6.
அடுத்து வந்த நாட்களில் சரியாகவே பேசிக் கொள்ளவில்லை இருவரும். கஷ்டமாய் தான் இருந்தது அவளுக்கு ... ஆனால் அதற்காக அவன் கேட்டதற்கு சரி என்று சொல்ல முடியுமா? தனக்குத் தானே சொல்லிக் கொள்வாள் .
கல்லூரி விடுமுறை முடிந்து Second year இல் காலடி எடுத்து வைத்ததாயிற்று. இப்போது கவின் அவள் கூட கல்லூரிக்கு வருவதில்லை என்பதால் அவள் போவது வருவது எல்லாம் தனியே தான். ஆனால் வீட்டில் அவனை சந்திக்கும் நேரங்களில் கூட அவன் அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் விலகிப் போனான். சில நேரங்களில் அழ வேண்டும் போலிருக்கும். பல நேரங்களில் அவனுடன் சண்டை போட வேண்டும் போலிருக்கும். ஆனால் இரண்டுமே செய்யவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது. (அதாங்க ego...)
சமையல் அறையில் சுபா வேலையாய் இருந்தாள் . ரம்யாவின் குரலும் கேட்டது. படிக்கத் தோன்றாமல் கீழிறங்கி வந்தவள் தானும் போய் பேசிக் கொண்டிருக்கலாம் எனத் தோன்ற சமையலறை பக்கம் போனாள்.
"நா எத்தனையோ தடவ சொல்லி பாத்துட்டேன் சுபா. கேக்கவே மாட்டேங்குறான். எல்லாத்துலையும் பிடிவாதம் அவன் அப்பா மாதிரியே ..."
ஓஹ் ...கவினை தான் கரைத்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் போல ... இது அத்தையின் வழக்கம் தான். கவினை எப்போது திட்டினாலும் அவன் அப்பாவையும் கூட சேர்த்து திட்டுவது. நித்தியும் ஏற்கனவே கவினுடன் கடுப்பாய் இருந்ததால் தானும் சேர்ந்து அத்தைக்கு ஆர்வமாய் ஜால்ரா போடத் தயாராய்,
"அவன் எப்போ அத்த சொன்னத கேட்டிருக்கான்? எல்லாத்துலயும் எல்லார்கூடவும் மல்லுக்கு நிக்கிறது தானே அவன் பழக்கம் "என்றாள் தன் பங்கிற்கு.
"ம்ம் ... அவன் குணம் தெரியும் தான், ஆனா அவன் சொன்னதுல இருந்து மனசே சரியில்ல ..." - ரம்யா
"அத்த இவ்ளோ Hurt ஆகுற அளவுக்கு இந்த கவின் என்ன சொல்லி வெச்சிருக்கான் ....?? ஒரு வேல என்னா கல்யாணம் பண்ணிக்க போறான்னு சொல்லிருப்பானோ " நித்தியின் மைன்ட் வாய்ஸ் அவளுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. " ஐயோ அத்த நம்ம கிட்ட எதுவும் கேட்க முதல்ல Escape ஆகிடலாம் " பதற்றமாய் அதே சமயம் சத்தம் வராமல் மெதுவாய் சமையல் அறையை விட்டு வெளியே போக காலடி எடுத்து வைக்க,
நானும் அவன் கிட்ட பேசி பாத்துட்டேன், ரம்யா. இங்க தானே MBA பண்றதா இருந்தான். இப்போ US போறதுக்கு திடீர்னு என்ன தேவ வந்ததுனு தான் எனக்கு புரியல.
"என்னது US ஆ??? " இம்முறை நித்தியின் மைன்ட் வாய்ஸ் ஆச்சரியம் கலந்த குரலில் கொஞ்சம் சத்தமாய் வெளியே கேட்டது.
சுபா, ரம்யா இருவரும் அவளை ஆச்சரியமாய் பார்த்தார்கள்.
"ஒரு மாசமா வீட்ல அதானே ஓடிட்டு இருக்கு ... கவின் உன்ட சொல்லல.? " -சுபா
"Already apply பண்ணிட்டான். Visa Arrangements மட்டும் தான் பாக்கி. " ரம்யா சொல்லவும் தொண்டையில் அடைத்தது நித்யாவுக்கு. விட்டால் அழுது விடுவேன் என்பது போல சமையலறையில் இருந்து வெளியே போன நித்யாவை பாவமாய் பார்த்தார்கள் மற்ற இருவரும்.
"கவின் இவ கிட்ட எதயும் சொல்லாம இருக்க மாட்டானே " - சுபா.
"கொஞ்ச நாளா ரெண்டு பேரும் சரியாவே பேசிக்கிறதில்ல. எதாவது சண்ட போட்டிருப்பாங்க, அவங்களே சமாதானம் ஆகிடுவாங்கன்னு நெனச்சேன் " - ரம்யா.
அறைக்குள் வந்த நித்யாவுக்கு அவளையும் மீறி அழுகையாய் வந்தது. இத்தனை பெரிய விடயம் ... அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருக்க அவனுக்கு எப்படி மனது வந்தது. அதுவும் அமெரிக்கா போகப் போகிறானாமே. அவளை இங்கே தனியே விட்டு விட்டு அவ்வளவு தூரம் ....
கட்டிலில் அமர்ந்து அழுது தீர்த்தவள், அவனுடன் பேசியே தீரவேண்டும் எனத் தோன்ற கண்ணீரை துடைத்து விட்டு கவின் வீட்டுக்கு போனாள்.
ஹாலில் அமர்ந்து News paper பார்த்துக் கொண்டிருந்தார் கவினின் அப்பா சுதாகர். நித்யாவை கண்டதும் " வாடா நித்தி குட்டி, இப்பெல்லாம் உன்ன எங்க வீட்டு பக்கம் காணவே முடியல "என்றவரை கண்டு கொள்ளாமல் வேகமாய் படியேறினாள் அவள்.
"கோவமா இருக்கா போல " தனக்குத் தானே சொல்லிக்கொண்டு Paper பார்க்கும் வேலையை தொடர்ந்தார் சுதாகர்.
கவினின் அறை வாசலில் போய் நின்றவள் கோபமாய் கதவை தட்ட "ப்ச் வரேன்மா. Dress பண்ணிட்டு இருக்கேன் " எரிச்சல் கலந்த குரலில் பதில் வந்தது.
ரம்யாவை எதிர் பார்த்த படி கவின் கதவை திறக்க, அங்கே அழுது முகம் சிவந்து போய் கோபம் குறையாமல் நின்றிருந்தாள் நித்தி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro