நிலா -16
அவன் பார்வையின் கூர்மைத் தாங்காமல், அவன் பார்வையில் சிக்கிய தன் கண்களை விடுவித்துக் கொண்டாள் நிலா. அங்கு சில நிமிடம் மௌனம் குடிக்கொள்ள, நிலாவின் 'ஹச்' என்ற தும்பல் சத்தம் அதைக் கலைத்தது. குளிரில் லேசாய் அவள் உடல் உதறல் எடுக்க, தான் போர்த்தி இருந்த போர்வையை அவள் மேல் போற்றியவன், அங்கேயே தங்கிக் கொள்ளு மாறு கூறினான். பின் சில நிமிடம் கழித்து என்னத் தோன்றியதோ தெரியவில்லை, "இல்லை நீ இங்க இருக்க வேணாம். வா.. நானே உன்னை அங்க விட்டுடுறேன்" என அவளின் பதிலை எதிர் பார்க்காமல் எழுந்து நடந்தான்.
அவள் உடம்பு அடித்துப் போட்டதுப் போல் வலிக்க, இருந்தும் வேறு வழியின்றி, அவனைத் தொடர்ந்தாள்.
தீடிரென அவள் மனதில் ஒரு சந்தேகம் எழ, அவனிடம் "நான் ஒன்னு கேட்கட்டுமா?" என்க "ஹம்ம்" கொட்டினான் அவன்.
"நீ தானே சொன்ன.. சோ நான் தாவாம முதல்ல இருந்து வருவேனாம். நீ எல்லாத்துக்கும் டக்கு டக்குனு ஆன்சர் பண்ணுவியாம். ஓகே?"
"நீ அப்படியே என் பேச்சைக் கேட்டு திருந்திட்டாலும்"
"என்னை குழப்பாத.. அப்புறம் நான் கேட்க வந்ததை மறந்துடுவேன்.."
"ம்ம். கேட்டு தொலையும்"
"என் அப்பா ரூம்ல நான் ஒரு பாக்ஸ் பார்த்தேன். அதுலக் கூட ஒருச் செயினும், புக்கும் இருந்தது. ஆனா அது அப்புறம் மறைஞ்சு போய்டுச்சு."
"அப்படியா...!??" என வேண்டுமென்றே ஆச்சரியப்படுவதைப் போல் நடித்தவனை பார்த்து சிணுங்கியவள்,
"விளையாடாத மாயன். உனக்கு அதைப் பற்றித் தெரியும் தானே. ரொம்ப நடிக்காத"
"சரி சரி சொல்றேன். அந்த சங்கிலி எங்கேயும் போகல உனக்குள்ள தான் மறைஞ்சிருந்தது"
"எதுக்காக...!!!?"
"அது ஒரு கவசம் மாதிரி வச்சிக்கோயேன். அன்னைக்கு இரவு நான் உன்னை தாக்குனப்போ அதனால தான் நீ இறக்கலை. அது தான் உனக்கு மறு உயிர் தந்தது."
"அப்போ அந்த பாக்ஸ்?"
"அதை நான் தான் வச்சேன். நீ அதை பார்க்கணும்னு சொல்லி தான் வச்சேன். ஆனா அதை உன் ரூம்ல இருந்து எடுத்தது நான் இல்லை. இனியன்."
"அதை ஏன் அவன் எடுக்கணும்?"
"சிம்பிள். அவன் உன்னை கொல்ல தானே வந்தான். அறிவு மேதாவியான நீ என்ன பண்ணி இருக்க? அவன் கிட்டயே போய் எல்லாத்தையும் சொல்லியிருக்க. அவனும் அதுல ஏதோ முக்கியமானப் பொருள் இருக்குனு நினைச்சி எடுத்து இருக்கான்."
"நல்ல அண்ணன். நல்ல தம்பி." என்றவள், திடீரென ஏதோத் தோன்ற "ஆனா இனியன் எங்கே? அவனை நான் பார்க்கவே இல்லையே?" என்று அவள் வினவியவுடன், சட்டென அவன் முகம் வெளிறி, கண்கள் கலங்கி விட "இனியன்.. அவன்.. இ.. இனி" என வார்த்தைகள் தடுமாற, தன் நிலையை உணர்ந்தவன் சட்டென முகத்தில் கடுமையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். பேச்சை மாற்ற வேண்டி "ஆமா.. அந்த பாக்ஸ் யாரு ரூம்ல பார்த்தேனு சொன்ன?" என சற்றே தடுமாறி வினவினான்.
"எங்க அப்பா ரூம்ல.. ஏன் அதை வச்சதே நீ தானே. உனக்குத் தெரியாதா?"
"தெரியும். இன்னொரு விஷயம் நிலா." என்றவனின் குரலில் சற்று கடுமை கூடியிருந்தது.
"என்ன..?" என தயங்கியபடி கேட்ட அவளின் கேள்விக்கு பதில் வராமல் போகவே,
"என்ன சொல்ல வந்த..? அதைச் சொல்லு மாயன்."
"அவர்.. அவர் உன் அப்பாவே இல்லை." என பெருமூச்சொன்றை வெளியிட்டுக் கூறியவன் அவள் பதிலுக்காக அவள் முகத்தையேப் பார்த்தான்.
"எ.. என்ன ?!!" என கண்கள் கலங்கி இது பொய்யாய் இருக்காதா என்ற ஆசையில் அவனை ஏக்கத்துடன் பார்த்த அவளைப் பாதியில் வெட்டி,
"அவர் உன் வளர்ப்பு அப்பா தான்.."
"நீ விளையாடுற தானே? ப்ளீஸ் மாயன் சொல்லு. நீ சும்மா விளையாட்டுக்கு தானே சொல்ற? ஐ.. ஐ ப்ராமிஸ்.. கண்டிப்பா நீ.. நீ என்ன சொன்னாலும் நான் செ.. செய்றேன். அதுக்காக என்கிட்ட பொய் சொல்லாத.. இல்லை கண்டிப்பா இது பொய் தான். பொய் தானே? மாயன், சொல்லு.." என அவன் ஒற்றை தலையசைவிற்காக அவனைப் போட்டு உளுக்கியவளை, பார்க்கத் தெம்பின்றி தான் பார்வையை தாழ்த்திக் கொண்டு 'இல்லை' என மறுப்பாய் தலையசைத்தான்.
தான் நின்ற இடத்துலேயே, தொப்பென்று விழுந்தவள், தன் உள்ளங்கைக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு, அழத் தொடங்கினாள்.
அழும் அவளையே பிரம்மை பிடித்தார் போல் எவ்வளவு நேரம் பார்த்திருப்பானோ தெரியவில்லை. பனி மழையின் வீரியம் அதிகமானதும் தான் தன்னிலை அடைந்தான். அவளருகில் அமர்ந்து அவள் தோலை தொட்டவுடன் அழுகை இன்னும் அதிகமானது.
"நிலா எழுந்திரி நம்ப கிளம்பணும்" என்றவுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
"நீ.. இதை ஏன் என் கிட்ட சொன்ன மாயன். இத்தனை நாளா நான் எதை எல்லாம் நிஜம்னு நினைச்சு லூசு மாதிரி நம்பிட்டு இருந்தேனோ, அதே மாதிரி இருந்திருப்பேன்ல. "
"உன்னை சுத்தி இருக்குறப் பொய் ஒரு நாள் உனக்கு தெரிஞ்சு தான் ஆகணும் நிலா. இது தான் நிஜம். புரிஞ்சிக்கோ"
"எது நிஜம் மாயன்?! இத்தனை நாளா யாரை நான் அப்பானு நினைச்சிட்டு இருந்தேனோ அவர் என்அப்பாவே இல்லை. இது நிஜமா? இல்லை எனக்கு அம்மா மட்டும் தான் இல்லைனு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்போ தான் புரியுது எனக்கு இரண்டு பேரும் இல்லை, நான் ஒரு அனாதைனு. இது நிஜமா?"
"நீ அனாதைனு யார் சொன்னது நிலா?!"
"போதும் மாயன் இதுக்கு மேல உண்மையை தெரிஞ்சிக்குற சக்தி எனக்கு இல்லை. உண்மை ரொம்ப கசக்குது. ரொம்பபப கசக்குது.." உடைந்தக் குரலில் கூறியவளின் கண்களில் அப்பப்பா எத்துனை வலி?
அவளை சமாதானம் செய்து குடிலை அடைவதற்குள் மாயனிற்கு பெரும்பாடாய் போயிருந்தது.
"நீ இப்படி அழுதுட்டே இருந்தா காய்ச்சல் தான் இன்னும் அதிகமாகும்" என்றவன் குடிலுக்குள் நுழைந்து அவளது போர்வையைச் சரி செய்தான்.
"நான் அனாதை இல்லையா மாயன். எனக்குனு யார் இருக்கா?" என்ற அவளது கேள்விக்கு அவன் தலையசைப்பின் மூலம் ஆமோதித்து, "இருக்காங்க. ஆனா அவங்களையே எதிர்த்து போராட தான் நீ இங்க இருக்க." என்றுவிட்டு அவளை பார்த்தவனது உதடு சிறுப் புன்னகையால் விரிந்தது. கதைக் கேட்டுக் கொண்டே உறங்கிய சிறுபிள்ளை போல் உறங்கியிருந்த அவளை, சில நிமிடம் பார்த்தவனது மனதில் சற்று நேரத்திற்கு முன் அவன் குடிலில் அவனை தூக்கத்தில் இருந்து கலைத்த மங்கை இவளின் முகம் நிழலாடியது. அவள் போர்வையால் தன் முடியை மறைத்திருந்தும், காதின் ஓரம் அவள் சிறைப்படுத்திருந்த முடி கற்றை, அவளது அனுமதியின்றி தன்னை விடுவித்துக் கொண்டு அவளின் பாதி கன்னத்தை மறைத்திருக்க, அவன் அடித்ததில் ஏற்கனவே சிவந்திருந்த அவளது மருக் கன்னம், குளிறால் இன்னும் சிவப்பேரியிருக்க, அவள் கண்களை சுறுக்கி தன் சாயமற்ற ரோஜா இதழ்களால் 'மாயன்' என அவன் கண் முன் சுடக்கிட்டதை அவனது மனம் சுலோவ் மோஷனில் மீண்டும் மீண்டும் மனத்திறையில் ஓட்டிக் காட்டியது. தலையை மறுப்பாய் அசைத்தவன் "இன்னும் ஐந்து நாள்.." என முனுமுனுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
★●★●★●★
நாள்- 5
இரவு தாமதமாய் தூங்கிய காரணத்தினால் அவளது விழிகள் திறக்க மறுக்க, அதை அதன் போக்கில் விட்டவளின் இமைகள் மூடி இருந்தாலும், தன்னை சுற்றி நடப்பது அவள் செவிகளில் விழ தான் செய்தது.
ஏதோ அரசல் புரசல்களை உணர்ந்தவள் எழுந்து பார்க்க, ஈலாவும் மாசாவும் வாசலில் நின்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களது முகத்தில் லேசான பதட்டம் நிலவியது.
அருகில் சென்றவள், அவர்களின் பார்வை விழுந்த திசையில் பார்க்க, அங்கோ, மாயனின் குடிலருகில், மாயனும், அவனை சுற்றி நான்கைந்து காவலர்களும் நின்றுக்கொண்டிருந்தனர்.
இவளைக் கண்டதும், ஈலா அவளை உள்ளே செல்ல சொல்ல, அவள் முகத்தில் இருந்த பதட்டம் அவளை காரணம் கேட்க விடவில்லை. ஒரு முறை அந்த காவலர்களின் மேல் தன் பார்வையை செலுத்தியவள், அதில் ஒருவனின் பார்வை ஏற்கனவே தன் மேல் பதிந்திருப்பதை கண்டவுடன், யோசிக்காமல் சட்டென உள்ளே மறைந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு மாயன் உள்ளே நுழைய, அனைவரும் விஷயமரிய அவனை சூழ்ந்துக்கொண்டனர்.
"இனியன்.." என கண்கள் கலங்கக் கூறியவன், மெலிதானக் குரலில் "இறந்துட்டான்.." என முடித்தான்.
அவள் தொடர்வாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro