நிலா -7
காலைப் பொழுது அழகாய் விடிய, தன் படுக்கையோடு கேள்விகளையும், குழப்பங்களையும் விட்டு விட்டு, பழைய நிலாவாய் எழுந்தவள் நேராக போய் கண்ணாடி முன் நின்றாள்.
நேற்றிரவு பலத்த சிந்தனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் நிலா.
"இனிமே நோ டென்ஷன்.. நோ குவெஸ்ட்டின்ஸ்.. நோ குழப்பிபையிங்.. நோ தேடிபையிங்.. நோ கண்டுப்புடிச்சிப்பையிங்.. கனவோ கற்பனையோ.. நிஜமோ நிழலோ.. நடந்ததெல்லாம் எதா வேணா இருந்துட்டு போகட்டும்..நடந்துட்டுப் போகட்டும்.. இனி எதையும் நினைச்சி கவலைப்பட கூடாது.." என தனக்குத் தானே நினைத்துக் கொண்டவள், தன் மொபைளை எடுத்து "ஐ எம் பேக்" என ஸ்டேட்டஸ் போட்டவிட்டு குளியலறைக்குள் புகுந்தவளுக்கு இது தானாய் முடிவடையும் விளையாட்டல்ல, இவள் முடித்து வைக்க வேண்டிய விளையாட்டு என்று தெரியாமல் போனது.
தயாராகி கிச்சனுக்குள் சென்றவள் ருத்ராமாவைக் காண, அவரை பின்னாலிருந்து அணைத்து, குட் மார்னிங் என்றாள்.
அவரும் பதிலுக்கு "காலை வணக்கம்மா" என்றார்.
"ருத்ரா மா இன்னிக்கு என்ன டிபன்?" என கையில் ஏந்திய காப்பியோடு அவள் கேட்க,
அவர் பதில் பேசாமல் இவளை ஆச்சிரியமாய் பார்ப்பதை உணர்ந்தவள், "என்னாச்சு மா?, ஏன் அப்படி பாக்குரிங்க?" என அவள் வினவ
"அதுவந்து மா.." என சற்று தயங்கியவரிடம்,
"ம்ம் சொல்லுங்க" என கேள்வியாய் பார்த்தாள்,
"அதில்லமா.. உங்களுக்கு அடிப்பட்டதுல இருந்து நானும் பார்க்கிறேன்.. நீங்க எதோ யோசனையாவே இருந்திங்க.. ஒழுங்கா சாப்பிடுரதும் இல்லை.. ஐயா கூட உங்களை நினைச்சி வருத்தப்பட்டார்.. நீங்க இப்படி பழைய மாதிரி பேசி இரண்டு வாரம் ஆச்சு.. அதான் இப்போ நீங்க சந்தோஷமா இருக்குறது பார்க்க மனசுக்கு நிறைவா இருக்குமா.. எப்பவும் இதே மாதிரி இருங்க"
தன் தவறை உணர்ந்தவள், "அதுக்கென்ன ருத்ரா மா.. இனிமே நீங்களே மாறுனு சொன்னாலும் நான் மாற மாட்டேன்.." என அவர் கன்னத்தை தன் ஒரு கையால் கிள்ளியவளை பார்த்து சிரித்தவர், பின்
"கை செரியாக இன்னும் எவ்வளவு நாள் மா தேவை?" என அவள் அனைத்திற்கும் ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவதை பார்த்து வருந்தி கேட்டார்.
" வலி ஒன்னும் இல்லை மா.. இருந்தாலும் டாக்டர் தான் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொன்னாரு..நல்ல வேலை நியாபக படுத்துனிங்க.. இன்னைக்கு டாக்டர் கிட்ட செக் அப் போகனும்.." என்றவள் உடனே தாராவின் எண்ணிர்கு அழைத்து, அவளை வர சொன்னாள்.
இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று வந்தனர். இனி பிரச்சினையில்லை, கையை பயன்படுத்த தொடங்கிவிடலாம் என்றும், ஆனால் அதிக எடையுள்ள பொருள்களை தூக்கக் கூடாது என்று விட்டு, சில அறிவரைகளை சொல்லி அனுப்பினார்.
வீட்டை அடைந்ததும் நிலா கனவு கினவு என எதைப் பற்றியாவது கூறுவாள் என எதிர்பார்த்த தாராவிற்கு ஏமாற்றம் தரும்படியாக நிலா அதைப்பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
பொருத்துப் பார்த்தவள் பின் தானாக பேச்சை ஆர்ம்பித்தாள்.
"என்ன நிலா அந்த பாக்ஸ் பத்தி எதாவது தெரிஞ்சிதா?" எனக் கேட்டவளை நிலா கேளியாய்ப் பார்த்து விட்டு பின் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
"எதுக்கு டி சிரிக்குற!!?" என்ற தாராவை பார்த்தவள் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.
தாரா கடுப்பாகிவிட்டாள்
"அடியே இப்படி லூசு மாதிரி சிரிக்கிறத விட்டுட்டு.. என்னனு கொஞ்சம் சொல்ரியா"
"நானா லூசு.. நீ தான் லூசு" என சிரிப்புக்கு இடையில், கடினமாய் கூறியவளை தாரா தீ பார்வை பார்க்க கப்சிப் என வாயை மூடி சிரிப்பை அடக்கினாள்.
"இப்போ சொல்ல போறியா..? இல்லை நான் கிளம்பட்டுமா?" என எழப் போனவளை இழுத்து தன் அருகில் உக்கார வைத்தவள்,
"சரி சரி சொல்றேன்.. சொல்றேன்.. வை டென்ஷன்?.. கூல் பேபி" எனக் கூறியவளை பார்த்து தாரா முறைக்க,
"ஓகே.. ஓகே.. பட் நான் சொன்னா நீ நம்பமாட்டியே" என்றவளை பார்த்து "நீ சொல்லு நான் நம்புறேன்" என்றாள்.
"ப்ராமிஸ்?" என கையை நீட்டி கேட்டவளிடம் "தாரா ப்ராமிஸ்" என தன் தலையில் கை வைத்து அவள் கூற, திருப்த்தி அடைந்த நிலா என்னவென்று கூற வர, தாரா சீரியசாக அவளையே பார்த்துக்கொண்டு இருக்க
"கப்சா" என்றாள் நிலா.
"புரியல" என்ற தாரா குழப்பமாய் அவளை நோக்க,
"சும்மா கப்சா விட்டேன்.. நீயும் நம்பிட்ட" என தோலை குளுக்கி சாதாரணமாக சொல்லிவிட்டு மெத்தையில் இருந்து எழுந்தவளை, அடிப் பட்ட கையென்று மறந்து, அவளது கரத்தை பிடித்து லேசாய் இளுத்து அமர வைக்க,
"ஔச்" எனக் நிலா கத்தியவுடன், தன் தவறை உணர,
"சாரி சாரி நான் மறந்துட்டேன்" என பதட்டமாய் கூறியவளிடம்,
"சும்மா லுலாய்க்கு.. வலிக்கவே இல்லையே.." என நாக்கை நீட்டி ஒழுங்கு செய்தவள், பின் தாராவிடம் இருந்து தப்பி ஓடினாள்.
தாராவோ அவளை துரத்தக் கூட மனமில்லாமல் தான் அமர்ந்த இடத்துலேயே சிந்தனையில் ஆழ்ந்தாள்.
'விளையாட்டுக்கு சொன்னாளா?, அப்போ நான்தான் தேவை இல்லாம பய்ந்துட்டேனா?, இரண்டு நிமிஷம் கூட அவளால நடிக்க முடியாது இதுல.. பக்காவா ச்க்ரிப்ட் ரெடி பண்ணி.. பேஸ் எக்ஸ்பரஷனோட அச்சு அசலா எப்படி நடிக்க முடியும்?.. எக்ஸாம்க்கே தன் மூலைய யூஸ் பண்ணாதவ என்னை ஏமாத்துறதுக்கான்டி பச்சைக் கண்ணுக்காரன்.. புக்கு.. செயினு இதெல்லாம்மா அவ யோசிக்க போறா.. அப்படியே யோசிச்சிட்டாலும்.. அவ்வளவு தான் உலகம் அழிஞ்சிடும்' என சிந்தனையில் மூழ்கியிருந்தவளின் காதருகில் "பாஆஆஆஆஆ" என யாரோ கத்தியவுடன் பதறியடித்து எழ, அதைப் பார்த்த நிலா விழுந்து உருண்டு சிரித்துக் கொண்டு இருந்தாள்.
"உன்னை.." என்று பக்கத்தில் இருந்த தண்ணி கேனை எடுத்துக் கொண்டு தாரா, அவளை துரத்த ஆரம்பிக்க அந்த அறையே தலை கீழாய் மாறிப்போனாலும், அவர்களின் சண்டை நின்றபாடில்லை.
தன் கேனில் இருந்த கடைசி அரை பாட்டில் தண்ணியை நிலா, தாராவை நோக்கி ஊத்தும் வேலையில் அவள் குனிந்துவிட, அச்சமயம் அறைக் கதவை திறந்துக் கொண்டு வந்த ஹரிஷ் முகத்தை, அது 'சலாறேன்று' நனைத்துவிட்டது.
"வாட் த ஹெல், யூ காய்ஸ் ஆர் டூயிங்?" என தன் முகத்தை துடைத்துக் கொண்டே அவன் கத்த, அவன் இரவில் பார்த்த அதே உடையில் இருப்பதையும், தூக்க கலக்கத்தில் இருந்த விழிகளும் அவன் கோபத்துக்கான காரணத்தைக் கூற, அதை நிலாவும் புரிந்துக் கொண்டாள்.
சிரித்து கொண்டு இருந்த தாராவை 'ஷூ' என சைகை செய்தவள், பின் ஹரிஷிடம் திரும்பி, "ரியல்லி சாரி.. சாரி ஹரிஷ்.." என அப்பாவியாய் கூற, தாரா அவளை முறைத்துவிட்டு, ஹரிஷிடம் "ஹலோ எக்ஸ்கியுஸ் மீ.. அவ ஒன்னும் உங்களை தேடி வந்து தண்ணி ஊத்தலை.. நீங்க தான் அவ ரூம்க்கு வந்திருக்கிங்க.. நாங்க தண்ணிப் போட்டு விளையாடுவோம், இல்லை தண்ணி அடிச்சு விளையாடுவோம்.. அது எங்க இஷ்டம்.. ஆன்ட் பை த வே ஒரு பொண்ணோட ரூம்க்கு க்னாக் பண்ணாம வந்தது உங்க தப்பு.. சோ சாரி சொல்ல வேண்டியது அவ இல்லை.. நீங்க தான்" என பட படத்தவளை அமைதியாய் இருக்கும்படி, நிலா சைகை செய்துக் கொண்டு இருந்தாள்.
"யெஸ் அப்கோர்ஸ். இது உங்க ரூம். நீங்க என்ன வேணாலும் பண்ணலாம்.. அன்ட் ஐ டோன்ட் ஆஸ்க்குடு ஹெர் டு சே சாரி.."
"அப்புறம் எதுக்கு வந்து இப்படி கத்துரிங்க?" என சீரியவளை தவிப்போடு பார்த்துக் கொண்டு இருந்தாள் நிலா.
"உங்க ரூம்ங்குற உரிமை இதுவரைக்கும் தான்" என அறையின் வாசலை சுட்டி காட்டியவனை தொடர விடாமல், "நாங்க இதுக்குள்ள தானே விளையாண்டோம். அதை தாண்டி வரலையே. அப்படியே வந்தாலும் உங்க ரூம்குள்ள வந்தா மட்டும் தான் உங்களுக்கு கேக்க ரைட்ஸ் இருக்கு"
"கண்டிப்பா. இது அவங்க வீடு தான். அவங்க இங்க என்னவேணாலும் பண்ணலாம். பட் நீங்க வரலைனாலும், நீங்க போட்ர சத்தம் என் ரூம்க்கு வருது. சோ அதை கேக்க, எனக்கு ரைட்ஸ் இருக்குனு நினைக்கிறேன். அதுக்கூட எனக்கு இல்லைனா சொல்லுங்க, இந்த வீட்ட விட்டு கிளம்பிடுறேன்." எனக் கூறியவன் நிலாவை ஒரு கணம் பார்த்துவிட்டு, விருட்டென தன் அறைக்குள் சென்று கதவை சாத்தி விட்டான்.
"உனக்கென்ன பைத்தியமா டி.. நான் தான் அமைதியா இருனு சொல்றேன்ல" என சற்று கோபமாய் கூறிய நிலாவைப் பார்த்து,
"உனக்கு தானே டி சப்போர்ட் பண்ணேன். ம்ம்ம்.. இப்பலாம் நல்லதுக்கே காலம் இல்லை." என ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்.
"அதுக்குனு இப்படியா பேசுவ?"
"பின்ன என்ன?.. அவர் கத்துவாராம்.. இந்தம்மா சாரி கேப்பாங்கலாம்.. இதையெல்லாம் பார்த்துட்டு நான் அமைதியா இருக்கனுமாம்?.. இருந்தாலும் அவனுக்கு எவ்ளோ ஆட்டிட்டியுட் டி..!!"
"அவர பாத்தாலே தெரியல?.. அவர் தூக்கத்தை நம்ப தான் கத்தி டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.. தப்பெல்லாம் நம்மல்துதானே.. கடைசில வீட்ட விட்டு போய்டுறேன்னு சொல்லிற்காருனா.. கண்டிப்பா எவ்ளோ ஹர்ட் ஆயிருப்பாரு.. நீ இவ்ளோ ஆர்கியு பண்ணிற்க வேண்டிய அவசியமில்லை தாரு.." என நிலா அவனுக்காக பாவப்பட,
"விடு.. விடு.. சுட்ட வடை ஆரியேபோச்சு.. அதை எதுக்கு கிளறி கிட்டு.. அவனே இந்நேரம் மல்லாக்க படுத்து தூங்கியிருப்பான்.."
"போடி எருமை.. எல்லாம் உன்னாலதான்.. திடீர்னு என்ன என்மேல பொல்லாத அக்கறை?"
"அடிப்பாவி, நான் இதுக்கு முன்னாடி உனக்கு சப்போர்ட் பண்ணதே இல்லையா? அது சரி.. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"
என தாரா கூறியதற்கு ஹும் என முகத்தை திருப்பி கொண்டவளை பார்த்து கிளுக்கென சிரித்தாள்.
நிலா கண்டிப்பாக தன்னிடம் பொய் கூறுகிறாள் என தாரா அறிந்திருந்தாலும், அவள் சந்தோஷமாக இருப்பது தாராவுக்கு மனநிறைவை தர, அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. எனவே, உண்மையோ பொய்யோ.. இனி அது நமக்கு தேவை இல்லை என எண்ணிக் கொண்டாள்.
இது முடிவல்ல, ஆரம்பம் என்பதை இருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro