அத்தியாயம் - 16 🥰
எந்தன் உயிரினில் உன்..
கலப்படத்தை காட்டி..
என்னில் கலந்தவளே..
என்னுள் நிறைந்தவிட்டாய்..
என் பிராணவாயு நெருக்குகிறது..
உந்தன் செந்தாமரை முகம்..
இனியும் தாளாதென உன் விழி கோர்த்து.. உன்னை என்னுள் கரைத்திடும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்..
கதிரவன் உச்சியில் தொங்கிய.. ஓளி விளக்காக வெளுத்துக் கொண்டிருந்தான்..
அவன் வெளுப்பதில் மக்களின் தலை பிளக்க.. ஆள் நடமாட்டம் குறைந்திருந்த மதிய வேளை..
ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் பின்னோடே.. அந்த பெரிய மாலுக்குள் சுற்றியும் முற்றியும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள்..
அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்ததில்.. ஷ்ரித்திக்கை அனைவரும் மரியாதை நிமித்தமாக மதிய வணக்கத்தை உரைத்ததை கவனிக்க மறந்தாள்..
ஷ்ரித்திக் அங்கிருந்த ஒரு ஆடையகத்திற்குள் நுழைய.. ஷிவாக்ஷியும் பின்னோடே நுழைந்தாள்..
ஷ்ரித்திக் நுழைந்ததும்.. அந்த ஆடையகத்தின் மேலாளர்.. அறக்க பறக்க ஷ்ரித்திக்கிடம் ஓடி வந்தான்..
"என்ன.. சார்.. நீங்க.. போய் நம்ம ட்ரஸ் கார்னர்க்கு வந்திருக்கீங்க.. ?? சொல்லிருந்தா.. நானே வந்திருப்பேனே.. ??" என அந்த ஆடையகத்தின் மேலாளர்.. இன்னும் குனிந்தால்.. தொப்பை தரையில் முட்டிவிடுமோ என்றெண்ணும் அளவிற்கு பணிவாக ஷ்ரித்திக்கிடம் பேசினார்..
"நத்திங்.. அதெல்லாம் வேணா.. இவங்க என்னோட வைஃப் .. இவங்களுக்கு கொஞ்சம் காஸ்ட்யூம்ஸ், ஔவுட்ஃபிட்ஸ், வேணும்.. அதான்.. " என ஷ்ரித்திக் அவரிடம் கெத்தாக பேசிக்கொண்டு இருப்பதை கண்டு.. 'பாத்து.. பாத்து.. இப்படி ஈசிண்டு இருக்கா.. தொப்பை தரையில முட்டிட போறது.. ' என அவளின் மனவோட்டம் இருக்க..
"சார்.. நீங்க சொல்லிருந்தா.. உங்க வீட்டுக்கே எடுத்துட்டு வந்திருப்பேன்.. பரவால்ல.. நானே எடுத்து காட்டறேன்.. வாங்க.. சார்.. மேடம்.. வாங்க.." என அந்த ஆடையகத்தின் மேலாளர்.. அழைத்துச் சென்றான்..
"ஷிவு.. இங்க உனக்கு எந்த மாதிரியான காஸ்ட்யூம்ஸ் வேணுமோ.. அதெல்லாம் செலக்ட் பண்ணு.. வாங்கிக்கலாம்.. ஹ்ம்ம்ம்ம்.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மொழிந்தான்..
"என்ன.. ?? அப்ப நேக்கு தான் பர்ச்சேஸா.. ?? அதெல்லாம் வேண்டா.. வாங்கோ.. போய்டலாம்.." என ஷிவாக்ஷி மெல்லிய அதிர்வோடு கேட்டாள்..
"பின்ன.. ?? வேற யாருக்காம்.. வேணாமா.. ?? போட்டுக்கறதுக்கு காஸ்ட்யூம் எதுவும் இல்ல வாங்கி தான் ஆகனும்.. நான் நேத்தே வாங்கி குடுத்திருக்கனும்.. மை மிஸ்டேக்.. நீ காலைல சொன்னதுக்கு அப்பறம் தான் எனக்கு தோனுச்சேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்.. நீ இப்படி சொல்ற.. ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் பொறிந்து தள்ளினான்..
"இல்லங்க.. நேக்கு வேண்டாம்.. என்கிட்ட காசில்ல.. வேணா.." என ஷிவாக்ஷி மறுப்பு தெரிவிக்கவும்..
"நான் பணம் கேட்டேனா.. ?? நான் வாங்கித் தரேன்.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை சமாதானமாக கதைக்கவும்..
"இல்ல.. ஏற்கனவே.. உங்களுக்கு 5 லட்சத்துக்கு கடன் தரனும்.. அதுக்கே என்ன பண்றதுன்னு நேக்கு தெரியலை.. இப்போ இதுவும்னா.. காசு பத்தாது.."
என ஷிவாக்ஷி ஏதேதோ காரணம் கூறி மறுக்கவும்..
ஷ்ரித்திக் தன்னை முறைப்பதை கண்டு சற்று பயம் வந்தாலும்.. "என்ன.. ?? முறைக்றேள்.. ?? இதுக்கெல்லாம் நா பயப்பட மாட்டேன்.. " என பயத்தை மறைத்துக் கொண்டு தைரியமாக இருப்பதை போல காண்பித்தாள்..
"மேடம்.. நீங்க தைரியசாலி தான்.. அதுக்காக இந்த கடன் அது இதுன்னு சாக்கு சொல்லாத.. உன்கிட்ட இருந்து பணத்தை நா எப்படி வசூல் பண்ணணுமோ.. அப்படி பண்ணிக்கிறேன்.. அந்த கணக்கொட இதையும் சேத்திக்கிறேன்.. நீ மெதுவாவே பணத்தை குடு போதுமா.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை காதல் பார்வை பார்த்துக் கொண்டே.. ஷிவாக்ஷியை வாங்க வைப்பதற்காக வார்த்தைகளை மொழிந்தான்..
சிறிது நேரம் யோசித்த ஷிவாக்ஷி.. சம்மதிக்கவும்..
"ஹப்பா.. உன்ன மண்டை ஆட்ட வைக்கறதுக்குள்ள ... சோ... போ.. போய்.. உனக்கு வேணுங்கறத செலக்ட் பண்ணு.." என ஷ்ரித்திக் சலித்து கொண்டான்..
அதைப் பார்த்த ஷிவாக்ஷி இதழ்களை சுளித்து கொண்டு .. ஆடைகளை தேர்வு செய்ய சென்றாள்..
ஷ்ரித்திக்கிற்கு ஒரு அழைப்பு கைப்பேசியில் வர எடுத்து பேசிக் கொண்டிருந்தான்..
திடீரென ஷிவாக்ஷி ஆடை விற்பனை பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்..
அதை கண்டவன்.. கைப்பேசி இணைப்பை துண்டித்து விட்டு.. அவர்களின் அருகே வந்த ஷ்ரித்திக்.. என்னவென விசாரிக்க..
அந்த விற்பனை பெண்.. "சார்.. மேடம்.. பிலோ 500 ரேட்ல காஸ்ட்யூம்ஸ காட்ட சொல்றாங்க.. உங்களுக்கு தெரியுமே சார் இங்க ஸ்டார்ட்டிங் ரேட்டே 2000ன்னு சொன்னா.. புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க..." என விற்பனை பெண் கூறியதை கேட்டு ஷ்ரித்திக்கிற்கு காதில் புகை வராத குறையாக ஷிவாக்ஷியை முறைத்தான்..
ஷிவாக்ஷியோ.. 'பாக்குறாளே .. பாக்குறாளே..
பாக்குறாளே... ' என தன் மனதுள் நினைத்து கொண்டே.. ஷ்ரித்திக்கை கண்டு பல்லை காட்டி 'ஈஈஈஈஈ...' என இளித்து வைத்தாள்..
ஷ்ரித்திக்கும் பதிலுக்கு 'ஈஈஈஈஈஈ..' என இளித்து வைத்தான்..
ஷிவாக்ஷி கூச்சப்படுவதை உணர்ந்தான்..
"உனக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் தான பண்ண சொன்னேன்.. ?? எதுக்கு அமௌன்ட் பத்தியெல்லாம் யோசிக்கிற.. ???" சிறிது நேரம் இடுப்பில் கை வைத்து அவளையே பார்த்தவன்.. "இங்க பாரு.. நா உனக்கு காஸ்ட்யூம்ஸ் பாக்குறேன்.. உனக்கு பிடிச்சத இங்க வை.. பிடிக்ககாததெல்லாம்.. அந்த பக்கம் வை.. ஓகேவா.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மொழிந்ததும்.. ஷிவாக்ஷியின் தலை தானாய் ஆடியது..
ஷ்ரித்திக் விற்பனை பெண்ணிடம் அவளுக்கான சரியான அளவில் சுடிதார், சல்வார், லாங் சூடி, இரவு ஆடைகள்.. அனைத்திலும் எடுத்து போட்டுக் கொண்டே போனான்.. அனைத்து ஆடைகளும்.. கண்ணை கவரும் வகையிலும்.. தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டதாக இருந்தது.. புடவைகளில் சாதாரணமாக கட்ட கூடிய சில புடவைகளும், விழா காலங்களில் அணிவதற்கு ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட சில புடவைகளையும்.. என அனைத்தையும் ஷிவாக்ஷிக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான்..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷி எதுவும் பிடிக்காததை தேர்ந்தெடுக்காமல் இருப்பதை கண்டு.. "ஓய்.. என்ன... ?? பிடிக்காதத.. அந்த பக்கம் வைக்க சொன்னேன்ல.. ??" என ஷிவாக்ஷியிடம்.. கேள்வி எழுப்பினான்..
"எல்லாமே.. நன்னா இருக்கே.. நா என்ன பண்றது.. ??" என ஷிவாக்ஷி திருதிருவென விழித்தாள்.. மென்னகை புரிந்தான்.. ஷ்ரித்திக்.. "சரி.. நீ.. இவங்க கூட போய்.. உனக்கு தேவையானத செலக்ட் மட்டும் பண்ணிட்டு வா.. சரியா.. போ.." என விற்பனை பெண்ணிடம் கண்ணை காட்ட.. அந்த பெண்ணும் ஷிவாக்ஷியை அழைத்து சென்று.. 'எதுக்காக.. என்ன மட்டும் போ சொன்னா.. ??' என குழப்பிக் கொண்டே வந்தவளுக்கு.. தனக்கான உள்ளாடைகளை தேர்ந்தெடுக்க தான் அனுப்பியுள்ளான்... என்பதை அந்த இடத்தை கண்டு புரிந்து கொண்டாள்..
அனைத்தையும் தேர்வு செய்து முடித்த ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் அருகே வந்தாள்.. "எல்லாம் செலக்ட் பண்ணிட்டியா.. ??" என ஷ்ரித்திக்கின் வினவல் மொழிக்கு... தலையை ஆட்டினாள்.. ஷிவாக்ஷி..
அங்கிருந்த அனைத்தும் அவளுக்கு பிடித்த வகையில் ஆடைகள் இருந்தன.. தனக்கு ஆடைகளை முதன் முறையாக பிடித்த வகையில் வாங்கியதால்.. அதை தொட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்..
அதை ஷ்ரித்திக்கும் மென்னகையோடு கவனித்து ரசித்தான்..
அப்போது.. அந்த ஆடையின் விலையட்டை தட்டுப்பட.. அதைக் கண்டவள்.. ஆடி போனாள்.. ஏனெனில் ஒவ்வொரு ஆடையும் குறைந்தது.. பதினைந்தாயிரம் அல்லது அதையும் கடந்தே இருந்தது..
"இங்க பாருங்கோளேன்.. இதெல்லாம் வேணா.. ?? இதெல்லாம்.. ரொம்ப காசு ஜாஸ்தியா இருக்கறது.. நேக்கு வேண்டாம்.. " என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் காதில் ஒதினாள்..
"ஷிவு.. இங்க.. பாரு.. உனக்கு இதெல்லாம் பிடிச்சு இருக்குல.. அப்பறமென்ன.. ?? காசெல்லாம் பாக்காத... அவ்ளோதான்.. இதெல்லாம் உனக்கு தான்.. டாட் " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் வாயை அடைத்தான்..
ஷ்ரித்திக் அனைத்தையும் பேக் செய்ய சொல்லி அதற்கான பணத்திற்கு கார்டை நீட்டினான்..
"சார்.. இது உங்க மால்.. நீங்க போய்.. ??" என அந்த ஆடையகத்தின் மேலாளர்.. இழுத்தான்..
"இல்ல.. இது வைஃப்காக ஃபர்ஸ்ட் டைம் பர்சேஸ்.. பண்றேன்.. நா பே பண்ணதா இருக்கட்டும்.. " என ஷ்ரித்திக் கார்டை நீட்டியதும்.. மறுப்பேச்சின்றி அந்த மேலாளர்.. கார்டை வாங்கி பணத்தை பெற்றுக் கொண்டான்..
ஷிவாக்ஷி அதிர்ந்தே போனாள்.. இந்த ஆடையகம் தான் ஷ்ரித்திக்கிற்கு உரியதாக இருக்கும்.. என நினைத்தவளுக்கு ... இந்த பிரம்மாண்டமான பேரங்காடி இவருக்கு உரியதாக இருக்கும் என நினைக்கவில்லை அவள்..
ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் பின்னோடே நடந்தாள்.. ஆபரண மாளிகைக்குள் ஷ்ரித்திக் நுழைய.. ஷிவாக்ஷியும் நுழைந்தாள்..
அதேபோல் ஷிவாக்ஷி எவ்வளவு மறுத்தும்.. அவளுக்கு தேவையான ஆபரணங்களை அனைத்தும் வாங்கி தந்தான்.. ஷ்ரித்திக்..
பெண்கள் ஒப்பனை பொருட்கள் விற்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல.. ஷிவாக்ஷி ஏதோவொரு யோசனையில் அவளும் உள்ளே நுழைந்தாள்..
ஷ்ரித்திக் .. "ஷிவு.. எனக்கு பொண்ணுங்க மேக் அப் திங்ஸ் பத்தி.. தெரியாது.. நீயே.. பாத்து எடுத்துக்கோ.. " என மொழியவும்..
அப்போது தான் ஷிவாக்ஷி சுற்றியும் முற்றியும் பார்த்தாள்.. "அச்சோ.. நா இதெல்லாம் போடறதில்ல.. நேக்கு இதெல்லாம்.. பிடிக்காது.. வாங்கோ.. போலாம்.. " என ஷிவாக்ஷி வெளியே வந்தாள்..
ஷ்ரித்திக்கும் அவள் பின்னே வந்து... "ஹேய்.. மேக்-அப் போட மாட்டியா.. ??" என வினவ..
"இல்ல.. நா எப்பயுமே.. பயித்த மாவு, கடலை மாவு தான் உடம்புக்கு.. தலைக்கு சீயக்காய், அறப்பு இதான்.. மிஞ்சி மிஞ்சி போனா.. கண்ணுக்கு மை.. நகத்துக்கு நகச்சாயம்.. அவ்ளோ தான்.." என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் மொழிந்தாள்..
"ஹேய்.. ரொம்ப ட்ரேடிஷ்னலா இருக்கியே.. இந்த ஜீன்ஸ்ல வர வைஷு மாதா மாதிரியா.. ??" என அவளின் பின்னோடே நடந்து கொண்டே.. கேட்ட ஷ்ரித்திக்கின் மொழிகளுக்கு..
"அது.. நடிப்பு.. இது நிஜம்.. " என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் கதைத்துக் கொண்டே வந்தாள்..
ஷிவாக்ஷிக்கு பொருட்களை வாங்கி முடிப்பதற்குள்.. மாலை வேளை பகலவன் மேற்கே வந்துவிட்டான்..
பணியாளர்கள் ஷிவாக்ஷிக்காக வாங்கிய ஆடைகளும் , ஆபரணங்களும் அவர்களின் பின்னேயே சுமந்து வந்தனர்..
ஷ்ரித்திக் காரில் பின் பக்கத்தில் வைக்க சொல்வதற்கு முன்பு.. அங்கிருந்த ஷிவாக்ஷியின் முயல் குட்டிகளை எடுத்து அவளிடம் தந்தான்..
அதன் பின்னர் பணியாளர்கள் வாங்கிய அனைத்து பொருட்களையும் காரின்னுள் வைத்து விட்டு அகன்றனர்..
முயல் குட்டிகளை பார்த்து
"அச்சோ.. நா உங்கள.. மறந்துட்டேனே.. ??" என தன் உதட்டை கடித்து கொண்டாள்..
"பாத்தியா.. நீ மறந்துட்ட.. ?? நா எடுத்துட்டு வந்துட்டேன்.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் புன்னகையுடன் கதைத்தான்..
'ஈஈஈஈஈஈஈ....' என மீண்டும் இளிக்கவும்.. ஷ்ரித்திக் மென்னகையோடு ஷிவாக்ஷியின் தலையை மெதுவாக தள்ளினான்..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை உள்ளே அமர வைத்து தானும் அமர்ந்து வண்டியை உசுப்பினான்..
ஷிவாக்ஷி முயல் குட்டிகளை தன் மடியில் வைத்துக் கொண்டு .. அதை கொஞ்சிக் கொண்டே வந்தாள்..
"இருந்தாலும்.. இவ்வளவு செலவு பண்ணக் கூடாது.. போயும் போயும்.. நேக்கு இவ்ளோ செல.. " என ஷிவாக்ஷி முடிக்கும் முன்னறே.. ஷ்ரித்திக் இடையிட்டான்..
"ஹேய்.. நிறுத்து நிறுத்து.. அதென்ன.. போயும் போயும்.. ?? உன்ன எதுக்கு.. இவ்ளோ தாழ்த்திக்கிற.. ஹான்.. ??" என ஷ்ரித்திக்கின் வினவலுக்கு.. அமைதியே விடையானாள்.. ஷிவாக்ஷி..
"இங்க பாரு.. பணம் போனா.. என்ன.. ?? அத திருப்பி சம்பாதிக்க எனக்கு தெரியும்.. நீ அந்த சுடிய தொட்டு பாக்கும் போது.. வந்ததுல ஒரு ஸ்மைல்.. அந்த ஸடிஸ்ஃபேக்ஷன்.. அது நீ சொல்ற மாதிரி வாங்கிருந்தா.. கிடைச்சிருக்காது... ஜஸ்ட் லிவ் இட்.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம்.. வண்டியை ஓட்டிக் கொண்டே மொழிந்தான்..
"ஷிவு.. நம்ம வீடு.. வந்துருச்சு.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் காட்டினான்..
ஷிவாக்ஷியும் ஷ்ரித்திக் காண்பித்த திசையை கண்டாள்..
ஷிவாக்ஷி அந்த இல்லத்தின் பிரம்மாண்ட நுழைவாயிலை கண்டாள்.. 'இந்த கேட்ட பாத்தாலே பயமாயிருக்கே..' என வடிவேலுவின் நகைச்சுவை வசனமே நினைவில் வந்தது.. நுழைவாயில் கதவிலிருந்து மாளிகைக்கும் இடையே கிலோமீட்டர் தூரம் இருக்குமளவிற்கு நீளமாக இருந்தது.. ஷிவாக்ஷிக்கு மகிழுந்து நுழைவாயில் கதவை தாண்டி உள்ளே நுழைந்தது.. வழிநெடுகிலும்.. பாதையின் இரண்டு பக்கங்களிலும் பசுமை தோட்டத்தை வளைத்து பிடித்து படர்ந்திருந்தது..
அந்த மாளிகையின் மையமாக..
வைர கற்களாக நீர் துளிகள்.. அந்த பிரம்மாண்டமான நீருற்றில் இறைத்துக் கொண்டிருந்தது..
அந்த இல்லத்தின் வாசலில் மொத்த குடும்பமும் அவர்கள் இருவரையும் எதிர்பார்த்திருந்தது..
மகிழுந்திலிருந்து இறங்கி ஷ்ரித்திக் ஷிவாக்ஷி இறங்குவதற்கு கதவை திறந்தான்..
மகிழுந்தை விட்டு இறங்கிய ஷிவாக்ஷி.. அந்த மாளிகையை பார்த்தாள்.. பண்ணை வீட்டினை காட்டிலும்.. ஆடம்பரமாகவும்.. பிரம்மாண்டத்தின் உச்சமாகவே இருந்தது...
ஷிவாக்ஷி முயல் குட்டிகளை கைகளில் ஏந்தியவாறு.. அனைத்தையும் ஒரு வித பயம் கலந்த வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தாள்..
ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியும் ஒன்றாக நின்றுகொண்டு இருந்தனர்.. அப்போது ஜானவியும் வர்ஷாவும் "அண்ணா.. என்ன இவ்ளோ நேரம்.. ?? எவ்ளோ நேரம் தான் வைட் பண்றது.. ??" என ஜானவி பேசி கொண்டே போக...
"ஹே.. வாலு.. முதல்ல.. ஆரத்தி எடு.. மத்தத.. அப்பறம் பேசிக்கலாம்.. " என ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. ஜானவியின் மண்டையில் தட்டினார்..
வர்ஷாவும் ஜானவியும்.. இருவரும் சேர்ந்தே ஷிவாக்ஷிக்கும் ஷ்ரித்திக்கிற்கும் ஆரத்தி எடுத்தனர்..
குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் அகத்திலும் புன்னகையும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது.. சிலரை தவிர்த்து..
அவளின் முகத்தில் புன்னகை இல்லை.. மாறாக.. புதிய இடம், புதிய ஆட்கள், என ஒரு வித பயம் கலந்த பதற்றத்தில் இருந்தாள்..
ஷிவாக்ஷிக்கு அனைத்தும் கனவு போலவே தோன்றுகிறது.. இந்த கனவு கலைந்து விடாதா.. என்ற எண்ணம் அவளுக்கு..
ஷ்ரித்திக்கிற்கு.. இந்த நொடி இப்படியே நீளாதா.. என்ற எண்ணம் இவனுக்கு..
மாயாவோ.. குரோத விழிகளால் ஷிவாக்ஷியை வெறி கொண்டு பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தாள்.. நான் இருக்க வேண்டிய இடத்தில் வேறொருவள்.. என் சிறு தவறால்.. நிகழ்ந்த பெரும் பிழை என்ற எண்ணம் இவளுக்கு..
குடும்பத்தினர் அனைவருக்கும்.. அவசரத்தில் நிகழ்ந்த திருமணமே ஆனாலும்.. இவர்கள் இணைபிரியாதிருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு..
ஆரத்தி எடுத்ததும் அனைவரும் இல்லத்தில் நுழைந்தனர்.. பெரியோர்கள் ஷிவாக்ஷியை படியில் வைத்து இருந்த நெல்லை பாதத்தால் தள்ளிவிட்டு வலது காலை எடுத்து வைத்து இல்லத்திற்குள்.. வர சொல்ல.. அவ்வாறே செய்தாள்..
ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியும்.. வரவேற்பறையில் இருந்தனர்.. இருவரையும் இந்திரகவி பூஜையறையில் விளக்கேற்ற அழைத்ததும்..
ஷிவாக்ஷி.. அங்கிருந்த அனைத்து பொருட்களும்.. செல்ல வளம் வியாப்பித்திருந்தது..
ஷிவாக்ஷியும் பூஜையறையில் எல்லாம் வல்ல இறைவனை வணங்கி விட்டு.. அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும்
குடியிருக்கும் குத்து விளக்கேற்றினாள்..
விளக்கேற்றி முடித்ததும்.. ஷிவாக்ஷிக்கு மாளிகையில் சமையலறை, தோட்டம், என சுற்றி காண்பித்தனர்.. ஷ்ரித்திக்கின் உடன்பிறப்புகள்..
ஷிவாக்ஷிக்கு.. அங்கிருந்த சிறு சிறு பொருள்களிலும்.. ஆடம்பரமும்.. செல்வ செழிப்பும் அவளுக்கு தான்
இந்த குடும்பத்திற்கு பொருத்தமற்றவள்.. என அவளின் மனம் கொட்டி காண்பித்தது.. ஆனால் என்ன செய்வதென்று புரியாது மனதிற்குள் தவித்தாள்..
இரவின் அழகை மெருக்கூட்டும் சந்திரன்.. தன் வேலையை செவ்வனே செய்து வந்தான்..
இரவு உணவை முடித்துக் கொண்டு.. அனைவரும் அவரவர் அறையை நாடினர்..
ஷிவாக்ஷிக்கு என்ன செய்வது என புரியாமல் வரவேற்பறையிலே முயல் குட்டிகளை தாங்கியிருந்த படியே நின்றிருந்தாள்.. ஏனோ.. அவளுக்கு தான் மட்டுமே இவ்வுலகில் மாட்டிக் கொண்டார் போல உணர்ந்தாள்..
பூஜையறையில் ஷிவாக்ஷியுடன் விளக்கேற்றும் வரை இருந்தவன்.. அதன் பிறகு.. ஷிவாக்ஷியை தன் உடன்பிறப்புகளுடன் தான் இருக்கிறாள்.. என்பதாலும்
ஷ்ரித்திக் தன் தொழில் சம்பந்தமான அழைப்பு வந்ததாலும்.. அவளை விட்டு தள்ளியிருந்தான்..
இப்போது வரவேற்பறையில் ஷிவாக்ஷி தனியாக இருப்பதை கண்டு.. அவளருகே சென்றான்.. ஷ்ரித்திக்..
"ஹேய்.. என்ன.. தனியா நின்னுட்டு இருக்க.. ??" என தன் கைப்பேசியை அணைத்துக் கொண்டே கேட்டான்..
"இல்ல.. நேக்கு என்ன பண்றது தெரியல.. ?? தனியா இருக்கற மாதிரி தோன்றது.. " என மனதில் இருப்பதை அப்படியே கூறினாள்.. ஷிவாக்ஷி..
"ஏன்.. யாரும் உன்ன ரூம்க்கு கூட்டிட்டு போகலையா.. ??" என ஷ்ரித்திக் வினவ.. இல்லையென இடம் வலமாக மண்டையாட்டி காண்பித்தாள்..
தன் நெற்றியை தேய்த்து கொண்டவன்.. "சரி.. வா.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை தன் அறைக்கு அழைத்து சென்றான்..
ஷ்ரித்திக்கின் அறையில் கீழிருந்த அனைத்து வசதிகளும் அவ்வறையிலே இருந்தது.. அதை விட ஆடம்பரமாகவே இருந்தது.. நுழைந்தாள்.. ஷிவாக்ஷி.. ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் செல்வ வளம்.. முன்னே பஞ்சால் நெய்த சோஃபாவும் டீபாயும் சிறு வரவேற்பிடம் போல் தோன்ற.. இடப்புறம் இரு கதவுகளும் எதிரெதிர் திசையில் இருந்தது.. ஒன்று குளியலறையாகவும்.. மற்றொன்று உடை மாற்றும் அறையாக தெரிந்தது.. வலப்பக்கம் வண்ணமிகு தேக்கு மர கட்டிலும்.. பஞ்சு மெத்தையும் இருந்தது.. அதன் அருகில் சிறு உணவு மேஜையும்.. அதன் சிறு தூரத்தில்.. இரண்டாள் அமரக்கூடிய சோஃபாகள் இருந்தது.. பக்கத்தில் அலுவலக அறை.. எதிரே பால்கனியும்.. அங்கே அமர்வதற்கேற்ப நாற்காலிகள் இருந்தது.. சுவரில்.. சிறிய.. ரெஃப்ரிஜ்ரேட்டரில் அனைத்து உணவு பொருள்களும் நிறைந்திருந்தது..
"இதுக்கு முன்னாடி என்னோட ரூம்.. இப்ப நம்மளோடது.. " என மெல்லிய சிரிப்புடன் கூறினான்..
"சாரி.. கீழ உன்ன யாரும் இந்த ரூம்க்கு கூட்டிட்டு வராம இருந்ததுக்கு.. நா மேக்ஸிமம்.. யாரையும் இங்க அலௌவ் பண்ணதில்ல.. அதான்.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மன்னிப்பை யாசித்தான்..
"இல்ல.. பரவால்ல. எதுக்கு சாரியெல்லாம் கேக்றேள்.. சின்ன விஷயத்துக்கு.. ஆனா உங்க ரூம் நன்னா இருக்கு.." என ஷிவாக்ஷி புன்னகையுடன் கதைத்தாள்..
"தேங்க்ஸ்.. சரி நீ ப்ரஷ் அப் ஆயிட்டு வந்துடு.. இங்க ரெஸ்ட் ரும்.. ஃப்ரஷ் ஆயிட்டு.. இங்க ட்ரஸ்ஸிங் ரூம்ல தான் காஸ்ட்யூம்ஸ் இருக்கு.. பர்ச்சேஸ் பண்ணதெல்லாம் அங்க தான் இருக்கு.. ஹ்ம்ம்ம்ம்.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மொழியவும்..
அவளுக்கு உடல் குளித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியதால்.. குளித்து விட்டு.. இரவு உடைக்கு மாறினாள்..
ஷிவாக்ஷி குளித்து வந்ததும்.. ஷ்ரித்திக்கும் தன்னை சுத்தம் செய்து விட்டு.. அவனும் இரவு உடைக்கு மாறினான்..
ஷிவாக்ஷி பால்கனியில் நின்று.. இரவின் அழகை ரசித்துக் கொண்டே.. தென்றல் காற்றுடன் கதை பேசிக் கொண்டிருந்தாள்..
இரவு உடைக்கு மாறி வெளியே வந்த ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை தேட.. பால்கனியில் நிலவொளியில் தேவதையேன ஜொலித்தாள்.. ஷிவாக்ஷி..
ஷ்ரித்திக்.. தன்னருகே வந்து நின்றதை கூட கவனிக்காமல் இருந்தாள்..
"ஷிவு.. " என ஷ்ரித்திக் விளித்ததும் தான்.. நினைவிற்கு வந்தாள்..
"என்ன ஏதோவொரு யோசனையில இருக்க.. ?? எனக்கு தெரியும்.. தாத்தாவ பத்தி தான யோசிக்கற.. ?? நீ அவர பத்தி கவலப்பட தேவையில்ல" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை பார்த்தவாறே திரும்பி பால்கனி கண்ணாடியில் சாய்ந்தான்..
"என்ன.. சொல்றேள்.. ??" என ஷிவாக்ஷி புருவ முடிச்சுடன் வினவினாள்..
"உன்னோட தாத்தாவ பத்தி கவலப்பட தேவையில்லனு சொல்றேன்.. உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில.. வாட் ஷீஸ் நேம்... ??" என யோசித்துவிட்டு.. " ஹான்.. கவிதா சுந்தரம்னு இருக்காங்கள.. அவங்க தான் பாத்துக்கறாங்க.. இன்னும் ஒரு ஒன் வீக் போகட்டும்.. அப்பறமா.. நானே தாத்தா கிட்ட பேசறேன்.. அவருக்கும் கொஞ்சம் கோபம் குறையும்.. அப்பறம் ஏன் என்ன நேத்து தாத்தா கிட்ட கூட்டிட்டு போன.. ?? அப்படின்னு நீ கேப்ப.. நேத்து நா என்ன பண்ணட்டும் கேட்டதுக்கு.. என்ன தாத்தா கிட்ட கூட்டிட்டு போன்னு சொன்னதுனாலயும்.. அதுவும் இல்லாம சொன்னா புரிஞ்சுக்குவாறுன்னு நினைச்சு தான் கூட்டிட்டு போனேன்.. ஆனா.. ஏதேதோ நடந்துருச்சு.. ம்ப்ச்.. " என ஷ்ரித்திக் கூறி முடித்ததும்..
ஷிவாக்ஷி "நீங்க சொல்றதும் சரி தான்.. நா தாத்தாவ பாக்க போகாம இருந்திருக்கனும்.. தப்பு பண்ணிட்டேன்.. " என மொழிந்தாள்..
"ஷிவு.. நா கேக்கனும்னு நெனச்சேன்.. ?? அதென்ன அத்துழாய்.. உன் தாத்தா சொன்னாறே நேத்து.. ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் வினவினான்..
"அதா.. அது என்னோட பேரு தான்.. அத்துழாய் .. அப்படின்னா.. பகவான் பெருமாளுக்கு அளிக்கும் பரிசுத்தமான துளசின்னு அர்த்தம்.. " என ஷிவாக்ஷி தன் பெயருக்கான விளக்கத்தை அளித்தாள்..
"அத்துழாய்.. உன்னோட பேரா.. ?? அப்ப ஷிவாக்ஷி.. ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் குழப்ப ரேகை படற.. வினவினான்..
"அது.. பத்தாவது படிக்கும்போது மாத்திட்டேன்.. எல்லாரும் கிண்டல் பண்ணிட்டே இருந்தாளே.. தாத்தா கிட்ட சொல்லி மாத்தின்டேன்.. சின்ன வயஷுல இருந்து என் கூட இருக்கவா மட்டும்.. என்ன அப்படி கூப்புடுவா.." என பால்கனியின் கண்ணாடியை பிடித்து சிறு குழந்தை போல நெளிந்து கொண்டே ஷிவாக்ஷி மொழிந்தாள்..
"ஹ்ம்ம்ம்ம்ம்..நீ.. பிராமின்ல சோ.. இந்த மந்திரம் .. எல்லாம் உனக்கு தெரியும்ல .. சொல்லி குடுத்திருப்பாங்க.." என ஷிவாக்ஷியிடம் கதைத்தான்..
"ஹ்ம்ம்ம்ம்.. நன்னா தெரியும்.. எனக்கு பாட்டி சொல்லி கொடுத்தாளே.." என தலையை ஆட்டி ஆட்டி கதைப்பதை பார்த்து ஷ்ரித்திக்கிற்கு மென்னகை தான் வந்தது..
"ஆமா.. நீ இது வரைக்கும் உன் அப்பா அம்மா பத்தி பேசி நான் பாத்ததே இல்லையே.. ?? தாத்தா பாட்டி பத்தி மட்டும் தான் பேசற.. அதான் கேட்டேன்.. " என ஷ்ரித்திக் வினவியவுடன் ஷிவாக்ஷியின் இதழ்கள் சுருங்கியது..
வானத்தில் மிதந்த
சந்திரனை வெறித்த படி "தெரிஞ்சா தான.. சொல்ல முடியும்.. நான் பொறக்கும் போதே.. ரெண்டு பேரும்.. " என அதற்கு மேலே பேச முடியாது குரல் கம்ம.. வானத்தை காட்டி கை விரித்தாள்..
ஷ்ரித்திக்கோ தெரியாமல் கேட்டு விட்டோமே.. என தன்னையே நொந்து கொண்டான்.. ஷ்ரித்திக் ஏதோ கூற விழைய..
ஷிவாக்ஷி தடுத்தாள்.. "ப்ளீஸ்.. சிம்பதி வேணாம்.." என கதைத்து அவளே தொடர்ந்தாள்.. "பிரசவத்தில ஜன்னி வந்து அம்மா.. அம்மாவ பாக்க அவசரமா வந்த அப்பா ஆக்சிடென்ட்ல.. பொறக்கும் போதே அம்மா அப்பாவ கொன்னுட்டு.. பொறந்திருக்கா.. நேக்கு தருதரம்னு பேரும் வைச்சிண்டா.. அதனால அப்பா சொந்தமெல்லாம் ஒதுக்கிட்டா.. அதுக்கப்புறம் தாத்தா பாட்டி தான் என்ன வளத்தா.. இதெல்லாம் போன வாரம் தான் தாத்தாகிட்ட சண்டை போட்டு கேட்டேன்.. அதுக்கு அப்புறம் உங்களுக்கே தெரியுமே கடன்.. அது இதுன்னு.. பாட்டி பாசமானவா.. தாத்தாகிட்ட பாசத்தை எதிர் பாக்க முடியாது.. பாட்டி போனதுக்கு அப்பறம்.. என் வாழ்க்கைல பாசம் வெறும் வார்த்தையா ஆயிடுத்து.." என ஷிவாக்ஷி குரல் அழுவது போல் இருந்தாலும்.. சிரித்துக் கொண்டே சாதாரணமாக மொழிந்தாள்..
ஷிவாக்ஷி தன் வாழ்நாளில் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்திருக்கிறாள்.. என மனதிற்குள் நினைத்து நினைத்து குமறினான்.. ஷ்ரித்திக்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால் அவளின் விழிகளோ வானத்திலே இருந்தது..
ஷிவாக்ஷி இனி .. திகட்ட திகட்ட அன்பையும் பாசத்தையும் மொத்தமாக அனுபவிக்க வேண்டும்.. என தன் எண்ணத்தை செயல் படுத்துவதற்கு யோசனையில் இருந்தான்..
தன் யோசனையை விடுத்து ஷிவாக்ஷியிடம் பேசலானான்.. "ஷிவு.. நாளைக்கு நான் ஆஃபிஸ் போவேன்.. நீ கீழ தம்பி தங்கச்சி கூட பேசு.. உனக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்ல.. அதுவுமில்லாம ருத்து, ரித்து, ஆரா, தியா எல்லாம் இருப்பாங்க.. ஆரம்பத்தில கொஞ்சம் கூச்சமா இருக்கும்.. போக போக உன்க்கிட்ட.. எல்லாரும் நல்லா பழகுவாங்க.. ஹ்ம்ம்ம்ம்.. நா இப்பவும் சொல்றேன்.. நா உனக்கு முதல்ல ஃப்ரண்ட் அப்பறம்.. தான் எல்லாம்.. எதாவதுன்னா முதல்ல என்கிட்ட வந்து சொல்லு.. ஓகே.. சாப்டறத்துக்கு ஏதாவது வேணும்னா.. கொத்தமல்லிகிட்ட கேளு.. தருவான்.." என ஷ்ரித்திக் கூறவும்..
"உங்க ஆத்துல இலை தழைங்ககிட்ட எல்லாம் ஆகாரம் கேப்பேளா.. ??" என ஷிவாக்ஷி வினோதமாக கேட்டாள்..
ஷிவாக்ஷியை ஒரு மாதிரியாக ஷ்ரித்திக் கண்டு கொண்டே.. "என்ன கேட்ட.. ??" என கேட்டான்..
"இல்ல.. கொத்தமல்லின்னு சொன்னேளொன்லியோ.. அதான் கேட்டேன்.." என ஷிவாக்ஷியின் பதிலில்.. வெடித்து சிரித்தான்..
"ஹாஹாஹா.. கொத்தமல்லி யாருன்னு நாளைக்கு பாக்க தான போற.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் புன்னகையோடே மொழிந்தான்..
ஷிவாக்ஷியிடம் தலையசைப்பே பதிலாயிருந்தது..
"ஹ்ம்ம்ம்ம்... தூங்கலாமா.. ??" என ஷ்ரித்திக் வினவவும்.. மீண்டும் தலையசைப்பை விடையாய் தந்தாள்..
"சரி.. நீ அங்க பெட்ல படுத்துக்கோ.. நா கீழப் படுத்துக்கறேன்.." என ஷ்ரித்திக் கூறியதை மறுத்து "ம்ஹும்.. நா கீழப் படுத்துக்கறேன்.. நேக்கு கீழப் படுத்தா தான்.. தூக்கம் வரும்.. நேத்து ஏதோ ஞாபகத்தில பெட்ல தூங்கிட்டேன்.. " ஷிவாக்ஷியின் மொழிகளை இவன் மறுத்தான்..
"என்ன.. எல்லாமே.. உங்க இஷ்டத்துக்கு தான் நடக்கனுமா.. ?? நா அவ்ளோ சொல்லியும்.. நீங்க விலை அதிகமான காஸ்ட்யூம்ஸ் வாங்கறீங்கோ... நகை வாங்கறீங்கோ.. என்ன நினைச்சுண்டு இப்படி பண்றேள்.. இதாவது என் இஷ்டத்துக்கு தான் நடக்கனும்.. நீங்க பெட்ல படுங்கோ.. அவ்ளோதான்.." என ஷிவாக்ஷி விரல் நீட்டி பேச..
தன் முன் நிற்கவே பயப்படுவார்கள்.. என் முன் விரல் நீட்டி பேசுபவளை சிரிப்புடன் பார்த்தான்.. ஷ்ரித்திக்..
"சரிங்க.. மேடம்.. தங்கள் ஆணை.. " என ஷ்ரித்திக் அடி பணிய.. ஷிவாக்ஷியும் தல அஜித் போல "அதே.." என்க.. புன்னகையுடன் ஷிவாக்ஷியை பார்த்தான்..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் "ஷிவு.. நீ கீழ படுத்துட்டு.. நா மேல படுக்கறது.. நல்லால்ல.. கொஞ்சம் உங்க முடிவை பரிசிலனை பண்ணேன்.." என நெளிய.. "ம்ஹும்.. சான்ஸ்லெஸ்.." என தலையை இடம் வலமாக ஆட்டினாள்..
"சரி இரு.." என ஷ்ரித்திக் கூறிவிட்டு.. ஷிவாக்ஷிக்கு மெத்தை போன்ற விரிப்பை தரையில் விரித்தான்..
"இதுல.. படுத்துக்கோ.." என ஷ்ரித்திக் கூறிவிட்டு.. அவன் சோஃபாவில் படுத்து கொள்வதை பார்த்து..
"என்ன.. நீங்க.. ?? எதுக்கு சோஃபால படுக்கறீங்கோ.. ?? பெட் எதுக்கு இருக்கு.. ??" என ஷிவாக்ஷி இடையில் கை வைத்து ஷ்ரித்திக்கிடம் வினவினாள்..
"நீ.. பெட்ல படுக்காம இருக்கும் போது.. நான் படுக்கறது.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. எனக்கு இதே சவுரியமா தான் இருக்கு..நீ போய் படு.. " என ஷ்ரித்திக் திரும்பி படுத்து கொண்டான்..
ஷிவாக்ஷி தரையில் படுத்துக் கொண்டு.. முயல் குட்டிகளையும் தன்னுடன் படுக்க வைத்துக் கொண்டாள்.. ஷ்ரித்திக் ஷிவாக்ஷி படுத்து விட்டாளா என பார்த்து விட்டு உறங்கச் சென்றான்..
ஷிவாக்ஷியும் எழுந்து.. ஷ்ரித்திக்கை பார்க்கவும்.. அவன் உறங்கியதாக தெரிய .. ஏதோ இன்றைய நாள் நிறைவடையததை போலவே தோன்றியது..
ஷ்ரித்திக் திரும்பி.. ஷிவாக்ஷியிடம்.. புன்னகை தவழ.. "குட் நைட்.." என கூறியதை கேட்டதும் தான்.. நிறைவடைந்ததை போன்றதொரு உணர்வு வந்தது.. ஷிவாக்ஷிக்கு.. நிறைவுடன் உறங்கினாள்..
சூரிய தேவன்.. சந்திரனிடம் பை பை கூறிவிட்டு.. தன்னுடைய ஒளியால் பூமியை வருடினான்..
சூரியன் ஜன்னலை தாண்டி.. ஷ்ரித்திக்கின் உறக்கத்தை கலைத்தது..
ஷ்ரித்திக் விழித்தெழுந்தவன்.. குளியலறை சென்று காலை கடனை முடித்து வெளிவந்த ஷ்ரித்திக்கின் கண்கள்.. உறக்கத்திலிருந்த ஷிவாக்ஷியை வட்டமிட்டது..
ஷிவாக்ஷியின் முயல் குட்டிகளில் ஒன்று அவளின் வயிற்றிலும்.. மற்றொன்று தலையருகிலும்.. அவளுடன் ஒன்றுக்குள்.. ஒன்றாக உறங்கிக் கொண்டிருந்தது..
முயல் குட்டிகளோடு ஒன்றாக உறங்கிக்கொண்டிருந்த அவளை காண காண திகட்டவில்லை.. ஷ்ரித்திக்கிற்கு..
ஷிவாக்ஷியை நெட்டி முறித்து விட்டு.. ஜிம்கென்று தனி அறை இருக்க.. இரண்டு நாட்களாக உடற்பயிற்சி செய்யாதிருந்ததால்.. ஜிம்மில் நுழைந்து உடற்பயிற்சி செய்தான்..
ஒரு மணிநேரம் உடற்பயிற்சி முடித்து தன்னறையில் நுழைந்த ஷ்ரித்திக்கிற்கு.. முயல் குட்டிகள் தரையில் வட்டமடித்துக் கொண்டிருக்க.. ஆனால்.. ஷிவாக்ஷியை எங்கு தேடியும் காணவில்லை.. குளியலறை உடை மாற்றும் அறையென எங்கு தேடியும்.. ஷிவாக்ஷி இல்லாமல் போனாள்..
ஷ்ரித்திக்கிற்கு பதற்றம் எதுவும் தோன்றவில்லை.. மாறாக அவள் நன்றாக தான் இருக்கிறாள் என்றே உள் மனம் உரைத்தது.. 'ஆனா.. இவ எங்க போனா.. ஒரு வேள.. கீழ இருப்பாளா.. ஆமா அப்படிதான்..' என ஷ்ரித்திக் நினைத்து கொண்டே குளித்து முடித்து உடை மாற்றி கீழே வந்தான்..
வரவேற்பறையே தேவலோக வெள்ளைப் புகை போல சாம்பிராணி புகையும் நறுமணமும் நிறைந்திருந்தது..
அப்போது தான்.. நடை பயிற்சி முடித்து வந்த ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவன்.. வாசலில் இருந்த நெளி மாக்கோலம் கண்டு இன்புற்று.. உள்ளே நுழைந்தவரை.. வரவேற்றது.. சாம்பிராணியின் நறுமணம்.. நாசியை துளைக்க.. "ஆஹாஹா.. என் மருமக சாரி சாரி.. மக வந்ததுக்கு அப்பறம் தான்.. இந்த வீடு.. வீடு மாதிரி இருக்கு.. என் மருமக.. என் மருமகன்னு சொல்லி.. எத்தனை நடுராத்திரி என்ன அழ வைச்சிருப்பீங்க.. இப்ப எனக்கும் மருமக வந்துட்டா.." தன் தந்தை அமரேந்திரர் இடம் கோக்கலிக்க காண்பித்தார்..
"டேய்.. அடங்கு டா.. " என தாத்தா அமரேந்திரர்.. தன் மகனிடம் கிண்டலாக கதைத்தார்..
"என் மக வந்ததுக்கு அப்பறம் தான்.. வீடு கோவில் மாதிரி இருக்கு.. " என அவர் சாம்பிராணி நறுமணத்தை நன்கு நுகர்ந்து கதைத்தார்..
"ஏனுங்க ஐயா.. ?? நான் செய்ய வேண்டிய வேலைய வேற யாரோ செஞ்சு இருக்காங்க.. தோ.. இந்த காப்பி தண்ணி கூட யாரோ வைச்சிருங்க.. அத தான் உங்களுக்கு கொண்டு வந்திருகனுங்கோய்.. " என அந்த வீட்டின் முக்கியமான வேலை செய்யும் நபர் கொத்தமல்லி என்னும் மல்லிகை வேந்தன் கொங்கு நாட்டு மொழியில் கதைத்தார்..
"அது யாரோ.. இல்ல.. கொத்தமல்லி.. இந்த வீட்டு மருமக.. " என ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி அவரறையில் இருந்து வெளி வந்தபடி கூறினார்..
"எது.. என் மக போட்ட காஃபியா.. குடு குடு.. " என கொத்தமல்லியிடமிருந்து.. பிடுங்காத குறையாக வாங்கினார்.. ராஜ தேவன்..
"ஏனுங்க.. அம்மணிய அதான் ..உங்க மகள கண்ணுல கூட காட்டல.. " என கொத்தமல்லி வினவ..
"ஏன்.. கொத்தமல்லி.. நீ பாக்கலியா.. ??" என ஷ்ரித்திக்கின் சித்தி தேவிகா.. வினவ..
"எங்கெங்க.. நம்ம தம்பி கல்யாணத்துக்கு வரமுடியாம போயிடுச்சுங்க.. சரி இங்கயாச்சு பாக்கலாம்னா.. நேத்து வேலைய கொடுத்து தாட்டிடீங்க.. " என கொத்தமல்லி சலித்து கொண்டார்...
"சரி விடு.. மல்லி.. அவ இங்க தான இருக்கபோற.. அப்பறம் என்ன.. ??" என படியிலிருந்து இறங்கிக் கொண்டே கூறினான்.. ஷ்ரித்திக்..
"ஐயா.. வணக்கமுங்க.. அம்மணி எங்கேங்கோவ்.. ??" என கொத்தமல்லி ஷ்ரித்திக்கை வணக்கத்தை கூறிவிட்டு.. ஷிவாக்ஷியை கேட்கவும்..
"ஏன்.. கீழ தான வந்தா.. ??" என ஷ்ரித்திக் கைமடிப்பையும் கோர்ட்டையும் சரி செய்தபடி.. வினவினான்..
"இல்லீங்கோ.. கீழ அம்மணிய பாத்திருந்தா.. நான் ஏனுங்க.. பாக்கலைன்னு சொல்ல போறேனுங்க.. " என கொத்தமல்லி மொழியை கேட்டு.. ஷ்ரித்திக் யோசனையானான்.. 'எங்க போனா.. ?? ஒரு வேள என்ன பிடிக்காம.. வீட்ட விட்டு போய்ட்டாளா.. ?? ச்சே ச்சே.. அப்படி இருக்காது.. ஏதோ ஒரு விஷயமா தான் வெளிய போயிருக்கனும்..' என தன் யோசனையில் உளன்றவனை சித்தப்பா தேவ தேவன் கலைத்தார்..
"என்னப்பா.. ?? கொத்தமல்லி கூப்பிட்டே இருக்கான்.. ஷிவு எங்கனு கேக்கறான்.. நீ யோசனையில இருக்கியே.." என சித்தப்பா.. கூறவும்..
"சித்தப்பா.. அவ அவசரமா வெளியே போறேன்னு சொல்லிட்டு இருந்தா.. அதான்.. வெளிய போயிருக்கா.. வந்துடுவா.. ஏதோ வாங்கனும்னு சொன்னா.. வந்துடுவா.. சரி கொத்தமல்லி மணி ஓன்பதரை.. பசிக்குது.. எனக்கு இம்பார்டன்ட் வொர்க் வேற இருக்கு.. சீக்கிரம்.. " என ஷ்ரித்திக் சமாளித்து கொண்டே.. அவர்களிடம் கூறவும்..
"ஐயா.. சாப்பாடு ரெடியாயிடுச்சு.. எல்லாரும் வாங்க சாப்பிடலாம்.. " என ஷ்ரித்திக்கின் மறுமொழி கூறி .. அனைவரையும் சாப்பிட அழைத்தான்..
வர்ஷாவும் ஜானவியும் அப்போது தான்.. உணவு உண்ண அமர்ந்தனர்..
ஷ்ரித்திக்.. அவர்களிடம்.. "வரு.. ஜானு.. ரெண்டு பேரும்.. ஏன் நேத்து ஷிவுவ தனியா விட்டுட்டு போனீங்க.. ?" என ஷ்ரித்திக்
அவர்களை கண்டிக்கும் விதமாகவே கேட்டான்..
"அண்ணா.. அது.. உங்க ரூம்ல யாரையும் அலௌவ் பண்ணதில்லல்ல அதான்.. நீங்க பாத்துப்பீங்கன்னு.. " என வர்ஷா பயத்தில் இழுக்கவும்..
"வரு.. நீ சொல்றது கரெக்ட் தான்.. அட்லீஸ்ட் நா வரைக்கும் அவ கூடவே இருந்திருக்கலாம்ல.. நா வந்து பாக்குறேன்.. தனியா என்ன பண்றதுன்னு ஏது பண்றதுன்னு முழிச்சுட்டு இருந்தா.. உங்கள நம்பி தான விட்டுட்டு போனேன் .. பாவம் அவ.. உங்க வயசு தான் அவளுக்கும்.. சின்ன பொண்ணு .. பொறக்கும் போதே அம்மா அப்பா இழந்துட்டு.. பாட்டியும் இறந்து.. பாட்டிக்காக வாங்குன கடன அடைக்க.. அதுக்காக போராடி.. ஹ்ம்ம்ம்ம்.. அவ பட்ட கஷ்டத்துல உங்களால பாயிண்ட் ஒன் பர்சென்ட் கூட அனுபவிக்க முடியாது.. அவ கஷ்டத்துல பங்கெடுத்துக்க சொல்லல.. அட்லீஸ்ட் கூடயாவது இருங்க போதும்.. இதுக்கு அப்பறம்.. நீங்க அவளுக்கு ஃப்ரண்ட்ஸ் இருங்க அது போதும்.. " என ஷ்ரித்திக் அவர்களிடம் மொழிந்து கொண்டே.. உணவை முடித்து எழுந்தான்..
ஷ்ரித்திக்கின் மொழிகளால்..
குடும்பத்தினர் மொத்தமும் ஷிவாக்ஷியின் மேல் ஒரு வித அன்பும் அனுதாபமும் உருவானது..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை பற்றி கூறியதும்.. 'அவள் இவ்வளவு இன்னல்களையும் சமாளித்து புன்னகையே முகமாய் எப்படி இருக்கிறாள்..' என வர்ஷா எண்ண.. ' நாம் அவளிடத்தில் இருந்திருந்தால் சுய பச்சாதாபத்திலே நம்மை இழந்திருப்போம்..' என ஜானவியும்.. நினைத்துக் கொண்டிருந்தனர்.. இருவரும்..
ஷிவாக்ஷியை தனியே விடுத்ததும் தங்களின் தவறென உணர்ந்தனர்..
"அண்ணா.. சாரி.. வேணும்னு பண்ணல.. " என வர்ஷா ஜானவி இருவரும் மன்னிப்பை யாசித்தனர்..
"என்கிட்ட கேட்காதீங்க.. ஷிவு கிட்ட கேளுங்க.. ஹ்ம்ம்ம்ம்.. அதையே நினைச்சுட்டு.. இருக்காதீங்க.. அவள ஹேப்பியா வெச்சிருங்க.. அது போதும்.." என ஷ்ரித்திக் கூறவும் சமாதானம் ஆயினர்..
தன்னுடைய ஃபெராரி காரில்
ஷ்ரித்திக் அலுவலகம் புறப்பட்டு சென்றான்.. "கால் ராபர்ட்.." என ஆட்டோ மேட்டிக் காலில் ராபர்டை அழைத்தான் "ஜீ .. சொல்லுங்க.." என ராபர்ட் வினவ..
"ராபர்ட்.. ஷிவாக்ஷிய வீட்ல இல்ல.. எங்க இருக்கானு தேடி தகவல் சொல்லு.. சாப்டாலான்னு கூட தெரில.. விசாரிச்சு சீக்கிரம் சொல்லு.." என ஷ்ரித்திக் மகிழுந்தை இயக்கியபடியே பேசி முடித்தான்..
அலுவலகம் சென்றடைந்தவனுக்கு.. எண்ணமெல்லாம் ஷிவாக்ஷியை வட்டமிட்டது..
"பங்கு... வந்துட்டேன் .. " என ஷ்ரித்திக் முன் சரித்து கொண்டு வந்து நின்றான்.. விக்ரம்..
"ஹ்ம்ம்ம்ம்.. வா.. " என ஷ்ரித்திக் சாதாரணமாக மொழிவதை கண்ட விக்ரமிற்கு .. ஏதோ யோசனையில் இருக்கிறான் என புரிந்தது..
"டேய்.. என்னடா.. சிம்பிளா.. வான்னு முடிக்கற.. சனியன் வந்துருச்சு.. அப்படி ஏதாவது சொல்லுவேன்னு எதிர் பாத்தேன்.. " என விக்ரம் அவன் முன் அமர்ந்தான்..
விக்ரம் "டேய்.. என்ன.. ??" என ஷ்ரித்திக்கிடம் வினவ..
நேற்று ஷிவாக்ஷி மொழிந்ததை அனைத்தும் ஷ்ரித்திக் விக்ரமிடம்..
விக்ரம் ஷ்ரித்திக்கின் மொழககளை கேட்டு.. ஷிவாக்ஷியின் மேல் பரிவு ஏற்படுவதை தடுக்க இயலவில்லை..
"ஷிவு.. அப்பா அம்மாவ பத்தி பேசுனதில்லை.. ஆனா.. அதுக்கு பின்னாடி இது.. இத நா எதிர் பாக்கல.. " என விக்ரம் ஒரு வித உணர்வுடன் மொழிந்தான்..
"என்ன.. ஃபிலீங்க்ஸா.. ?? போதும்.. சும்மாவே உன் மோகரை சகிக்காது.. " என ஷ்ரித்திக் கிண்டலாக மொழிந்தான்..
"அதான.. நாலாம்.. ஹீரோயிஸம் பண்ணக் கூடாதே.. சரி ஷிவு என்ன பண்றா.. ??" என விக்ரம் சலித்து கொண்டே ஷிவாக்ஷியை பற்றி வினவினான்..
"எங்க.. மேடம்.. காலைல ஜிம் போறதுக்கு முன்னாடி பாத்தேன்.. வந்து பாத்தா.. ஆளக் காணாம்.. கீழ் வந்து பார்தா.. சாம்பிராணி புகை.. வாசல்ல கோலம் .. எல்லாம் இருந்தது.. ஆனா.. மேடம மட்டும் காணாம் .. " என ஷ்ரித்திக் மொழிந்ததும்..
"என்னடா.. ஷிவாக்ஷிய காணாம்னு ஈசியா சொல்ற.. ?? இப்ப நீ பதற்றமா இருக்கனும்.. " என விக்ரம் ஷ்ரித்திக்கின் முன் இரு கைகளையும் வைத்து .. "அந்த அழுகையை அந்த பதற்றம் உன் கண்ணுல தெரியனும்.. " என விக்ரம் பாரதிராஜாவை போல மிமிக்ரி செய்து மொழிந்தான்..
"டேய்.. அடங்கு டா.. " என ஷ்ரித்திக் விக்ரமை அடக்கினான்.. "அவ வெளிய எங்கயோ.. போயிருக்கா.. வந்துருவா.. நீ அடங்கு.. ஷிவு போயிருந்தான்னா.. நா இவ்ளோ கூலா இருந்திருக்க மாட்டேன்.. " என ஷ்ரித்திக் கூறிக்கொண்டே கணினியில் கவனத்தை செலுத்தினான்..
விக்ரம்.. "அதான.. பாத்தேன்.." என்க..
"ஆமா அப்பா அம்மா என்ன பண்றாங்க.. ?? கல்யாணத்துக்கு வந்த உடனே போயிடாங்க.. " என ஷ்ரித்திக் விக்ரமின் பெற்றோரை பற்றி கணினியில் இருந்து பார்வையகலாது வினவ..
"எங்க.. உனக்கு பிரச்சினையே கல்யாணமா இருந்தது.. நாம இங்க இருக்கறது.. சங்கடமா நினைச்சு.. கிளம்பிட்டாங்க.. " என விக்ரம் கிண்டலாக மொழியவும்.. ஷ்ரித்திக் விக்ரமை முறைக்கவும் சரியாய் இருந்தது..
அதேசமயம் ஷ்ரித்திக்கின் கைப்பேசி என்னை எடு.. என அலறியது.. "இரு.. உன்ன கவனிச்சுக்கறேன்.. " என ஷ்ரித்திக் விக்ரமிடம் கூறி கொண்டே.. கைப்பேசியை காதில் வைத்தான்..
"சொல்லு.. ராபர்ட்.. " என ஷ்ரித்திக் ராபர்டிடம் வினவ.. ராபர்ட் கூறியதை கேட்டதும்.. ஷ்ரித்திக்கிற்கு 'அங்க ஏன் போற.. என்ன பண்றா.. ?' என குழம்பி தான் போனான்..
"சரி.. ராபர்ட்.. நான் பாத்துக்கறேன்.. " என ராபர்டிடம் மொழிந்து விட்டு.. ஷிவாக்ஷியை காண்பதற்கு செல்ல ஆயத்தமானான்..
"டேய்.. இப்ப தான வந்த.. அதுக்குள்ள கிளம்பற.." என விக்ரம் வினவியதற்கு "ஷிவாக்ஷிய பாத்து கூட்டிட்டு வரேன்.." என ஷ்ரித்திக் விக்ரமின் பதிலை எதிர்பாராது நடந்தான்..
ஷ்ரித்திக் கிளம்பிய அதே நேரத்தில்.. ஷிவாக்ஷி அங்கிருந்த வேலை வாய்ப்பு துறை அதிகாரியின் முன்பு கை கட்டி தலை குனிந்த நிலையில் நின்றிருந்தாள்..
"சார்.. ப்ளீஸ்.. நாங்க.. எவ்ளோ நாழி தான் வைட் பண்றது.. வந்தது .. ஒன்பது மணிக்கு.. கூப்புடறது.. பத்து மணிக்கா.. ?? என்ன காக்க வைச்சேள் பரவால்ல.. பாவம் இவா வயசானவா.. இவாள ஏன் காக்க வைக்கறேள்.. ??" என ஷிவாக்ஷி தன்னுடன் வந்த ஐம்பது வயதை கடந்தவரையும் காக்க வைத்த கோபத்தில் அந்த அதிகாரியின் முன்பு பொரிந்து தள்ளினாள்..
"ஷ்ஷூ.. நா என்ன நீ வைச்ச ஆளா.. நீ சொல்ற மாதிரி நடந்துக்கறதுக்கு.. இது கவர்ன்மென்ட் ஆஃபிஸ் அப்படித்தான் இருக்கும்.. " என அந்த அதிகாரி திமிராக மேஜையில் காலை வைத்து ஆட்டிக் கொண்டு கூறியதை பார்த்து .. ஷிவாக்ஷி தன்னுடன் வந்தவரை அர்த்தம் பொதிந்த பார்வையாக பார்த்தாள்..
"சும்மா.. கவர்மெண்ட் ஆஃபிஸ்.. அப்படி இப்படின்னு பொய் சொல்லாதீங்கோ.. நா நீங்க சொன்னதுக்கு ஒத்துக்காம இருக்கறதுக்கு.. தான் என்ன இப்படி இம்சை பண்றேள்.. " என ஷிவாக்ஷி அந்த அதிகாரியிடம் மொழிந்ததும்..
ஷிவாக்ஷி கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமத்தையும் கண்டு கொண்டே..
"அட.. பார்ரா.. மாமிக்கு புரிஞ்சுடுச்சா.. கல்யாணம் ஆயிடுச்சா.. ?? அடுத்தவன் பொண்டாட்டினாலே ஒரு கிக்கு தான்.. உனக்கு ரெண்டு சாய்ஸ் குடுத்தேன்.. நீ தான் ஓவரா சீன் போட்டு.. ஒத்துக்கல.. அன்னிக்கே முத ஆப்ஷனுக்கு ஓகேன்னு சொல்லிருத்தா.. இன்னிக்கு நீ அந்த வேலைல இருந்திருப்ப.. நானும் சந்தோஷமா இருந்திருப்பேன்.." என ஷிவாக்ஷியை ஒரு மார்கமாக பார்த்து நெட்டி முறித்துக் கொண்டே கூறினான்..
'ஹ்ம்ம்ம்ம்... நீ பேசு..' என தன் மனதில் நினைத்து.. மேஜையில் பணத்தை வைத்துக் கொண்டே..
"தேவையில்லாதத பேசாதேள்.. நீங்க என்கிட்ட மூனு லட்சம் பணம் கேட்டேள்.. ?? ஆனா என்னால அவ்ளோ.. பணம் இல்ல.. இதோ இரண்டு லட்சம் தான் இருக்கு.. இத இப்போதைக்கு வைச்சுக்குங்கோ.. வேலைல சேந்ததும்.. கொஞ்ச கொஞ்சமா பணத்தை கொடுத்திடறேன்.. இதோ.. இவர் என் பக்கத்து ஆத்துக்காரர்.. நேக்கு தொப்பனார் மாதிரி.. நா பணத்தை தந்துருவேன்.. சப்போஸ் நா உங்கள ஏமாத்தறேன்னு நோக்கு தோனுச்சுன்னா.. இவாள கேட்டுக்குங்கோ.." என ஷிவாக்ஷி தன்னுடன் வந்தவரை பார்த்துக் கொண்டே கூறினாள்..
"ஹோ.. சாட்சியா.. ஆனா.. பணம் குறையுதே.. நீ கேக்கற.. டீச்சர் வேலைக்கு.. எத்தன பேர் ஃக்யூல நிக்கறாங்கன்னு தெரியுமா.. ?? சரி இப்ப எடுத்துக்கறேன்.. பேச்சு மாறக் கூடாது.. என்னய்யா.. உன்ன நம்பலாமா.. ?? இந்த பொன்னு ஏதாவது ஏமாத்துனா.. அப்பறம் உனக்கு தான் பிரச்சினை.. பாத்துக்கோ.." என கூறிக் கொண்டே.. ஷிவாக்ஷியை பார்த்து கொண்டே மேஜையில் வைத்திருந்த பணக் கட்டினை எடுத்தான்.. அந்த அரசு அதிகாரி..
அந்த பணக்கட்டில் ஏதோ.. ரசாயனம் தடவியதை.. போல இருந்தது அந்த அதிகாரிக்கு.. ஏதோ.. சரியில்லை என ஷிவாக்ஷியை பார்க்க.. அவளோ.. தன் வலையில் அவன் வீழ்ந்தான் என்ற வெற்றி சிரிப்பை உதிர்த்து.. தன் இரு புருவத்தை உயர்த்தி .. 'மாட்கிட்டியா.. ' என பார்த்தாள்..
ஷிவாக்ஷி தன்னுடன் அழைத்து வந்தவரோ... கையை தட்டியதும்.. உடனே அங்கு காவல் துறையினர்... நுழைந்தனர்.. தன்னுடைய அடையாள அட்டை காண்பித்து.. "வீ ஆர் ஃப்ரம் கரப்ஷன் டீபார்ட்மெண்ட்.. நீங்க லஞ்சம் வாங்கறதா.. இவங்க கம்ப்ளைட் பண்ணியிருந்தாங்க... நீங்க லஞ்சம் வாங்குன குற்றத்துக்காக உங்கள கைது பண்றோம்.." என தன்னை அறிமுகப்படுத்தி .. அந்த அதிகாரியை சட்டை காலரை பிடித்து.. இழுத்துச் செல்ல ஆயத்தமானார்..
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி.. "மேடம்.. உங்களுக்கான.. நிச்சயம் உங்களுக்கு அந்த வேலைக்கான ஆர்டர் லெட்டர் வந்துரும்.." என ஷிவாக்ஷியிடம் திரும்பி கூறிவிட்டு அவனை இழுத்து சென்றார்..
"சார்.. ஒரு நிமிஷம் பேசிக்கறேனே.. ??" என காவலரிடம் அனுமதி கேட்டு.. அந்த வேலை வாய்ப்பு துறை அதிகாரியிடம் வந்தாள்..
அந்த அதிகாரியோ.. ஷிவாக்ஷியை உறுத்து விழித்தாள்.. "நா.. முதல்ல.. நீங்க கேட்ட.. லஞ்சத்தை.. குடுத்திடலான்னு தான் நினைச்சேன்.. ஆனா என்ன.. கெஸ்ட் ஹவுஸ் வா.. அங்க வா இங்க வான்னு சொன்னேலின்யோ.. தப்பா.. பேசுனேளா.. அதான்.. நா காசு கொடுத்திருந்தா.. திரும்பி அத பண்ணுவேள்.. ஆனா.. இப்ப பண்ணது.. உங்க வாழ்க்கைல ஒரு ப்ளாக் மார்க் ஆயிடுத்தோன்லியோ.." என ஏற்ற இறக்கங்களோடு.. ஷிவாக்ஷி கதைத்தாள்..
தன்னை தவறாக பார்த்து தன்னுடன் வருமாறு அழைத்தது.. ஷிவாக்ஷிக்கு எரிச்சலும் கோபமும் ஒரே சமயத்தில் தோன்றவும்.. அவரை பார்த்து கொண்டு காலில் அணிந்திருந்த செருப்பை எடுத்து சராமாரியாக அடித்தாள்..
அங்கிருந்த காவலர்கள் ஷிவாக்ஷியை தடுத்து.. அந்த வேலை வாய்ப்பு அதிகாரியை இழுத்து சென்றனர்.. அந்த அதிகாரி.."ஏய்..என்ன அடிச்சிட்டள்ள.. உன்ன என்ன பண்றேன்னு பாருடி.." என அவர் குரோதமும் விரோதம் கக்கும் விழிகளில் ஷிவாக்ஷியை எரித்து சென்றார்....
ஷிவாக்ஷி அதை உதாசீனம் செய்து திரும்ப.. ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளை பார்த்திருந்தான்..
"நீங்க.. இங்க.. என்ன பண்றேள்.. ??" என ஷிவாக்ஷி கேட்டு கொண்டே ஷ்ரித்திக்கின் அருகே வந்தாள்.. ஷிவாக்ஷி..
"ஷிவு.. அதே தான்.. நானும் கேக்கறேன்.. நீ என்ன பண்ற.. ?? காலைல ஜிம் போயிட்டு வந்து பாக்கறேன் ஆள காணாம்.. அப்பறம் வந்து பாத்தா.. இங்க இருக்கிற.. ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மொழியவும்..
"நீங்க வெளியே போனதும் நா எந்திரிச்சிட்டேன்.. ஸ்நானம் பண்ணிட்டு.. வெளிய வந்து வாசல் தெளிச்சு கோலம் போட்டுண்டு .. காஃபி போட்டுண்டு.. வெளிய வந்தேன்னா.. நேக்கு அப்ப தான் வேலைக்கு போனும் தோனிடுத்தா.. இதுக்கு முன்னாடியே இவாளா நேக்கு தெரியும்.. நேக்கு வேலை வந்திருக்குன்னு.. வேலை வாய்ப்பு துறைல இருந்து ஆர்டர் வந்தது..இவா கிட்ட பேசுனேன்.. அதுக்கு என்ன சொன்னா.. தெரியுமோ.. உனக்கு ரெண்டு சாய்ஸ்.. ஒன்னு கெஸ்ட் ஹவுஸ் .. இன்னொனு மூனு லட்சம்னு சொன்னா.. நேக்கு கோவம் வந்துடுத்து.. அதான்.. இப்படி.. " என ஷிவாக்ஷி சுடிதாரில் துப்பட்டா காற்றில் பறக்க.. சரி செய்த படி கதைத்தாள்..
தேவதையாகவே தோன்றினாள்.. ஷ்ரித்திக்கின் விழிகளுக்கு..
"அதுக்காக சொல்லாம கொள்ளாம போயிட்ட.. ??" என ஷ்ரித்திக் வினவ..
"நா உங்ககிட்ட சொல்லாம்னு பாக்கறச்ச.. நீங்க வரவே இல்ல.. நேக்கும் நாழியாயிடுத்து அதான் கிளம்பிட்டேன்.. ஆமா.. நா இங்க இருக்கறது.. நோக்கு எப்படி தெரியும்.. ?? தேடி வந்திருக்கிங்கோ.. ?? ஆத்தவிட்டு போயிட்டான்னு நினைச்சேளா.. ??" என ஷிவாக்ஷி விரல்களை தாடையில் வைத்து கேட்கவும்..
"ச்சே.. ச்சே.. நாட் லைக் தட்.. விசாரிச்சேன்.. எப்படியாவது பழி வாங்கிடுவேன்னு நேத்து சொன்னியே. அதான இது.. பட் .. குட் மூவ்.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் புன்னகையோடே மொழிந்தான்..
ஷ்ரித்திக்கின் சொற்களை புன்னகையோடே ஏற்றுக் கொண்டாள்.. "தேங்க்ஸ்.. " என்க..
ராபர்ட் கூறியது இது தான்.. "ஜீ.. மேடம்.. காலைல லஞ்ச ஒழிப்புத் துறைக்கு போயிருந்தாங்க.. அப்பறம்.. அங்கிருந்து.. பக்கத்துல அரசு வேலை வாய்ப்பு துறைக்கு போயிருக்காங்க.. இப்ப அங்க தான் இருக்காங்க.. ஜீ.." என்றே கூறினான்..
"நா ஒன்னு கேக்கவா.. ??" என ஷிவாக்ஷி கேள்வியாக வினவ.. என்னவென புருவம் உயர்த்தி கேட்டான்.. ஷ்ரித்திக்..
"என்ன.. கோயிலுக்கு அழைச்சிண்டு போங்கோளேன்.. ??" என ஷிவாக்ஷி கெஞ்சல் மொழியில்.. அவளவனின் மனம் மயங்கியது..
வாவென ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை அழைத்துச் சென்றான்..
--------------
Vara vara vote and comments kuraiyudhu.. konjam kashtama dhan irukku.. so plz.. ellarum comments votes enakku kudunga.. silent readers.. silent vote pannunga podhum.. and tq.. 🙂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro