episode 2
பீப் ......பீப் .........ஒளி கேட்டு சோம்பலாக கண் விழித்தாள் மலர்வதனி. நேரம் 5.30 என காட்டியது . வேகமாக தன் படுக்கையை விட்டு எழுந்தவள் குளித்துமுடித்து கிச்சனை நோக்கி விரைந்தாள்.காலை மதியம் இருவேளைக்கான உணவு தயாரிப்பை முடித்தவள் தனக்கு தேவையானவற்றை ஒரு சிறு டிபன் பாக்ஸில் எடுத்துக்கொண்டு தன் காலை உணவை உண்ண அந்த யாருமற்ற ஹாலில் அமர்ந்தாள். மலரின் எண்ணங்கள் சில வருடங்களுக்கு முன் பயணிக்க துவங்க அதை தடுக்க ஒரு நிமிடம் கண் மூடி யோசித்த மலர் பின்பு ஒரு பெருமூச்சுடன் வேகமாக சாப்பிட்டு எழவும் கதவை திறந்து கொண்டு மலரின் தாய் சாரதா வெளியே வரவும் சரியாக இருந்தது.
ஒரு நிமிடம் நின்று தன் தாயை நோக்கியவள் பின்பு வேகமாக உள்ளே சென்று விட்டாள் . சாரதாவின் பார்வை ஏக்கத்துடன் தன்னை தொடர்வது தெரிந்தும் தனது மௌனதிறையை நீக்க மலரின் மனம் மறுத்து விட்டது.
" இன்னைக்கு தான் வேலையில் சேரணுமா மலர் ?"என்று கேட்டுக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தார் சாரதா.
மலர் சமையலை முடித்து மற்ற வேலையையும் முடித்து வைத்திருந்ததை பார்தவர் ,"என்னை எழுப்பி இருக்களாம்ல நான் சமைக்க மாட்டேனா ,"என வேதனையுடன் கேட்க திரும்பி தன் வழக்கமான மௌன பார்வை பார்துவிட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
தனது கேள்விக்கு பதில் வராது என்று தெரிந்தும் இந்த 2 வருடங்களாக அவர் கேள்வி கேட்பதை நிறுத்த வில்லை. பதில் சொல்லாமல் செல்லும் மகளை நினைத்து இன்றும் மனதிற்குள் அழுகிறார்.
ஹாலில் அமர்ந்த சாரதாவிற்கு 2 வருடங்களுக்கு முன்பிருந்த மலர் கண் முன் தோன்றினாள் .பட்டாம்பூச்சியாய் தன்னை சுற்றி கவலைகள் இன்றி வாழ்ந்த மகள் இன்று தனக்குள்ளே வேலியிட்டு அதை விட்டு வெளி வர விரும்பாமல் வாழ்ந்து வருவது மிகவும் வேதனையாக இருந்தது.
எண்ண ஓட்டத்தை தடை செய்தது மலரின் வருகை இள நீல நிற சுடிதார் அவளது மஞ்சள் நிறத்திற்கு மிகவும் பாந்தமாக பொருந்த, தோள்வரை இருந்த முடியை போனி டையல் போட்டு சிறிதும் ஒப்பனை இன்றி தேவ லோக மங்கையென வந்த மகளை கண்ட தாயுள்ளம் என்றும்போல் இன்றும் பெருமை கொண்டது.
"நான் வேலைக்கு போறேன் வர லேட் ஆகும் பத்திரமா இருந்து கோங்க," என்று கூறி வேகமாக தன்னுடைய scooty pep ல் சென்றுவிட்டாள் மலர்.
போகும் மகளை பார்த்து கண் கலங்கிய தாய் தன் மகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் வழி தெரியாதவராக அங்கேயே நின்றார்.
குறித்த நேரத்திற்கு முன்பாகவே கல்லூரிக்கு வந்து விட்ட மலர் நேராக முதல்வரின் அறைக்கு சென்றாள்.
"வணக்கம் டீச்சர் ,"என்று புன் சிரிப்புடன்வந்தார் கந்தசாமி பியூன்.
"வணக்கம் அண்ணா சார் இல்லையா.?" நேர்காணலின் போதே அறிமுகமான ப்யூனை பார்த்த புன் சிரிப்புடன் கேட்ட மலரை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
"ஆமாங்க மேடம் சார் இன்னைக்கு வரலை நீங்க நேரா டிபார்ட்மென்ட்க்குகே வாங்க நான் கூட்டிட்டு போறேன்," என்று கூறிய அவரை பின்தொடர்ந்தாள் மலர்.
ஸ்டாஃப் ரூம்
அங்கே கார்முகிலன் மிகவும் பரபரப்பாக ஏதையோ தேடிக்கொண்டிருந்தான், மெதுவாக அவன் புலம்பும் சத்தமும் கேட்டது ,"நேத்து சார் குடுத்த அந்த புது லெக்சரரோட ஃபைல எங்க வச்சான் இந்த கௌதம் ,"என்றவன் பின் தனது மொபைலை எடுத்து ,"டேய் எருமை அந்த ஃபைலை எங்கடா வச்ச?" என்று வினவினான்.
"ஹீஹீஹீ😊😊 சாரிமச்சி நேத்து ஃபைலை எடுத்து பாத்தேனா? அந்த பொண்ணு ரொம்ப அழகா இருந்துச்சா பாத்துகிட்டே இருக்கனும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடேன்டா......." என்று கூறி அசடு வழிய மறு முனையில் அமைதி ,"டேய் காரு.....பைக்கு...... ஏய் .....எதாவது பேசுடா...... அமைதியா மட்டும் இருக்காதடா..... டேய்.....," என்று கத்திய கௌதமின் காதுகளில்," அறிவுகெட்ட முன்டம் ,பன்னாட, பரதேசி, dash dash dash dash__________________________________
_________________;;;
நீ யெல்லாம் ஒரு லெக்சரர் வைடா ஃபோன " என்று கத்தி காலை கட் செய்தான்.
இங்கு கௌதமோ," அம்மாடி ஏன்டா அமைதியா இருக்கன்னு கேட்டதுக்கு இப்படி டோட்டலா டேமேஜ் பண்ணிடானே, நல்ல வேளை யாரும் கேக்கல." என்று தன்னைதானே சமாதானம் செய்துக்கொண்டு வேகமாக கல்லூரியை நோக்கி விரைந்தான்.
பியூன் கந்தசாமியின் பின்னே வந்த மலர் அந்த அறையின் வாசலில் நின்ற கந்தசாமியை கேள்வியுடன் நோக்கினாள்," மேடம் இது தான் ஃபிசிக்ஸ் டிபார்ட்மென்ட் நம்ம பெரிய சார் இருப்பாரு நீங்க போங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு," என்று கூறி அத்துடன் அவன் வேலை முடிந்ததென்று அவன் விடைபெற்றுக்கொண்டான்.
உள்ளே நுழைந்த மலர் திரும்பி நின்றிருந்த முகிலனை பார்த்து ,"எக்ஸ்கியூஸ் மீ சார் ," என்று அழைக்க ,
" யெஸ் ஃப்ளீஸ்," என திரும்பிய முகிலனை பார்த்த மலர் சிலையானாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro