னே படுக்கையில் வீழ்ந்தால்.. கவனிப்பில் இறங்குவது ஒன்று தாயாக இருக்கும் இல்லை துணையாக இருக்கும்..
உண்மை தானே..
(தப்பா இருந்தா கமெண்ட் ல மெதுவா பக்குவமா சொல்லனும்.. 😁😁😁)
ஷிவாக்ஷியின் சொற்களில் இருந்த உண்மை இஷானியை பேச விடாமல் செய்தது..
விக்ரம் இஷானியின் கைகளை பற்றி அழுத்தினான்.. ஆறுதலுக்காக.. இஷானியும் விக்ரமின் விழிகளை நோக்கினாள்.. 🥰🥰😍😍
ஷ்ரித்திக்கிற்கு.. இதழ்கள் தானாய் வளைந்தது.. இது கர்வத்தால்.. வந்த வளைவு அன்று.. தன் மீதுள்ள காதலை முதல் முறையாக.. அவளே அறியாமல்.. வெளிப்படுத்தியதால் வந்தது..
விக்ரம் விழிகளை விரித்து.. முன்பக்கம் இருந்த ஷ்ரித்திக்கின் தோள்களை அழுத்தினான்.. 😘
விக்ரம் அறியாததா.. ?? ஷ்ரித்திக்கின் காதல் வாழ்வை பற்றி.. இதுவரை ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கை தள்ளி நிறுத்தியதையும் அறிந்தவன்.. அவளுக்கு ஷ்ரித்திக்கின் மீதிருந்த காதலையும் அறிந்தவன் தான்.. முழுமையாக.. இல்லை..
விக்ரமிற்கு சிறு சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது.. ஷிவாக்ஷிக்கு இவ்வாழ்வில் அவ்வளவு உவகை இல்லையோ என்று..
இன்று அந்த சந்தேகத்திற்கு முற்று புள்ளியானது.. ஷிவாக்ஷியின் மொழி.. ☺️☺️
ஷ்ரித்திக்கிற்கு மகிழ்வு தாங்கவில்லை.. முகமெல்லாம் புன்னகையே நிரம்பி விடும் அளவில் மகிழ்வில்.. திளைந்திருந்தான்..
ஆனால்.. இவன் உணர்வுகளை வெளிக்காட்ட கூடியவனா.. ?? அழுத்தக்காரன்.. 😎😎
ஷ்ரித்திக்கின் இல்லத்தை வந்தடைந்தது.. அவர்களின் மகிழுந்து.. 🚗
விக்ரமும் இஷானியும் முன்னே நடந்தனர்..
ஷ்ரித்திக் வந்து கதவை திறக்க.. ஷிவாக்ஷி மகிழுந்தில் இருந்து இறங்கினாள்.. ☺️
ஷ்ரித்திக்.. உள்ளே நடக்க போனவளை.. இழுத்து கொண்டு.. தூணின் பக்கம் சென்றான்.. 😍😎
ஷ்ரித்திக்கின் இல்லத்தில் முன் பக்கம் இருந்த தூண்கள் அனைத்தும் இரண்டு ஆளை மறைக்கும் அளவு பெரிய தூண்களே..
ஷிவாக்ஷி.. இதை எதிர்பார்த்தே இருந்தாள்.. அதனால்.. பெரிய அதிர்வுகள் ஏதும் இல்லை..
ஷிவாக்ஷியை தூணில் சாய்த்து.. அவள் மேல் இவன் சாய்ந்திருந்தான்..
ஷ்ரித்திக்.. "என்ன கோவமா.. ?? புஜ்ஜி.." என்று அவள் காதருகே குனிந்து கிசுகிசுப்பாய்.. ரகசியம்போல கேட்க பதிலில்லை.. ஷிவாக்ஷியிடம்.. 😎
செவியருகே கூசியதை போலிருந்தது.. ஷ்ரித்திக்கின் மொழிகள்.. ஆதலால்.. செவியை தோளோடு அழுந்த தேய்த்து கொண்டாள்.. 🥰
ஷ்ரித்திக் தன்னவளின் செயலில்.. இதழ் வளைத்தவன்.. முன்னம் செய்ததை போலே மற்றொரு செவியிலும்.. "பேசலைன்னா.. நான் பேசவே முடியாத ஒன்னு பண்ண வேண்டியது இருக்கும்.." என்று மொழியும் வேளை.. அவன் நேத்திரம் அவளின் இதழ்களில் பதிந்திருந்தது.. 😍😎
முதலில் புரியாது விழித்தவள்.. ஷ்ரித்திக்கின் பார்வை செல்லும் இடம் கண்டு அவனின் மார்பில் கை வைத்து தள்ளினாள்.. இதழ்கள் நிறைந்த வெட்க நகையோடு.. ☺️
ஷ்ரித்திக்கும் அவளின் முயற்சிக்கு.. தள்ளியதை போல் போக்கு காண்பித்தவன்.. அவளின் முகத்தை தன்னிரு கைகளால் தாங்கியவன்.. விரல்களால் கோலமிட்டான்.. அவளின் மனதை பறித்தவன்.. 😍😘
நெற்றி கண்கள் என்று வந்துக் கொண்டிருந்த அவன் விரல்கள்.. அதற்கேற்ப ஷிவாக்ஷியின் விழிகளும் பயணித்தது.. ஏதோ உருமில்லா ஒரு உருண்டை அவளுள் உருள்வதை போலொரு மாயை.. 😨😘
திடீரென அவளின் கண்ணத்தில் நின்ற விரல்.. வட்டமிட.. "புஜ்ஜி.. இங்க என்ன புதுசா.. ?? சிவந்திருக்கே.. ??" என்றிட.. 😎😍
அதற்கு மேல் தாள முடியாமல்.. அவ்விடத்தில் இருந்து நகரம் போனாள்..
ஷ்ரித்திக் விட்டால் தானே.. 😎 😍
அவளின் கரம் பற்றி இழுத்து.. ஷிவாக்ஷியை பின்னிருந்து அணைத்து கொண்டான்.. அவளின் வெற்றிடையில் அவனின் கைகள் பதிந்தது.. 😍😍
இதயத்துடிப்பு பன்மடங்கு பெருகியது.. மூச்சு காற்று.. சீராக அன்றி ஏறி இறங்கியது.. ஷிவாக்ஷிக்கு..
அவள் தோளில் தாடையை வைத்து.. "ரேஸ் செம்மையா பண்ணுன.. நான் உன்கிட்ட இத எதிர்பாக்கல.. நீ ஒரு பச்சமண்ணுன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன்.." என கூறியவன்.. சிறு இடைவெளி விட்டு.. "இத சொல்லனும்னு தானே.. எதிர்பாத்த.. ?? சொல்லிட்டேன்ல பேசுடி.." என்றிட.. 😎
அதுவரை அமைதியாய் இருந்தவள்..
தன் தோளை குலுக்கி.. அவன் முகத்தை தள்ளியவள்..
"அய்யய்யோ.. அப்பப்பா.. அவ்ளோ கஷ்டப்பட்டுண்டு ஒன்னும் சொல்ல வேணா.." என்று விட்டு கண்களை சுருக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள்.. 😑
"ஹப்பா.. பேசிட்ட.. ஹே சீரியஸ்லி.. நீ பச்ச மண்ணுனு தான் நினைச்சேன்.. உனக்கு ஒன்னும் தெரியாது.. நீ ஒரு பாப்பா.. அப்படின்னு நினைச்சேன்.. ஆனா உனக்கு.. டேன்ஸ் தெரியும், பாட்டு பாட தெரியும், ரேஸிங் தெரியும்... இன்னும் உனக்குள்ள என்னென்ன டேலண்ட்ட ஒளிச்சு வைச்சிருக்கியோ.. இதத்தான்.. நேத்து.. உன் உலகம் அப்படி இப்படின்னு பேசுனியா.. ??" என்றுவிட்டு அவளின் முகத்தை காண.. 😎
ஷிவாக்ஷியோ.. நகையோடு திரும்பினாள்.. காதல் பார்வையை வீசினாள்.. 😍
இடையிலிருந்து அவனின் கைகளை விலக்கிவிட முயற்சித்தாள்..
ம்ஹூம்.. ஷ்ரித்திக் விடமாட்டேன் என்றிருந்தால்.. ?? அவள் மட்டும் என்ன செய்வாள்.. ?? ஹ்ம்ம்..
"கை எடுங்கோ.. ஏன் இப்படி பண்றேள்.. ??" என்று மென்மையாக கேட்டாள்.. கோபம் ஏதும் இல்லாமல்.. 😑
"எதுக்காக.. பண்ணுவேன்.. இதுக்காக.." என்று விட்டு.. அவள் கண்ணத்தில் இதழ்களை பதித்தான்.. அழுத்தமாக.. 😍😘
அவள் கண்ணங்களின் மென்மையை உணர்ந்தான்.. அவள் கண்ணங்களில் சில்லிட்ட உணர்வை உணர்ந்தான்.. 😍😍.. 'எத்துனை மென்மை.. ??' என்றவன் மனம் நினைக்காமலில்லை..
ஷிவாக்ஷிக்கு தான்.. உணர்வுகள் அனைத்தும் செயலிழந்து நின்றது.. விழிகள் இரண்டும் வெளியேறிடும் அளவில் பிதுங்கியது..
இப்பொழுதெல்லாம்.. அவனின் அருகாமையை தவிர்க்க முடிவதில்லை.. இவளால்.. 😨😨
அவளை தன் அணைப்பிலே வைத்துக் கொள்ள வேண்டும்.. என்று மனம் நினைத்தது தான்..
ஆனால்.. தன்னவளின் அனுமதி இன்றியே.. தான் அவளிடம் நெருக்கம்.. ஷ்ரித்திக்கிற்கு அவ்வளவு உசிதமானதாக தோன்றவில்லை..😏 அதே வேளை.. ஷிவாக்ஷியை பார்த்துக் கொண்டு.. தன் உணர்வுகளை அடக்கவும் முடிவதில்லை.. 😜
உண்மையில்.. ஷ்ரித்திக்கிற்கு தான் இரு தலை கொள்ளி எறும்பு நிலையோ.. ??? 🤔
மனமில்லாமல் அவளை விடுத்து.. இல்லத்திற்குள் நுழைந்தான்.. தன் பின்னே வந்து விடுவாள் என்றெண்ணியே..
ஆனால்.. பின்னால் நடக்கப்போவது முன்னே தெரிந்திருந்தால்.. விட்டு விட்டு சென்றிருக்க மாட்டானோ.. ?? என்னவோ.. ?? விதியின் மதிக்கு யார் யாரென்று தெரியவா போகிறது.. ??
தனியே நின்றிருந்த.. ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் முத்தத்திலே திளைத்திருந்தாள்.. இன்னும் அவ்வுணர்வு அவளை விட்டு அகலவில்லை.. ஷ்ரித்திக் அருகே இருப்பதை போலொரு பிரம்மை.. 😍😍🥰🥰😀
அதன் பின்னே.. மாயாவின் வருகை தான்.. சுயநினைவை அடைய செய்தது.. சுயநினைவை மட்டுமன்றி ஆத்திரத்தையும் அடைய செய்தது.. அவளின் சொற்கள்... 😠😠
அவள் கதைத்த சொற்கள் மெய்யா.. ?? என்றறிய உள்ளே வேக எட்டுகளுடன் நுழைய..
மெய்தான்.. என்று நிரூபிக்க தேவையின்றி.. கேட்க தேவையின்றி.. அங்கிருந்த ஆட்களும்.. சூழ்நிலையுமே.. கதைத்தது.. சொற்களின்றி..
ஏற்கெனவே.. மாயாவின் சொற்கள் கீறிய வடுவாய்.. இங்கோ அதை மேலும் கிளறுவதாய்.. 😡😡😡
"என்ன நடக்கறது இங்க.. ??" என்று ஷிவாக்ஷியின் குரோதக் குரலே.. அந்த மாபெரும் மாளிகையை நிரப்பியது..
குரல் கேட்டு திரும்பிய அனைவரும்.. கண்டது.. செந்தனலாய்.. சிவந்திருந்த ஷிவாக்ஷியின் முகமே.. 😡😡
----------------
To be continued.. 😉
Word count 4209
Vote 😍😍😍
Comment... 👍🙂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro