4
சுந்தர் சேர்ச் எனவும் ஆளுக்கொரு பக்கமாக வீட்டை சோதனை செய்தனர்...
ஒவ்வொறு இடத்திர்க்கு செல்லும் போதும் பாபுவின் முகம் வியர்த்து கை கால்கள் நடுங்கியது...
அதை மற்றவர்கள் பார்க்கா வண்ணம் மறைத்த படி நின்றான்...
கைப்பேசியில் நோடிஃபிக்கேஷன் வரவும்..அதை மேலோட்டமாக பார்த்த செந்தில் எதார்த்தமாக பாபுவை பார்க்க...அவனின் முகமோ அரண்டது...
இவன் ஏன் இப்படி பயப்பிடுறான் என நினைத்த செந்தில் ஃபோனை ஓபன் செய்யவும்...பாபுவின் பயம் அதிகரித்தது...
சுந்தரும் கோபாலும் ஒவ்வொறு அறையாய் தேடிக்கொண்டிருந்தனர்...அவசரமாக அங்கே இருந்த செல்ஃபில் ஒவ்வொன்றையும் ஒதுக்கி நோட்டமிட்டு கொண்டிருக்க...அதில் ஒரு புத்தகம் கீழே இருந்த டிவிடி ரிமோட்டின் மேலு விழுந்தது...
திடீரென யாரோ ஒரு பெண் கத்தும் அலறல் சத்தம் கேட்டு ஆளுக்கொரு திசையில் தேட..
தேடலின் முடிவாக தொலைக்காட்சியின் முன் நின்றவர்கள் அதிர்ந்தார்கள்...
பாபுவின் பயத்தை பார்த்த செந்தில் இந்த கைப்பேசியில் தான் ஏதாவது இருக்கும் என நினைத்தவன் முதலில் கேளரி ஓப்பன் செய்து அனைத்து ஃபோட்டோஸ் மற்றும் வீடியோவை பார்த்தவன்..எதுவும் இல்லை எனவும்..
அடுத்ததாக வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து...எதா இருந்தாலும் இதிலே கண்டிப்பாக இல்லாமல் இருக்காது என தேடியவன் ஏதோ யோசனையாக இறுதியில் சுந்தரிடம் பேசிய நம்பரில் உள்ள கான்டேக்டை பார்க்க...அதில் ஆல் க்ளியராக இருந்தது...
எதுவும் இல்லையே என யோசித்தவன் அடுத்து சீக்ரெட் ஆப் ஆன ஹைக்கில் இருக்கலாம்...அதில் தான் தனி நபர் பாஸ்வார்ட் இருக்கு என நினைத்தவன் அதர்க்குள் நுழைய...அதிலும் ஏமாற்றமே..
இதில் ஒன்றும் இல்லை போலே என ஃபோனை ஆஃப் செய்ய சென்றவன்...புதிதாக வந்த நோடிஃபிக்கேஷனில் கவனம் செல்ல...இது என்ன ஆப் என யோசித்தபடி பார்க்க.. யாருமே அதிகம் புலங்காத டெலிங்ராம்...
அதை வேகமாக ஓபன் செய்து பார்த்தவன் அதிர்ந்தான்...
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே!
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி
சொல்லம்மா!
நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே!
மண்ணில் வந்த நிலவே
எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்!
அந்தி மழை மேகம்
இந்த மலர் தேகம்
தொட்டுத் தொட்டு நீராட்டும்!
விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு!
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு!
நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே!
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே!
புன்னை இலைபோலும்
சின்னமணிப் பாதம்
மண்ணில் படக் கூடாது!
பொன்னழகு மின்னும்
உன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது!
மயில்களின் இறகினில்
அழகிய விழிகளை
நீதான் தந்தாயோ?
மணிக்குயில் படித்திடும்
கவிதையின் இசையென
நீதான் வந்தாயோ!
நிலவே மலரே
நிலவே, மலரே
மலரின் இதழே
இதழின் அழகே...!
தூக்கத்திலிருந்து எழுந்தவள் ம்மா, ம்மா என அழைத்தபடி இருக்க...டேய்...அம்மா கீழே போயிருக்காங்க டா...வருவாங்க என கூற ரவியை மிரட்சியுடன் பார்த்தவள் நீ போ...நீ வேண்டாம்...அம்மா..அம்மா என குட்டிமா கத்த...டேய்...நான் உன் அப்பா டா...அப்படிலாம் சொல்ல கூடாது டா என கண்ணீருடன் கூறியவனை பார்த்தும்...
எனக்கு அம்மா தான் வேணும்னு என கத்திக்கொண்டிருக்கவும்...
அங்கே, வேகமாக வந்த சுஜா...குட்டிமா..அப்பா டா.. அப்டிலாம் சொல்ல கூடாது டா என சுஜா சமாதானம் படுத்தி கொண்டிருக்க...
தாயின் நெஞ்சில் புதைந்தவள்...
சிறிதாக ரவியை எட்டிப்பார்க்க...ரவி குட்டிமாவின் அருகில் வரவும் கைப்பேசி அழைத்தது...
ஃபோனை எடுத்தவன்...சுந்தர் தான் பேசுறான்...நான் பேசிட்டு வரேன் என கூறியவன்...வெளியே சென்று அழைப்பை ஏற்க...எதிர்முனையில் என்ன கூறினார்களோ வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்...
டேய்...
நீயெல்லாம் ஒரு மனித ஜென்மமா டா என ஆடைகளை கழட்டி டவ்ஸருடன் முட்டிப்போடவிட்டிருந்த பாபுவை லத்தியால் சுந்தர் அடிக்க..
ஆஆஆஆஆ....வலி...க்கிது சார்...நா எ...ன்ன சார் தப்...பு செஞ்...சேன்...என்...னை விட்...ருங்க சா......ர் என கதறியவனை...
வேகமாக கைகள் சென்ற போகில் அடித்தவன்...நீ தான் டா பெரிய தப்பு செய்ஞ்சிருக்க...அது உனக்கு இன்னும் தெரியலையா என வெறிக்கொண்டு கத்திய சுந்தரிடம்...
சார்...அவங்க தா...ன் சார் தப்பு செய்ஞ்...சா...ங்க...நான் எந்த தப்பும் செய்யலயே என கதறியவனை...
ஒரு பொண்ணை பலாத்காரம் பன்றதை விட நீ செய்ஞ்தது...ரொம்ப பெரிய தப்பு டா...
உன்னை மாதிரி ஒரு பிறவியும் இந்த உலகத்துல இருக்கும்னு நான் நினைச்சி பார்க்கலே டா என சுந்தர் கத்திக்கொண்டிருந்த நேரம் அங்கே வந்த ரவி...
அவர்கள் சொன்னதை கேட்டதும் அதிர்ந்தான்...
அடுத்தடுத்து நடக்க வேண்டியது தன்னிச்சையாக நடந்தது...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro