Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

11.


சுபா பேசிவிட்டு போனதில் தலையில் இடியே விழுந்து விட்டது போலிருந்தது நித்யாவுக்கு.  ஏதேதோ சொல்லிவிட்டு கையில் ஒரு கவரையும் கொடுத்து விட்டுபோனாள்.  போட்டோவாம்.  எரிச்சலாய் வந்தது.  கவரை பிரித்து போட்டோவை வெளியே எடுத்தாள்.  அம்மா ஏதோ பெயர் சொல்லிவிட்டு போனாளே ... ஆஹ்!  சந்தோஷ்.  பார்க்க நன்றாய் தானிருந்தான்.  ஆனால் வாழ்க்கை துணையாய் நினைத்து பார்க்க முடியவில்லை.  போட்டோவை கவரில் போட்டு மேசையில் வைத்தாள்.  

அறையில் அங்குமிங்குமாய் நடந்தவள் ஏதோ தோன்ற கவினை தேடிப் போனாள்.  போய் அறைக் கதவை தட்ட, இவளை எதிர்பார்த்தவாறே கதவை திறந்தான் கவின்.  அது தான் இப்போது வாடிக்கை ஆகிவிட்டதே. தினமும் விரைப்பாய் வந்து கதவை தட்டி விட்டு அவனை நிமிர்ந்துகூட பார்க்காமல் அவள் பயந்து ஓடுவது.  நித்யாவை பார்த்ததும் கவின் முகத்தில் புன்னகை பரவியது.  கதவை திறந்தவன் அவளுக்கு வழி விட்டு உள்ளே வந்து நின்றான்.

கதவை சாத்தியபடி உள்ளே வந்தவள் தரையை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றாள்.  நிமிர்ந்து பார்த்து விட்டு ஓடிப் போவதற்கு எதற்கு இத்தனை அலப்பறை!  கவின் தனக்குள் சிரித்துக் கொண்டான். மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் " ஒரு முக்கியமான விஷயம் பேசணும் " என்று விட்டு மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.  

ம்ம் சொல்லு.

அது வந்து ... வீட்ல எனக்கு ... 

நீட்டி முழக்கிய படி அவள் தலையை நிமிர்த்த சரியாக அவன் கண்களில் நின்றது அவள் பார்வை.  அப்படியே பேசாமல் நின்று விட்டாள்.  கவின் தனக்குள் சிரித்தவாறு " வீட்ல என்ன? " என்றான்.

அவன் கேட்டதில் சொல்ல வந்த விடயம் நினைவுக்கு வர "ஒரு Proposal வந்திருக்கு, அம்மா அப்பாக்கு ரொம்ப புடிச்சிருக்கு போல " என்றாள் தரையை வெறித்த படி.  கண்களும் லேசாக கலங்கி விட்டது.  

Ohh Congratulations!!

கவினின் பதிலில் நிமிர்ந்தவள் அவனை சுட்டெரிக்கும் ஒரு பார்வை பார்த்தாள்.

என்னடா Wish பண்ற!!??  

வேற என்ன பண்ணனும்?

கவின் இயல்பாய் கேட்க எரிச்சல் அடைந்தவள் மேசையில் கிடந்த. Badminton racket ஐ எடுத்து கவினை இரண்டு சாத்து சாத்தினாள் . அசையாமல் அவளை பார்த்து எப்போதும் போல புன்னகை செய்தான் அவன்.  அதில் இன்னும் கடுப்பானவள் ஆத்திரம் தீரும் மட்டும் அடித்து தீர்த்து களைத்துப் போய் அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

  அவள் கையில் இருந்த Racket ஐ பறித்து தூரமாய் போட்டவன் அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தான். ஏற்கனவே அருகருகே தான் நின்றிருந்தார்கள் இருவரும்.  இதில் கவின் இன்னும் நெருங்க தயங்கிய படி பின்னோக்கி அடி எடுத்து வைத்தாள் நித்யா.  சளைக்காமல் கவின் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க மிரண்டு போய் பின்னோக்கி நகர்ந்தவள் இறுதியாய் சுவரில் மோதி நின்றாள்.  

அவள் மிரட்சியாய் பார்த்திருக்க அவள் கண்களை ஊடுருவி எப்போதும் போல அவளை கட்டிப் போட்டவன் அவள் இதழ் நோக்கி மெல்ல குனிந்தான். கவின் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் இதழை நெறுங்க அப்படியே அவன் நெஞ்சில் கைவைத்து அவனை பிடித்து தள்ளி விட்டாள் நித்தி.

பாவி ... என்ன பண்ண பாக்குற? 

ம்ம்ம்?  என் Darling அ Kiss பண்ண தான்.  வேற என்ன!

கவின் எரும!! நேரம் காலம் தெரியாம! நானே வீட்ல மாப்புள பாத்துட்டாங்கன்னு கடுப்புல இருக்கேன் இதுல நீ வேற .

மாப்புள பாக்குறது நல்ல விஷயம் தானே! இதுக்கு ஏன் கடுப்பாகுற?

கவின்!!  வேணாம்.  Tension பண்ணாத!!

 என்னயும் Reject பண்ணிட்ட.  வீட்ல பாக்குற மாப்பிள்ளயயும் வேணாம்னு சொல்லிட்டு சாமியார் ஆகப் போறியா? 

படுத்தாத டா, அப்போ எதோ தெரியாம சொல்லிட்டேன்....

Ok, அப்போ இப்ப?

கவின் குறும்பாய் கேட்கவும் அவனை முறைத்தவள், 

இப்போ ஒன்னும் இல்ல . நா அந்த சந்தோஷையே marriage பண்ணிக்கிறேன்.  

அறையை விட்டு கோபமாய் கிளம்பினாள்.

"ஹேய்!!  நித்தி, நித்தி  " கதவை திறக்கப் போனவளை கையை பிடித்து நிறுத்தினான் கவின். 



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro