கங்கானியும் ! கண்ணாடியும் !
"ருக்கு ஒரு துளி சுண்ணாம்பு கொடேன்... ரெண்டு தரமா வெறும் வெத்தலையை போட்டு நாக்கு வழவழனு கிடக்கு... "
'ஏ கிழவி சும்மா கிட்டக்க முடியலையா?
விடியால புடிச்சு, சுண்ணாம்ப கொடு.. பாக்க கொடுனுட்டுருக்க....வரப்ப வைரம்மா கடைல வாங்கிட்டு வரதுக்கென்ன?'
"ஏன்டி எனக்கிப்ப இத்துனுன்டு சுண்ணாம்பு குடுத்தா ஓன்மொதலு கொறஞ்சு போயிறுமா.."
'இந்தா புடித்தா டப்பிய, மொத்தமா நீயே வச்சுக்கோ..இப்புடி மூஞ்சிய வச்சிகாத'
"அட கோவிச்சுகாத ருக்கு, நானே இந்த கங்கானி இன்னும் வரலைங்கற கடுப்புல இருக்கேன் நேரமா வந்து கூலிய குடுத்தா இருட்டுறத்துக்ககுள்ள வூடு போயி சேருவோம்ல "
'அந்த களவானிபய வீம்புக்குன்னே தாமசமா வருவான்.. நிழலு விழுந்தா நானெல்லாம் நடைய கட்டிருவேன்'
"ஏன் நானேன்ன போகத் தெரியாமையா கிடக்கிறேன், இருடி, சும்மா வாய மூடிட்டு.. கங்கானி வர்றான்"
'எங்க நகரு.. நான் சொன்னது கேட்டுருச்சோ..சொன்னவுடனே வந்துட்டான்'
"ஆமா இவன் பச்சைதுண்டு கட்சில தானே இருந்தான் எப்போடி மஞ்சளுக்கு மாறுனான்.. ஆனாலும் அதையேன் குறுக்கா போட்டுக்கான்.. "
'ஏன் கிழவி என் வாய புடுங்குற, ஒன்பேரன் தான் உன்ன கண்ணாஸ்பத்திருக்கு கூடிட்டு போய் கண்ணாடியேல்லாம் வாங்கி கொடுத்துருக்கானுல..அதை கொஞ்சம் கண்ணுல மாட்டிட்டு பாரு.. '
"எவடிஇவ இரு இரு.. அது இங்க சுருக்குபைக்குள்ள தான் இருக்கு.. தோ போட்டு அப்படி என்னதுனு பாக்குறேன்"
'ஒழுக்கமா அத செய்யு... வரது கங்கானியும் இல்ல அது மஞ்ச துண்டுமில்ல.. பாப்பாத்தி மகதான் பால் கொண்டு போறா மஞ்ச தாவணில...போ அவகிட்ட போயிட்டு கூலி கேளு.. நல்லா கொடுப்பா லிட்டர் கணக்குல.. '
"நானும் எங்கடா இவன் இம்புட்டு விரசா வரபோராரேனு நெனச்சேன்.. நீ தான் ஏதோ சொல்லி உலப்பிட்ட"
'யாரு நானு.. செரிதான்.... '
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro