நிலா -10
ஊரிலிருந்து வந்தாகிவிட்டது. அவளுக்கு வரவே மனதில்லை என்றாலும் ஒருநாள் வந்து தானே ஆகவேண்டும். விட்டாள் அவள் அங்கேயே இருந்துவிடுவாள். அவளை இழுத்துக்கொண்டு வருவதற்குள் ஹரிஷிற்கு தான் போதும் போதும் என்றாகிவிட்டது. அவள் கழுத்தில் இருந்த லேசான காயம் இப்பொழுது தழும்பாகிவிட்டிருந்தது. ஹரிஷ் தான் காயத்துடன் அவள் தந்தையிடம் மாட்டிக் கொண்டு எதையோ கூறி சமாளித்தான்.
ஹரிஷ் மீதான அவளின் அபிப்பிராயம் இப்பொழுது மாறியும் இருந்தது. யாரோ என்பதிலிருந்து நல்ல நண்பன் என்ற நிலை வந்துள்ளது. நீடிக்குமா என்பது சந்தேகமே.
நட்புக்காக சென்னை வந்ததும் இனியனை தொடர்புக் கொள்ள முயர்ச்சித்தாள். பலன் தோல்வியே.
இருளில் ஜொலிக்கும் நிலவை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு தன் வாழ்வில் நடந்த சில மர்மமான விஷயங்களின் நினைவு தாக்க, அதை மறக்க வேண்டி தன் எண்ண அலைகளை திசைத் திருப்பினாள். மின்னலென வந்த அந்த மாயவனின் கண்கள் அவள் மனதில் ஆணிவேராய் பதிந்து போய் இருந்தது. அது அவ்வளவு இலகுவாய் அவளை மறக்க விடவில்லை. மறக்க கூடிய விஷயமும் இல்லை.
சிந்தனையில் இருந்தவளிற்கு இரவு பசி வயிற்றை கில்ல எழுந்து கிச்சன் சென்றாள்.
அங்கோ, அவள் தந்தை சமையல் செய்து கொண்டிருப்பதைக் கண்டவள், அவரை பின்னாலிருந்து இழுத்து "அப்பா.. நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிங்க?" என்க, அவளை பார்த்து சிரித்தவர் பின் "இதுல என்ன இருக்கு என் பொண்ணுக்காக நான் பண்றேன்!" என்றார்.
"ருத்ரா மா எங்க?"
"நான் தான் போக சொல்லிட்டேன். ஹரிஷ்கு போன் பண்ணேன். ஏதோ பெண்டிங் வர்க் இருக்காம் சோ லேட்டாதான் வருவன்னு சொல்லிட்டான். சோ இன்னிக்கு டின்னர் வெறும் நானும் என் பொண்ணும் மட்டும் தான்"
"மிஸ்டர். அஷோக்.. மிஸ்.நிலா அஷோக் இருக்கும் போது உங்களுக்கு ஏன் டென்ஷன்?! சோ இன்னிக்கு சமையல் என்னோடது தான்" என அவரை பிடித்து பக்கத்தில் இருந்த டைனிங் டேபிலில் உக்கார வைத்தவள், திரும்பி காய்கறிகளை நறுக்கத் தொடங்கினாள்.
அதுவரை அமைதியாய் அமர்ந்திருந்தவர் அவள் திரும்பியவுடன், அருகில் இருந்த கூரான கத்தியை தன் பிடிக்குள் கொண்டு வந்தார்.
சத்தம் எழுப்பாமல் மெல்ல எழுந்தவர், ஒரு ஒரு அடியாய் எடுத்து வைத்து அவளை நெருங்கத் தொடங்கினார்.
அவர் கண்ணில் குரோதம் தெரிய, உதடுகள் வன்மமாய் சிரிக்க, இப்போது அவர்களுக்கு இடையில் வெறும் ஒரு அடி இடைவெளி தான் இருந்தது.
தன் கையிலிருந்த கத்தியை சரியாய் அவள் கழுத்தை பதம் பார்க்கும் படி உயர்த்தி பிடித்தார். அதேச் சமயம் அவர் பின்னாலிருந்து வந்த ஒரு கத்தி சரியாய் அவர் பின்னங்கழுத்தின் நடுவில் சொருகியது. கண்கள் மேலேற, நின்றபடி மூர்ச்சையானவரின் கையில் இருந்த கத்தி அவர் பிடியிலிருந்து நழுவி கிழே விழுந்தது.
அதன் சத்தத்தில் நிலா திரும்பவும், அவள் தந்தை பின்னால் சாயவும் சரியாய் இருந்தது.
ரெத்த வெள்ளத்தில் கிடந்த தன் தந்தையை கண்டு அலறியவள் அவர் தலையை தூக்கி தன் மடியில் வைக்கும் போது தான், அவர் பின்னங்கழுத்தில் கத்தி குத்தப் பட்டிருப்பதை கண்டாள்.
குத்தியவர் யார்? என நிமிர்ந்தவளின் கண்கள் தன்னால் இயன்ற வரை பெரிதாய் விரிந்தன.
அவளது தொண்டைக்குழி ஏறி இறங்க, கண்களின் வழியே மனதின் வலி தெரிய, உதடுகள் தெம்பின்றி கடினமாய் "ஹ..ஹரிஷ்ஷ்" என்ற மெலிந்த குரலில் அழுத்தத்திற்கு குறைவில்லை.
ஆம் அந்த கத்தியை வீசியது அவனேதான்.
ஆனால் காரணம் ஏனோ?
அவனது கலைந்த முடியும், ஏறி இறங்கும் மார்பும், வேர்வையால் நினைக்கப்பட்ட சட்டையும் அவன் ஓடி வந்திருக்கிறான் என்பதற்கான அறிகுறி. அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் நிலா இல்லை.
அவளது மனம்முழுக்க ஏமாற்றமும், வலியும், ஏன்?! என்கிற கேள்வியும் நிறைந்திருந்தது.
"சீக்கிரம் என்கூட வா.. நம்ப உடனே கிழம்பனும்" என அவளருகில் சென்றவன், ரெத்தக் கறைப் படிந்த அவளின் கையை பிடித்து இழுக்க, வெடுக்கென உறுவினாள் அவள்.
இப்பொழுது அவளின் உதடுகள் ஒரு விரக்தி புன்னகையை சூடி இருக்க, அந்த கலங்கிய கண்களில் "ஆர் யு கிட்டிங் மீ?" என்பதுப் போல் ஒரு பார்வை.
"நிலா ப்ளீஸ்.. என்கூட வா.. நான் சொல்றதைக் கேளு" அவளிடம் பதில் இல்லை. பார்வையை தாழ்த்தி தன் தந்தையை பார்த்தவளுக்கு அழுகை வெடித்தது.
"ட்ரஸ்ட் மீ நிலா. என்கூட வா.. உன்னுடைய புதிர்கான விடையை நான் தர்றேன்.." என அவன் கூறி முடிக்கும் முன் சட்டென நிமிர்ந்து அவனை அர்த்த பார்வை பார்த்தவளிடம், தன் கையை நீட்டினான்.
"எனை நம்பு" என்றவனின் வார்த்தையில் இருந்த ஆழமான உண்மையையும் பதற்றத்தையும் அவளால் உணர முடிந்தது. இதுவரை யார் மேலும் அவள் வைத்திறாத அளவுக்கதிகமான நம்பிக்கை அவன் ஒற்றை வாக்கியத்தில் உருவானது. என்ன விதமான நம்பிக்கை இது? இப்படிக் கூட ஒருவனை என்னால் நம்ப முடியுமா? என்ற கேள்விகளை புறம் தள்ளியவள், எதுவும் பேசாமல் தன் அழுகையை உள்ளிழுத்துக் கொண்டு அவன் கரத்தில் தன் கரத்தை பொருத்தினாள்.
அதே கைதான் தன் தந்தையைக் கொன்றது என நினைக்கும் போது அருவருப்பாய் இருந்தாலும், அவளது மனம் கூறியதையே செய்தாள்.
தன் கண்ணால் பார்த்த பிறகும் அவள் மனம் அவனை நம்புகிறது என நினைக்கும் போது அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தாலும், மந்திர கட்டுக்கு கட்டுப்பட்டவள் போல் எங்கே என்று இடம் தெரியாத பயணம் அவனோடு ஆரம்பமானது அவளுக்கு.
ஏன்? எதற்கு? என்றுக் கூட தெரியாமல் ஒரு மணி நேரம் அந்த இருள் பாதையில் கால்கள் கடுக்க நடந்தாகி விட்டது. இவனோடு எதுக்கு போகிறாய்? என அவளின் சிந்தை குமறியது.
காரணம் அவளுக்கும் தான் தெரியவில்லை. இறந்த என் தந்தையை விட்டு விட்டு அவர் இறப்பிற்கு காரணமான இவனோடு எதற்கு வர வேண்டும்!? அதற்கென்ன அவசியம்?
அவன் வார்த்தையிலும் கண்களிலும் உண்மை இருக்கிறது என நம்பியா? இது முட்டால்த்தனம் இல்லையா? இல்லை என் அறியாமையா? இப்பொழுது உணர்ந்து பயனில்லை. அவனை பின் தொடர்வதை தவிற அவளிடம் வேறு வழியில்லை. அவனை எதிர்க்க தன்னிடம் சக்தியில்லை என புரிந்துக்கொண்டாள் பேதையவள்.
ஆனால் அவளது காலகள் தான் அதற்கு ஒத்துவரவில்லை. ஓயவுக் கேட்டு மன்றாடியது. ஒரு மரத்தை பிடித்துக்கொண்டு சரிந்து அமர்ந்தாள். அவளது காலடிச் சத்தம் நின்றதை உணர்ந்தவன் திரும்பி பார்த்து, அவள் அமர்ந்திருந்த மரத்தின் அருகில் வந்தான்.
"வெறும் ஒன் ஹார் மட்டும் தான்.. அப்புறம் மறுபடியும் கிழம்பனும்.." என அவன் கூற, முகத்தை திருப்பிக் கொண்டாள். எங்கே என்று கேட்கும் மனநிலையில் கூட அவள் இல்லை. கதறி அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு. ஆனால் கண்களில் கண்ணீர் வற்றிப் போய் அவளை சித்திர வதை செய்தது. அந்த நிலையிலேயே அவள் தூங்கி விட்டாளும் இவன் முழித்துக் கொண்டு தான் இருந்தான். சிறிது நேரத்தில் அவனும் அயர்ந்து விட்டான் போலும்.
அந்த இருளின் நிசப்த்தத்தில் சில காலடி சத்தத்தை அவனால் உணர முடிந்தது. அவன் மூளை எச்சரிக்கை மணி அடித்தவுடன் சட்டென முழித்துக் கொண்டான்.
காதை கூர்மையாக்கிக் கொண்டு, நிலாவைப் பார்த்தான். அவள் இன்னும் எழவில்லை. சில நிமிடத்துக்குப் பின் அந்த காலடிச் சத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கின. அந்த இருளிலும் தன் பார்வையை தீட்டினான்.
காலடிச் சத்தங்கள் தங்களை நெருங்குவதை உணர்ந்தவன் எழுந்து நின்றுகொண்டான். இப்போது அந்த சத்தம் மறைந்து விட்டதை உணர்ந்தவன் பெருமூச்சொன்றை வெளியிட, அவன் நின்றுக்கொண்டிருந்த இடத்தின் மேலிருந்த மரத்தின் கிளையிலிருந்து திடீரென ஒருவன் அவன் மேல் குதிக்கவும், சுதாகரித்துக் கொண்டு லாவகமாக தப்பித்துவிட்டான்.
குதித்தவன் கருப்புடையையும் முகத்திறையையும் அணிந்து தன்னை மறைத்திருந்தான். அவன் கையிலிருந்த வால் நிலவொளியில் பலபலத்தது.
முழுவீச்சில் அவன் வாலை ஹரிஷ்ஷை நோக்கி வீச, கடைசி நுனியில் தப்பித்தவன், அவன் எதிர்ப்பாக்காத நேரத்தில் அவன் தாடையில் ஒரு குத்துவிட்டு வாலை அவனிடம் இருந்து பரித்துக் கொண்டான்.
இப்போழுது அந்த கருப்புடை அணிந்தவனைப் போலவே நான்குப் பேர் அவனை சுற்றி நின்றனர். அதில் ஒருவனின் கண் பச்சை நிறங்களைக் கொண்டிருந்தது. கணகளை வைத்தே அது யார் என கண்டுக்கொண்டவனின் முகத்தில் ஒரு நிமிடம் அதிர்ச்சி தெரிந்து பின் மறைந்தது.
தன்னை சகஜமாய் காட்டிக்கொள்ள சிறிது சிரமப்பட்டான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒரு உண்மை.
சத்தம் கேட்டு எழுந்த நிலாவை பின்வாங்குமாறு ஹரிஷ் சைகை செய்தான்.
தன்னை சுற்றி நிற்பவர்களை தன் பார்வையால் அளந்தவன் தாக்குதலை எதிர்நோக்கி நிற்க, பச்சை கண்களை உடையவன் நீல நிற கதிரை இவனை நோக்கி பாய்ச்சினான். அந்த இடமே அதனால் நீல நிறத்தில் பிராகாசித்து பின் ஓய்ந்து போனது.
"மாயன்.. நீயா?" ஹரிஷைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் ஹரிஷை நோக்கி கேட்க,
அவனது வார்த்தைகள் புரியாமல் அவள் ஹரிஷை பார்க்க, அதிர்ச்சி ஆவது இப்போது நிலாவின் முறையானது.
காரணம் ஹரிஷின் இடத்தில், நிலாவின் கனவில் வந்த அதே பச்சை நிறக் கண்களை உடையவன் நின்றிருந்தான். அவளுக்கு தலையே சுத்தியது அவன் தான் இவனா? இல்லை இவன் தான் அவனா? இதென்ன கனவா? மாயமா மந்திரமா? மாயாஜால படங்களில் வருவதுப் போல் உருவம் மாற்றும் யுக்தியா?
அதே அதிர்ச்சியுடன் திரும்பியவளுக்கு இன்னொரு அதிர்ச்சி. அப்போது தான் தன்னை தாக்க வந்த நால்வரின் ஒருவனுக்கும் பச்சை நிறக் கண்கள் இருப்பதைக் கண்டாள்.
ஒரே நேரத்தில் இரண்டு பச்சை நிறக் கண்களை உடையவர்களா?
ஹரிஷின் உருவில் இருந்தவன் தான் கனவில் வந்தவன். அதாவது தன்னைக் காக்க வந்தவன். அப்படி என்றால் புதிதாய் வந்தவன் யார்? தன்னை அழிக்க வந்தவனா?
"பரவாயில்லை.. கண்டுக்கொண்டாயே இனியா" என ஹரிஷ் கூறியதும் நிலா தன் சுயம் திரும்ப, இனியன் தன் முகத்திறையை கலற்றினான்.
'இனியா?!' அவளின் கண்கள் பெரிதாய் விரிய, அவளுக்கு புரிந்துப் போனது. அன்று தன்னை கடலுக்குள் இழுத்தது இனியன் தான் என்றும், அவள் கையில் சிக்கிய செயினும், அவனுக்கு சொந்த மானது தான் என்று.
"நம் தந்தையின் இறப்பிற்கு இவள் தான் முக்கிய காரணமென்று அறிந்தும்.. இவளை நீ ஏன் காக்க நினைக்கிறாய் மாயா?" இனியனின் வார்த்தைகள் கனிரென அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.
"இவள் சாக வேண்டியவள் தான்.. அதை நானும் நன்கறிவேன்.." எனக் கூறியவன் தன் கையை காற்றில் சுழற்றி அதை பந்துப் போல் செய்து அவள் மேல் எதிர்பாராத நேரத்தில் வீசினான்.
அதன் வேகத்தில் பின்னாலிருந்த மரத்தில் மோதியவள், சரிந்து மடங்கி விழுந்தாள். மாயனின் இந்தச் செயலை அவள் மட்டுமல்ல, இனியன் கூட சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நடப்பவை கனவா நினைவா என்று புரியாமல் எழ முற்பட்டவளால் எழ முடியவில்லை. பின்னந்தலை வலியால் கணத்தது. முதுகில் மின்னல் வெட்டியது. ஹரிஷ் ஏன் தன்னைத் தாக்க வேண்டும்? இல்லை இல்லை ஹரிஷ் உருவில் இருந்த மாயன். என் தந்தையையே கொன்றவனாகிட்டே என்னை கொல்ல மாட்டானா என்ன?.. ஆனால் அவர்கள் தந்தையின் இறப்பிற்கு நான் காரணம் என்கிறார்கள்?!, நான் எந்த விதத்தில் காரணமாய் இருக்க முடியும்?,
அவனை நம்பி வந்தது, நான் செய்த பெரிய முட்டாள்த்தனம். இன்று சாவதற்கு காரணம் தெரியாமலேயே சாகப்போகிறேன்.. என அவள் கண்களை மூடும் போது, ஹரிஷ்.. இல்லை இல்லை.. மாயன் இவளை நெருங்கி மீண்டும் தொடர்ந்தான்.
"நம் தந்தையின் உயிர் பிரிய காரணமாய் இருந்தவளின் உயிர் என் கையாலே போக வேண்டுமடா." எனக் கூறியவன், தன் வாலால் இவளின் வயிற்றை கிளித்தான்.. அடுத்த வீச்சு அவளின் நெஞ்சுக் கூட்டுக்குள் ஊடுறுவியது.
'புதிர்களுக்கான விடையை தருகிறேன் என்றழைத்து வந்தாயடா? புதிர்களுக்கு பதில் மரணத்தைத் தரவா? இல்லை புதிர்களுடனே உயிர் விடவா?'
அவள் தொடர்வாளா?..
_________________________
Makkaley makkaley... Nxt sunday ud podlaamnu ninachen.. bt aarva kolaar la inaikkey pottuten..
Yenna maa ipdi pannitiyeh ma nu neenga thitturadhu enakku kekkudhu.. wait pannungoo.. wait pannungoo.. poruththaar boomi aalvaar..
Ud epdi irukkukku nu kandippa marakkaama cmnt pannitu ponga..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro