16
"சொல்லுங்க சார்... இப்படி அமைதியா இருக்காம... இர்ரிட்டேட்டா இருக்கு" என எரிச்சபட அமைதியாய் எதிரிள் உள்ளவனையே பார்த்த படி இருந்தார் ப்ரின்ஸிபால்..
அவரின் அமைதியை பார்த்து சளித்து கொண்டவன்.."ப்ளீஸ்.. சொல்லுங்க சார்" என கேட்க..
"என்ன சொல்லனும்.. எனக்கு எப்படி தெரியும்.. இப்படிலாம் நடக்கும்னு" என ப்ரின்ஸிபால் கேட்க.. "அதலாம் விடுங்க.. நீங்க எதுக்கு எலக்ஷன கொண்டுட்டு வந்தீங்க" என கேட்கவும்.. சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்.. "என் பேத்திய வயசு பொண்ணுனு கூட பார்க்காம கடத்தி வச்சி இருந்தாங்க" என ப்ரின்ஸிபால் கூறவும்... "வாட்.. என்ன சார் சொல்றீங்க??" என அதிர்ச்சியாய் ராஜ் கேட்டான்..
"ஹ்ம்ம்.. ஆமா.. அவன் கடத்தி வச்சா போலீஸ் கிட்ட போகலாம்.. அவன் கடத்தி வச்சதே ஒரு போலீஸ் உதவியோட.. அப்புறம் என்ன பன்னுறது" என கேட்டவர்.. "மித்ரன் தான் கடத்துனானு கூட என்னை தவிர வேற யாருக்கும் தெரியாது.. என் பேத்திக்கு கூட.. என் பேத்தி கிட்ட கேட்டா, மூணு பொண்ணுங்க தான் இருந்தாங்க.. என்ன நல்லா பார்த்துக்குட்டாங்கனு சொல்லுறா" என தலையில் அடித்து கொண்டார்..
"ச்சே... அவன் இவ்வளவு கீழ் தரமா போய்ருக்கான்.. நீங்க சும்மா இருந்திக்கிறீங்க" என ராஜ் கேட்க... "ஒன்னுமே பன்ன முடியாதே.. அதான் சும்மா இருக்கேன்" என தலையில் துண்டு போடாத குறையாக கூறினார்..
"அப்படி என்னத்த தான் செய்ய போரானாம்" என ரேனு கேட்க.. "ஹாஹா.. எல்லாம் நம்மலுக்கு ஏத்த மாதிரி தான்" என நிலா கூறவும்.. "அப்படினா அந்த ராஜ் ஜெய்ச்சிருவானா??" என கண்களில் பயமோ, தவிப்போ ஏதோ ஒன்றை வைத்து கேட்ட தீப்தியை ஒரு மாதிரி பார்த்த ரேனு.. இப்ப எதுவும் கேட்க வேணாம் என அமைதியானாள்..
"ஹேய்.. அப்படிலாம் நடக்க விட்ருவோமா என்ன?? கண்டிப்பா அவன் ஜெய்க்க மாட்டான்" என கூறியவள்.. "ஹ்ம்ம்.. அது என்ன.. இன்னைக்கு ஃபுல் டேய்.. நாம்ம கேண்டீன்ல என்ன வேணா சாப்டுக்களாமாம்.. எல்லாம் ஃப்ரீயாம்" என நிலா கூற.. இருவரும் வாயை பிளந்தனர்..
"ஹேய்... எல்லாம் அந்த ஊதல்(விசில்) சின்னத்தோட செலவு" என நிலா கூறவும்.. "அப்டினா??" என கேட்டு விழித்தவர்களிடம்.. "ஹ்ம்ம்.. அந்த ராஜோட சின்னம் தான் ஊதல்... வாங்க.. இப்ப கேண்டீன் போலாம்.. பசிக்குது" என கூறி நிலா செல்ல.. தீப்தி எதையோ யோசித்து கொண்டிருந்தாள்..
"என்னாச்சி தீப்ஸ்.. என்ன தீவிரமான யோசனை" என கேட்ட நிலாவை பார்த்து விழித்தவள்.. "ஹான்.. அ.. அது" என தடுமாறியவள்.. "இல்லை.. அது.. அந்த ராஜ் செலவுல நாம்ம போய் ஏன் சாப்பிடனும்" என முகத்தை சுளித்தவளை பார்த்து சிரித்தவள்.. "ஆடு பகை.. குட்டி உறவு பேபி" என கண்ணடித்து.. "நமக்கு சோறு தான் முக்கியம்" என இழுத்து சென்றாள்..
"ச்சே... நான் ஏன் இப்படி இருக்கேன்?? எனக்கு என்ன தான் ஆச்சி.. பாவம்.. தேவை இல்லாம அவள அழ வைக்க போய்ட்டேன்.. அந்த பொண்ணு எப்பையும் ஜாலியா சுத்திட்டு இருப்பா.. அவள போய்.. டேய்.. ஒன்ன மட்டும் நல்லா நீ நியாபகம் வச்சிக்கோ.. அவ ஸ்டூடண்ட.. நீ ப்ரஃபசர்.. எதா இருந்தாலும் தள்ளியே இருக்கனும்.. நீ மனசுல நினைக்கிறதுலாம் ரொம்ப தப்பு.. இல்லையே.. நான் ஏன் தப்பு.. அவ இப்ப தானே ஸ்டூடண்ட்.. நான் என்ன இப்பவா அவ மேலே ஆசை பட்டேன்.. இல்லையே.. அப்புறம் எப்படி என் மேலே தப்பு இருக்கும்.. அவ இந்த காலேஜ்ல வந்து படிச்சா நான் என்ன பன்னட்டும்.. நான் எந்த தப்பும் செயல.. " என தனக்குளே புலம்பியவாரு சென்ற சிவ்வின் கண்ணில் பட்டது..
"ஹேய்.. வாயாடி.. இங்கே என்ன பன்றே" என்று கேட்டவனிடம்.. "ஈஈஈஈஈஈஈ.. ஓசி சாப்பாடு சாப்பிட வந்திக்குறேன்" என கூறியவள்... " வா.. நீயும் வந்து கொட்டிக்கோ" என கூற.. "அது எதிர் கோஷ்டி.. நான் சாப்பிட மாட்டேன்" என கூறி சென்றவனை பிடித்து இழுத்து நிறுத்திய நிலா.. "ஜெயலலிதாக்கு வோட் போட்டவன் கருணாநிதி குடுத்த டீவியை வேணாம்னா சொல்றான்.. இல்லைலே.. அதே மாதிரி தான் இதுவும்.. சாப்பாட வேணாம்னு சொல்ல கூடாது.. இந்தா . இதை சாப்பிடுறா" என கூறி ஜீவாவின் வாயில் சமோசாவை தினிக்கவும்.. சாப்பிட முடியாமல் சாப்பிட்டவன் நிலாவின் தலையில் கொட்டி விட்டு ஓட..
இதை பார்த்தபடி கோவத்துடன் நிலாவின் அருகில் சென்றவன்.. "பொம்பள பிள்ள மாதிரி நடந்துக்க.. இது ஒன்னும் உங்க வீடு இல்ல.. காலேஜ்.. அதை நியாபகம் வச்சிக்கோ" என கூறி முறைத்துவிட்டு சென்றவனை.. "இவன் அந்நியனோட மறுபிறவியா இருப்பானோ... எப்போ எப்படி இருப்பானே தெரியலயே.. ஹுஹும்ம்" என முகத்தை சுளித்து திரும்பி கொண்டாள்..
"டேய் மச்சான்.. ஒரு பக்கியும் க்ளாஸ்ல இருக்குற மாதிரி இல்ல டா.. எல்லாம் கேண்டீன்ல ஒட்டு மொத்தமா குமிஞ்சிட்டாங்க டா.. அவனுக்கு இருக்குற செல்வாக்க வச்சி எல்லாம் செய்வான்டா.. நம்மளால என்னடா செய்ய முடியும்.. எப்படி டா ஜெய்க்க போறோம்" என புலம்பிய சத்யாவை கோவமாக பார்த்த மித்ரன்.. "எல்லாம் உன்னால தான் டா.. செவனேனு இருந்த என்னை அரசியல இறக்கி விட்டுடியே டா.. நான் என்ன பன்னுவேனு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.. எப்படி ஜெய்க்க போறேனோ.. ச்சை" என தலையில் கை வைத்த மித்ரனிடம்.. "அட எல்லோரயும்னு சொல்றதை விட.. உன் தங்கோ நிலா.. அவளே அவ ஃப்ரெண்டஸோட சேர்ந்து கொட்டிக்கிட்டு இருக்குற" என அங்கே வந்தா ஜீவா கூற.. "அவளைலாம் திருத்தவே முடியாது" என கூறிய மித்ரன்..
" என்ன டா.. நீயும் சாப்பிட்டுட்டு வாய தொடக்காம வந்திக்குறா போல" என முறைக்க.. "ஈஈஈஈஈஈஈ.. இல்ல டா... அந்த வாலு என் வாய்க்குள்ள வச்சி தினிச்சிருச்சி" என கூறினான்..
"அது சரி... இவன் ஏன் டா கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திக்றான்.. என்ன டா ஆச்சி?? ஏன் இப்படி உட்கர்ந்திக்கிறா??" என சியாமை பார்த்து ஜீவா கேட்க.. அப்பொழுது தான் அவனை மற்ற தோழர்களும் கவனித்தார்கள்..
"ஒன்னும் இல்லை டா" என சியாம் சமாளிக்க முயல.. "எதா இருந்தாலும் சொல்லி தொலை டா.. ரொம்ப சீரியஸா யோசிச்சிட்டு இருக்குறே.. இருக்குற டென்ஷன்ல நீ வேற.. அப்படி என்ன விஷ்யம்" என காட்டமாக கேட்ட சத்யாவை மிரட்சியுடன் பார்த்தவன்.. கீழே குனிந்தபடி
"தனு என் கிட்ட லவ்வ சொன்னா டா" என கூற.. "வாவ்.. செம்ம டா.. அதுக்கு ஏன் டா சோகமா இருக்கே" என கேட்ட ஜீவாவிடம்.. "ஒன்னும் இல்ல டா" என தடுமாறினான்..
"நீ தனுவ எப்படிலாம் உருகி உருகி லவ் பன்னானு நம்ம காலேஜ்க்கே தெரியும்.. இப்ப அவளே அவ லவ்வ உன் கிட்ட வந்து சொல்லிக்கிறா?? அப்புறம் ஏன் டா?? ஒரு மாதிரி இருக்கே" என கேட்ட சத்யாவிடம்..
"என்ன டா சொல்லனும்" என மித்ரன் முறைக்கவும்.. "இவன் ஏன் இவ்வளவு சூடா இருக்கான்" என எல்லோரும் அமைதியாக இருக்க..
"இங்கே பாருங்க டா.. இவன் எந்த அளவு தனுவ லவ் பன்னானு நம்ம எல்லோருக்கும் தெரியும்.. ஆனா, அவ என்ன பன்னா?? ஒரு அயோக்கியன நல்லவனு நினைச்சி லவ் பன்னா.. அவன் எப்படினு தெரிஞ்சி சாகலாம்ங்க்ற லெவல்க்கு போனா.. இப்ப இவன லவ் பன்றேனு அகைன் வந்து நிக்கிறா.." என மித்ரன் பொறிய... "ஆமா டா.. அதுக்கு என்ன டா... அவ தான் இவன் லவ்வ புரிஞ்சிக்கிட்டாலே" என கூறிய ஜீவா மித்ரனின் முறைப்பை பார்த்து வாயை மூடிக் கொண்டான்...
"அது எப்படி டா.. தனுவ சியாம் மேரேஜ் பன்னுனா.. தனுக்கு செகன்ட் லவ் தான் சியாம்.. ச்சே.. எப்படி டா.. இன்னொருத்தவன மனசுல நினைச்சவள எப்படிடா வாழ்க்கைல ஏத்துக்க முடியும்.. இத கேக்கும் போதே அசிங்கமா இல்ல" என மித்ரன் கூறிக்கொண்டிருக்க..
அதே நேரம்.. "வா தீப்ஸ்.. நாம்ம போய் பேசலாம்.. மித்ரன் உன் மேலே கோவமாலாம் இருக்க மாட்டாங்க" என கூறி தீப்தியை அழைத்து சென்ற ரேனு.. தெளிவாக..
"இன்னொருத்தவன மனசுல நினைச்சவள எப்படிடா வாழ்க்கைல ஏத்துக்க முடியும்.. இத கேக்கும் போதே அசிங்கமா இல்ல" என மித்தன் சொன்னதை கேட்டவள்... "பின்னாடி பேசிக்கலாம் பேபி.. வா" என தீப்தியை இழுத்து சென்றாள்..
பயந்தபடியே வந்த தீப்தி மித்ரனின் பேச்சை கவனிக்காமல் ரேனுவிடம் புலம்பியபடி வந்தது... யார் செய்த சதியோ?? அப்படி அவனின் வார்த்தைகளை கவனித்திருந்தால் பின்னால் சிந்தவிருக்கும் கண்ணீரை சிந்தாமல் தடுத்திருக்க முடியுமோ?? என்னவோ??..
ரேனு கேட்ட மித்ரனின் பேச்சை எதர்க்காக தீப்தியிடமிருந்து மறைக்க நினைத்தாலோ.. அப்படி மறைக்காமல் இருந்திருந்தால் வருங்காலத்தில் தீப்தி சந்தோஷமாக இருந்திருப்பாலோ?? என்னவோ??
"சரி டா மித்ரன்.. நீ சொல்றதையே நாங்க சரினு வச்சிக்கிறோம்.. அப்படி பார்த்தோம்னா நம்ம சியாமும் தனுவ லவ் பன்னான்.. அவனும் வேற பொண்ண மேரேஜ் பன்னிக்க முடியாதுல.. பிகாஸ் நீ சொன்ன மாதிரி அவன் மேரேஜ் பன்னிக்கிட்டா.. சியாம கட்டிக்க போற பொண்ணு இவனுக்கு செகண்ட் லவ் தானே.. ஏன் கேக்குறேனா.. இவன் தான் தனுவ லவ் பன்னிட்டானே" என சத்யா கேட்க... மித்ரன் அமைதியாக இருக்கவும்.. "அப்படினா சியாமும் சரி.. தனுவும் சரி.. லைஃப்ல மேரேஜே பன்னிக்க கூடாது.. அப்படி தானே மித்ரன்" என சத்யா கூற.. அப்பவும் மித்ரன் அமைதியாக இருந்தான்..
"அடப்பாவி.. ஏன் டா?? இப்படிலாம் சொல்றா?? நானும் ஜோ வ ரொம்ப சின்ஸியரா லவ் பன்னேன் டா.. ஆனா, ஜோ சூர்யா சார்ர மேரேஜ் பன்னிக்கிட்டா.. அதுக்காக நான் மேரேஜ் பன்னிக்க கூடாதா?? என் வாழ்க்கை என்ன ஆகுறது.. நான் யார சந்தானம் சார் மாதிரி ஜாங்கிரி, பூந்தினு கொஞ்சுவேன்.. எனக்கு அப்படி ஒரு குடுப்பினை இல்லாம போச்சா.. ஐயையோ.. நான் வேற எங்க வீட்டுல ஒரே பையனாச்சே.. எனக்கு கல்யாணம் ஆகலேனா எங்க வம்சமே அழிஞ்சிருமே" என புலம்பி பொய்யாக கண்ணீர் சிந்திய ஜீவாவை பார்த்து முறைத்த மித்ரன்,..
"என்னமோ செய்ஞ்சி தொலைங்க... உங்க கிட்டைலாம் மனுஷன் பேசுவானா?? எனக்கு ஒரு வேலை இருக்கு.. வரேன்" என கூறி சென்றவனை பார்த்தவர்கள்.. "நாம்ம சொல்ல வேண்டிய டயலாக்கை இவன் சொல்லிட்டு போறான் டா.. எல்லாம் நம்ம நேரம்" என ஜீவா கூற.. நண்பர்கள் அனைவரும் சிரித்தனர்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro