அத்தியாயம் - 11 🙄
கருப்பு கம்பளத்தில் எங்கும் நீர் துளிகள் பரப்பி இருக்க.. அதன் மினுமினுப்பை விளக்குகளின் வெளிச்சத்திற்கேற்ப நிறம் மாறுவதை போலவே மாலை வேளை வானமவன் மிளிர்ந்தான்..
மாலையில் நலங்கு நடைபெறும்.. ஆதலால் விரைவாக தயாராகி வரவேண்டும்.. என ஷ்ரித்திகின் குடும்பத்தில் அனைவரும் கூறியதால்
ஜானவி தனக்கென்று வாங்கி அணியாமல் வைத்திருந்த சற்று ஆடம்பரமான உடையை தான் ஷிவாக்ஷிக்கு கொடுத்தாள்.. அந்த வெண்ணிற லாங் சூடியை பார்த்தவள் அதன் அழகில் கிறங்கினாள் 'இதோட விலை எவ்வளவோ..' என எண்ணியவாறே உடை அணிந்தவள் அந்த உடை அவளுக்கு கச்சிதமாகவே இருந்தது.. மீண்டும் அவளின் மனதில் ஏதோ நெருடவும்.. 'அதெல்லாம் ஒன்னுல்ல.. தைரியமா இரு ஷிவு.. ' என தன்னை சமன் செய்து கண்ணாடியின் முன்பு தன்னை ஒரு முறை பார்த்து விட்டு.. தயாராகி அறையை விட்டு வெளியேறினாள்.. ஷிவாக்ஷி..
எப்பொழுதும் ஷிவாக்ஷி ஒப்பனை செய்து கொண்டதே இல்லை.. அதனாலேயே என்னவோ.. ஒப்பனையின் மீது நாட்டம் இல்லை.. அவளுக்கு அதன் மேல் விருப்பமும் இல்லை..
(அம்மணிக்கு.. மேக்கப் போட சோம்பேறித்தனம்.. அத இப்படி சொல்லியும் சமாளிக்கலாம்.. 😉)
வெளியே வந்தவளின் ஷிவாக்ஷியின் பார்வையை மேலே சுழல விட்டு அவ்விடத்தின் அலங்காரங்களையே சுற்றி வந்தது..
பார்வையில் உலகில் இருக்கும் மொத்த அழகையும்.. இவ்வில்லத்திலேயே கொண்டு வந்து விட்டார்களோ.. ??? என்றே தோன்றியது..
சம்பங்கி மலர்கள் மேல்மட்டத்திலிருந்து தொங்குவதைப் போல வழிநெடுகிலும் மிக அழகாக அலங்கரித்திருக்க.. அதை மேலே பார்த்த வண்ணம் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.. ஷிவாக்ஷி
துலக்க மல்லி மலர்களால் பக்கவாட்டில் தோரணமாக இருக்குமிடத்தில் .. தென்னை ஓலையால் கிளி பறப்பது போல் தொங்கவிட்டிருப்பதிலே அவர்களின் கற்பனை திறனில் வியந்து.. அதை தொட்டுத் தடவிக் கொண்டே புன்னகையுடன் நடந்தாள்..
நலங்குக்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கிறது.. குடும்பத்தினர் அனைவரும்
ஒவ்வொருவரும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.. திரைச்சீலைகளாலும்.. மலர்களாலும்.. அலங்கரிக்கப்பட்டிருந்ததை.. காண காண.. திகட்டவில்லை..ஷிவாக்ஷி..
துலக்க மல்லியும், சம்பங்கி மலர்களும் வழியெங்கும் நறுமணத்தைப் பரப்பி.. அனைவரையும் வரவேற்றது..
கூடியிருந்த உறவுகளும்.. வந்திருந்த விருந்தினரும்.. அவ்விழாவினை மேலும் அலங்கரித்தனர்..
ஷிவாக்ஷி வருவதை கண்ட வர்ஷா.. "ஹாய்.. வா.. ஷிவு இங்க.. " என வர்ஷா அழைக்கவும்.. துணையில்லாமல் தவித்த ஷிவாக்ஷிக்கு அவளின் அழைப்பு 'ஹப்பா.. துணைக்கு ஆள் கிடைச்சுட்டா.. ' என்றெண்ணியபடி அவளருகே சென்றாள்..
"ப்பா.. செம்மையா... இருக்க.. என்ன மேக்கப் போடற.. ??? போட்ட மாதிரியே இல்ல.. ?? எனக்கும் இந்த டெக்னிக் சொல்லு.." என்று வர்ஷா.. ஷிவாக்ஷியின் கண்ணம் தடவிக்கொண்டே கேட்டாள்..
"அதெல்லாம்.. போடறதில்ல..
எனக்கு பிடிக்காது.. சும்மா..
மே பீ இந்த காஸ்ட்யூம் என்ன அழகா காட்டுதோ.. " என்று ஷிவாக்ஷி இழுக்கவும்..
"ஹான்.. நல்லா.. சமாளிக்கற.. " என்று வர்ஷா கூறவும்.. அவளின் சகோதரர்கள் சஞ்சை ராகுல் வரவும் சரியாக இருந்தது..
"ஹே.. பேயே.. நீ என்ன இவங்கள பிடிச்சிட்டியா.. ???" என்று சஞ்சை அவளின் மண்டையில் தட்டி கேட்க..
"டேய் லூசு.. நீதான்டா.. " என்று வர்ஷா தலையை தேய்த்து கொண்டு கூற.. ஜானவியும் அவர்களோடு கலந்து கொண்டாள்..
"நீங்க ஏதோ.. பெயிண்டிங்ஸ் எல்லாம் பண்ணிருக்கிங்கலாமே.. இன்னிக்கு மதியாணத்துல இருந்து உங்க புராணம் தான்.. " என்று ராகுல் வர்ஷாவின் புலம்பலை கூறியதை கேட்டதும்..
ஷிவாக்ஷி..
"ஏன்பா.. ???" என்று வர்ஷாவிடம் கையை தூக்கி கேட்கவும்.. "இல்ல.. விளம்பரம்" என வர்ஷா கரகாட்டக்காரன் செந்திலை போல முழித்தாள்..
"சரி .. வாங்க.. அண்ணா அங்க வரார் பாரு.. " என்று சஞ்சை கூறியவுடன் .. திரும்பி பார்க்க.. கம்பீரமே உருவாய் ஷர்வாணியில் ஷ்ரித்திக் முன்னே வர விக்ரம் பின்னே நடந்து வந்தான்..
அவனின் ராஜகம்பீர நடையில் தன்னை தொலைத்தாள்.. ஷிவாக்ஷி..
'நட்டுவான் பரவாயில்லை.. நல்லா தான் இருக்கான்.. ' என்று ஷ்ரித்திக்கை சைட் அடித்தாள்..
ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவனும், தாய் இந்திரகவியும் ஷ்ரித்திக்கின் அருகே வந்தனர்.. "வாப்பா.. " என அவனை ஈன்றவர்கள் மேடையில் நலங்கு செய்ய அழைக்கவும்.. ஷ்ரித்திக்கோ அவனின் மூத்த சந்ததிகளாகிய ஷ்ரித்திகின் தாத்தா அமரேந்திரையும் , பாட்டி தேவசேனாவையும்.. புன்னகையுடனே வாவென்று மேடைக்கு அழைத்தனர்..
அதேபோல மாயாவை அவளின் பெற்றோர் யாதவனும் சமீராவும் அழைத்து வந்தனர்.. மாயாவை ஒர் புறமும்.. ஷ்ரித்திக்கை ஒர் புறமும்.. அமர வைத்த பெரியோர்.. அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு நலங்கு விழாவை தொடங்கி வைத்தார்கள்..
அதன் பிறகு வரிசையாய் ஷ்ரித்திகின் பெற்றோர், சித்தப்பா சித்தி, மாமா அத்தை என அனைவரும் ஷ்ரித்திக்கிற்கும் மாயாவிற்கும் நலங்கு வைத்தனர்..
ஷ்ரித்திக்கின் தாயார் இந்திரகவி ஷிவாக்ஷியை அழைக்கவும்..
அப்போது தான் ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை கண்டான்.. வெண்ணிற லாங் சூடியில் .. தேவதை போலவே.. அவனின் விழிகளில் மின்னினாள்..
"சொல்லுங்க.. மா.. " என திரும்பி நின்று ஷிவாக்ஷி வினவவும்.. "நீயும் வந்து மஞ்சள் வை ஷிவாக்ஷி.. " என்று ஷ்ரித்திகின் அம்மா அழைக்க.. "இல்ல.. வேண்டா.. " என்று ஷிவாக்ஷி மறுக்கவும்... "அட.. சும்மா பண்ணு.. " என்று ஷ்ரித்திகின் தந்தை ராஜ தேவனும் கூற.. வேறு வழியின்றி நலங்கு வைக்க போன ஷிவாக்ஷிக்கு போன் வந்ததும்.. "இல்ல.. தாத்தா கூப்படறாங்க.. நா அப்பறம் பண்றேன்.." என்று கூறி.. அனுமதி கோர.. ஷ்ரித்திகின் பெற்றோரும் "சரி.. போய்வா.. " என கூறிவிட்டு வந்த விருந்தாளிகளை கவனிக்க சென்றனர்..
சகோதரர்களின் முறை வரவும்.. "ஹோ.. மை ஸ்வீட்.. அண்ணா.. " என ஜானவி கொஞ்சிக்கொண்டே.. மஞ்சளை கை முழுக்க எடுத்து வருவதை கண்ட ஷ்ரித்திக்கும்.. "ஹேய்ய்ய்ய்.... வேணாஅஅஅஅண்டி.. " என ஸ்லோ மோஷனில் சொல்லி முடிப்பதற்குள் முகம் முழுவதும் தேய்த்து விட்டாள்..
இதை கண்ட சஞ்சை.. "ஏய்.. லூசு.. என்ன டி இது.. ?? ஹான்.. என்ன இதெல்லாம்.. ?? என் அண்ணா முகத்தை.. ச்சா.. ?? " என கோபம் கொண்டதை கண்டவர்கள்.. ராகுல் "டேய்.. ஏன்டா.. ??" என புரியாமல் பார்க்கவும்.. உடன் ஜானவியும் வர்ஷாவும்.. "டேய்... நீயடா.. இப்படி பேசற.. " என ஒன்று போலவே கேட்கவும்.. ஷ்ரித்திகின் எண்ணமோ.. 'இவன் இப்படியெல்லாம் சொல்ல மாட்டானே.. ' என்று நினைத்தான்...
ஷ்ரித்திக் ..
"என்ன ஜானு நீ.. எப்படி பூசனும்னு தெரியுமா.. ??? இப்படி.. " என்று கூறியவாறே கிண்ணத்தில் வைத்திருந்த முக்காலவாசிக்கும் மேல் மஞ்சளை எடுத்து.. முகத்திற்கு மஞ்சளா.. மஞ்சளிற்கு முகமா.. என்றெண்ணும் அளவிற்கு பூசிவிட்டான் சஞ்சை.. இவர்கள் செய்யும் அனைத்தையும் மொத்த குடும்பமும் புன்னகையோடே நோக்கினர்..
"டேய் .. கிறுக்கு.. இதுக்கு தான்.. இவ்ளோ.. சீன்னா.. " என்று வர்ஷா அவனின் தோளில் கைப் போடவும்.. 'ஈஈஈஈ' என அசடு வழிய நின்றான் சஞ்சை.. இவர்களின் சேட்டையை ஒரமாக நின்று புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஷிவாக்ஷி
இவர்களின் சேட்டையை கண்டு கொண்டிருந்த விக்ரமும் அவர்களுடன் சேர்ந்து நன்றாகவே அவனின் முகத்தை மஞ்சளால் முக்கி எடுத்தனர்..
'சோத்தலையும் அடி வாங்கியாச்சு.. சேத்துலயும்.. அடி வாங்கியாச்சு.. ' என்றார் போல ரியாக்ஷன் கொடுத்தான் ஷ்ரித்திக்.. "உங்கள நலங்கு பண்ண சொன்னதுக்கு.. உங்களால என்னென்ன பண்ண முடியுமோ.... அத நல்லாவே பண்ணிட்டிங்க.. " என்று ஷ்ரித்திக் தன் தலையில் அடித்து கொண்டான்..
மாயாவிற்கு நலங்கு வைத்து கொண்டிருக்கும் போது.. அவளிடம் சென்ற வர்ஷா.. ஷ்ரித்திக்கு செய்தார் போல மாயாவிற்கும் மஞ்சளை பூச நினைத்து மஞ்சளை எடுத்து அவளருகில் செல்லவும்..
"ஏய்.. என்ன பண்ற நீ.. ஹான்.. ???" என கோபத்தில் கத்தியபடி.. அவள் கையை தட்டி விட்டாள்.. இதை ஏதிர்பாராத வர்ஷா.. கைகளில் இருந்த மஞ்சள்.. வர்ஷாவின் முகத்தில் தெளித்தது..
இதை கண்டுக் கொண்டிருந்த ஷ்ரித்திக்.. வர்ஷாவை தோளோடு அணைத்து.. "ஏய்.. அறிவில்ல... அவ சின்ன பொண்ணு... அவகிட்ட போய்... ஷிட்.." என கோபத்தில் ஷ்ரித்திக் மாயாவை கத்தினான்... எதிர்த்து பேச வந்த மாயாவை அவளின் தாய் சமீரா அடக்கினார்.. இதை கண்டு கொள்ளாமல் ஷ்ரித்திக் வர்ஷாவை சமாதானம் செய்தான்..
வர்ஷாவை அவளின் உடன்பிறப்புகள்.. சமாதானம் செய்து அவளை சிரிக்க வைத்தனர்...
ஷிவாக்ஷியின் அருகில் விக்ரம் வந்து.. தன் தொண்டையை சரி செய்து அவளின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைக்கவும்..
வடிவேல் ஒர் படத்தின் காமேடியில் தொண்டை கணைப்பதைப் போல்.. ஷிவாக்ஷியும்.. எதிரொளியாக செய்தாள்.. மீண்டும் விக்ரம் தொண்டையை சரி செய்யவும்.. ஷிவாக்ஷியும் மீண்டும் அதேபோலே செய்யவும்..
பொறுக்கமுடியாமல் விக்ரம் .. "ஏய்.. என்ன.. லந்தா.. ??" என கேட்க.. "நீங்க பண்ணும் போது கேட்டனா.. ??" என ஷிவாக்ஷி பதிலுரைத்தாள் ஷிவாக்ஷி..
"ஆமா.. நீங்க என்ன இங்க.. ?? ஃப்ரண்ட் கூட இருக்கலையா.. ??" என ஷிவாக்ஷி தன் கேள்வியை வைக்கவும்..
"இல்ல.. நா.. அவன்கூட இருக்கலை.. " என்று விக்ரம் எங்கோ பார்த்துக் கொண்டே கூறியவன்..
"அதான்.. ஏன்.. ??" ஷிவாக்ஷி மீண்டும் கேட்கவும்..
"ஹேய்.. என்ன நீ.. ?? இது சோத்து நேரம்.. இப்ப நான் சோறு கூட இல்லமா.. இவன் கூட இருந்தேன்னா.. இந்த உலகம் என்ன காரித் துப்பாது... " என்று விக்ரம் கூறிக்கொண்டு இருந்தபோதே.. ஷிவாக்ஷிக்கும் விக்ரமிற்கும் இடையில் புகுந்த ருத்ரா.. "க்க்க்ஆஆஆஆஆ.. த்துதுஉஉஉ" காரித் துப்பிச் சென்றான்.. ரித்துல் "உப்பு தொம்ம்ம்பபப.. ஜாஸ்தில..சாப்பாட்ல.. சூடு சொதணை இல்லாதவர்களுக்கு கூட வந்திடும் போல.." என்று ரித்துல் ருத்ராவிடம் கூறிக்கொண்டே அவனின் தோளை கைப் போட்டுச் சென்றான்..
"நா சொல்லனும்னு நெனச்சத.. ருத்ரா பண்ணிட்டான்.. உங்கள சமாளிக்க வேற யாரும் தேவையில்ல.. இவங்க போதும் உங்களுக்கு... " என்று ஷிவாக்ஷி சிரித்துக் கொண்டே கூறினாள்..
"சரி.. நீ நலங்கு வைக்கலியா.. ?? " என்று விக்ரம் கேட்கவும்.. "இல்ல.. அதுக்குள்ள.. தாத்தா கிட்ட இருந்து போன் வந்துச்சு.. அதான்.. " என்று ஷிவாக்ஷி கூறினாள்..
"டெக்கரெஷன்ஸ் செம்மல.." என்று விக்ரம் அவ்வலங்காரத்தை பார்த்தவாரே கூறவும்..
"ஆமா.. அழகா இருக்கு.. என்னவொரு அழகான கற்பனை.. " என்று ஷிவாக்ஷி கூறியதை கேட்டதும்.. விக்ரம்.. "ஆமா.. உனக்கு கல்யாணம் எந்த மாதிரி நடக்கனும்.. ??? இல்ல.. எல்லா.. பொன்னுங்கலுக்கும்.. கல்யாணம் இந்த மாதிரி பண்ணிக்கனும்னு ஒரு ட்ரீம் இருக்குமே.. அதான் கேட்டேன்.. " என கேட்கவும்..
"அந்த அளவுக்கு ஆசையில்ல.. ஐயர் வீட்டு கல்யாணம் பண்ணணும்.. அப்பா மடில உக்காந்துட்டு தாளி கட்டுறது, அப்பறம் அந்த விளையாட்டு இருக்கும்ல அப்பளம் உடைக்கறது, அரிசி துவறது.. இந்த மாதிரி.. " என்று ஷிவாக்ஷி கூறினாள்..
"ஹ்ம்ம்ம்ம்... ஒவ்வொருத்தரும்.. ஒவ்வொரு மாதிரி கல்யாணம் பண்றாங்க.. ஆனா எல்லா கல்யாணமும் அழகு தான்.. அந்த உணர்வுகள் ரொம்பவே அழகானது.. " விக்ரம் உணர்ந்து கூறினான்..
"செம்மையா.. ஃபீல் பண்ணி சொல்றீங்க.. கவலப்படாதீங்க.. உங்களுக்கும் நயன்தாரா ஐஸ்வர்.." என முடிக்கும் முன்.. கையெடுத்து கும்பிட்டு "போதும்... போதும்.. நீ எதாவது என்ன பத்தி சொல்லுவ.. அந்த வாண்டுங்க.. என்னை கலாய்க்கும் எனக்கு தேவையா..." என்று விக்ரம் அங்கலாய்த்து கொள்ளவும்..
"என்னப்பா.. " என ரித்துல் விக்ரமிடம் பெரிய மனித தோரணையோடு கேட்கவும்..
"என்னங்க.. ஐயா.. " என விக்ரம் அவர்கள் அளவிற்கு குனிந்து கைக்கட்டி கேட்கவும்..
"இல்ல .. தம்பி ஏதோ நம்மல பத்தி பேசுன மாதிரி இருந்துச்சே.." என ருத்ரா விக்ரமின் தோளில் கைப் போட..
கைப் போட்டதை பார்த்துக் கொண்டே.. ' நீ நடத்துடா..' என மனதில் நினைத்ததை வெளியே கூறாமல் "இல்லங்க.. உங்கள பத்தி பேச ஒரு தகுதி வேணும்.. நான்லாம் உங்க பக்கத்தில நிக்க முடியுமா.. " என்று கையை கட்டிக் கொண்டு கூறவும்.. ருத்ரா.. "ஹான்.. அது.. டேய் வாடா நாம போலாம்.. " என திரும்பி நடந்தவர்கள் இருவரும் சேலையில் மோத.. யாரென அறிய நிமிர்ந்து பார்த்த ரித்துல் ருத்ரா .. தீவாவும் நேஹாவும் தன் குழந்தைகளை முறைக்கவும்.. 'ஆத்தி... இவங்களா.. சரி styleஆ சமாளிப்போம்.. ' என்று முணுமுணுத்தான் ருத்ரா..
"அம்மா.. நீங்க என்ன இந்த பக்கம்.. " என்று ருத்ரா சமாளிக்க..
தீவா ரித்துலின் காதைப் பிடித்து..
"டேய்.. பெரியவங்ககிட்ட எப்படி பேசனும்னு.. தெரியாது.. ஹான்.. " ரித்துலை அதட்ட..
நேஹா ருத்ராவின் சட்டைக் காலரை பிடித்து.. "நீ கெட்டதும் இல்லாம.. ரித்துவையும் கெடுத்து கெட்டு குட்டிச் சுவராக்குற.. " திட்டவும்
"இதுக்கு முன்னாடி என்ன சீனப் பெருஞ்சுவராவா இருந்தான்.. " என்று பதிலுக்கு பதில் பேச.. "இந்த வாய் இல்லனா.. உன்ன நாய்கூட கவ்வாது.. உன்ன.. "
என்று தீவா ரித்துலையும் நேஹா ருத்ராவையும் பாட்டியிடம் விட்டு வந்தனர்..
"சாரி.. விக்ரம்.. அவங்கிட்ட..
இந்த மாதிரி மரியாதை குறைவா பேசாதன்னு நிறையா தடவ வார்ன் பண்ணிருக்கேன்.. பட் ஐ எம் சாரி.." என நேஹா கூறவும்..
"அட.. விடும்மா.. அவ சின்னம் பையன்.. அதுவும்மில்லாம.. நமக்குள்ள மட்டுந்தான் இப்படி.. மத்தவங்க முன்னாடி ரெஸ்பெக்ட்லாம் குடுக்கறான்.. ஜஸ்ட் ஃபன் தான் இதெல்லாம்.. பண்றாங்க.." என விக்ரம் கூறியதும் நேஹாவும்.. தீவாவும் நிம்மதியாய் உணர்ந்தனர்.. "தேங் யூ விக்ரம்.. அவங்கள புரிஞ்சிகிட்டதுக்கு.. " என கூறினாள்...
தனியாய் நின்றிருந்த ஷிவாக்ஷியை கண்டவனுக்குள் ஏதோ பிசையவும்..
விக்ரம் "அப்பறம்.. இவதான்.. ஷிவாக்ஷி.. உங்களுக்கு தெரியும்ல.. ??" என்று ஷிவாக்ஷியை அறிமுகம் செய்தான்..
"ஹோ.. ஹாய்.. அக்சுவல்லி .. அன்னிக்கே உங்ககிட்ட பேசனும்னு... பட் ஸ்ச்சுவேஷன் அப்படி அமைஞ்சது.. உங்ககிட்ட பேச முடியாம போச்சு.. இப்ப உங்களுக்கு பரவால்லயா.. " என்று நேஹா அவளின் நெற்றிக் கட்டைப் பார்த்து கேட்டாள்...
"இப்ப பரவால்ல.. " என ஷிவாக்ஷி அவர்களுக்கு பதிலளித்தாள்..
தீவா.. "ஷிவாக்ஷி.. நானும் உங்கிட்ட.. சாரி கேக்கனும்.. அக்சுவல்லி.. எனக்கொரு கேட்டப் பழக்கம் இருக்கு.. அதாவது.. எனக்கு புது ஆளுங்ககிட்ட.. பேச கொஞ்சம் சங்கோஜமா இருக்கும்.. அதான் நா மதியானம் உனக்கு ட்ரீட்மெண்ட் மட்டும் குடுத்துட்டு.. அதான்.. " என கூறுவதை கேட்டதும்..
"ஓகே.. விடுங்க.. நீங்க தீவா மகேந்திரன்.. நீங்க நேஹா கார்த்திக்.. தான.. நா ஷிவாக்ஷி .. ஷிவாக்ஷி ஐயங்கார்.. " என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களோடு பேச ஆரம்பித்தவள்.. சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் இப்பொழுது தான் அறிமுகமானவர்கள் என்பதை மறந்து நன்றாக பழக ஆரம்பித்தனர்...
தீவாவையும் நேஹாவையும் சிலர் வந்து அழைக்கவும் "நாம் பிறகு பேசலாம்.. " என்று கூறிவிட்டு சென்றனர்
ஷிவாக்ஷி அவர்கள் செல்வதை புன்னகையோடேயே பார்த்து கொண்டிருந்தவள்..
திடீரென தன்னுடைய உடையை யாரோ பிடித்து இழுப்பது போலவே .. அக்கம் பக்கம் யாரும் இல்லாது போகவே... மீண்டும் தன்னுடைய கவனத்தை திசை திருப்பும் முன்.. மீண்டும் இழுக்கவும்.. மீண்டும் சுற்றி முற்றி பார்க்கவும்..
"மேல பாத்தா.. என்ன அர்த்தம்.. கீழ பாக்கனும்.." என்று ரித்துல் யாரிடமோ கூறுவதை போல எங்கேயோ பார்த்த படி கூறினான்.. உடனே ஷிவாக்ஷி கீழே நோக்கினாள்.. ருத்ரா, ஆரா, தியாவும் அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்..
"நீங்கள... என்ன டா.. என்ன.. நீங்க இங்க என்ன பண்றீங்க.. ??" என்று ஷிவாக்ஷி கீழே மண்டியிட்டு கேட்டதற்கு.. பதிலாக..
"அத நாங்க கேக்கனும்.. " என்று தியா கூறியபின் தொடர்ந்த ருத்ரா "நீ இங்க என்ன பண்ற.. ???" என்று ருத்ராவும் வினவ..
"நானா.. இங்க... நலங்கு நடக்குதுல்ல.. நா போய் பெரியவங்க.. பண்றதெல்லாம்.. நானும் பண்ணணும்ல.. அதான்.. " என ஷிவாக்ஷி விளக்கம் கூறியதை கேட்ட.. ஆரா.. "ஆமா.. நீ ஏன் இதெல்லாம் பண்ணணும்.. " என்று கேள்வி எழுப்பினாள்..
ஷிவாக்ஷி வாயை முடி சிரித்துக் கொண்டே.. "ஹேய்.. என்ன.. நீ.. ?? நாந்தான் பெரியவல்ல.. அதான் .. " என்று கூறியதை கேட்டதும்..
ருத்ரா.. "ப்பூ..ப்பூ..ப்புபூ.. யாரு நீயா.. ?? காமெடி ஸ்சென்ஸ் உனக்கு ரொம்ப அதிகம்.. " என்று ருத்ரா சிரித்துக் கொண்டே கூறுவதை கேட்டதும்.. விழி பிதுங்கியவள்.
"டேய்.. நா .. பெரியவ டா.. கொஞ்சம் அதுக்கு மரியாதை கொடுடா.. " என ஷிவாக்ஷி பாவமாக கேட்க...
"இருந்தாலும்.. நீ இவ்ளோ காமெடி பண்ணக்கூடாது.. சரி.. சரி .. வா எங்க கூட.. " என்று ரித்துல் அவள் அணிந்திருந்த ஆடையை பிடித்து இழுத்தான்.. அப்படியே நடந்தனர் அந்த ஐவர் கூட்டணி..
"அடப்பாவி.. டேய்.. சரி போட்டும் போ.. என்னை எங்கடா.. வர சொல்றீங்க.. " என்று ஷிவாக்ஷி ரித்துலின் இழுவைக் கேற்ப நகர்ந்த படியே கேட்க..
நடந்துக் கொண்டிருந்த.. ஆரா.. திரும்பி நின்று ஷிவாக்ஷியிடம்.. ஆள் காட்டி விரலால்
"இங்க பாரு .. ஓவரா பேசாத.. வான்னா.. வரனும்.." என்று தன் மழலை மொழி மிரட்டலில்.. பயந்தவள் போல நடித்தாள்.. ஷிவாக்ஷி..
"உனக்கு.. மன்ச் சாக்லேட் வேணுமா.. ?? வேணாமா.. ??" என்று ருத்ரா
கேட்டதும்..
மகிழ்ச்சியில் கண்களை விரித்து இதழ்கள் சிரிக்க.. "டேய்.. மன்ச்ஆஆஆ.. மன்ச்ஆஆ.. மன்ச்ஆஆ " என எக்கோ கொடுத்துவிட்டு.. " டேய்.. ருத்து.. எனக்கு டா.. ?? ப்ளீஸ் டா" என்று அவர்களிடம் கெஞ்சிய ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷி
கேட்டதில்.. அவளை நோக்கி திரும்பி நின்ற நால்வரும்..
"நாங்க .. குழந்தையா .. ?? நீ குழந்தையா.. ??" தியா கேட்க.. "ஏ.. என்ன.. நீ.. ?? அவங்க சாக்கி சாப்பட கூடாதா.. ???" என்று ரித்துல் தியாவிடம் பதில் கூறிவிட்டு .. "நீ சாப்புடு.. நான் ததேன்.." என ரித்துல் ஷிவாக்ஷியிடம்.. கூற..
" தேங்க் யூ ரித்து.. " என்று ரித்துலிடம்.. கூறினாள்..
"ஆனா.. ஒது கண்டிஷன்... " என்று ருத்ரா ஒரு மார்க்கமாக கூற..
ஏதோ சரியில்லை என தோன்றினாலும்.. "என்ன.. கண்டிஷன்" என ஷிவாக்ஷி கேட்டாள்..
"ஒன்னுல்ல.. எங்கக்கூட கண்ணாமூச்சி ஆடு அவ்ளோதான்.. " என ஆரா கூறினாள்.. இதை கேட்ட ஷிவாக்ஷி நம்பாமல்.. "நிஜமாவே.. இவ்ளோ தான" என கேட்டாள்..
அவளின் கேள்விக்கு
"இவ்ளோ தான்.. ஏன் நீ என்னனு நெனச்ச.. ??" என்று ரித்துல் பதிலளித்து விட்டு.. கேள்வி கேட்கவும்..
"இல்ல.. ஒன்னுல்ல.. " என்று கூறிவிட்டு.. அவர்களுடன் சாட் பூட் த்ரிச் போட்டு விளையாட ஆரம்பித்தாள்..
முதலில் ஆரா தோற்கவும்.. ஆரா 1-50 வரை எண்ணிக்கையை ஆரம்பிக்கவும்.. மற்ற நால்வரும் ஒளிந்து கொண்டனர்..
ஷிவாக்ஷி ஒளிந்து கொள்ள இடம் தேடி.. ஓர் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்..
அப்போது தான் ஷ்ரித்திக் அவனின் உடன்பிறப்புகளிடமிருந்து தப்பித்து வந்து தன்னுடைய அறைக்குள் நுழைந்தான்..
முகமெல்லாம் மஞ்சளோடு உள்ளே வந்தான்.. வந்தவன் உள்ளே சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்தமர்ந்தான்..
இப்போது அவனுடைய எண்ணமெல்லாம்... மாயாவுடன் நடக்கும் திருமணம்.. பற்றியே..
'மாயாவுக்கும் எனக்கும் செட் ஆகுமா.. வர்ஷாக்கிட்ட நடந்துகிட்ட முறை.. '
ஷ்ரித்திக்கிற்கு.. விக்ரமின் வார்த்தைகளே மனதில் ஓடியது.. 'காலம் கடந்த செயல்.. மச்சான்.. ' விஜய் டிவி போல திருப்பி திருப்பி ஓடியது..
ஷ்ரித்திக்கிற்கு 'மாயாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. என லைஃப் மட்டுமில்லாம.. அவ லைஃப் கெடுக்கிறேனோ'... 'என்ன பண்ண போறேன்.. ????.. ஹோ.. காட்.. " என்றவனிற்கு எரிச்சல் உண்டாகவும்.. அந்த எரிச்சலில் தீபாய்யில் இருந்த அழகிய கண்ணாடியில் செய்த பூ ஜாடியை தட்டி விட்டு.. இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்து வைத்து.. கண்களை மூடி சோபாவில் சாய்ந்தான்..
அந்த பூ ஜாடி உடைந்த சத்தத்தில் பயந்த ஷிவாக்ஷி.. "யாரது.. ???" மெதுவாக கேட்கவும்..
ஒர் இனிமையான குரல் தன் செவிகளை மென்மையாக தீண்டவும்.. புருவ முடிச்சுடன் சோஃபாவில் அமர்ந்தவாறே.. "என் ரூம்க்கு வந்துட்டு... யாருன்னு கேட்டா என்ன அர்த்தம்.. ???" கூறவும்..
ஷிவாக்ஷி.. கப்போர்டின் பக்கவாட்டில் ஒளிந்திருந்தவள்.. தன் தலையை மட்டும் வெளியே நீட்டி.. "இது உங்க ரூம்மா.. ??" என சிறு குழந்தை போல கேட்டாள்...
பின்னாலிருந்து கேட்ட குரலில் திரும்பி பார்த்த ஷ்ரித்திக்கிற்கு.. அவளின் செயல் சிறு குழந்தை தன் தந்தையிடம் அனுமதி கேட்டு கதவருகில் நிற்கும் குழந்தை போலவே தோன்றியதும்.. அதுவரையிருந்த கவலை மறந்து.. நெற்றியில் விரல் வைத்து மெல்லிய புன்னகை வீசினான்..
"அங்க என்ன பண்ற.. ?? வா இங்க உட்கார்.. " என சோஃபாவில் கை காட்டியதும்...
"ம்ஹும்.. " என்று கப்போர்டின் பக்கவாட்டில் நின்றவாறே மண்டை ஆட்டினாள் ..ஷிவாக்ஷி
"ஏன்.. ?? என்னாச்சு.. ??" என ஷிவாக்ஷியிடம் ஷ்ரித்திக் வினவ..
"ஷ்ஷ்ஷ்ஷ்.. " என்று ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கை அமைதி படுத்தி.. சுற்றி முற்றி பார்த்துவிட்டு.. விரல்கள் மடக்கி "இங்க வாங்க.. " என ஷ்ரித்திக்கை அவளருகே அழைத்தாள்...
அவளின் செய்கை வித்தியாசமாக இருப்பினும்.. அவளருகே சென்றான் .. ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷி ஒளிந்திருந்தது.. இரண்டு கப்போர்டின் இடையில் இருக்கும் இடைவெளியிலே..
அந்த இடைவெளியில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும்.. ஷிவாக்ஷி .. எங்கே குழந்தைகள் பார்த்து விடுவார்களோ என்றெண்ணி ஷ்ரித்திக்கை உள்ளே அழைத்தாள்.. சிறிது யோசித்த ஷ்ரித்திக்.. உள்ளே வந்தான்.. அவர்களுக்கிடையில் மூச்சு விடும் தொலைவு தான்.. ஷ்ரித்திகின் நெஞ்சின் உயரத்திற்கு தான் அவளின் முகமிருந்தது.. 'அவளை இப்படியே அள்ளிக் கொள்ளவா.. ' என ஷ்ரித்திக்கின் கரங்கள் ஏங்கியது.. மேல நிமிர்ந்து பார்த்த ஷிவாக்ஷியின் கருநீல விழிகள் 'தன்னை இழுக்கிறதோ..' எனவும்.. அவளின் இதழ்களில் இருந்த மச்சம் இன்னும் மயக்கியது.. ஷ்ரித்திக்கிற்கு.. 'இவளுடன் இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே.. ' என எண்ணங்கள் திசை மாறுவதை கண்ட ஷ்ரித்திக்.. தன்னையும்.. தன் உணர்வுகளையும் பெரும் பாடுபட்டு அடக்கினான்..
"இப்ப கேளுங்க.. மெதுவா.. " என்று ஷிவாக்ஷி கூறினாள்..
சிரித்துக் கொண்டே.. மெதுவாக ஷ்ரித்திக்.. "இங்க.. என்ன.. பண்ற.. ??" என கேட்டதும்.. "கண்ணாமூச்சி ஆட்டம்.. அதான்.. " என்று ஷிவாக்ஷி கூறியதை கேட்டதும்.. ஷ்ரித்திக்கின் இதழ்கள் தானாய் விரிந்தது..
"சரி.. இப்ப பரவால்லையா.. " என்று ஷ்ரித்திக் அவளின் நெற்றிக் காயத்தைப் பார்த்து கேட்டதும்.. "ம்ம்ம்.. இப்ப.. ஓகே.." என்று ஷிவாக்ஷி பதிலுரைத்தாள்...
"ரொம்ப நன்றி.. " என்று ஷிவாக்ஷி மனதிலிருந்து கூறியதை கேட்டதும்.. எதற்கு என்றார் போல பார்த்த ஷ்ரித்திக்கிடம்.. "டைம்க்கு.. நீங்க மட்டும் வராம போயிருந்தேள்னா.. என்ன ஆகியிருக்கும்... நேக்கு.. கண்டிப்பா நா.. செத்.." என முடிக்கும் முன்பே.. அவளின் வாயை தன் கரங்களால் மூடினான்.. அவ்விருவரின் விழிகளும் சந்தித்தது..
ஷிவாக்ஷிக்கு.. அவனின் கண்களில் ஏதோ தன்னிடம் கூற வருவது போல தோன்றியது..
ஷ்ரித்திக்..
"என்ன.. வார்த்தை.. பேசற .. ஷிவு.. ??" என்று கேட்கவும்..
"உண்மை.. அதுதான்.. நீங்க வராம போயிருந்தேள்னா.. இந்நேரம்.. ஷ்ருடியில இருந்திருப்பனான்னே.. நேக்கு தெரியல்ல.." தொண்டை அடைக்கவும்.. பின்னர் தன்னை சமன் செய்து.. "என்னோட கடனையும் அடைச்சிண்டு... என்னை உங்க கன்னியாதானத்துக்கும் கூப்ட்டு இருக்கேள்.. ஆனா. கண்டிப்பா.. உங்க கடனை நிச்சயமா அடைச்சுடுறேன்.." என கூறியதை கேட்டதும்..
ஷ்ரித்திக்
"காசு முக்கியம்.. இல்ல.. நீ தரனும்னு.. அவசியம் இல்லை... ஓகேவா.. " என்றவனின் மொழிகளை கேட்டு ஷிவாக்ஷி.. "இல்லல்ல.. நா கண்டிப்பா கடனை அடைப்பேன்.. " என குழந்தை போலவே கூறுவதைக் கேட்ட.. ஷ்ரித்திக்.. "சரி.. சரி.. அடைப்ப.. போதுமா.. " என்றான்..
"திரும்பவும் .. தேங்க்ஸ்.. " என்று ஷிவாக்ஷி கூறினாள்... மறுபடியுமா.. ?? என்பதை போல ஷ்ரித்திக் பார்க்கவும்..
"என்மேல அக்கறை காமிச்சதுக்கு.. நான் செத்துருப்பேன்ங்கற அந்த வார்த்தைய கூட முழுசா.. சொல்ல விடாம.. வாயை மூடுனதுக்கு.. " என்று ஷிவாக்ஷி தன்னுடைய நன்றிக்கு விளக்கம் கூறினாள்
"ஆமா.. நீ எப்படி இங்க வந்த.. ??" என ஷ்ரித்திக் வினவ..
"சும்மா ..இந்த வழியா வந்தேன்.. இது தான் கரக்டான இடம்னு தோனுச்சு அதான்.. ஒளிஞ்சுகிட்டேன்.. ஏன்.. ???"என்று ஷிவாக்ஷி பதிலளித்தாள்..
"இல்ல.. வெளிய கதவு தாழ்ப்பாள் போட்டு இருந்துச்சே.. அதான்.. கேட்டேன்.. " என்று ஷ்ரித்திகின் மொழியை கேட்டு.. ஷிவாக்ஷி அதிர்ச்சியடைந்தாள்..
"என்ன.. ?? நிஜமாவா.. ??" என்று ஷிவாக்ஷி கேட்டதும்.. "அட ஆமா..ம்மா.. அந்த வாண்டுங்க தான் இப்படி பண்ணிருக்கும்.." என்று ஷ்ரித்திக் மொழிந்தவன்.. தொடர்ந்து "நீ ஏதாவது பண்ணீயா.. ???" என கேட்டான்..
"இல்ல.. ருத்துவும் ரித்துவும் அவங்க அம்மாகிட்ட திட்டு வாங்கும் போது .. நான் சிரிச்சேன்.. அதுக்கு இப்படியா பண்ணுவாங்க.. இருட்டு ரூம்ல வைச்சு லாக் பண்ணிட்டு.. எனக்கு மன்ச் ஆசைய.. காமிச்சு கூப்டும் போதே டௌப்ட் வந்துச்சு.. " என ஷிவாக்ஷியின் மொழிகளை கேட்டு வெடித்து சிரித்தான்..
"சிரிக்காதீங்க.. சிரிக்காதீங்க.. " என்று ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் கூறவும்.. அவன் இன்னும் சிரித்தான்..
"டேய்.. பங்கு.. பங்கு.. பங்கு..." என ராகத்தோடு கத்தியவாறே உள்ளே நுழைந்தான் விக்ரம்..
உள்ளே நுழைந்தவனின் செவிகளில் ஷ்ரித்திகின் குரலும்.. ஷிவாக்ஷியின் குரலும்.. ஒன்றாக கேட்டது..
"ஷ்ரித்திக்.. " என விக்ரமின் அழைப்பு ஷ்ரித்திகின் செவிகளை அடைந்தது..
ஷ்ரித்திக்
"வாடா.. " என்று கூறியவாறே அந்த சந்தில் இருந்து வெளியே வந்தனர்.. ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியும்..
இதை கண்ட விக்ரம் அதிர்ச்சியடைந்தான்..
"ஷிவாக்ஷி.. நீ போம்மா.. வெளிய உன்ன ருத்ரா, ஜானவி எல்லாம் தேடறாங்க.. " என்று விக்ரம் ஷிவாக்ஷியை வெளியே செல்ல சொன்னான்...
"என்னைய தேடறானா.. ?? என்னைய இந்த இருட்டுல பூட்டிட்டு.. அவன.." என்று ஷிவாக்ஷி கூறிக்கொண்டே சென்றாள்..
"டேய்.. என்னடா.. இதெல்லாம்.. ???"என்று விக்ரம் சற்று கோபமாகவே வினவ..
"டேய்.. அவ இங்க கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு ஒளிஞ்சுக்கா வந்தா.. டா.. அவளப் பத்தி தப்பா நினைக்காதே..."என்று விக்ரமிற்கு விளக்கம் கூறினான் ஷ்ரித்திக்..
"ஓஹோ... அவ நல்லவன்னு உனக்கெப்படி தெரியும்.. ???"என்று விக்ரம் ஷ்ரித்திக்கை நொண்டினான்..
"டேய்.. என்னடா.. ??? அவள பாத்தாலே தெரியலையாடா.. அவ ஒரு குழந்தை மாதிரி டா.. " என்று ஷ்ரித்திக் விக்ரம்மிடம் விளக்கம் கூறினான்..
"அட.. லூசு.. எனக்கு.. தெரியாது பாரு.. உனக்கு புரியலையா.. ஷ்ரித்திக் நீ அவள லவ் பண்றடா.. " என்று விக்ரம் அவனிடம் கத்தினான்..
"ம்ப்ச்.. நீ பாட்டுக்கு ஏதோன்ன ஒளராத.. எனக்கு அந்த மாதிரி தாட்டெல்லாம் இல்ல.. "
என்று ஷ்ரித்திக் திருப்பி கத்தவும்..
"டியூப் லைட்.. டியூப் லைட் உனக்கெப்பட்றா... புரியவைக்கறது.. ?? " என சிறிது யோசித்து விட்டு.. "எந்த பொன்னுங்கள பாத்தாலும் ஒன்னு விலகி போவ.. இல்ல எரிஞ்சு விழுவ.. ஆனா.. ஷிவுகிட்ட மட்டும் எப்படி ரொம்ப ஃப்ரீயா பேசற.. " என்று விக்ரம் வினவவும்..
"டேய்.. மூடு.. அவ குழந்தை டா.. அதான்.. " என்று ஷிவாக்ஷியை பற்றி ஷ்ரித்திக் கூறி முடிக்கும் முன்னறே.. " நிறுத்து நா பேசி முடிச்சடறேன். அப்பறம் பேசு.. " என விக்ரம் ஷ்ரித்திக்கை நிறுத்தினான்..
"நீ ஷிவுவ பாக்கற பார்வையிலேயே.. தெரியுது.. அதுல லவ் இருக்கு டா.. நீ சொன்னல.. அவ குழந்தைனு சொன்னில்ல.. அது லவ் இருக்றதுனால தான் நீ அப்படி பாக்கற.. "என்று விக்ரம் அவனுக்கு புரிய வைக்க முயற்சித்தான்..
ஷ்ரித்திக்.. விக்ரம் கூறியவற்றை யோசித்து பார்த்தான்.. அவனின் யோசனையோடிருந்த முகத்தை பார்த்த விக்ரம் 'ஹப்பாடா.. யோசிக்கறான்.. ' என நினைத்தவாறே ஷ்ரித்திக்கிற்கு புரிய வைக்க முயன்றான்..
"இவ்ளோ.. ஏன்.. ?? நீ இன்னிக்கு ஷிவாக்ஷிய ஒருத்தன் கேவளப்படுத்துனதும்.. எப்படி வெறித்தனமா கோபமா.. சண்டை போட்ட.. நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது.. " என்று நடுவில் பேச வந்த ஷ்ரித்திக்கை கையமர்த்திவன் தொடர்ந்தான்.. "ஒத்துக்குறேன்.. நீ அந்த இடத்தில வேற யார் இருந்திருந்தாலும்.. சண்டை போட்டு இருப்பே... இல்லன்னு சொல்லல்ல.. ஆனா... நீ இவ்வளவு வெறித்தனமா.. இதோ ... இப்ப கூட அந்த கடன்காரன் மேல இருக்க.. கோபம் கொஞ்சமும் குறையாம அவன ராபர்ட்கிட்ட சொல்லி வேற துவைச்சு எடுக்குற.. அவளுக்கு அடிப்பட்டிருக்கறத பாத்தவுடனே.. நீ பதறி துடிச்சது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு... இந்த அளவுக்கு நீ பதறி நான் பாத்ததில்ல.. " என்று விக்ரம் மொழிந்தை கேட்டதும் மென்மையாக அதிர்ச்சியில் உறைந்தான்..
"எங்க.. ஷிவு வீட்டுக்கு போனா .. சும்மா இருக்க மாட்டான்னு தான.. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கே.. அதுவுமில்லாம அவளுக்கு ஒரு ஆபத்து இருக்கறதாலயும் .. அவளுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு தான் இப்படி.. ??" என்று விக்ரம் புன்னகையோடே வினவிவன் .. 'கரக்ட்டா சொல்றான்.. ' என்று நினைத்தான் ஷ்ரித்திக்.. மீண்டும் தொடர்ந்தான்.. விக்ரம் "அவ்ளோ .. எதுக்கு.. ??? நீ என்ன வெளியே கூட்டிட்டு போனது கூட.. ஷிவாக்ஷிக்கு ஆபத்துன்னு உன்னோட உள் மனசு சொன்னதுனால தான்.. எல்லாரும் வேணாம்னு சொல்லியும் வெளியே போன... " என்று விக்ரம் ஷ்ரித்திக்கிடம் புரிய வைத்தான்..
விக்ரமின் மொழிகளை யோசனையோடே கேட்டு.. அவை அசை போட்டு பார்த்தான்.. தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் சற்று முன் கட்டுபடுத்த முயற்சித்ததையும் .. ஒப்பிட்ட ஷ்ரித்திக்கிற்கு.. 'நா ஷிவாக்ஷிய நிஜமாவே லவ் பண்றேன்னா.. ??' என்ற எண்ணம் தோன்றிவிட்டது...
"டேய்.. இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ணாத.. இன்னிக்கு நலங்குல மாயா மேல எப்படி எரிஞ்சு விழுந்த.. உன் லைஃப் மட்டுமில்லாம மாயா லைஃபையும் ஸ்பாயில் பண்ணாத.. காதலிக்கறது.. ஒருத்தியும்.. வாக்கப்படறது இன்னொருத்தியுமா இருக்காத.. கல்யாணத்த நிறுத்தறதுக்கான வழிய பாரு.. இந்த ஒருநாள பாத்தின்னா.. அப்பறம்.. லைஃப் லாங் கஷ்டப்படுவ.. பாத்துக்கோ.. சீக்கிரம் யோசிச்சு.. இந்த கல்யாணத்த நிறுத்து..." என்று விக்ரம் ஷ்ரித்திக் சிறிது யோசிக்கட்டும் என்று வெளியேறினான்...
ஷ்ரித்திக்கிற்கு விக்ரம் கூறிச் சென்ற மொழிகளே.. மனதில் ஓடியது.. யோசித்து கொண்டே இருந்தவனிற்கு... தலை பாரமாக இருக்கவும்...
மெத்தையில் சாய்ந்தவன்.. அப்படியே உறங்கத் தொடங்கினான்..
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஷ்ரித்திக்கிற்கு புருவ முடிச்சுடன் கண்களை அப்படியும் இப்படியும் கசக்கி.. வெடுக்கென தூக்கத்திலிருந்து எழுந்தான்..
எழுந்த ஷ்ரித்திக்கிற்கு நினைவு மொத்தமும் ஷிவாக்ஷியிடமே...
வழக்கமாக வரும் கனவு தான் .. ஷ்ரித்திக்கை இம்சித்தது.. ஷ்ரித்திகின் கனவில் ஷிவாக்ஷி மணப்பெண் கோலத்தில் தோன்றியது.. மட்டுமல்லாமல்.. ஷ்ரித்திகின் கரத்தை உரிமையோடு பற்றியதை கண்டதுமே தான் வெடுக்கென எழுந்தான்..
ஆனால் ஷ்ரித்திக்கிற்கு இக்கனவு இதழ்களில் புன்னகையை தவழச் செய்தது..
'இந்த கனவு நிஜமாகியிருக்கக் கூடாதா.. ' என்றே தோன்றியதை எண்ணி திடுக்கிட்டான்.. ஷ்ரித்திக்...
'அப்படின்னா.. நிஜமாவே.. நான் ஷிவாக்ஷிய லவ் பண்றேன்.. எஸ் .. ஐ லவ் ஹர்.. ஐ லவ் ஹர் எ லாட்..' என்று தன் மனதிலிருந்த காதலை உணர்ந்ததும் மகிழ்ச்சியில் திளைத்தான்.. ஷ்ரித்திக்...
'காலையில் இத்திருமணத்தை நிறுத்துவதற்காக அம்மா அப்பாவிடம் பேச வேண்டும்.. தன் மனதை பெற்றோரிடம் கூறினால்.. நிச்சயம் புரிந்து கொள்வார்கள்..' என்றெண்ணிய ஷ்ரித்திக் முழங்கையை தலைக்கு தலையனை போல் அமைத்து படுத்தவனின் எண்ணங்கள் முழுவதும்.. அவனின் கனவு தேவதையே...
நலங்கு முடிந்தவுடன் மாயா தன்னறைக்குச் சென்றவள்..
தன்னை அத்தணை பேர் முன்னிலையில் அவமானப்படுத்தியதில் கோபத்தில் கைக்கு கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்து எரிந்தாள்..
"நிறுத்தறியா... மாயா.. " என கோபத்தில் மாயாவை திட்டினார் அவளின் தாய் சமீரா
மாயா
"ம்மா.. " என தொடங்கும் முன்னே .. தாய் சமீரா.. " ஏய்.. நிறுத்து டி.. நீ எதுக்கு டி வர்ஷா கைய தட்டி விட்ட.. அவ எவ்ளோ ஆசையா.. உன்கிட்ட.. அண்ணிங்கற பாசத்துல வந்தா... ஆனா நீ..ச்சே " என்று மாயாவை வசை பாடியவர்.. கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினார்... இதை கண்ட மாயா.. " ஷிட்.. " என தொப்பேன மெத்தையில் விழுந்தாள்...
"மச்சான்.. என் ஆளு எனக்கு வேணும்.. அதுக்கு உதவி பண்ணுங்கடா.. " என்று தன் நண்பர்களிடம் உதவி கேட்கவும்.. அவனின் நண்பர்களும் "மச்சான்... உன் ஆளு உனக்குத் தான்.. ஒரு கொலை நடந்தாவது உன் ஆள உன்கிட்ட சேத்தி வைப்போம்.. ஆனா என்ன பண்ண போறோம்.. ???" என்றவனின் நண்பர்கள் கேள்விக்கு .. அந்த ஆண்மகன் தன் திட்டத்தை கூறிவிட்டு "என்ன.. ஓகே வா.. ??" என்றவன் கேட்கவும்.. "சூப்பர்.. மச்சான்.. தட்றோம்.. தூக்கறோம்..." என போதையில் சிரித்தபடியே கூறியது... அக்கூட்டம்..
எப்படியாவது
இத்திருமணத்தை நிறுத்துவதற்கான வேலையில் இறங்கினான் மற்றொருவன்..
____________
(Hii.. readers.. enkita continue silar poda sonnaga.. correct dhan apdidhan podanum.. aana ennala apdi panna mudila.. enakku IPA romba alaichal Vera.. aana appaapa story ud try pandrean.. but ennala mudila.. aana Kandippa try pandrean.. and tq.. please enakku comments kudunga.. )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro