Episode 24
பழைய நிகழ்வுகளின் தாக்கத்தை தாங்க முடியாத மலர் அதற்கு.மேல் சிந்திக்க முடியாதவளாய் நிகழ்வுலக்த்திற்கு திரும்பினாள்.அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது ,ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழ துவங்கினாள்.
மலர் அழும் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த மலரின் தாய் சாரதா , தன் மகள் அழுவதை கண்டு வேகமாக அவளருகில் சென்று அவளை தன் மீது சாய்த்துக்கொண்டார். இரண்டு வருடங்களாக தேக்கி வைத்திருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமென வெளிவந்ததை நினைத்து சிறு ஆசுவாசமடைந்தது அந்த தாயுள்ளம். அவளை அழவிட்டு முதுகில் தடவிகொடுத்தார்.
தன் தாயை நிமிர்ந்து பார்த்த மலர்," நான் என்ன தப்பு மா செஞ்சேன்? எதுக்காக எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை. என்ன ஏன் மா பெத்தீங்க கருவுல யே என்னை கலைச்சு இருந்தா நான் இவ்ளோ கஷ்டப்படாம நிம்மதியா இருந்திருப்பேன் ல, ஏன் மா நான் எவ்ளோ சந்தோஷமா பட்டாம்பூச்சியா தாத்தா, பாட்டி கூட இருந்தேன். அவங்களோட எதிர்பாராத மரணத்தால நான் உடைஞ்சு போய்டேன், அந்த அதிர்ச்சில இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தேன் , அப்பதான் என் குருவை சந்திச்சேன். பாலைவனத்துல கிடைச்ச பழச்சாறு மாதிரி என்னோட வாழ்க்கையில வந்தாரு. இனிமையா இரண்டு வருஷம் சந்தோஷமா வாழ்ந்தேன் யாரோட கண்ணு பட்டுச்சோ தெரியல கைல கிடைச்ச வாழ்க்கையோட சந்தோஷத்த அனுபவிக்கிறதுக்கு முன்னாடியே கடவுள் அந்த வாழ்க்கைய என் கைல இருந்து பிடிங்கிட்டாரு.
இன்னைக்கு என் கண்ணு முன்னாடி என் புருஷன பார்த்தும் சொந்தம் கொண்டாட முடியாத அபாக்கியவதியா , கோழை மாதிரி இங்க வந்து அழுதுட்டு இருக்கேன். என்னால தாங்க முடியலை மா ,எனக்கு வாழவே பிடிக்கலை. எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது? "என்று தேம்பி அழும் மகளை ஆசுவாசப்படுத்தி தன்னுடைய தூக்க மாத்திரை யை பாலில் கலந்து அவளை வலுகட்டாயமாக பருக வைத்தார்.
பாலை குடித்துவிட்டு புலம்பியபடி யே இருந்த மலர் சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள்.
இந்த இரண்டு வருடங்களாக அவள் மனதில் இருந்த எண்ணங்களை வெளியே கூறாமல் இருந்த மலர், இன்று குரு வை நேரில் பார்த்தும் பழைய நினைவுகள் நெஞ்சில் எழ அழுத்தம் தாங்காமல் வெடித்து விட்டாள் என்ற உண்மை புரிய தன் மகளின் நிலை யை குறித்து வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு தன்னறை நோக்கி சென்றார்.
***********
குரு தங்கியிருந்தது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு. அவனும் அவன் நண்பன் கௌதமும் அதில் சேர்ந்து வசித்தனர். மலர் தன் கடந்த காலத்தை நினைத்து கவலை கொண்ட அதே நேரம் குருவும் அதே சிந்தனையில் தான இருந்தான். எப்படி எப்படியோ முடிந்திருக்க வேண்டிய தங்கள் திருமண வாழ்க்கை எதிர்பாராத விதமான செயல்களால் பாதிக்கப்பட்டதை நினைத்து வேதனை கொண்டான்.
தன் அறையிலிருந்து வெளியே வந்த கௌதம் , ஹாலில் அமர்ந்திருந்த குரு வை பார்த்து புருவங்கள் முடிச்சிட அவனருகில் அமர்ந்தான். எப்பொழுதும் கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஷார்ட்ஸ் டீஷெர்ட் அணிந்து கொண்டு கையில் காபியுடன் தனக்காக காத்திருக்கும் தன் நண்பன், இன்று தன்னுடைய சிந்தனையில் மூழ்கி இருந்தை பார்த்தவன். அவனை மெதுவாக அழைத்தான்.
தன்னுடைய நினைவுகளில் மூழ்கியிருந்த குரு கௌதமின் குரல் கேட்டு சுயநினைவடைந்தான். கௌதம் உடை மாற்றி தன்னருகே அமர்ந்திருப்பதையும் தன்னை குழப்பமாக நோக்குவதையும் பார்த்த குரு ,"இரு டா நான் ஃபெரெஷ் ஆகிட்டு வந்தர்றேன் " என்று கூறி தன்னறை நோக்கி சென்றான்.
அவன் திரும்பி வரும்போது தனக்காக காபியுடன் அவன் காத்திருப்பதை பார்த்து அமைதியாக அவனருகே வந்தமர்ந்தான்.
மெதுவாக தன் கப் காபியை ரசித்து ருசித்து பருகத்தொடங்கிய குருவை கொலை வெறியுடன் நோக்கிய கௌதம்," நல்லா குடி டா , பார்த்து சீக்கிரம் காலி ஆகிட போகுது மெதுவா குடி. இப்ப நீ காபி குடிக்கிறது தான் ரொம்ப ரொம்ப முக்கியம். குடி குடி," குரலில் கோபம் பொங்க கூறிய கௌதமை பார்த்த குரு இனியும் இவனிடமிருந்து மறைக்க இயலாது என்று தெரிந்து கொண்டான்.
நிதானமாக கௌதமை நோக்கிய குரு ," இப்ப உனக்கு என்ன பிரச்சினை , ஏன் இவ்ளோ கோபப்படற " என்று கேட்டான்.
" ஏன்டா நான் ஏன் கோபப்படறேன் அப்படீ னு உனக்கு தெரியாது, அப்படி தானே? "
" நீ ஏன் கோபமா இருக்கே னு எனக்கு எப்படி டா தெரியும். நீ தான் சொல்லனும்."
அப்பொழுதும் கூட அவனுக்கு தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ளாத குருவை கோபம் கொப்பளிக்க பார்த்த கௌதம், " சரிடா நீங்க உங்களுக்கு தெரிஞ்சமாதிரியெல்லாம் காட்டிக்கிட்டா உங்க கிரீடம் கீழ இறங்கிடும், நானே சொல்றேன். உனக்கும் மலர்வதனி க்கும் நடுவுல என்ன நடக்குது." என்று தன் சந்தேகத்தை கேட்டான்.
" ஏன்டா இப்படி எல்லாம் பேசுற ?? என்னைக்காவது ஒருநாள் நான் உங்கிட்ட அப்படி பழகி இருப்பேனா நீ் என்னை புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதானா?" என்று குரலில் வருத்தத்துடன் கேட்டான்.
தன் நண்பன் வருத்தப்படுவது பொறுக்காமல் கௌதம் ," சாரிடா ஏதோ கோபத்துல அப்படி சொல்லிட்டேன்."
" சரி விடு டா நானும் உங்கிட்ட முதல்ல யே எங்களை பத்தி சொல்லியிருக்கனும் ," என்று கூறிய குரு தான் மலர்வதனியை சந்தித்தது முதல் அவள் அவன் வீட்டைவிட்டு வெளியேறியது வரை கூறி நிறுத்தினான்.
குரு கூறியதை கேட்ட கௌதம் ,"என்னடா சொல்ற உனக்கும் மலருக்கும் கல்யாணம் ஆயிடுச்சா? என்னால நம்பவே முடியலை, சரி அப்பறம் நீ மலர தேடி போனியா?" என்று வினவினான்.
மீண்டும் அந்த கரிய தினத்திற்கு பயணப்பட்டது குருவின் நினைவுகள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro