Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 3...🥰

ஷ்ரித்திகின் குடும்பம் அவனின் மனதை போலவே.. மிகவும் பெரியது ... குடும்பத்தினர் பற்றி...

ஷ்ரித்திகின் தந்தை.. ராஜதேவன் நாயக் இவர் தென்னிந்திய வணிகத்தில் கொடிக் கட்டி பறந்தவர்.. இப்போதில்லை.. அவ்விடத்தில் இப்போது அவரின் மைந்தன்.. 

அமரேந்திர நாயக்கின் முத்த மகன்..

மற்றவர்களிடம் காட்டும் அதிகாரம், கோபம்.. ஏனோ தன் குடும்பதிடம் காட்ட இயலவில்லை... எதையுமே அன்பாகவே புரியச் செய்வார்... நல்ல தந்தை மற்றும் குடும்பத்தலைவராக தன் பணியை செவ்வனே செய்பவர்..😍

அன்பிற்கு உருவம் இருக்கிறதா என்று ஷ்ரித்திக்கிடம் வினவினால்... ?  அவன் கூறும் பதில் தன் தாய் இந்திரக்கவியே...

அமரேந்திர நாயக்கின் முத்த மருமகள்..

குடும்பத்தின் தலைவி, பாசமிகு தாய், பண்பான மருமகள், அன்பான மனைவி.. என்று வலம் வருபவர்..🥰😍

சஞ்‌சை .. ஷ்ரித்திகின் உடன்பிறப்பு.. நல்ல நண்பன்.. தம்பி.. போன்ற பன்முகங்கள்...😇

ராகுல்... ஷ்ரித்திகின் சித்தப்பா மகன்.. ஆனாலும் வேறுபாடின்றி.. நண்பர்களைப் போலவே பழகுவர்...🙂

ஜானவி... ஷ்ரித்திகின் உடன் பிறப்பு.. அன்புத் தங்கை.. ஆனால், முதலில் நல்ல தோழன்.. பிறகே தமையன், தங்கை எல்லாம்..🤩

வர்ஷா.. ஷ்ரித்திகின் சித்தப்பா மகள்.. ஜானவியிடம் பழகுவது போலவே.. வர்ஷாவிடமும் பழகுவான்..🤩

ஷ்ரித்திகின் சித்தப்பா சித்தி.. தேவ தேவன் நாயக் மற்றும் தேவிகா.. 

அமரேந்திர நாயக்கின்‌ இளைய மகன் மற்றும் மருமகள் ...

என் தமையனுக்கு நான் சளைத்தவனல்ல பாசத்தை நட்பாக மக்களிடம் ஊட்டுபவர் ... தேவிகா தன் கணவனை போலவே.. அனைவரிடம் அன்பு பாராட்டுவர்...😍

ராஜ தேவன் நாயக் மற்றும் தேவ தேவன் நாயக்கின் தங்கை.. அமரேந்திர நாயக்கின்‌ இளைய மகள்.. சமீரா அவளின் கணவன் யாதவன்..🥰

இவர்களுக்கு மூன்று மக்கள்..

முத்த மகன் மகேந்திரன் மற்றும் மருமகள் தீவா... இவர்களின் மக்கள்..🥰

ஆரா.. 😘

ரித்துல்...😘

யாதவன் சமீராவின் மகள் நேஹா மற்றும் அவளின் கணவன் கார்த்திக்... இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்..🥰

தியா...😘

ருத்ரா.. 😘

மாயா.. சமீரா யாதவனின் கடைக் குட்டி.. (இவக் கொஞ்சம் வில்லி மாதிரி..) இவள் ஒன்றில் ஆசைப்பட்டால் அது கிடைத்தே ஆக வேண்டும்.. இல்லை அனைவரையும் ஒரு வழியாக்கி விடுவாள்...🤔

கண்டிப்பும், அன்பும் மிக்க மூத்த தலைமுறையினர் ... தாத்தா அமரேந்திர நாயக் ... பாட்டி தேவசேனா.. 🥰

அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழும் நல்லறம்...

மாயா ஷ்ரித்திகின் நிச்சயதார்த்தம் திருவல்லிக்கேணியில் உள்ள பண்ணை வீட்டில் ஏற்பாடு செய்து உள்ளதால்... 

குடும்பத்தினர் மொத்தமும்.. அவ்விடம் செல்ல ஆயத்தமாயினர்..

ஷ்ரித்திகின் பண்ணை வீடு.. நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் என்பதால்... அதற்கான பணிகள்.. மும்முரமாக நடந்து கொண்டிருக்க

குடும்பத்தினர் தத்தம் அவரவர் அறையில் சென்றுள்ளார்கள்.. ஓய்வெடுக்க ...

ஒருவனை தவிர.. (வேற யாரு.. ? நம்ம ஹீரோ தான்)

"எனக்கு கல்யாணம்ங்ற ஒரு ஃபிலே வரலையே.. ? என்ன இது... ? ஏன் இப்படியெல்லாம் தோனுது.. ? நா எடுத்த முடிவு சரிதானா.. ? இன்னும் மாயா மேல லவ் வரலையே.. நானும் எவ்வளவோ தான் ட்ரைப் பண்ணறது.. ?" என்று அவனுக்குள்ளே கேள்விக் கனைகளைத் தொடுக்க..

"என்னடா.. அந்த கனவு பத்தி யோசனையாக.. ?" கேட்டுக் கொண்டே நுழைந்தது அவனின் அன்னையே..

(ஷ்ரித்திகின் அம்மா அப்பா மற்றும் உடன்பிறப்புகள் சில நண்பர்களுக்கு மட்டும் அவனின் கனவு பற்றி தெரியும்..)

"இல்ல மா.. ஜஸ்ட் தலைவலி.."என்று கூறிக்கொண்டே தாயின் வயிற்றில் சாய்ந்து கொண்டான்.. அவரும் அவனின் தலையை தடவிக் கொடுத்தார்..

"வேற ஒன்னும் இல்லை கண்ணு பட்டு இருக்கலாம்..சுத்திப் போட்டா சரியாயிடும்.."என்று கூற

"தலைவலிக்கு அது  காரணம் இல்ல மா"என்று மனதில் நினைத்து கொண்டான்...

------------

(Hii.. guyzz.. kudumbatha pathi solliye oru udya potutean.. negative feedback irundha sollunga guyz... NAA ezhudharadhu.. konjam periya story.. so konjam poruthukunga .. aana kandippa daily ud thara try pandrean... Idhu varaikkum aadharavu thara Ella Nalla ullagalukku romba tq..) 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro