14
இரவு வெகுநேரமாகியும் தூக்கமே வராமல் இந்த பக்கமும் அந்த பக்கமும் திரும்பி திரும்பி படுத்து கொண்டிருந்த தீப்தியிடம்,.. "என்ன டி..என்னாச்சினு..இப்படி இருக்குறா..அதான்..இப்ப எதுவும் ஆகலலே" என கேட்ட ரேனுவிடம்..."இல்லை டி...நான் இனி காலேஜ்க்கே வரல டி..எனக்கு ரொம்ப பயமா இருக்கு..எனக்கு எங்க இருந்தாலுமே நிம்மதியில்லையே டி...ஏன் டி..என்னால மட்டும் உங்கள மாதிரி சந்தோஷமா இருக்க முடியல..என்ன சுத்தி மட்டுமே எப்பையும் தப்பா நடக்குது...நான்லாம் அந்த வயசுலயே அப்பவே செத்திருக்கனும் டி..ஏன் டி..என்னை காப்பாத்துனாங்க...இது ரொம்ப மோசமான உலகம் டி..எல்லா பசங்களும் கெட்ட பசங்க...பெண்களுக்கு சுதந்திரமே இல்லை டி" என அழுதவளை.."இங்க பாரு தீப்தி...எல்லா பசங்களும் கெட்ட பசங்கனு சொல்ல முடியாது...அதே மாதிரி எல்லா பொண்ணுங்களும் நல்ல பொண்ணுங்க இல்லை டி...இங்க பாரு..இதுல எஃப் பீ நியூஸ் பாரு...நாலு காலேஜ் பொண்ணுங்க..ஒரு ரூம் எடுத்து தங்கி இருக்குறாங்க...பேப்பர் போடுற ஒரு பையன செக்ஸ் டார்ச்சர் பன்னியே சாகடிச்சிட்டாங்க..இப்ப என்ன சொல்லுற தீப்தி..உலகத்துல மிருகம்ல இருந்து மனுஷன் வர கெட்டவங்க நல்லவங்கனு இருக்காங்க...ஏன்..கடவுள் படைக்கிறாரு...எமன் உயிர எடுக்குறாரு.....லைஃப்ல நடக்குறதுலாம் நடந்து தான் ஆகும்..உன் நல்ல மனசுக்கு உன் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்" என கூறியவளை ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு படுத்தாள்...
"யாரு என்னை தப்பா நினைச்சிருந்தாலும் பரவாயில்லை மா..நீ என்னை தப்பா நினைச்சிடியே மா..அதான் என்னால தாங்க முடியலே..இனி எப்படி உன்னை ஃபேஸ் பன்னுவேன்..உனக்கு எப்படி புரிய வைப்பேன்...உன்னை சொல்லி ஒன்னும் இல்லை டா.. இவ்வளவு நாளா ஃப்ரெண்ட்ஸா ஒன்னா இருந்து என் கூட படிச்சவங்களே ஒரு மாதிரி பார்க்குறாங்க..ஏன்?? என் நிலா கூட என்ன பார்த்துட்டு பேசாம போய்ட்டா...உனக்கு என்னை பத்தி எப்படி மா தெரியும்..அதான்..என்னை நீ தப்பா நினைச்சிட்டா..பட் நான் விட மாட்டேன் டா...உனக்கு எப்படியாச்சிம் புரிய வைப்பேன் டா" என அன்று ஒரு நாள் கல்லூரியில் தன் கைப்பேசியில் புகைப்படமாக எடுத்த தீப்தியிடம் மனதால் பேசி கொண்டிருந்தான் மித்ரன்..
கல்லூரி திறந்த நான்கைந்து நாட்களில் சந்தோஷமாக இருந்தவள்...மறுபடியும் சோகமாக வாடிய முகத்துடன் இருக்கும் தீப்தியை பார்க்க.."என்ன ஆகிருக்கும்..ஏன் இவ பழைய மாதிரி இருக்கா...இவ அனுபவிச்ச கஷ்டம்லாம் போதும்...இனியும் எந்த ப்ரச்சனையும் குடுத்துராதே கடவுளே" என ப்ரியா கடவுளிடம் வேண்ட..கடவுளோ, "இனி தான் அவ வாழ்க்கைல அனுபவிக்க வேண்டிய கஷ்டமே வரபோறது" என யோசித்தார்..
(கஷ்டமா?? சந்தோஷமா?? ஆதர்க்கு சரியா கேக்கலயே🙊)
காலையில் எழுந்து சாப்பாடு மேஜையில் அமர்ந்த மித்ரனை ஒரு வெற்று பார்வை பார்த்த நிலா..."அம்மா..டைம் ஆச்சி மா..எனக்கு சாப்பாடு வேணாம்.. நான் போயிட்டு வரேன்" என எழுந்து சென்ற நிலாவை.."நிலா..நிலா மா..நிலா" என்று மித்ரன் அழைக்க...எதையும் காதில் வாங்காதவாரு சென்று விட்டாள்...
இப்படி பேசாம போறாளே என சோகமாக உட்கர்ந்திருந்த மித்ரனிடம்..அங்கே வந்த ஜீவா.."விடு மச்சான்... டல்லா இருக்காதே..எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்" என கல்லூரிக்கு அழைத்து செல்ல..கல்லூரியே ஒரு மாதிரியாக பார்த்தது..
"டேய்...ரொம்ப அவமானமா இருக்கு டா...நான் தனியா இருக்கேன்...கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பன்னாதீங்க டா" என மைதானத்தில் தனியாக ஓர் இடத்தில் சென்று அமர்ந்தான்..
"என்ன மித்ரன் சார்...இல்ல இல்லை சேர்மேன்...ரொம்ப டல்லா இருக்கீங்க போல...தௌதுருவோம்னு பயமா இருக்கா?? அட உண்மை அது தானே..என் விஷ்யம் பழைசு...நேத்து நடந்தது புதுசு...மக்களோட மனசு எப்படி தெரியுமா?? பழையதை நினைச்சி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் புதுசா ஒன்னு நடந்திச்சினா...அத பத்தி தான் பேசுவாங்க..பழைச சுத்தமா மறந்துருவாங்க..இனி நம்ம ரெண்டு பேருல யார செலக்ட் பன்னுவாங்க..நான் இனி குட் பாய் பா என கூறியவன்..இந்த ஒன் மன்த் மட்டும் தான்" என அசிங்கமாக சிரித்த ராஜிடம் எதுவும் பேச தோன்றாமல் அமைதியாய் இருந்தான் மித்ரன்..
"ஏய் நிலா...ஏன் அங்க போய் உட்கர்ந்துக்ரா?" என முறைத்தபடி நிலாவின் முன்னாள் சென்று நின்றாள் தீப்தி.."ப்ளீஸ்..என்னை டிஸ்டர்ப் பன்னாதே" என முகத்தை திருப்பிய நிலாவிடம்,.."ப்ளீஸ் டி...என் பேபிலே..இப்படிலாம் பேசாதே டி..கஷ்டமா இருக்கு" என அழுக சென்றவளை பார்த்தவள்..."நீ எதுக்கு அழுகுற..நீங்க செஞ்ச காரியத்துக்கு நாங்க தான் அழுகனும்" என கூறி திரும்பிய நிலாவிடம்,.."சரி டி..இப்ப என்ன செய்யனும்..அதை சொல்லு..பட் இப்படி பேசாம இருக்காதே" என கூறிய தீப்தியிடம்.."நான் என்ன சொன்னாலும் செய்வியா??" என நிலா சந்தேகமாய் கேட்க..."ஹ்ம்ம் செய்றேன் டி" என கூறியவள்..நிலா கூறியதை கேட்டதும்.."அது எப்படி டா" என தீப்தி இழுக்க அந்த பக்கம் திரும்பி கொண்டாள் நிலா..
"எப்படி இந்த நிலைய சரி பன்றது..எதாவது செய்ஞ்சே ஆகனும்" என யோசித்த படி எழுந்த மித்ரன்...எதிரே வருபவரை பார்த்து அப்படியே நின்றான்...
"நாம கனவு எதுவும் காண்றோமா?? இல்லை..காலேஜ்ல தான் நிக்கிறோமா??இல்லை...நமக்கு எதுவும் பைத்தியம் பிடிச்சிருச்சா?? இவளே...நம் கண் முன்னாடி தெரியிராலே..ஐயோ..கொள்றாளே...
வொய்ட் சுடில வொய்ட் ஏன்ஜல் மாதிரி செம்மயா இருக்காலே...வராலே...வராலே..நம்மள நோக்கியே வராலே" என மனதில்
(அடேய்...மானங்கெட்டவனே...நேத்து அவ்வளவு அசிங்க பட்டும் ஈஈஈஈஈஈஈ னு இழிக்கிறியே டா-மனசாட்சி) பலவாறு யோசித்தவாரு வருபவளையே பார்த்த படி நின்றான்..
கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திட தொடங்கி விட்டேன் தன்னாலே
அர்ச்சனை பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம் பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனை தருவதற்கே உயிரை தந்தாயம்மா
கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திட தொடங்கி விட்டேன் தன்னாலே
கண்ணை பார்த்ததும் வேகமாய் மின்னல் அடித்தது நெஞ்சிலே
தோளில் சிறகுகள் இன்றியே தேகம் பறக்குது விண்ணிலே
இந்த புது உயிரை நீ தந்ததாய் என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுது
ஒர் இறகாய் இறகாய் அலைந்து வந்தேன்
உன் இமையின் அழைப்பால் தரையில் வந்தேன்
உன் விரலில் என் மனசும் மோதிரம் ஆகியதே
கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திட தொடங்கி விட்டேன் தன்னாலே
ஒ... ஒ... ஒ... ஒ...
மண்ணை முதல் முறை பார்த்திட தாயின் கருவறை சொன்னது
என்னை முதல் முறை பார்த்திட உந்தன் கருவிழி சொன்னது
மலை உயரத்திலே நதி தோன்றுமே அது சேரும் இடம் கடலாகுமே
இது உயிரும் உயிரும் பேசும் மொழி
இதை விடவும் சிறந்தது எந்த மொழி
என் உயிரை உன் பாதத்தில் காணிக்கை ஆக்குகிறேன்
கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திட தொடங்கி விட்டேன் தன்னாலே
அர்ச்சனை பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம் பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனை தருவதற்கே உயிரை தந்தாயம்மா
வந்து அவனை பார்த்து அரை மணி நேரம் ஆக நின்றவள்..."ஹலோ, ஹலோ" என தயங்கியபடி அழைத்தாள்..
"ஹ்ம்ம்..சொல்லுங்க" என கேட்டவனை பார்க்க முடியாமல் தலைகுனிந்து நின்றவள்...
"நான் உங்கள தப்பா நினைச்சிட்டேன்..சாரி..நேத்தே நிலா எல்லாம் புரிய வச்சிட்டா..நான் தான் ஏதோ பயத்துல அப்படி பன்னிட்டேன்..யோசிச்சு பார்த்ததும் என் தப்பு எனக்கு புரிஞ்சிரிச்சி..சாரி" என கீழே குனிந்த படி கடகடனு பேசிய தீப்தியை பார்க்க...அவள் பயத்தை பார்க்க சிரிப்பு வர...அதை அடக்கிய மித்ரன்..அவளை கடந்து வேகமாக சென்றான்..
"ஓய்..நிலா...இங்கே வா" என அவள் வகுப்பிற்க்குள் சென்று அழைத்து கொண்டிருந்தவனை பார்த்து நிலா முகத்தை திருப்பிக்கொள்ள...அந்த நேரம் அங்கே வந்த சிவ்.."என்ன மித்ரன். இந்த பக்கம்" என கேட்க...அவன் காதில் மித்ரன் ஏதோ சொல்லவும்.."குல்ஃபி வாங்கி குடு...ப்ராப்ளம் சால்வ்ட்" என சிவ் சத்தமாக கூற...அவனை முறைத்தவள்..எதுக்கு கூப்பிட்டா என மித்ரனிடம் சென்று நின்றாள்..
"குல்ஃபி க்காக தானே வந்தே" என சிவ் கேட்க.. "போய் க்ளாஸ் எடுங்க சார்..ப்ரியட் முடிய போது..நான் போய்ட்டு வரேன்" என மித்ரனின் கையை பிடித்து இழுத்தவாரு சென்றாள்..
நிலா போகும் திசையை பார்த்தவன்..
"இந்த காலேஜ்ல வொர்க் பன்றது எவ்வளவு பெரிய கஷ்டம்...பக்கிங்க..மதிக்கவே மாட்டிக்கிதுங்க" என புலம்பியவாரு வகுப்பிற்க்குள் சென்றான் சிவ்..
"எதுக்கு கூப்பிட்ட..சொல்லு" என நிலா கேட்க.."தீப்தி என் கிட்ட சாரி கேட்டா" என மித்ரன் கூறவும்.."சரி...அவ்வளவு தானே...போயிட்டு வரேன்" என திரும்பியவளை.."இல்லை..இல்லை..நீ ஏன் என் கூட பேச மாட்டிக்கிறா...அப்புறம் தீப்தி க்கு எப்படி புரிய வச்சா??...அப்படினா என் மேல தப்பு இல்லனு உனக்கு தெரியுதுலே??" என கேள்விகளை கேட்டு பதிலுக்காக காத்திருந்தான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro