19
ஆதி சென்ற பிறகு மாணவ மாணவிகள் தாங்கள் எடுத்திருந்த புகைப்படங்களை மற்றவர்களுக்கு அனுப்புறது, வாட்ஸ் ஆப்பில் ஸ்டேடஸ் போடுவது, ஃபேஸ் புக்கில் பகிர்ந்து லைக்களை அள்ளுவது என தங்களின் முக்கியமான வேலைகளில் மூழ்கி.. இன்றைய நாளின் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்..
மாணவர்கள் இப்படி மகிழ்ச்சியில் இருக்க.. ஆசிரியர்இளோ தலையில் துண்டு போடாத குறையாக அமர்ந்திருந்தனர்..
"இதுங்க சும்மாவே க்ளாஸ கட் அடிக்க ப்ளான் பன்னும்ங்க.. இப்ப சொல்லவா வேணும்.. எலக்ஷன்னு சொல்லி ஒரு மாதத்தை வீணாக்கிட்டாங்க.. சிலபஸ்ஸ எப்படி முடிக்கிறது.. இன்டெர்னல்ஸ் வருமே.." என ஆளுக்கொரு புறமாக புலம்பிக் கொண்டிருந்தனர்..
"லேப் க்ளாஸ்ஸ எப்படி மொத்தமா முடிக்கிறது.. இன்னும் ஒரு க்ளாஸ் கூட ஆரம்பிக்கவே இல்லையே.. க்ளாஸ் இருந்தாலும் நிலாவ பார்க்கலாம்.. அந்த கூட்டத்தில அந்த வால தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்ன கொடுமை கடவுளே இது.. இதே காலேஜ்ல தான் என் பொண்டாட்டியும் இருக்குறா.. ஆனா, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாத மாதிரி எங்கேயோ இருக்கா" என மற்றொரு புறம் பாவமாக புலம்பி கொண்டிருந்தான் சிவ்..
"டேய் மச்சான்.. அவன் மூஞ்சிய பார்த்தியா?? செம்ம காமேடி டா.. கார் பக்கத்தில அவன் போய்ட்டு அவன் முளிச்ச முளி இருக்கே.. என்னால இப்ப நினைச்சாலும் கன்ட்ரோல் பன்ன முடியல டா" என வயிற்றை பிடித்து கொண்டு சிரித்த ஜீவாவை பார்த்து.. "ஹாஹாஹா.. போதும் டா.. இப்ப கூட அவன் மூஞ்சை பார்த்துட்டு தான் வரேன்.. என்னால சிரிப்ப அடக்க முடியல.. அதுவும் அவனை எல்லோரும் ஒரு விசித்திர ஜந்துவ பார்க்குற மாதிரி பார்க்குதுங்க" என சத்யா கூறவும்.. "ஹாஹா.. நானும் கவனிச்சேன் மச்சான்.. என்னை பார்த்ததும் ஒரு மாதிரி முகத்தை வச்சிட்டு திரும்பிட்டான் டா.. இல்லாட்டி வம்பிழுத்திருக்கலாம்" என மித்ரன் கூற... "அவன் கிட்டைலாம் மனுஷன் பேசுவானா?? அதுலாம் எதுக்கு டா?? சரி.. அவன் அனிரூத் வருவானு நினைச்சி இப்படி கிறுக்கு தனம் பன்னுவானு உனக்கு எப்படி தெரியும்" என சியாம் மித்ரனிடம் கேட்க.."அந்த காமெடியனோட ஒரு காமெடியன் சுத்துரானே, அவன் என்னையே லவ் பன்ற பையன் மாதிரி சுத்தி சுத்தி வந்தான் டா.."
" நான் ஆல்ரெடி ஆதி கிட்ட பேசி எல்லாம் ஃபிக்ஸ் பன்னிட்டேன்.. அப்ப தான் எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு.. இதை பத்தி ராஜ்க்கு தெரியனும்.. அவன் ஏதாவது பயங்கரமா வெல்கம் பன்னுவானு யோசிச்சி.. உங்களுக்கு மெஸேஜ் ல சார்ட்ட சொல்லிட்டு.. உங்க கிட்ட பேச்சு குடுத்தேன்.. நான் நினைச்ச மாதிரி சரன் வந்து நாம்ம பேசுறத ஒட்டு கேட்டான்.. ஃப்லிம் கம்போஸர் னதும் அனிரூத் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும்.. அவனுங்களும் அதே மாதிரி அனிரூத் வரதா நினைச்சிக்கிட்டாங்க.. இதுல நான் எதிர்பார்க்காத ஒன்னு என்னனா அனிரூத் போஸ்ட்டர் ஒட்டுனது தான்.. அதை பார்க்கும் போது என்னால சிரிப்ப அடக்க முடியல.. இருந்தாலும் நாம்ம ஏமந்தா மாதிரி காமிச்சிக்கனும்னு நடிச்சேன்.. இதையெல்லாம் நம்பிட்டு அவனும் என்னை ஏளனமா பார்த்தானே.. ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆ .. ச்சான்ஸே இல்லை.. செம்ம காமெடி" என மித்ரன் சிரிக்க.. மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து சிரித்தனர்..
"ஹேய் மச்சீஸ்.. இன்னைக்கு செம்ம என்ஜாய்மென்ட்லே??" என கேட்ட ரேனுவிடம்.."ஆமா..ஆமா.. செம்ம ஜாலியா இருந்துச்சி" என தீப்தி கூறவும்.. "அடடா.. அப்படியே.. நம்மலோட டேலன்ட்ட காமிச்ச மாதிரி பேசிக்கிறீங்க.. வெட்டியா லாலிபாப்ப வாய்ல வச்சிட்டு கை தட்டிட்டு கமேன்ட் குடுத்துட்டு தானே இருந்தோம்" என நிலா கேட்க.."ஹேய்.. நிலா பேபி.. சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்க டேலன்ட்ட என்கரேஜ் பன்றது தான்"என தீப்தி சொல்லவும்.. "கரேக்ட் டி.. என் செல்ல குட்டி" என கூறி ரேனு தீப்தியிடம் "போட்டுக்கோ" என கை தூக்கி.. இருவரும் போட்டு கொண்டனர்..
"த்த்தூ.. ஒன்னும் தெரியாததால வெட்டியா வேடிக்கை பார்த்துட்டு இந்த டயலாக போட்டு சீன் போடுறியா??" என நிலா கேட்க.. "ஈஈஈஈஈஈஈ " என இழித்து வைத்தவர்கள்.. "இவ்வளவு சொல்றியே.. நீ ஏன் டி எதுவும் பன்னலே" என கோரஸாக கேட்க.. நிலாவோ,. "நாம்ம நம்ம டேலன்ட்ட வெளியே காமிச்சிக்க கூடாது.. அப்படி காமிச்சா அடுத்தவங்க ஆட்டைய போட்டுறாங்க" என கூறி பாவமாக முகத்தை வைத்து கொள்ள.. "த்த்தூ" என இருவரும் துப்பி.. "கேவலமான சமாலிஃபிக்கேஷன்" என கூறினர்..
"சரி நிலா.. எல்லோரும் ஊதல் சின்னம் வைப்பாங்க, விசிறி வைப்பாங்க, ஏன் சாவி கூட வைப்பாங்க.. ஆனால், உன் அண்ணன் எதுக்கு கழுகு சின்னம் வச்சிக்கிறாங்க" என தீப்தி ஆர்வமாக கேட்க.. "இது எங்க போய் முடிய போதோ??" என தீப்தியின் முகத்தை பார்த்து ரேனு நினைத்து கொண்டாள்..
"ஹேய்.. கழுகு சின்னம் நல்லா இருக்குலே.. அது நான் தான் செலக்ட் பன்னேன்" என நிலா குதூகலிக்க.. "ஓ..வொய்??" என புரியாமல் கேட்டவர்களிடம்..
"கழுகு வாய்ப்பை எதிர்ப்பார்க்குறது இல்லை.. தானா உருவாக்கிக்கும்.. அது போல.. என் கண்ணா அண்ணாவும் ஜெய்ப்பான்" என நிலா கூறவும்..
"என்ன டி சொல்லுறே.. ஒரு மண்ணும் புரியலே" என கேட்ட தீப்தியை பார்த்து சிரித்தவள்..
"கழுகுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அதோட சிறகுகள் செயலிழக்க ஆரம்பிச்சுடும். அப்போ அந்த கழுகு ஒரு உயரமான மலை உச்சிக்கு போய் அமர்ந்து தன்னோட சிறகு, நகம் இதெல்லாம் உடைச்சிடும். அப்புறம் அதோட அலகு அதாவது வாய்ன்னு சொல்லலாம். அந்த அலகை பாறையில் கொத்தி கொத்தி உடச்சிடும்..இப்டி பண்றது வழியா அந்த கழுகுக்கு புது சிறகு, நகம், அலகு வளர்ந்து நிறைய நாள் வாழும்" என கூறவும்,.
"ஹேய்.. ரியலி செம்ம டி.. கழுகு" என ஆச்சரியத்துடன் ரேனு மற்றும் தீப்தி கூறினர்..
"அது மட்டும் இல்லை டி.. கரூடா ங்க்றது லார்ட் விஷ்ணுவோட வெஹிக்கில்,. கரூடா இஸ் ஆன் ஸ்பெஷல் டைப் ஆஃப் ஈகிள்.. எல்லா விதத்திலயும் இந்த சின்னம் வைச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சி.. அதான் வைச்சிட்டோம்" என நிலா கூற.. "லார்ட் விஷ்ணுவோட இன்னொரு பெயர் தான் தீப்தி.. அது தான் நம்ம தீப்திக்கு வச்சிக்குது" என ரேனு கூறவும்.. "ஹாஹா.. அப்போ என் அண்ணாக்கு நீ செம்ம ஜோடி மச்சி" என நிலா கூறவும்.. இருவரும் அதிர்ச்சியாக நோக்கினர்..
"ஹிஹி.. வொய் சாக்கிங்.. லார்ட் விஷ்ணுவோட அவதாரம் தான் க்ருஷ்ணன்.. என் அண்ணா வோட செயல் எல்லாம் கண்ணன் மாதிரி தானே இருக்கும்.. அதுக்கு தான் நாங்க வீட்டுல கண்ணனு சொல்லுவோம்.. தீப்தி நேம்மும் விஷ்னுவோட அனதர் நேம்னு சொன்னிலே.. ரெண்டு பேரும்.. பெயரும்.. ஒத்து போற மாதிரி இருக்குலே.. அதான் சொன்னேன்" என சிரித்த நிலா.. தீப்தியின் முகத்தை கூர்ந்து பார்க்கவும்,. அவளோ நிலாவின் பேச்சில் விக்கித்து போய் நிற்க அவள் முகமோ செவ்வானமாய் சிவந்தது..
"அண்ணா,. ப்ளீஸ் ணா சொல்லு ணா"
"ஹேய்.. நிலா.. உன் வாய்ஸ் தானே டி அது" என ரேனு கேட்க.. "ஆமா டி.. அதான் யோசிக்கிறேன்.. என் வாய்ஸ் எப்படி டி??" என நெற்றியை தடவியவாறு யோசித்தாள் நிலா..
"இப்ப என்ன நிலா உனக்கு வேணும்"
என சியாம் கேட்க,.
"எனக்கு தெரிஞ்சே ஆகனும்.. கண்ணன்னா எப்படி எலெக்ஷன்ல நிக்கிது.. ப்ரின்ஸிபால் எப்படி ஒத்துக்குட்டாங்க"
என நிலா கேட்டாள்..
"ஹேய்.. இது.. இது.. எப்படி" என பதறிய நிலா.. பயத்தில் கண்கள் கலங்க வேகமாக மித்ரன் இருக்கும் இடத்தை நோக்கி ஓட்டம் எடுத்தவள்.. மித்ரன், சியாம், ஜீவா மற்றும் சத்யாவின் கலவர முகத்தை பார்த்தவள்.. "அண்ணா.. அந்த அன்னௌன்ஸ்மென்ட்" என இழுத்தவளிடம்,. என்ன சொல்ல என தெரியாமல் விழித்து.. கல்லூரியில் அங்கே அங்கே நின்றவர்களை பார்க்க.. மாணவ மாணவிகள் அனைவரும் அனௌன்ஸ்மென்ட் வரும் திசையை நோக்கி கவனமாக கேட்டு கொண்டிருந்தனர்..
"ஹேய்... வாயாடி.. நல்லா மண்டை காயட்டும்.. சொல்ல மாட்டோம்"
என ஜீவா கூற..
"சியாம் நீ சொல்லலே தனுக்கிட்ட உன்னை பத்தி தப்பு தப்பா போட்டு குடுத்துருவேன்"
என நிலா மிரட்டவும்.. "ஹாஹா.. இப்போ தான் என் தனு மா தரிசனமே எனக்கு கிடைக்குது.. அது உனக்கு பொருக்கலையா மா"
எனசியாம் கேட்க..
"அப்ப உண்மைய சொல்லு சொல்லு"
என நிலா கூறவும்..
"நிலா மா.. எல்லாம் எங்க சிவ் சார் குடுத்த ஐடியா தான்"
என சத்யா கூற..
"உங்க சிவ் சோறு.. ச்சீ.. சார்.. என்ன ஐடியா குடுத்தாங்க??"
என நிலா கேட்கவும்... "ஹாஹா.. நம்ம ப்ரின்ஸிபாலோட பேத்திய கடத்தி மிரட்ட சொன்னாங்க.. நாங்க ஃபர்ஸ்ட் யோசிச்சோம்.. அப்புறம் இது தான் சரினு பட்டிச்சு.. சோ, கடத்திட்டோம்"
என மித்ரன் கூற..
"என்ன அண்ணா விளையாடுறியா?? இது எவ்வளவு பெரிய விஷயம்.. போலீஸ் கேஸ்னு வந்தா என்ன செய்வா??"
என நிலா பயந்தபடியே கேட்க.. "அதுக்கு தான் நம்ம சித்தப்பா இருக்காங்களே டா.. அவுங்க கிட்ட ஆல்ரெடி சொன்னேன்.. ஃபர்ஸ்ட் ஒத்துக்கல.. நல்ல திட்டுனாங்க.. அப்புறம் சரினு சொல்லிட்டாங்க.. நாங்க தெரிஞ்ச பொம்பளைங்கள வச்சி அந்த பொண்ண பார்த்துக்குட்டோம்.. அந்த பொண்ணுக்கும் நாங்க தான் கடத்துனோம்னு தெரியாது.. அந்த பொண்ண சித்திரவதை படுத்தலை.. சோ, அந்த பொண்ணும் இதை பெரிசா எடுத்துக்கலே.. என்னை எலக்ஷன்ல நிற்க வைச்சா தான் உங்க பேத்திய விடுவோம்.. அப்படி இப்படினு மிரட்டுனோம்.. ப்ரின்ஸிபாலும் ஒத்துக்குட்டாங்க"
என மித்ரன் கூறி முடித்தான்..
ஐந்து பேரும் அதிர்ச்சியில் நிற்க.. ஜீவா ஆபிஸ் ரூமை நோக்கி ஓடவும்,. சியாம் மற்றும் சத்யா வும் அவன் பின்னால் ஓடினர்..
"ஒரு எலக்ஷன்ல நிக்கிறதுக்காக பொண்ண கடத்தலாமா செய்வாங்க.. இவனைலாம் நம்பி எப்படி ஓட்டு போடுறது..".."இவனுக்கு ஓட்டு போட்டா நம்ம பாதுகாப்பு என்ன ஆகுறது".. "ஏற்கனவே அந்த பொண்ணு(தீப்தி) விஷ்யத்துல விளையாடுனவன் தானே" என மாணவ மாணவிகள் பல பல யோசனையில் மித்ரன் காதில் படுப் படியே பேசி சென்றனர்..
Indha ud ku yenaku yaerpatta doubt ah clear pannadhu.. yen pavi kuttie Princess_Pavithra
இவளோட முதல் கதை..
பார்க்க அப்டி தெரியாது.. அவ்வளவு அழகா இருக்குது..
"நெஞ்சம் இரண்டின் சங்கமம்"
சப்போர்ட் செய்ங்க செல்ல குட்டீஸ்..
என் தோழி,. salmasasikumar ன் இனிப்பான கதை.. அட, அந்த கதையின் பெயரே "சக்கர" தாங்க.. நல்லா இருக்கும்.. படிச்சி பார்த்து சப்போர்ட் பன்னுங்க ஃப்ரெண்ட்ஸ்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro