அத்தியாயம் - 14 😣
வையகத்தை கையகப்படுத்தும்..
இந்த
ஆறடி ஆண்மகனின் .... உயிரின் இறுதி வரை சென்று துளைக்குதடி..
உன் வலி சுமந்த விழியோரத் துளிகள்..... 😣
(கவிதை மாதிரி ட்ரை பண்ணிருக்கேன்...அட.. இருங்க.. கீழ இருக்கிற கல்ல தூக்காதீங்க... 1ஸ்ட் டைம் அப்படி தான் இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.. )
காலை நேர பகலவன்... படுக்கையிலிருந்து துயிலெழந்தவன்..
'யாராவது இருக்கிறார்களா... ??' என்று மதில் என்னும் மேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்த்துக் கொண்டே கீழக்கு மேகத்தில் வெளிவந்தமர்ந்தான்... பகலவன்..
வழக்கம் போல் அனைவரையும் உற்சாகமாக சைட் அடித்து கொண்டு இருந்தான்...
ஆனால் அவனின் உற்சாகத்திற்கு நேர்மாறாக இருந்தது... அந்த அரண்மனை..
மகிழ்ச்சியாலும்... புன்னகையாலும் ஒளிர்ந்திருந்த அரண்மணை..
இப்போதோ.. குழப்பங்களாலும்.. வருத்தத்தாலும்.. அந்த அரண்மனையின் ஓளி அணைந்ததோ...
அக்குடும்பமே எதும் பேசாது மௌனமாக இருந்தது.. இந்திரகவியின் செயல்களால்.. அவர் வார்த்தைகளின் தாக்கத்தால்..
ஷிவாக்ஷி.. சோஃபாவில் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்..
ஷ்ரித்திக்கின் தாய் இந்திரகவி.. தான் தற்கொலை முயற்சி செய்து ஷிவாக்ஷியை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்ததை தவிர்த்து.. நிகழ்ந்ததை கூறியதும்.. மொத்த குடும்பமும் சில கணங்கள் அமைதி காத்தனர்.. சிலரை தவிர்த்து..
ஷ்ரித்திக்கின் மனமோ.. உலைக் களமாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது.. தன் கரங்களையும் புஜங்களையும் இறுக்கி தன் ஆத்திரத்தை சமன் படுத்த பெரிதும் போராடிக் கொண்டிருந்தான்..
யாதவனும் சமீராவும்.. தன் மகளின் இடத்தை வேறொருவள் இருப்பதை கண்டு கோபத்தில் இருந்தவர்கள்.. இந்திரகவியின் மொழிகள் இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியது..
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வுகளில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்..
ஷ்ரித்திக்கின் அம்மா.. கூறிமுடித்ததும்.. ஷ்ரித்திக் தன் கரவோசையை எழுப்பிக் கொண்டே தன் தாயிடம் வந்தான் ..
அவனின் திடீர் கரவோசையால் அனைவரும் அவனை கேள்வியாக நோக்கினர்..
ஷ்ரித்திக் கைதட்டுவதை பார்த்து அவனுடைய அம்மா ஷ்ரித்திக்கை புரியாத பார்வை பார்த்தார்..
"சூப்பர்.. மா.. ரொம்ப சூப்பர்.. சோ.. மாயா ஓடி போய்ட்டா.. அதனால.. நீங்க ஷிவாக்ஷிய எனக்கு கட்டி வைச்சீங்க இத நான் நம்பனும்... ??" என ஷ்ரித்திக் ஏளனமான புன்னகையை தடவிக் கேட்டான்..
"அப்படி .. கேளு.. ஷ்ரித்திக்.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு.. ??" என மாயாவின் தாய் சமீரா ஷ்ரித்திக்குடன் ஒத்து ஊதினார்..
தன் கரங்களை உயர்த்தி அவரை அமைதியாக இருக்கும் படி கூறியவன்.. வேஷ்டியை ஒற்றைக் கையால் பிடித்து கொண்டு.. தன் தாயை கோபத்தை அடக்கி துளைக்கும் பார்வை பார்த்தான்..
"டேய் என்ன டா.. ?? ஏதோ நா மாயாவ கடத்திட்ட மாதிரி பாக்கற.. ??" என ஷ்ரித்திக்கின் பார்வை விரியம் தாங்காது மொழிந்தார்..
"ம்ப்ச்.. மாயா ஓடி போக வாய்ப்பில்ல.. ஏன்னா.. இந்த கல்யாணத்தில எல்லார விட அவ ரொம்ப ஆவலா இருந்தா.. வேற ஏதோ நடந்திருக்கு.. அது என்னன்னு நா பாத்துக்கறேன்.. "என்றவன்
தனக்கு விசுவாசமாக பணிபுரியும் ராபர்டை அழைத்தான்.. ஷ்ரித்திக்..
"ராபர்ட்.. " என அந்த அரங்கமே அதிரும் அளவுக்கு கத்தினான்.. ஷ்ரித்திக்.. அவனின் கத்தலில் அனைவரும் ஓரடி பின்னால் நகர்ந்தனர்..
மழலைகள்...
பயந்திருந்த ருத்ரா.. தன் தோழி ஆராவிடம் திரும்பி "ஏய்.. உன் மாமன் என்ன டி.. இப்படி கத்தறான்.. நமக்கே கொஞ்சம் டர் ஆகுது.. போ.. போய் உன் மாமன கத்தாதன்னு சொல்லு.. " என வாயை தன் கையால் மூடிய படி முணுமுணுத்தான்..
இதை கேட்டு ஆரா தன் கைகளை இடுப்பில் வைத்து ருத்ராவை முறைத்தாள்..
"அவ மாமன்னா.. ?? நீ யாரு.. ருத்து.. நீ என்னோட முறை மாமன் ??" என்று ஆரா முறைத்து பார்த்தாள்..
"அது.. வந்து... இப்ப உன்கிட்ட என்ன சொல்றது.. ?" என ருத்ரா மழுப்பிக் கொண்டே அவ்விடம் விட்டு நழுவ பார்க்க..
ஆரா ருத்ராவின் சட்டைக் காலரை பிடித்து "இங்கயே இடு.. இவங்க பேசி முடிச்சதும்.. உனக்கு இடுக்கு.." என மழலை குரலில் கோபம் கலக்கி கூற..
"ஆத்தி.. வம்பா.. மாட்டிகிட்டேனே.. " என ருத்ரா மனதில் ஆரா கொடுக்க போகும் தண்டனை நினைத்து குமறினான்..
தன் எஜமானின் திருமணத்தை ஆசையாக காண வந்த ராபர்ட்.. திருமணத்தில் நடந்திருந்த குழப்பத்தில்.. ராபர்ட்டும் குழம்பிருந்தான்.. தன் எஜமான் அழைக்கவும்.. அப்போது தான் விழித்தான்..
"ஜீ.. மாயா.. அவங்கள பத்தின தகவல் இன்னிக்கு ராத்திரிகுள்ள உங்களுக்கு வந்து சேரும்.. " என்று எஜமான் தன்னிடம் கட்டளையிடும் முன் அவரின் தேவையை அறிந்து அதற்கான வேலையில் இறங்கினான்.. ராபர்ட்..
யாதவன் தன் மகள் ஓடி போய் விட்டாள்.. என கூறியது கோபத்தையும் வருத்தத்தையும் ஷ்ரித்திக்கிடம்..
"நல்லா.. சொல்லு ஷ்ரித்திக்.. என் பொண்ணு அந்த மாதிரி ஓடி போறவ இல்ல.. அவளுக்கு ஏதாவது வேணும்னா நேரடியா கேக்கறவ.. இப்படி பண்ண மாட்டா.." என தந்தையாக அவரின் மனதிலிருந்த வருத்தத்தை முன் வைத்தார்..
"இப்ப.. அது பிரச்சினை இல்லை.. சொல்லுங்க.. ஏன் ஷிவாக்ஷிய எனக்கு கல்யாணம் பண்ண வைச்சிங்க.. ?? எனக்கு ஷிவாக்ஷிய பத்தி நல்லா தெரியும்.. நீங்க அவள கட்டாய படுத்தி தான் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சிருக்கீங்க ..?? ஏன் இப்படி பண்ணீங்க... ??" என ஷ்ரித்திக் மீண்டும் அதே அனல் பறக்கும் விழிகளுடன் கேட்டான்..
ஷ்ரித்திக்கின் பார்வையை தாங்காது..
"ஷ்ரித்திக்.. உனக்கு இன்னிக்கே கல்யாணம் பண்ணி வைக்கறத்துக்காக.." என நடுங்கும் குரலில் கூறி முடிக்கும் முன்னறே..
"என்ன.. கல்யாணம்.. கல்யாணம்.. கல்யாணம்.. ?? நான்தான் ஆரம்பத்தில இருந்தே சொல்றேன்ல .. கல்யாணம் இப்ப வேணாம்னு.. நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேனா.. ??" என கத்திய ஷ்ரித்திக் மீண்டும் தொடர்ந்தான்.. "அப்படி என்ன இன்னிக்கே கல்யாணம் பண்ணி ஆகனும்னு.. ??" என கோபத்தில் கத்தினான்..
இந்திரகவி தன்மகனிடம்
"இல்ல.. ஜோசியம் பார்த்ததுல இன்னிக்கே கல்யாணம் பண்ணி ஆகனும்னு..." என மீண்டும் கூறி முடிக்கும் முன்பே.. ஷ்ரித்திக்கின் தன் கோபத்தை தலையை கோதி கட்டுப்படுத்தி கொண்டு இருப்பதைப் பார்த்து இன்னும் நடுங்கினார்..
ஷ்ரித்திக்.. "உங்க இடத்தில விக்ரம் இருந்திருந்தான்னா.. இந்நேரம் கண்ணம் பழுத்திருக்கும்.. " என கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினான்..
ஷ்ரித்திக்கின் மொழிகளை கேட்டு ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவிக்கு கால்கள் வேரூன்றியது..
"அடப்பாவி.. நான் என்ன டா பண்ணுனேன்.. உங்க ஸ்காட்ச்சுக்கு நான் பிக்கில்லா... ??" முணுமுணுத்த படி விக்ரம் 'நீயா பேசியது.. என் நெஞ்சே.. ' என்ற பாடல் மனதில் ஓட முகத்தில் ஷ்ரித்திக்கை பார்த்து கண்கள் கலங்குவதை போல பாவனை செய்ய..
ரித்துல்.. "என்ன.. ?? பீலிங்கா.. அத ச்சீ.. வாய மூது.. வாட்டர் பால்ஸ சித்திட்டு.. " என விக்ரமின் தாடையை தன் கையால் மேலே தள்ளிவிட்டு மூடினான்.. ரித்துல்
ஷ்ரித்திக்கின் மொழிகளை கேட்டு அதிர்ச்சியில் மொத்த குடும்பமும் அவனை பே என பார்த்தது..
"ஷ்ரித்திக்.. என்ன பேசுற.. ??" என்று ஷ்ரித்திக்கின் சித்தி தேவிகா அதிர்ச்சியில் கேட்க..
"ஷ்ரித்திக்.. என்ன வார்த்தைய அளந்து பேசு.. அவ உன்னோட அம்மா.. அத மறந்திட்டியா.. ??" என்று கோபத்தில் கேட்டபடி ஷ்ரித்திக்கின் அருகில் வந்தார் .. அவனின் தந்தை ராஜ தேவன்..
ஷ்ரித்திக்
"வாங்க.. வாங்க.. நீங்க.. என் அம்மாவோட புருஷன் இல்ல.. ??" என ஏளனமாக கேட்கவும்..
ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவன்.. கோபமாக
"ஷ்ரித்திக்.. வாட் இஸ் திஸ்.. ??" என்க
"பின்ன என்ன.. ?? இவங்க உங்க பொண்டாட்டின்னு இப்ப தான் ஞாபகத்துக்கு வருதா.. ?? அங்க மணமேடையில ஷிவாக்ஷியை உக்கார வைச்ச போது... நீங்க எங்க போனீங்க.. ?? ஹான்.. ?? அப்பவே உங்க பொண்டாட்டிய என்ன ஏதுன்னு எதுவும் கேக்காம இருந்திட்டு இப்ப வரீங்க சப்போரட்டுக்கு.. ??" ஆத்திரம் குறையாமல் கத்தினான்.. ஷ்ரித்திக்
"டேய்.. என்ன.. ?? நீ ஆசைப்பட்ட பொண்ணு தான உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்கா.. ?? அப்பறம் என்ன ..??" என்று தந்தை ராஜ தேவன் அமைதியாக கேட்டார்..
அதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்திருந்தவர்கள்.. விழித்துக் கொண்டு.. மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர்..
மகேந்திரனும் கார்த்திக்கும் "டேய்.. பார்றா.. நம்ம மச்சான் லவ் பத்தியெல்லாம் பேசறான்.. ??" என கார்த்திக் சொல்ல..
"ம்க்கும் டா.. " என மகேந்திரன் ஒத்து ஊதினான்..
"என்னனதுஉஉஉஉ.. ??? அண்ணா.. லவ்வுஉஉஉ பண்றாங்களா.. ???" என சஞ்சை அதிர்ச்சியில் கூறவும்..
வர்ஷா.. "லவ் பண்றாங்களா.. ??"
ஜானவி.. "பண்றாங்களா.. ??"
ராகுல்.. "ஆஆஆஆ.. ??" என ஷ்ரித்திக்கின் உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எக்கோ கொடுக்க..
அவர்களின் அருகில் இருந்த ரித்துலும் விக்ரமும்... "க்ர்க்ர்ர்ராராஆஆஆ... த்தூதூஉஉஉஉஉ.. " என காரி உமிழ்ந்து துப்பினர்..
நால்வரும் படாத உமிழ் நீரை பட்டுவிட்டார் போல துடைத்துக் கொண்டனர்..
நேஹாவும்.. "கேட்டியா.. டி இந்த கூத்த.. ?? என்னைய பாத்ததுக்கே ஒரு மைல் ஓடுனவன்.. இப்ப பாத்தியா.. ??" என நக்கலாக புன்னகையுடன் தீவாவிடம் கூற..
தீவாவும்.. "பாரேன்.. நம்ம ஷ்ரித்திக்.. லவெல்லாம் பண்றான்..உன்ன பாத்து ஏன் ஓடுனான்னா.. ?? பேய பாத்தா ஓடாம என்ன பண்ணுவான்.. ??" என தன் நாத்தனாரின் காலை வாரினர்..
நேஹா.. திரும்பி தன் மதினியை விளையாட்டாக முறைத்தாள்..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை காதலிப்பதையறிந்த ருத்ரா
"என்னது.. உன் மாமா ஷிவுவ லவ் பண்றானா.. ??" என ஆராவிடம் கூறிக்கொண்டே கோபமாக காலை தரையில் உதைக்க.. போய்.. தவறுதலாக ஆராவின் கால்களை மிதித்து விட்டான்..
காலை பிடித்து கொண்டு சுத்தியவள்..
கத்தப் போனவளை தியா ஆராவின் வாயை தன் கையால் பொத்தி விட்டாள்..
தப்பிக்க போன ருத்ராவை காதைப் பிடித்து திருகினாள்.. தியா... வலியில் கத்த போன ருத்ரா.. தன் கையை வைத்து வாயை அடக்கினான்..
"தப்பிச்சறலாம்ன்னு பாக்கறீயா.. இரு.. உன்ன.. " என இன்னும் திருக..
"ஆஆஆஆஆ... வலிக்குது.. வலிக்குது.. வலிக்கல்லை.. வலிக்கலை... வலிக்குது.. வலிக்கலை.. " என தியாவிடம் மெதுவாக கத்தினான்..
"டேய்.. அதென்ன.. அவங்க லவ் பண்ணா.. உனக்கென்ன.. ??" என ஆரா வினவ..
"ஹ்ம்ம்.. முதல்ல நான் தான் ப்ரபோஸ் பண்ணேன்.. நான் தான் சீனியர்.. அதான்.. " என்று ருத்ரா ஸ்டைலாக கூறவும்..
"அடப்பாவி.. " என தியாவும் ஆராவும் ஒன்றாக வாயைப் பிளந்தனர்..
மழலைகள் தங்களின் செல்ல சண்டையில் லயித்திருந்தனர்..
இவையனைத்தும் யாருமறியா வண்ணம் நிகழ்ந்தது..
ஷ்ரித்திக்.. "ஆமா.. நான் காதலிக்கிற பொண்ணு தான்.. நான் ஆசைப்பட்ட பொண்ணு தான்.. அதுக்கு.. " என ஷிவாக்ஷியின் கண்ணில் வழிந்த நீர்.. நினைவுக்கு வந்து பேச்சை நிறுத்தி தன்னை சமன் படுத்தி மீண்டும் தொடர்ந்தான்...
"அதுக்கு.. எனக்கு பிடிச்ச பொண்ணு தான்.. அதுக்காக இப்படியா.. அவ சம்மதமில்லாம .. இன்னும் அவ அழுதது.. என் கண்ணுக்குள்ளயே இருக்கு.." என ஷ்ரித்திக் தன் ஆதங்கத்தை தெரிவிக்க..
"அதான்.. சொல்லுவியே.. என்ன மீறி என்ன நடந்திட போதுன்னு.. நீயே இந்த கல்யாணத்த நிறுத்தி இருக்கலாம்ல.. " என தன் மகனிடம் கிண்டலாக வினவினார்.. ராஜ தேவன்
"ம்ம்ம்ம்ம்ம்... உங்க பொண்டாட்டி கால்ல விழனுமான்னு கேக்கும் போது.. என்ன பண்ண சொல்றீங்க.. ??" என ஷ்ரித்திக்கும் அதே போல் பதிலளித்தான்..
ராஜ தேவன்..
"நாங்க என்ன பண்றது.. ?? உன் தாத்தா சொன்னதுக்கு அப்பறம் .. மறுப்பேச்சு ஏது??" என ஷ்ரித்திக்கின் தாத்தாவை கோர்த்து விட..
'ஏன் பிறந்தாய் மகனே.. ' என்ற பாடல் பின்னால் ஓடியது நம் தாத்தாவிற்கு..
"தென்னைய பெத்தா இளநீர்.. பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு.. சும்மாவா சொன்னாங்க.. உன் பையன் நைசா என்னைய கோர்த்து விட்டான்.. " என்று தன் மணையாளிடம் கூறிவிட்டு திரும்ப.. ஷ்ரித்திக் தன் தாத்தாவை முறைத்து கொண்டிருந்தான்..
"உங்க.. மருமக..சாரி.. சாரி.. உங்க மக.. எது செஞ்சாலும்.. சரி.. இல்ல... ??" ஷ்ரித்திக் தன் தாத்தாவை பார்த்து கிண்டலாக கேட்க..
"அது வந்து.. ஷ்ரித்திக்.. நா என்ன சொல்ல வரேன்னா.. ??" என தன் தாத்தாவை முடிக்க விடாமல்..
"ஷ்ஷூ... முதல்ல உங்க மருமகளுக்கு எதுக்கு எடுத்தாலும் சபோர்ட் பண்றத நிறுத்துங்க.. விசாரிச்சிட்டு முடிவ சொல்லுங்க.. இனிமே இந்த மாதிரி எதாவது நடந்துச்சு.. ??" என தன் தாத்தாவிடம் அமைதியாக அழுத்தமாக எச்சரிக்கை விடுக்க..
தன் கணவனுக்காக பரிந்து பேச "ஷ்ரித்திக்.. வயசுல பெரியவர்.. அவர் உன்னோட தாத்தா.." என பேச வந்த தன்னுடைய பாட்டியை .. அனல் கக்கும் விழிகளால் முறைத்து பார்த்தான்.. ஷ்ரித்திக்..
அவனின் பார்வையில் பயந்தவர் .. கப்சிப்பேன அமர்ந்தார்.. பாட்டி தேவசேனா..
ஷ்ரித்திக் ஒன்று கூறினால் அதற்கு மறுபேச்சு என்பதே கிடையாது.. அவன் தான் இந்த வீட்டின் ராஜா.. ஷ்ரித்திக்கின் கோபம் பற்றி அறிந்ததால் அனைவரும் அமைதி காத்தனர்.. அதுமட்டுமின்றி அவனின் கோபத்தில் நியாயம் இருக்குமென நம்பினர்.. அக்குடும்பம்.. (அப்பறம் என்ன.. ஹீரோ சொல்லியும்.. விருப்பமில்லாம கல்யாணம் பண்ணாங்க அப்படின்னு கேட்டீங்கன்னா.. அது ஹீரோவோட தப்பு.. அவர் முதல்லயே.. பிடிக்கலன்னு.. சொல்லிருந்தா.. இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது..)
ஷ்ரித்திக்கின் கோபத்திலும் நியாயமிருந்தது.. தனக்கு பிடித்தமான பெண்ணாகவே இருப்பினும்.. அவளின் சம்மதமின்றி நடந்திருந்த திருமணம் ஷிவாக்ஷியை பாதித்திருக்கிறது.. அதுவே அவனின் கோபத்திற்கான காரணம்..
ஷ்ரித்திக்கின் கோபத்திலிருந்த நியாயம் அனைவரையும் பேச விடாது செய்தது..
"ஷ்ரித்திக்.. அதுக்காக பெரியவங்க கிட்ட இப்படியா பேசறது.. ??" என ஷ்ரித்திக்கின் சித்தப்பா தேவ தேவன்.. அன்பாக வினவ..
"சித்தப்பா.. எனக்கு தெரியும்.. ஷிவாக்ஷியை பத்தி.. அவ இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா சம்மதிச்சிருக்க மாட்ட.. இவங்க தான் ஏதோ பண்ணி தான் அவள சம்மதிக்க வைச்சிருக்காங்க.." என்று தன் தாயை சுட்டிக்காட்டி கோபத்தை அடக்கிக் கொண்டு பேசினான்..
"விடு.. ஷ்ரித்திக்.. உன் கோபமெல்லாம் நியாயம் தான்.. இப்ப என்ன பண்றதுன்னு பாரு அதவிட்டு கோபத்தில கத்துனா.. சரியாயிடுமா.. ??" என சித்தி தேவிகா.. வாஞ்சையாக கூறவும் அமைதியானான் ஷ்ரித்திக்..
"பாவம்.. சித்தி.. அவ நேத்துல இருந்தே நிறைய கஷ்டம் அவளுக்கு.. அவளும் எவ்ளோ தான் தாங்குவா... சின்ன பொண்ணு அவ.." என ஷிவாக்ஷிக்கு தன்னால் தான் இவ்வளவும்.. குற்ற உணர்ச்சி அவனை மேலும் வருத்தியது..
ஷ்ரித்திக் கூற கூற.. தான் செய்த தவறு.. அப்பொழுது தான் விளங்கியது.. இந்திரகவிக்கு.. முதல் முறையாக தான் இழைத்த தவறை உணர்ந்தார்.. சுயநலமாக இருக்கக்கூடாதென நினைத்து சுயநலமாகவே இருந்து விட்டோமே.. என்ற குற்ற உணர்ச்சியில் துடித்தார்...
"ஷ்ரித்திக் நான் பண்ணது தப்பு தான்.. அவசரத்துல.. என்ன பண்றதுன்னு.." என மன்னிப்பு கேட்க முன் வந்த தன் தாயிடம்..
செய்வதையும் செய்து விட்டு இப்போது வந்து மன்னிப்பு கேட்கும் தன் தாயை என்ன செய்வது என பார்த்தான்..
"இதுக்கு தான்.. இந்த ஏளவேடுத்த கல்யாணம் வேணாம்னு சொன்னேன்.. " என கோபத்தில் கடித்து இரைத்தான்..
மயக்கத்திலிருந்து விழித்தவளின் செவிகளில் வந்து இரைத்தது.. ஷ்ரித்திக்கின் மொழிகள்..
'இவாளுக்கு இந்த பிடிக்கலை... அதான் இப்படி கத்தறா.. ஆமா.. மாயாவங்கக்கூட எப்படி எல்லாம் வாழலாம்னு கனவு கண்டுட்டு இருந்திருப்பா.. ' என நினைத்து கொண்டே சோபாவிலிருந்து எழுந்தமர்ந்தாள்..
ஷ்ரித்திக் தன் தாயிடம் இரைந்து கொண்டிருக்க.. தீவா ஷ்ரித்திக்கிடம் வந்து அவள் எழுந்து விட்டாள் என கூறியதும்.. ஷிவாக்ஷியிடம் விரைந்தான்..
ஷிவாக்ஷி சோஃபாவில் அமர்ந்திருக்க.. அவளருகே தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்..
தன் முன் மண்டியிட்டு அமரும் ஷ்ரித்திக்கை கேள்வியோடு பார்த்தாள்..
"ஷிவு.. உன்ன கட்டாயப்படுத்தி தான்
இந்த கல்யாணம் நடந்திருக்கு.. நடந்த இந்த தப்புக்கு நான் பொறுப்பேத்துக்கறேன்.. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.. நீ சொல்லு நா இப்ப என்ன பண்ணனும்னு.. நா அத பண்றேன்.. " என்று ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மன்னிப்பு வேண்டி.. அவளின் வார்த்தைக்காக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
ஷ்ரித்திக் கேட்டவுடன்.. தன் தாத்தாவின் கோபம் நினைவில் வரவே.. அவரை சமாதானம் படுத்தும் பொருட்டு..
"என்னைய தாத்தாக்கிட்ட அழைச்சிண்டு போறேளா.. ??" என கண்களில் நீர் தேங்க.. தந்தையை தொலைத்த குழந்தைப் போல் அழும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. ஷ்ரித்திக்
அவளையே பார்த்துக் கொண்டிருந்த.. அவனை எல்லாரும் பார்த்து கொண்டிருந்தனர்.. காரணம்.. ஷ்ரித்திக்கிற்கு இவ்வளவு தன்மையாக மென்மையாக பேச வருமா என்று ஆச்சரியமாக பார்த்தனர்..
தன்னவளின் விழிநீர் கண்ட ஷ்ரித்திக்கின் விழியோரத்திலும் கசிந்தது..
"வா.. " என்று ஒற்றை வார்த்தையில் சம்மதம் தெரிவித்து.. ஷிவாக்ஷியை அழைத்தான்.. ஷ்ரித்திக்..
ஷ்ரித்திக் அழைத்ததும் ஷிவாக்ஷி தன் கண்களை முழங்கையில் துடைத்துக் கொண்டு அவன் பின்னோடே நடந்தாள்..
ஷ்ரித்திக் யாரிடமும் எதுவும் சொல்லாமல் ஷிவாக்ஷியை அவளின் தாத்தாவிடம் அழைத்து சென்றான்..
ஷ்ரித்திக் தன் ஃபெராரி காரில் ஷிவாக்ஷியை முன் பக்க கதவைத் திறந்து அமர வைத்து விட்டு.. ட்ரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை அவளின் இல்லம் நோக்கி நகர்த்தினான்..
அவள் இல்லத்தின் முகவரி அவனுக்கு ஏற்கனவே தெரிந்தமையால் வெகு விரைவாக அவளின் இல்லத்தை அடைந்தான்..
மாவடு வாசனையே அக்ரஹாரத்தில் நுழைந்து விட்டோம் என கூறியது..
அவளின் இல்லம் வந்ததும் அவசரமாக காரின் கதவைத் திறக்க முயன்றாள்..
அது ஃபெராரி கார் சற்றே வித்தியாசமான மாடல் .. என்பதாலே காரின் கதவைத் திறக்க முடியாமல் தவிக்க ..
அவளின் அவசரத்தை கண்டு ஷ்ரித்திக்.. அவளின் பக்கம் காரின் கதவைத் திறந்தான்..
ஷ்ரித்திக் காரின் கதவைத் திறந்ததும்.. ஷிவாக்ஷி காரை விட்டு இறங்கி கிட்டத்தட்ட ஓடினாள்.. ஷ்ரித்திக்கை அழைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல்.. அவள் உள்ளே ஓடினாள்..
ஷ்ரித்திக்கும் அவளின் பின்னோடே வந்தான்..
ஷிவாக்ஷியின் தாத்தா உள்ளே கடவுளின் முன்னின்று மனமுருகி மந்திரங்களை ஓதி கொண்டிருக்க.. அப்போது ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷி அழுகையை அடக்கி நா தழுதழுக்க
"தாத்தா.. " என்றழைக்கவும்..
பிரார்த்தனை செய்து கொண்டிருந்த தாத்தாவின் செவிகளை அடைந்தது.. அவளின் குரல்..
குரோதத்தில் கண் விழித்தவர்.. ஷிவாக்ஷி உள்ளே நுழைய முனைய.. "உள்ளே.. வராதே.. அபத்தம் பேசறவாளுக்கு இந்த ஆத்துல என்ன வேலை.. ??" என கோபம் மட்டுபடாது கத்தியவர்.. "எங்கே போனாலும்.. என்ன பிடிச்ச பீடை விடமாட்றது.. " என கோபத்தில் புலம்பலாக ஷிவாக்ஷியின் முன் கூற..
ஷிவாக்ஷிக்கு வேதனையில் கண்ணீர் கண்ணத்தில் உருண்டது..
"தாத்தா.. இல்ல.. நா என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கேளுங்கோளேன்.. ??" என கண்ணீர் மல்க கெஞ்ச..
"போதும்.. அத்துழாய்.. இனி எதுவும்.. பேசாத.. நீ சொன்னதெல்லாம் போதும்.. நீ நின்ன இந்த இடத்தையே நான் நன்னா கழுவனும்.. நேக்கு உன் முகம் பாக்கவே அருவெறுப்பா இருக்கறது.." என முகத்தை சுளித்து கூறுவதை கண்டு.. உடைந்து போனாள்.. தன் தாத்தாவிற்கு நான் தீண்ட தகாதவளாக மாறிவிட்டேனா.. என்றெண்ணமே அவளை வாட்டியது..
"தாத்தா... " என ஷிவாக்ஷி கதறுவதை பொருட்படுத்தாது.. ஷிவாக்ஷி வரைந்த ஓவியங்கள் அடங்கிய பெட்டியும்.. அவள் படித்து பெற்ற சான்றிதழ்கள் அடங்கிய கோப்புகளை அவளிடம் வீசினார்..
"இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அத்துழாய்.. உன் சம்பந்தப்பட்ட பொருள் எதாவதுன்னா எடுத்துட்டு போயிடு.. ஆனா திரும்பி மட்டும் வந்துடாத.. இதுக்கு அப்பறம் உன்ன நான் பாக்க கூடாது.." கூறிவிட்டு அவ்விடம் அகன்று கடவுளின் முன்னின்றுக் கொண்டார்..
விம்மி வெடித்து கதற ஆரம்பித்தாள்.. ஷிவாக்ஷி.. "தாத்தா... தாத்தா.. " என கதறினாள்.. தாத்தா வீசியெறிந்த அவளுடைய ஓவியங்களையும் அவளுடைய சான்றிதழ்களையும் பார்த்துக் கொண்டே இருந்தாள்..
ஷ்ரித்திக்.. "அத்துழாய்.. ??" என்று ஷிவாக்ஷியை அழைப்பதை அப்போது குறித்து கொண்டான்..
பக்கத்து வீட்டில் வசிக்கும் கவிதா அக்காவிடம் திரும்பிய ஷிவாக்ஷிக்கு அவர்கள் தன்னை கோபத்தில் வெறிப்பது புரிய.. கவிதா அக்காவும்.. அவரின் கணவர் சுந்தரர் ஷிவாக்ஷியை இக்கோலத்தில் கண்டதும் அவர்கள் அவளை தவறாக எண்ணினர்..
ஷிவாக்ஷி அவர்களருகே செல்லவும் .. அவர்கள் இருவரும் உள்ளுக்குள் கோபம் கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை அறைந்து சாத்தினர்..
யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை.. நான் அவ்வளவு வேண்டாதவளாக மாறிவிட்டேனா.. என எண்ணி குமைந்தாள்.. ஷிவாக்ஷி..
அக்ரஹாரத்தில் இருந்த அனைவரும்.. மணக்கோலத்தில் இருந்த ஷிவாக்ஷியை கண்டவர்கள்.. அவளை பற்றி தவறாகவே அவளின் காது பட பேசியதை கேட்டதும்.. நொறுங்கிவிட்டாள்.. தன் பக்கம் இருக்கும் நியாயங்களை யாருமே கேட்கவில்லையே.. என மனம் இன்னும் கனத்தது..
ஷிவாக்ஷியின் நிலையை கண்டு ஷ்ரித்திக்.. என்ன செய்து இந்த தவறை திருத்துவது .. அவளின் கண்ணீர் அவனை இன்னும் வாட்டியது.. என குற்ற உணர்வில் நெளிந்தான்..
ஷிவாக்ஷிக்கு அடுத்து என்ன செய்வது.. எங்கே செல்வதென தெரியாமல் முழித்தாள்..
ஷ்ரித்திக் அவளின் தோளைத் தொடவும்.. குழந்தை போல தேம்பி தேம்பி அழுதுகொண்டே.."தாத்தா.. தாத்தா.. " கைகாட்டி கூற முடியாமல் கதறியழுக.. அவளை சமாதானப் படுத்த முடியாமல்.. அவளை அணைத்துக் கொள்ள துடித்த கைகளை அடக்க திணறினான்.. ஷ்ரித்திக்
"ஷிவு.. வா போலாம்... இப்ப எதுவும் வேணாம்.. அப்பறம் பாத்துக்கலாம்.. " என ஷிவாக்ஷி அவளின் ஓவியங்களும் சான்றிதழ்கள் அடங்கியவை எடுத்து கொள்ள.. அவளருகில் வந்து நின்ற முயல் குட்டிகள் இரண்டையும் எடுத்து கொண்டவளை.. தன்னோடு அழைத்துச் சென்றான்.. ஷ்ரித்திக்..
ஷிவாக்ஷியை கார் கதவை திறந்து உள்ளே அமர வைத்து.. தானும் ஏறி அமர்ந்து வண்டியை உசுப்பினான்..
வழிநெடுகிலும்.. தன் மடியில் தவழும் முயல் குட்டிகளை கூட கவனியாது
எங்கோ வெறித்தபடியே வந்தாள்.. ஷிவாக்ஷி
ஸ்டீயரிங்கை பிடித்து... வண்டியை ஓட்டிக் கொண்டே
"ஷிவு.. ப்ளீஸ்.. அழாத.. எனக்கு என்ன சொல்றதுன்னு.. தெரியல.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. அப்பறம் உன் தாத்தாக்கிட்ட நான் வந்து பேசறேன்.. எல்லாம் சரியாயிடும்.. ப்ளீஸ் அழாத.." என ஷ்ரித்திக் மொழிந்தவைகளுக்கு மறுமொழியில்லாது.. இருப்பவளை கண்டு..
"ஷிவு.. ஷிவு.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை விளிக்கவும்..
ஷிவாக்ஷியின் எண்ணம் முழுதும் தாத்தாவைச் சுற்றியே இருந்தது.. 'தாத்தா.. என்ன வெளிய அனுப்பிட்டா.. இனிமே அவாள யார் பாத்துப்பா.. ?? வயசானவா.. அவாளுக்கு உடம்பு வேற சரியில்ல.. ? மாத்திரைக் கூட நேரத்திக்கு போட்டுக்க மாட்டா.. ?? நேரத்திக்கு சாப்பிட மாட்டா.. ?? பசுக்களுக்கு எல்லாம் யார் ஜலம் வைப்பா.. ??' என்றே இருக்க.. ஷ்ரித்திக் அழைப்பது எங்கோ தொலைவில் இருந்து அழைப்பது போல் கேட்டாலும்.. அவளால் அதற்கு பதில் கூற முடியாத நிலையில் இருந்தாள்..
தான் அழைத்தது அவளுக்கு கேட்டதா.. என மீண்டும் விளிக்க.. ஷிவாக்ஷியிடம் பதிலில்லாமல் போகவே.. அவளை தோள் தொட்டு உலுக்கினான்.. ஷ்ரித்திக்..
"ஹான்.. ??" என ஷிவாக்ஷி முழிக்க..
"என் அம்மா பண்ண தப்புக்கு.. நா உன்கிட்ட மன்னிப்பு கேக்குறது.. எல்லாம் அதிகம் தான்.. " என கூறிக் கொண்டிருந்த போதே..
"ஹான்.. ??" என மீண்டும் ஷிவாக்ஷி முழிக்க..
"ஷிவு.. என்னாச்சு உனக்கு.. ??" என ஷ்ரித்திக் அவள் விழிப்பதை பார்த்து கேட்க..
அப்போதும்.. ஷிவாக்ஷி "ஹான்.. ??" என மீண்டும் மீண்டும் கேட்க..
ஷிவாக்ஷி இப்போது நான் கூறுவதை கேட்கும் நிலையிலே இல்லை.. அவளின் எண்ணம் இங்கில்லை.. என்றுணர்ந்தவன்.. ஷிவாக்ஷியிடம் ஒன்றுமில்லை.. என கூறிவிட்டு தங்களின் இல்லத்தை நோக்கி நகர்ந்தனர்.. வரும் வழியிலெல்லாம் அவளின் முகத்தை பார்த்த வண்ணமே வந்தான்.. அழுதழுது வீங்கி சிவந்திருந்த கண்களும் முக்கும்.. சாதாரணமாகவே சிவந்திருக்கும் கண்ணம்.. கண்ணீர் தடம் பதித்து இன்னும் சிவந்திருந்தது.. துடிக்கும் உதடுகள்.. அவளை இந்நிலையில் காணவே உள்ளுக்குள் துடித்துப் போனான்.. எல்லாம் தன்னால் தான்.. என்று தன்னையே நொந்து கொண்டான்..
வண்டியை தன் இல்லத்தில் நிறுத்தினான்.. வண்டியை விட்டு இறங்கிய ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷி.. இறங்குவதற்கு காரின் கதவைத் திறந்து விட்டான்.. அவளுடைய பெட்டியை எடுத்துக் கொண்டவன்.. உள்ளே செல்ல முற்பட.. அவள் இன்னும் இறங்காமல் எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதை பார்த்த ஷ்ரித்திக்..
ஒரு கரம் இரு முயல் குட்டிகளை தாங்கியிருக்க..
ஷிவாக்ஷியின் மற்றொரு கரத்தை பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்..
ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியும் வருவதை கண்ட மொத்த குடும்பமும் ஷ்ரித்திக்கை ஆவலாக கண்டனர்..
"வர்ஷா.. ஜானவி.. ஷிவாக்ஷிய உள்ள கூட்டிட்டு போங்க.. முதல்ல இந்த காஸ்ட்யூம மாத்து இதே அவளுக்கு கசகசன்னு இருக்கும்.. " என தன் உடன்பிறப்புகளிடம் கூறியவுடன்.. வர்ஷாவும்.. ஜானவியும் ஷிவாக்ஷியை அழைத்துச் சென்றனர்..
ஷ்ரித்திக்.. தன்னறைக்கு கிளம்ப எத்தனிக்கையில் சித்தி தேவிகா அவனை அழைத்தார்... "ஷ்ரித்திக்.. நில்லுப்பா.. " என்க
"என்ன சித்தி.. ??" என ஷ்ரித்திக்கும் கேள்வி எழுப்பினான்..
"என்ன ஷ்ரித்திக் .. தெரியாத மாதிரியே கேக்கற.. ஷிவாக்ஷிய அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போன.. என்னாச்சுப்பா.. அதான்.. ??" என ஷ்ரித்திக்கின் சித்தி தேவிகா கேள்வியாக பார்த்தார்..
"இன்னும் என்ன சித்தி நடக்கனும்.. ?? பாவம் அவ அந்த பொன்ன அவரும் சரி அந்த ஏரியாவில இருக்கறவங்களும் சரி.. எல்லாரும் அவள அசிங்கமா பாக்கறாங்க.. அதான் நடந்துச்சு.. " என்று கூறிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.. "சரி.. நடந்தது நடந்துருச்சு.. ஆனா.. ஒன்னு இந்த சம்பிரதாயம்.. அது இதுன்னு ஏதாவது பண்ணிங்க.. அவ்ளோதான்.." என கோபமாக மொழிந்து விட்டு அகன்றான்..
போகும் அவனையே அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர்..
"அப்பா.. என்னப்பா... இவன் இப்படி பேசிட்டு.. போறான்.. நா பண்ணது.. தப்பா.. ??" என ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. பதற்றத்துடன் கேட்டார்.. அவரின் மாமனாரிடம்..
"சரியானத தப்பானா நேரத்தில பண்ணிட்டம்மா.. பரவால்ல.. ஒன்னும் பிரச்சினை இல்லம்மா.. காலம் எல்லாம் சரி பண்ணிக்கும்.. என் பொண்டாட்டி அழுகறத என்னால பாத்துட்டு இருக்க முடியாதில்ல.. அந்த நிலமைல தான் இருக்கான் அவன்.. சரியாயிடும்.. விடும்மா.. " என தன் மருமகளிடம் கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.. தாத்தா அமரேந்திரர்..
அவள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களை கலைத்தவர்கள்.. குளித்து வரும் படி கூறவும்.. ஷிவாக்ஷி எங்கோ வெறித்தபடியே இருந்தவளை குளியலறையில் அனுப்பினர்.. ஷிவாக்ஷியும் குளித்து விட்டு வெளியே வந்தவளுக்கு புடவையை கட்டிவிட்டு அவளிடம் பேச முயன்ற அனைத்தும் தோல்வியை தழுவியது.. அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போனது.. ஷிவாக்ஷியை அறையிலே விட்டுவிட்டு வந்தனர்..
ஷ்ரித்திக் தன் அறையில் சென்று சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தான்.. காலையில் இருந்து நடந்தவற்றை அலசியது .. அவனின் மனம்..
"மச்சான்.... " என விக்ரம் கத்திக் கொண்டே ஷ்ரித்திக்கின் அறையில் நுழைந்தான்..
மனதின் எண்ணங்களில் மூழ்கி இருந்தவனை நினைவில் கொண்டு வந்தது.. விக்ரமின் கூச்சல்..
விக்ரம் வருவதை கண்ட ஷ்ரித்திக் எழுந்து நிற்கவும்.. விக்ரம் கத்திக் கொண்டே வந்து ஷ்ரித்திக்கை அணைத்துக் கொண்டே சுற்றினான்..
விக்ரம் "மச்சான்.. சூப்பர்.. டா.. நேற்றைய காதலி.. இன்றைய மனைவி..செம.. செம.. ஹ்ம்ம்ம்ம்.. " என ஷ்ரித்திக்கை சுற்றிவதை நிறுத்தி விட்டு அவனின் முன்பு கூற.. ஷ்ரித்திக் எரித்து விடுவதை போல முறைத்தான்..
ஷ்ரித்திக்.. முறைப்பதை கண்டவன்.. "சரி.. சரி.. சாரி.. விடு.. முறைக்காத.. " என்று விக்ரம் மொழிந்தான்..
"ஆமா.. மாயா போனது... ஒரு பக்கம் இருக்கட்டும்.. எப்படி ஷிவாக்ஷி அங்க வந்தா.. ??" என விக்ரம் ஷ்ரித்திக்கிடம் கேள்வி எழுப்ப..
விக்ரமை முறைத்து விட்டு "நானும் உன் கூட தான இருக்கேன்.. எனக்கென்ன தெரியும்.. ?? .. ஆனா ஒன்னு மட்டும் தெரியுது.. ஷிவாக்ஷிய எதோ ஒன்ன சொல்லி கட்டாயப்படுத்திதான்.. அவள கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சிருக்காங்க" என ஷ்ரித்திக் எரிச்சலாக கூறினான்..
"சரி .. ஷிவாக்ஷிகிட்ட கேக்க வேண்டியது தான.. ??" என விக்ரம் கேட்கவும்..
"ம்ப்ச்.. நா சொல்றத.. கேக்கற நிலமையில கூட ஷிவு இல்லடா.. ஏதோவொரு.. யோசனையிலயே இருக்கா.. ??" என ஷ்ரித்திக் கூறி முடிக்கும் அதே நேரத்தில் உள்ளே நுழைந்தனர்.. ஷ்ரித்திக்கின் தங்கைகள்..
"வர்ஷா.. ஜானு .. இப்ப எப்படி இருக்கா.. ?? ஏதாவது பேசறாளா.. ??" என ஷ்ரித்திக்கின் கேள்விகளுக்கு
அவனின் தங்கைகள்.. "இல்ல அண்ணா.. நாங்க பேச ட்ரை பண்ணுணோம்.. பட் அவ கிட்ட இருந்து எந்த பதிலும் இல்ல.." என வர்ஷா மொழந்ததை தொடர்ந்து ஜானவியும்.. "பித்து பிடிச்சவ மாதிரி இருக்கா.. " என அவர்களின் மொழியை கேட்ட.. ஷ்ரித்திக்..
"கேட்டல்ல.. ச்சா.. என் தப்பு.. பிஸ்னஸ்ல எல்லாம் சரியான முடிவு எடுக்கற என்னால.. 'தி கிங்' னு தொழில் உலகத்தில பேர் எடுத்த என்னால.. என் வாழ்க்கைல என்னால சரியான முடிவு எடுக்க முடியல.. ச்சா.. " என தன்னையே நொந்து கொண்டான்.. ஷ்ரித்திக்
"சரி.. சரி .. விடு.. நீ ஆசைப்பட்ட பொண்ணு தான.. அப்பறம் என்ன டா.. ??" என விக்ரமும் மற்றவர்களை போல கூற..
"டேய்.. என் வாய்ல ஏதாவது வந்தற போது.. மத்தவங்கள மாதிரியே பேசற.. " என ஷ்ரித்திக்.. விக்ரமிடம் கத்தினான்..
"பின்ன என்னடா.. ?? எதுக்காக உங்க அம்மாவ கத்துன.. ??" என விக்ரம் அம்மாவிற்காக பரிந்து பேசினான்..
"ஓஹோ.. ஆமா.. என் மேலயும் தப்பு தான்.. நானும் வேணும்னு தான் ஷிவாக்ஷி கழுத்தில் தாலி கட்டுனேன்.. ஆனா இப்படி நடக்கும்னு எதிர்பாக்கல.. " என ஷ்ரித்திக்கின் மொழிகளை கேட்டு ஷ்ரித்திக் தங்கைகளும் விக்ரமும்... விழிகளை விரித்தனர்..
ஷ்ரித்திக் தொடர்ந்தான்..
"மாயா இடத்தில ஷிவாக்ஷி வருவான்னு எதிர்பாக்கல.. ஷிவாக்ஷி கல்யாணப் பொன்ன பாத்தப்போது... எனக்கும் சந்தோஷமா தான் இருந்துச்சு.. ஆனா அவ அழுகைய பாத்ததும் கல்யாணத்த நிறுத்திறலாம்னு.. எந்திரிச்சேன்.. ஆனா அம்மா விடல.. எனக்கும் அவ வேணும்னு தோனுச்சு.. அதான் தாலி கட்டுனேன்.. தப்பு தான்.. இப்ப தப்புன்னு தெரியுது.. அவ இவ்வளவு கஷ்டப்படுவான்னு தெரிஞ்சிருந்தா.. இத பண்ணிருக்க.. மாட்டேன் .. என் மேல இருக்கற கோபத்தை அம்மா மேலயும் தாத்தா மேலயும் காட்டிட்டேன்.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷிபட்ட கஷ்டங்களையும் அவமானத்தையும் எண்ணி வருத்தமாக மொழிவதை கேட்ட விக்ரம் ..
"சரி.. ஷ்ரித்திக்.. விடு.. நடந்துருச்சு.. நீ இப்ப படற கஷ்டத்தைமெல்லாம் ஒன்னுல்ல.. ஷிவாக்ஷி தான்.. பாவம்.. ரொம்ப பட்டுட்டா.. அவள நல்லா பாத்துக்கோ.." என விக்ரம் தன் தோழியின் நிலையை அறிந்து ஷ்ரித்திக்கிடம் கூறினான்..
"அவ அழுகுறது... இதுவே கடைசியா இருக்கனும்.. நா நினைக்கறேன்.. " என ஷ்ரித்திக் உறுதியாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து பால்கனியில் கையை ஊன்றி தன்னை சமன் செய்து கொண்டிருந்தான்..
அதே நேரம்..
தன்னை சுற்றிக் கொண்டு இருக்கும்.. முயல்களை கவனியாது.. ஷிவாக்ஷியும் பால்கனியில் தரையில் அமர்ந்து வழியும் கண்ணீரை துடைக்காமல் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்..
இந்திரகவி.. தன் மருமகளிடம் மன்னிப்பு கோர வந்தார்.. ஆனால் ஷிவாக்ஷியிடமிருந்து பதிலில்லாமல் போகவே.. அப்போது உள்ளே நுழைந்த ஜானவியும்.. வர்ஷாவிடம் என்னவென கேட்டார்.. ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. நடந்தவைகளை ஜானவி விளக்கமாக கூறவும்..
"அச்சோ.. இவ்ளோ.. நடந்திருக்கா.. ச்சே.. நான் என்ன பண்ணிருக்கேன்.. ??" என தன்னையே நொந்து கொண்டார்..
"சரி .. விடும்மா.. " என வர்ஷா சமாதானமாக கூறினாள்..
இந்திரகவி "சரி அது போகட்டும்.. இந்த புடவை நகையெல்லாம்.. அவளுக்கு போட்டு விடுங்க.." என அவர்களிடம் கசவு சேலையும் .. முல்லை பூ தங்க அட்டிகையையும்.. தங்க வளையல்களும், தங்க லொலாக்கை நீட்டினார்..
ஜானவியும் வர்ஷாவும் புரியாமல் பார்க்கவும்..
ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. "நடக்க வேண்டியதெல்லாம்.. நடக்கனும்.. " என கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்..
"என்ன சொல்லிட்டு போறாங்க.. ??" என வர்ஷா முழிக்கவும்.. "இதுக்கு சொல்லாமலே போயிருக்கலாம்.. " என ஜானவி நொந்து கொண்டு.. ஷிவாக்ஷியை மிதமாக அலங்கரித்தனர்..
கூந்தலை க்ளிப்பில் அடக்கிவிட்டு.. இந்திரகவி கொடுத்த நகைகளை அணிந்து விடவும்.. மிதமான அலங்காரத்தில் ஜொலித்தாள்.. ஷிவாக்ஷி
அன்றைய பகல் பொழுதின் வேலையை முடித்த கதிரவன்.. இது உனக்கான வேலையென நிலவை அனுப்பி வைத்தான்..
இன்றேதோ.. கருந்தரையில் சிந்திய ஒரு துளி பாலாக வெளுத்துக் கொண்டிருந்தாள்.. சந்திரன்..
தனதறையில் இருந்த ஷ்ரித்திக்கை ஷிவாக்ஷியின் அறைக்குள் வற்புறுத்தி அனுப்பி வைத்தனர்.. அவனின் நண்பன் விக்ரமும் உடன்பிறப்புகளும்..
உள்ளே நுழைந்ததும்.. ஷ்ரித்திக் மெலிதாக அதிர்ந்தான்..
'இந்த சடங்கு சம்பிரதாயம் வேணாம்னு சொன்னேன்.. இவங்கல... ச்சா...' என ஷ்ரித்திக் கோபத்தில் முணுமுணுத்தான்..
முதலிரவுக்கு என்று அறையை மல்லிகையாலும் பன்னீர் ரோஜாவாலும் அலங்கரித்திருந்தனர்..
அந்த மணமே ஷ்ரித்திக்கை வா வா வென அழைத்து.. அவனை உற்சாகப்படுத்தியது...
இதையேதும் கவனியாது.. ஷிவாக்ஷி பால்கனியில் இருந்த இருக்கையில் அமர்ந்து வெறித்த வண்ணமிருந்தாள்..
கற்றை கூந்தல் முகத்தில் படற.. நிலவொளி அவளை இன்னும் அழகாய் காட்டியது..
ஷிவாக்ஷியின் சோகம் உள்ளுக்குள் பிசைந்தது.. ஷ்ரித்திக்கிற்கு..
ஷிவாக்ஷியின் அருகில் சென்றான்.. ஷ்ரித்திக்..
ஷ்ரித்திக் வருவதில் அச்சம் கொண்டவள்.. "கிட்ட வராதேள்.. என்ன தொடாதேள்.. " என பதறியடித்து கத்தினாள்.. ஷிவாக்ஷி..
"ஹே.. கூல்.. கூல்.. நா ஒன்னும் பண்ண மாட்டேன்.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் கூறிய பின்பே அமைதியானாள்..
"அழாதே.. ஷிவு.. உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல.. " என ஷ்ரித்திக் கூறுவதை
ஷிவாக்ஷி தன் செவிகளில் விழுந்ததற்கான அறிகுறி ஏதுமின்றி எங்கோ.. பார்த்து கொண்டிருந்தாள்..
'இப்படியே விட்டா... அவ்ளோ தான் பைத்தியமாயிடுவா.. இவ தூங்குனா தான் சரியாகும்.. ' என நினைத்த ஷ்ரித்திக்.. ட்ராவில் இருந்த தூக்க மாத்திரைகளில் ஒன்றை மேஜையில் இருந்த பாலை கிளாஸில் ஊற்றி ஷிவாக்ஷி குடிக்க பாலில் கலந்தான்...
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் பாலை குடியென கூற .. மறுமொழி இல்லாமல் போகவே.. ஷிவாக்ஷியை உலுக்கி அவளின் கைகளில் கொடுத்தான்..
ஷிவாக்ஷி ஏதோ யோசனையில் உளன்றவளாக பாலை குடித்து அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு மெத்தையில் அமர்ந்தவள் கண்கள் இருட்டி கொண்டு வர.. தூக்க மாத்திரையால் அப்படியே சாய்ந்து உறங்கியும் போனாள்..
'ஹப்பாஆஆ..' என அவளின் உறக்கம் ஷ்ரித்திக்கிற்கு சிறிதளவு நிம்மதியை தந்தது..
ஷ்ரித்திக்.. உறக்கத்தை தழுவியிருந்த ஷிவாக்ஷியின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவளை ரசித்தவன்.. அழுதழுது சிவந்து வீங்கிருந்த அழுத தடத்தை துடைத்து.. 'புஜ்ஜு.. அழாத எல்லாம் நான் சரி பண்றேன்.. நீ அழறத தான் என்னால தாங்க முடியல.. கொஞ்ச நாள் போகட்டும்.. ஐ லவ் யூ..' என உறக்கம் கொண்ட ஷிவாக்ஷியிடம் மொழிந்து விட்டு
முதல் முறையாக ஷிவாக்ஷியின் நெற்றியில் இதழ் பதித்தான்..
வேஷ்டி சட்டையில் இருந்த ஷ்ரித்திக்.. தன் சட்டையை கழற்றிவிட்டு பனியன் அணிந்திருந்த படியே உறங்க போக.. தனக்கும் தூக்கம் வராததை போல் இருக்கவே.. ஒரு தூக்க மாத்திரை போட்டுகொண்டு பாலை குடித்து விட்டவன்..
மெத்தை போன்ற விரிப்பை தரையில் விரித்து படுத்துக் கொண்டான்.. ஷ்ரித்திக்..
சிறிது நேரம் போனதும்.. கனவில் கதவை யாரோ தட்டுவதை போல ஷிவாக்ஷிக்கு ஒலி கேட்கவும்.. எழுந்தாள்.. நிஜத்தில் தட்டுவதாக நினைத்து..
தூக்க மாத்திரையால் முழிக்கவே கஷ்டப்பட்டாள்.. ஷிவாக்ஷி..
இருட்டில் தடுமாறி எழுந்தவள்.. கட்டிலை விட்டு இறங்கி.. தள்ளாடியபடி நடந்தாள்..
தள்ளாடியபடி நடந்த ஷிவாக்ஷியின் காலை கீழே விரித்திருந்த மெத்தை தடுக்கி.. ஷ்ரித்திக்கின் மேலே விழுந்தாள்..
ஷிவாக்ஷி எழ முயற்சிக்க.. தூக்க மாத்திரையின் வீரியத்தால் முடியாமல் போனது..
தன் மேல் ஏதோ கணப்பது போன்ற உணர்வினால்
ஷ்ரித்திக்கும்.. தூக்கத்திலிருந்து விழிக்க முயற்சித்தான்..
சொப்பனத்தில் ஷிவாக்ஷியுடன் காதலில் மூழ்கியவனிற்கு தன் மேல் பரவியிருந்த ஷிவாக்ஷியை கண்டு 'இது கனவு தான்..' என ஷிவாக்ஷியை அணைத்துக் கொண்டு உறங்கத் தொடங்கினான்..
ஷிவாக்ஷியும் ஷ்ரித்திக்கை அணைத்துக் கொண்டாள்.. தனக்கான இடத்தை அடைந்ததை போல ஷ்ரித்திக்கின் நெஞ்சில் முகத்தை புதைத்தாள்...
இருவரும் ஏனோ மனதுள் இதமாக இருந்தனர்
ஷ்ரித்திக்கும்.. தன்னவளுடன் கனவில் இருப்பதாக நினைத்து கொண்டே.. அவளின் கழுத்து வளைவில் முகத்தை தேய்த்து கொள்ள.. ஷிவாக்ஷி கூச்சத்தில் நெளிந்தபடியே ஷ்ரித்திக்கை இன்னும் தன் முகத்தை அவனுள் புதைத்தாள்.. இருவரும் அப்படியே உறங்கியும் போனர்..
விடியற்காலை கதிரவன்.. 'போதும் தூங்குனது.. எந்திரிங்க.. ' என அனைவரையும் தன் கதிர்களால் தீண்டி எழச் செய்தான்..
உறக்கத்தின் பிடியில் இருந்த ஷ்ரித்திக்கின் கண்ணங்களை தீண்டியது.. கதிரவனின் கதிர்கள்..
ஷ்ரித்திக் மீண்டும் உறக்கத்தை தொடர நினைக்கையில்.. இதமான நறுமணம் நாசியை தீண்டியது.. சிறிது விழித்து பார்க்க.. தன் அணைப்பில் பொம்மை போல உறக்கத்தை தொடர்ந்தாள்.. ஷிவாக்ஷி..
"எங்க பார்த்தாலும் நீ தாண்டி தெரியுற... ??" என ஷிவாக்ஷியை கொஞ்சிக் கொண்டே.. இன்னும் இறுக்கமாக அணைத்து உறங்க ஆரம்பித்தான்.. ஷ்ரித்திக்..
அவனின் இறுக்கத்தில் சற்று விழித்தவளின்.. பார்வையில் விழுந்தது.. தன்னிடையை சுற்றி அணைத்திருந்த ஷ்ரித்திக்கின் கரங்கள்..
பயந்த ஷிவாக்ஷி நிமிர்ந்து பார்க்க.. உறக்கத்திலும் கம்பீரமாக இருந்த ஷ்ரித்திக்கின் முகம்.. அவள் பார்த்த அதேசமயம் ஷ்ரித்திக் விழித்துப் பார்க்கவும் சரியாய் இருந்தது.. பதறியடித்து கொண்டு எழுந்தாள்.. ஷிவாக்ஷி.. அவளின் பதற்றம் ஷ்ரித்திக்கையும் தொற்றிக் கொண்டது..
ஷ்ரித்திக் பதற்றத்துடன் எழுந்தவன்.. "என்னாச்சு.. ??" என பதற்றம் குறையாமல் வினவினான்..
"நீங்க எப்படி.. என் பக்கத்தில படுக்கலாம்.. ??" என ஷிவாக்ஷி வினவியதில்.. கொஞ்சமும் கோபமில்லை.. மாறாக பயம் கலந்த பதற்றமே இருந்தது..
"நானா.. ஹலோ..மேடம்.. நீங்க தான் என் பக்கத்தில வந்து படுத்திருக்கீங்க.. பாரு பெட்ல இருந்தது நீ.. நான் கீழ தான் படுத்திருந்தேன்.. " என ஷ்ரித்திக் கொஞ்சம் திமிரும் கலந்திருந்ததோ..
ஷ்ரித்திக் கூறியதை கேட்டதும் தான் நினைவில் வந்தது.. "நேத்து.. ஷாமத்துல யாரோ.. கதவை தட்டுனா.. நா திறக்கலான்னு போறச்ச.. தடுக்கி விழுந்தேன்.. அப்பறம்.. என்னாயிடுத்துன்னு நேக்கு தெரில.. ??" என ஷிவாக்ஷி தலையை சொறிந்தபடி கூறியதை கேட்டு..
"நேத்து ராத்திரியா.. ஹோய்.. யாரும் வந்திருக்க சான்ஸ் இல்ல.. நீ கனவு கண்டிருப்ப.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் கூறவும்..
'அப்படியும் இருக்கலாம்..' என யோசித்த ஷிவாக்ஷி.. பதற்றத்தை முகத்தில் தேக்கி வைத்திருந்தவளை.. கண்டு "ஹேய்.. வேற எதுவும் நடக்கல .. தெரியாம நடந்துருச்சு.. விடு.. நான் தூக்க மாத்திரை சாப்பிட்டேன்.. அதான்.. ஓகேவா.. " என ஷ்ரித்திக் கூறியதும் தான்.. முகம் இயல்பானது.. ஷிவாக்ஷிக்கு
"சரி.. குளிச்சிட்டு ரெடியா இரு.. நாம நம்ம வீட்டுக்கு போலாம்.. ஹ்ம்ம்ம்ம்.." என ஷ்ரித்திக்கின் மொழிகளை கேட்டு கேள்வியாக பார்த்தாள்.. ஷிவாக்ஷி..
அவளின் வினா பார்வையை கண்டு.. இரு புருவங்களை உயர்த்தி பதில் வினா கேட்டான்..
"அப்ப.. இது.. ??" தற்போது தங்கிருக்கும் அரண்மனை உங்கள் வீடு இல்லையா என வினா எழுப்பினாள்..
ஷ்ரித்திக்.. எழுந்து கண்ணாடியில் தன்னை பார்த்தவன்.. ஷிவாக்ஷியின் குங்குமம் மார்பிலும் கண்ணத்திலும் படிந்திருந்தது.. தலைமுடியில் இருந்த வாடிய மல்லிகை.. அவனின் இதழ்களில் புன்னகையால் கீற்றிட்டது..
அதை கலைத்தவாறே ஷிவாக்ஷியின் கேள்விக்கு பதிலளித்தான்.. "இதா.. இது பண்ணை வீடு.. பாரு பின்னாடி.. தென்னந்தோப்பு, மாந்தோப்பு எல்லாம் இருக்கும்.. இங்க கல்யாணத்துக்கு மட்டும் தான் வந்தது.. நம்ம வீடு இதில்ல.. சென்னைல இருக்கு.. " என்றான்
ஷ்ரித்திக்கின் மொழிகளை கேட்டவள்.. பெரிய தனக்காரங்க போல.. என நினைத்துக் கொண்டாள்..
"சரி .. ஒரு 2 மினிட்ஸ் வைட் பண்ணு.. குளிச்சிட்டு வந்தறேன்.. " என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மொழிந்து விட்டு குளியலறைக்குள் புகுந்தான்..
ஷ்ரித்திக் சென்றதும்.. ஷிவாக்ஷிக்கு தன் தாத்தாவின் நினைவு வந்தது.. 'அப்ப நானும் இவா கூட போறனா.. தாத்தா என்ன பண்ணுவா.. ??' என தாத்தாவின் சிந்தனையில் ஆழ்ந்தாள்..
ஷ்ரித்திக் குளித்து விட்டு வெளியே வந்தவன்.. ஷிவாக்ஷியை காண.. அவள் ஏதோவொரு சிந்தனையில் இருப்பதைக் கண்டு.. 'என் பக்கத்தில படுத்திருந்த பயத்துல பேசனதோட சரி.. மறுபடியும் எப்ப பேச போறாளோ.. ' என தலையை துவட்டிக் கொண்டு தன்னுள் எண்ணிக் கொண்டான்.. உடை மாற்றி தயாராகி வெளியே வந்த ஷ்ரித்திக்..
"ஷிவு... போய்.. குளிச்சுட்டு வா.. " என அவன் கூறியதும்..
ஷிவாக்ஷி குளியலறையில் புகுந்தாள்.. அவளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் குளியலறையிலேயே இருந்தது.. தூவாலைக் குழாயில் தன்னை நனைத்து கொள்ள.. அந்நீரானாது... அவளின் வளவளப்பான அங்கமெங்கும் உருண்டோடியது.. ஷிவாக்ஷியின் யோசனை இப்போதோ.. ஷ்ரித்திக்கை எண்ணி.. 'பாவம்.. அவாளும்.. கல்யாணத்த பத்தி.. ஏதேதோ.. ஆசப்பட்டிருப்பா.. ம்ப்ச்.. இப்படியாயிடுத்து..' என உளன்ற வண்ணமிருந்தாள்..
குளித்து முடித்தவள்.. துண்டை எடுத்து துவட்டி கொண்டே.. குளியலறையின் முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்றாள்..
அந்தக் கண்ணாடியானது.. வெண்ணீரின் ஆவியால் வியர்த்திருந்தது..
அதை துடைத்து விட்டு.. தன் முகத்தை பார்த்தவளின் கண்கள் தானாய் தன் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை நோக்கியது..
தன் தாலியை எடுத்து பார்த்தவளுக்கு.. நேற்று நிகழ்ந்த அனைத்தும் கண்களில் வந்து போனது..
அந்நினைவினை விட்ட ஷிவாக்ஷிக்கு அப்போது தான் தனக்கு உடுத்த உடையில்லை என நினைவிற்கு வந்தது.. தாத்தா தனது ஒவியங்களும் தனது சான்றிதழ் அடங்கியவை மட்டுமே தந்தாரே ஒழிய வேறு எதுவும் ஷிவாக்ஷி எடுக்கவில்லை .. தனது உடைகளை எடுக்க வேண்டும் என அவள் யோசிக்கும் நிலையில் கூட இல்லை...
உடுத்த உடைக்கூட இல்லாமல் வந்து இருக்கிறோமே... என தன் விதியை எண்ணி தன் மீதே இரக்கம் வந்தது..
துண்டைக் கட்டிக் கொண்டு குளியலறை கதவை சிறிதாக திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்..
அங்கே ஷ்ரித்திக் போனில் யாரோடோ பேசிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது..
ஷ்ரித்திக் ராபர்டிடம் இருந்து அழைப்பு வர.. எடுத்து பேசிக் கொண்டடிருந்தான்..
போனில் பேசி முடித்த ஷ்ரித்திக்.. "என்ன.. ஷிவு.. ?? ஏதாவது வேணுமா.. ??" என திரும்பி பார்க்காமலே ஷிவாக்ஷியிடம் கேட்டான்..
ஆச்சரியத்தில் விழி விரித்தவள்.. "நான் பாத்த்துண்டு இருக்கறது.. உங்களுக்கு எப்படி தெரியறது.. ??" என ஷிவாக்ஷி கேட்க..
"அத விடு.. என்ன ஏதாவது வேணுமா.. ??" என ஷ்ரித்திக்கின் கேள்விக்கு..
ஷிவாக்ஷி "அது... நேக்கு... போட்டுக்க துணி எதுவும் இல்ல.. அதான்.. " என தயங்கி தயங்கி கேட்டதும் தான் ஷ்ரித்திக்கின் நினைவில் வந்தது.. 'அவாள நல்லா பாத்துக்கனும்னு நினைச்சியே.. அத செயல்ல காமிச்சியா.. அவளுக்கு போட்டுக்க துணி கூட எடுத்து கொடுக்காம விட்டுடேனே.. ' என தன் தலையில் அடித்து கொண்டான்..
ஷ்ரித்திக் "சரி.. இரு ஒரு 2 மினிட்ஸ்.. " என ஷிவாக்ஷியிடம் கூறிவிட்டு வர்ஷாவையும் ஜானவியையும் ஷிவாக்ஷிக்கு துணையாக அனுப்பிவிட்டான்..
-------------------
To be continued..
Slient readers.. plzzz.. andha star thatungalean..
Pora pokula.. keela irukura star thattitu...unga ponnana commentsa kuduthutu ponga..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro