7.
ரம்யாவை எதிர்பார்த்தவனாய் கவின் கதவை திறக்க அங்கே நின்றிருந்தாள் நித்யா. முகமும் கண்களும் சிவந்து போய் இருந்தது. அழுதிருக்கிறாள் போல. முன்பு போல் இருந்தாள் உரிமையாய் தோளில் கைபோட்டுக் கொண்டு சமாதானம் செய்திருப்பான். ஆனால் இப்போதோ நிலமை வேறு.
கவின் அமைதியாய் நிற்பதை பார்க்க அவளுக்கு இன்னும் எரிச்சலும் கோபமும் அதிகமானது.
"US போக போறியா? " என்றாள் எரிச்சலாய்.
அவள் சொன்னதை காதில் வாங்காதவன் போல அவன் கதவடைக்க போக, கதவை தள்ளிக் கொண்டு அறைக்குள் போனாள்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு கவின்!!!
"தெரிஞ்சிட்டு என்ன பண்ண போற " அவள் முகத்தை பார்க்காமல் அலட்சியமாய் பதில் சொன்னான்.
"ஏன் என்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லல? " கேட்கும் போதே அழுகை வந்தது. "என்மேல இருக்குற கோவத்துல தானே போகனும்னு முடிவு எடுத்த " வார்த்தை தொண்டையில் அடைத்துக் கொள்ள குரல் வித்தியாசமாய் வந்தது.
உனக்கு தான் என்ன பிடிக்கலையே ... நா எங்க போய் தொலஞ்சா ஒனக்கு என்ன?
தேவ இல்லாம அதே Topic எடுக்காத கவின்!! நீ அனிதாவ தானே Love பண்ண? அவ என்னமோ சொன்னான்றதுக்காக ஏன் என் உயிர வாங்குற?
நா ஒன்ன என்னடி பண்ணேன்? ரெண்டு தடவ கேட்டேன் . உன்ன போய் Love பண்ண முடியுமான்னு அப்டி சலிச்சிக்கிற!!! எனக்கு நல்லா புரிஞ்சது. நீ என்ன மனுஷனா கூட மதிக்கலைனு!! இனிமே எந்த விதத்துலயும் உன்ன Disturb பண்ண மாட்டேன். தனியா நிம்மதியா இரு!!
என்னவோ நா பெரிய தப்பு பண்ண மாதிரி பேசாத கவின். உன் Feelings ல நீயே Stable ஆ இல்ல. நேத்து அனிதா, இன்னைக்கி நான், நாளைக்கி யாரோ ...
அவள் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்றே புரியாமல் பேசிவிட,
"நிறுத்துடி!! " கோபமாய் கத்தினான் கவின்.
அசிங்கமா பேசாத!! ஒனக்காக ஒருத்தன் கெஞ்சினா இவ்ளோ கேவலமா நெனப்பியா?!! இத்தன வருஷம் பழகி நீ என்ன பத்தி புரிஞ்சிகிட்டது இவ்ளோ தான்ல!! இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத!! வெளிய போ!!!
அவன் சொன்னதை காதில் வாங்காதவள் போல அவள் முறைத்துக் கொண்டே நிற்க, அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் வெளியே தள்ளி விட்டு கதவடைத்தான்.
அவளை வெளியே தள்ளிவிட்டு கதவடைத்து விட்டு கட்டிலில் வந்து அமர்ந்தவன் ஆழமாய் மூச்சு விட்டு தன்னை நிதானப்படுத்த முயன்றான். ஆனால் கோபம் குறையாமல் உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருந்தது. தண்ணீர் குடிக்கலாம் என பாட்டிலை கையில் எடுத்தவன் அது காலியாய் இருக்க "ச்சே" என்று அதை தூக்கி வீசினான்.
அழுகை முட்டியபடி கீழே இறங்கி வந்தவள் ஹாலில் சுதாகரை தேட அங்கே அவர் இல்லை. வெளியே தோட்டத்தில் நின்ற படி போனில் யாருக்கோ திட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. நல்ல வேளை அவர், எதையும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. தன் வீட்டுக்கு போனாள்.
இப்போதும் ரம்யாவும் சுபாவும் சமையல் அறையில் தான் இருந்தார்கள். சத்தம் வராமல் படியேறி மாடியில் தன் அறைக்கு போனவள் கதவை தாழிட்டு விட்டு கட்டிலில் குப்புற விழுந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ, சுபா கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து கொண்டவள், கண்ணாடியில் முகம் பார்க்க நீண்ட நேரம் அழுததில் முகம் வீங்கி விகாரமாய் இருந்தது. அப்படியே வெளியே போக முடியாது. " வரேன்மா " என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தவள் குளியலறைக்குள் புகுந்தாள்.
ஷவரை போட்டு விட்டு அப்படியே நீண்ட நேரம் நின்று விட்டு துவட்டி உடை மாற்றிக் கொண்டு வந்த போது நேரம் பகல் ஒரு மணி. டைனிங் ஹாலில் அம்மாவும் மகனும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
இவள் வந்ததை கண்டதும் " உக்காந்து சாப்புடு " என்றார் சுபா. காலையும் எதுவும் சாப்பிடவில்லை. பசி உயிரை வாங்கியது. மறுப்பு சொல்லாமல் அமர்ந்தவள் சாப்பிட்டு முடிக்கும் வரை யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வினய் சாப்பிட்டு முடிந்து எழுந்து விட நித்யா சாப்பிடும் வரை சுபா அங்கேயே அமர்ந்திருந்தார். அவள் கைகழுவ எழுந்து கொள்ள "நித்தி " என்றார் சுபா.
ம்ம்?
கவினோட என்ன பிரச்சின? நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிறது இல்லையா?
அழுது ஓய்ந்திருந்தவள் இப்போது மீண்டும் விம்மினாள்.
அழாதம்மா, நா வேணா கவின்ட பேசட்டுமா?
இல்ல வேணாம். அவனுக்கு எப்போ கோவம் கொறயுதோ அப்ப அவனே பேசட்டும்.
.
.
இவர்கள் சண்டை போட்ட காரணம் யாருக்கும் தெரியாவிட்டாலும் பேசிக் கொள்வதில்லை என்பது வீட்டில் எல்லோர்க்கும் தெரியும். ரம்யா, கவினிடம் ஏதேதோ பேசிப் பார்க்க எந்த பலனும் இல்லை. கவின் அமெரிக்கா போகும் நாளும் வந்தது.
ரம்யா காலையிலிருந்து ஒரே அழுகை. சுதாகர், சுபா இருவருமே என்னென்னவோ சொல்லி சமாதானம் செய்ய முயல எந்த பயனும் இல்லை. கவின் கிளம்பத் தயாராய் கீழே வந்தான்.
ரம்யாவை பார்த்தவன் தயங்கிய படி நிற்க,
"கெளம்பலாம் கவின் ... இப்போ போனா தான் timeக்கு Airport ல இருக்க முடியும். " என்றார் கணேஷ் நித்யாவின் அப்பா.
ம்ம் என்று தலை அசைத்தவன் வரவேற்பறை முழுக்க ஒரு பார்வை வீசினான். இல்லை, அவள் இங்கு இல்லை...
"நித்தி நேத்துல இருந்து அழுதுட்டே இருக்கா. நீ போய் ஒரு வார்த்த பேசிட்டு வந்துடு கவின் " என்றார் சுபா அவன் தேடலை புரிந்து கொண்டு.
மறுப்பு சொல்லாமல் அவளை தேடிப் போனான். அவள் அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தாள். கதவு திறந்து தான் இருந்தது. கவின் வருவதை கண்டதும் எழுந்து போய் ஜன்னல் பக்கமாய் நின்று கொண்டாள். அவள் எதுவும் பேசவில்லை. மூக்கை உறிஞ்சியபடி அவள் சிரமப் பட்டு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள். அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்த உணர்வை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவன் "வரேன் நித்தி " என்றான்.
"ம்ம்... சரி "என்றாள் அவன் பக்கம் திரும்பாமலே.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro