நிலா -27
கோட்டையின் பின் இருந்த பல்லத்தாக்கின் முன் ஒருப்பெரிய மரம் இருக்க, அதன் கிளைகளில் நிலாவின் கைகள் தொங்கியப் படி கட்டப்பட்டிருக்க, அவளின் காலடியில் ஒருப்பாறை இருந்தது.
அவள் உடல் மட்டுமே அங்கு இருக்க, எண்ணமோ மாயன் பேசிய வார்த்தைகளிலேயே இருந்தது.
ஒரே நேரத்தில் திணிக்கப்பட்ட உண்மைகளையே ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியவளிடம் மேலும் சுமைகளை ஏற்றும் விதத்தில் அங்கு வந்தான் கொம்பன்.
அவனின் அழுத்தமானப் பார்வை அவளை நடுங்க வைக்கத் தவறவில்லை. தன் வாலை உறுவியவன் அதன் முனையை அவள் கழுத்தின் மேல் வைத்து அழுத்தினான்.
"கொடுத்து வைத்தவள் நீ. உன் அம்மாவிற்கும் உனக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்று நீ அறிவாயா?" என்றவுடன் அவளின் தொண்டைக் குழி ஏறி இறங்க, அவன் அழுத்துவதில் லேசாய் இரத்தம் கசிந்தது.
"ஒன்று.. உன் அம்மா இறந்தே அன்றே நீயும்... இறக்கப் போகிறாய்." என்றவன்,
"இரண்டாவது.. உன் அம்மாவின் உயிர் போக காரணம் யாரோ.. அவர் தான் உன் உயிர் போகவும் காரணம்.. அவர் யாரென்று நீ அறிவாயா?" என்றுக் கூறியவன் தன் வாலை மீண்டும் தன் உரைக்குள் சொறுகிவிட்டு,
"அது நான் தான்.." என்றவன், வானத்தை நோக்கி கோரமாய் சிரித்தான். அவனை நிலா புழுவைக் காண்பதுப் போல் பார்க்க, அதை கவனித்தவனோ, "கோபம் வருகிறதா..? உன் தாயை நான் தான் கொன்றேன் என்று தெரிந்தப் பின் கோபம் வருகிறதா?" என்று வார்த்தைகளை கடித்து துப்பியவனிடம், ஆமாம் என தலையசைத்தாள்.
"இதற்கே இப்படியென்றால் எப்படி? இன்னும் நான் சொல்லப்போவதைக் கேட்டால் என்ன செய்வாய்? அதற்கும் உன் கோபத்தை மிச்சம் வைத்துக்கொள்." என்றவன்,
"உனக்கொரு உண்மை தெரியுமா? உன் அம்மாவும் நானும் காதல் திருமணம் செய்துக்கொண்டோம். ஆனால் அளவில்லா உண்மையான காதல் வைத்திருந்தது அவள் மட்டும் தான்.. நானில்லை.. அவள் மீது நான் கொண்ட காதலெல்லாம் நடிப்பு.. வெறும் நடிப்பு மட்டும் தான்."
"அதற்கு அவசியமென்ன வந்தது?!"
"என்ன இப்படிக் கேட்டு விட்டாய்? காலம் காலமாய் எங்கள் பரம்பரையே இவ்வுலகை ஆன்டுக்கொண்டு வருகிறது. மாயனின் தந்தை ஆழனும் அவளும் ராஜ வாரிசாய் பிறந்து விட்டதன் காரணமாக அவர்களில் ஒருவருக்கு ராஜப் பட்டத்தைக் கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைத்துவிட்டு, வேடிக்கை பார்க்க நான் ஒன்றும் தியாகி இல்லை. அத்தனை ஆண்டுக் காலமாய் அனுபவித்த அரண்மனை வாழ்க்கையையும் சுகத்தையும் விட்டுவிட்டு என்னால் எப்படி சக மனிதர்களோடு வாழ முடியும்?"
"அதற்காக?"
"இதென்னக் கேள்வி? அதற்காக தான் மிளிராவைக் காதலிப்பதுப் போல் வேடமிட்டு, அவளையே கரம் பிடித்தேன். இவ்வுலகச் சட்டப் படி அச்சமயம் ஆழும் அரசனே அவர்களில் ஒருவரை ராஜப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதைப் பயன்படுத்தி, அவளையே அரசியாக்கினேன்."
"நீங்க நினைச்ச மாதிரி கோட்டையை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை தானே. பிறகு ஏன் என் அம்மாவை கொன்னிங்க?" என்றளின் கண்கள் கலங்கி இருந்தன.
"சிறிய திருத்தம், மிளிராவை கரம் பிடிப்பதன் மூலமாய் கோட்டையில் இருந்து வெளியேற வேண்டிய அவசியமிருக்காது என்பதால் அவளைக் காதலிப்பதுப் போல் நாடகம் நடத்த எனக்கு திட்டம் தீட்டிக்கொடுத்தது என் தந்தை. ஆனால் உன் அம்மாவை கொல்ல வேண்டும் என்று ஆசைப் பட்டது நான். அதற்கு காரணமும் உண்டு. பூனையின் வாலாய் இருப்பதை விட தலையாய் இருக்கவே நான் விரும்பினேன்(அங்க பூனை இருக்கானு கேக்காதிங்க பா.. டயலாக்காக அடிச்சு விட்டேன😅). அதுவும் உன் அம்மாவை நான் என் கைகளால் கொல்ல வில்லை. ஆழனை வைத்துக் கொல்ல வைத்தேன். மாயனின் தந்தையை கொன்று விடுவதாய் மிரட்டி, எப்படி உன்னை என்னிடம் அவனை ஒப்படைக்க வைத்தேனோ அதேப்போல் ஆழனின் பலகீனத்தை பயன் படுத்தி, அவன் தோழியை அவன் கரங்களால் கொல்ல வைத்தேன். ஆனால்.. அதற்கு காரணம், ஒரு ராஜ வாரிசை மற்றொரு ராஜ வாரிசால் தான் அழிக்க முடியும் என்பது மட்டுமல்ல " என்றான்.
"வேறென்னக் காரணம்?" என அதிர்ந்தவளிடம்,
"எனதுக்குறி வெறும் மிளிராவிற்கு மட்டுமில்லை. ஆழனிற்கும் தான்."
"ஆனா ஏன்?"
"மிளிராவை மட்டும் கொன்றால் நான் மீண்டும் ராஜப் பதவியில் அமருவதற்கு ஆழன் தடையாய் இருக்க மாட்டானா?"
"புரியலை"
"ஆழன் மிளிராவைக் கொல்ல முயற்சித்தால், அவள் சுலபமாய் தன் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டாள். அவளால் அப்படியொரு துரோகத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தேன். இருவருக்கும் இடையில் கண்டிப்பாய் கலவரம் வெடிக்கும். அதன் விளைவாக.." என்று நிறுத்தியவன்
"இறுதியில் இருவரும் அழிவார்கள் என்று எதிர்பார்த்தேன்." என்றான்.
"ஆனால் நான் நினைத்தது வேறு நடந்தது வேறு. தன் சக்தியை உனக்கு கொடுத்துவிட்டு அவள் போய் சேர்ந்துவிட்டாள்."
"அ..அப்போ நான் ராஜா வாரிசா..?!"
"ஆம்" என்றான் அழுத்தமாய்.
"அதுக்கு என்னை எதுக்கு இப்போ கொல்ல துடிக்குற?"
"உன் அன்னையைப் போலவே நீயும் பெரிய முட்டாள் என்பதை அடிக்கடி நிருபிக்கிறாய். இதென்னக் கேள்வி, ராஜ வாரிசான நீ, நாளை இவ்வுலகை நான் ஆள்வதற்கு தடையாய் வந்து விடக்கூடாதல்லவா..!? இப்பொழுது உண்மைகளை வேறு அறிந்துவிட்டாய் உன் அம்மாவை நான் கொன்றதறக்காக பழி வாங்க கிளம்பிவிட்டால்?" என்றவன்,
"எனவே செல்.. உன் தாயிருக்கும் இடத்திற்கு செல் அவள் அங்கே உனக்காக காத்துக்கொண்டிருப்பாள்." என்றவன், அவளின் காலினடியில் இருந்த பாறையை ஓங்கி மிதித்தான். அது அந்த பல்லாத்தாக்கில் விழுந்து மறைந்துவிட, நிற்க பிடிமானம் இல்லாமல் இருக்கைகள் சேர்த்து மரத்தின் கிளையில் கட்டப்பட்ட நிலையில் அந்தரத்தில் தொங்கினாள் நிலா.
அவள் எடை முழுவதும் அவள் கைகளில் விழவே, அவளால் அந்த வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கைகள் இரண்டும் பிய்ந்து விடுவதுப் போல் இருக்க, அவளின் கன்னங்களை நனைத்துக்கொண்டிருந்ததுக் கண்ணீர்.
வலியில் துடித்துக் கொண்டு இருந்தவளைக்கண்டு ஆனந்தமாய் சிரித்துக்கொண்டிருந்தான் கொம்பன்.
"ப்ளீஸ்.. க..கட்டை அவிழு.."என கெஞ்சியவளைக் கண்டவன், தன் வாலை உறுவி "அறுத்து விடவா..?!" "கயிற்றை..!" எனக்கூறிச் சிரித்தான்.
கயிர் அறுந்தால் கீழேயுள்ள பல்லத்தாக்கில் விழுந்துவிடுவோம் என்று உணர்ந்தவள், "வே.. வேண்டாம்.." எனக் குரல் நடுங்க கூற,
"வேண்டாமா..!? ஆனால் எனக்கு வேண்டுமே.." என்றவனிடமிருந்து தப்பிக்க வழியில்லாமல், "உன்னைக் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என்னை விட்டுடு. என்னால முடியல." என்றுக் கெஞ்சினாள்.
"ஆரம்பித்த எந்தச் செயலையும் பாதியில் விட்டு எனக்கு பழக்கமில்லையே. என்ன செய்வேன் நான்!?, இருந்தும் என் ஆசை மகள் நீ கேட்டு என்னால் மறுக்க முடியுமா?" என்றவன்,
"என்றவன் உன்னை துடிதுடிக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டு உடனே கொன்று விடுகிறேன்." என்றவன் கயிற்றை அறுக்கப் போக, "நிறுத்து" என்ற மாயனின் குரல் கேட்டு திடுக்கிட்டான் கொம்பன்.
"நீ இங்கு என்ன செய்கிறாய்..?!"
"பாதியில் விட்ட கணக்கை முடிக்க வந்துள்ளேன்."
அதைக் கேட்டு சிரித்தக் கொம்பன், "உன் பரிகாசத்தை நிறுத்து. இங்கு நடக்கப்போவதை உன்னால் தடுக்க இயலாது." என்றவன் நீல நிற ஒலிக் கதிரை தன் உள்ளங்கைகளுக்குள் திரட்டி அவன் மீது வீச, அதைத் தன் சக்தியால் தடுத்து நிறுத்திய மாயனால் சில நொடிகளுக்கு கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஓர் பாறையின் மீது வீசப்பட்டான்.
அவனின் வருகையால் நிலாவின் மனதில் துளிர்விட்ட சிறுநம்பிக்கையும் மாயனின் இந்நிலையைக் கண்டு மறைந்துப் போனது.
வலியால் அவள் கண்களும் இருட்டத் தொடங்கி பின் முழுதாய் இருண்டுப் போனது.
"அந்தோ பாவம். நீ காத்தவளின் உயிர் இன்று உன் கண் முன்னேப் போக போகிறது. அதை நீ காண வேண்டாமா? எழுந்திரியடா" எனக் கொம்பன் பாரையின் மேல் தலைத் தொங்க சாய்ந்திருந்த மாயனை நெருங்கி தன் காலால் அவன் முகத்தை நிமிர்த்தினான்.
"உன் ஆசை நிராசையாகப் போகிறது. பாவப் பட வேண்டியது நீயில்லை. நான்." எனக் கூறி மந்தகாசப் புன்னகை உதிர்த்தான் மாயன்.
"உயிர் ஓயப் போகும் நேரம் கூட உன் திமிர் அடங்கவில்லை." எனக் கூறி தன் பாதத்தால் மாயன் கழுத்தை அழுத்தியவன் அவன் திமிறியதைக் கண்டு அவனை விடுவித்தான்.
"பார். உன்னவள் உன் கண்முன்னால் உயிர் விடப் போவதைப் பார்." என்றவன் தன் ஆட்களுக்கு ஆணையிட, அவர்கள் மயங்கிய நிலாவின் கைகள் கட்டப்பட்ட கயிற்றை வெட்டப்போவதறுகு முன் தன் தலைவனைப் பார்க்க, அவன் கண்ணசைப்பில் தன் சம்மதத்தை தெரிவித்தான்.
"பெரிய வசனம் பேசினாய் அல்லவா!? இதோ உன் கண் முன்னால் அவளின் மரணம்."
அடுத்த கணம் அவர்கள் நிலாவை விடுவிக்க, சிறகில்லா பறவையாய் அவ்வுச்சியில் இருந்து தரை நோக்கி பயணித்தாளைக் கண்டு தன்னியலாமையில் "ஆஆஆஆஆஆ" வென கத்தினான் மாயன்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro