Episode 18
விஷ்வநாதனுடன் குரு வை பார்த்த பிரபாகரனுக்கு அதிர்ச்சி,ஆச்சரியம், கோபம் என்று பல உணர்ச்சிகள் தோன்றியது.அவன் குரு வை இங்கு எதிர்பார்க வில்லை என்பதை அவன் முகத்திலிருந்து தெரிந்து கொண்ட விஷ் ,பிரபாகரனிற்கு மலரின் காதல் தெரியும் என்று உணர்ந்து கொண்டான்.
மலரின் தாய் சாரதா மலருடன் அறையில் இருந்தார்,மலரின் தந்தை யும் பிரபா வும் வெளியே அமர்ந்து இருந்தனர்.
குருவை நோக்கிய விஷ் நீங்க உள்ள போங்க மலர் இந்த அறை ல தான் இருக்கா என்று கூறினான்.அந்த வார்த்தைக்காகவே காத்திருந்தது போல வேகமாக உள்ளே நுழைந்தான் குரு.
இப்பொழுது ராமநாதன் விஷ் ஷை கேள்வியாக பார்தார்.விஷ் அவரின்.அருகே வந்து,"அவர் பேரு குரு ,மலர் அவரை தான் விரும்புறா"
"உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா? பிரபாகரனோட அப்பாகிட்ட இப்பதான் சம்மந்தம் பேசிட்டு வந்தோம்,அதுக்குள்ள ஒரு பரதேசிய கூட்டிட்டு வந்து இவன தான் மலர் காதலிக்கிறதா சொல்ற?"
பிரபாகரன்,"விஷ் திஸ் இஸ் டூ மச் இப்ப அவ என்னுடையவள் அவளை நான் யாருக்காகவும் விட்டுகுடுக்க மாட்டேன்."
"பிரபா நான் உன்கிட்ட நைட் பேசம்போது என்ன சொன்னேனு யோசிச்சு பாரு."
(நேற்று இரவு நடந்த சம்பாஷனைகளை மனதில் நினைத்துப்பார்தான் பிரபா
விஷ் - பிரபா அப்பாகிட்ட பேசிட்டேன் நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர சொன்னாங்க.
பிரபா- தேங்க்ஸ் பிரபா எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
விஷ்- ஆனா மலருக்கு இன்னும் இத பத்தி தெரியாது .என்னை நீ தப்பா எடுத்துக்காத ஒரு வேலை மலருக்கு இதுல விருப்பம் இல்லை னா,என்னால உனக்கு உதவ முடியாது,எனக்கு என் தங்கையின் சந்தோஷம் தான் முக்கியம்.
இதை யோசித்த பிரபா அமைதியானான் ஆனால் மனம் கொதித்துக்கொண்டிருந்தது.)
நீ என்ன வேணாலும் சொல்லு விஷ் இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி வேகமாக அறையில் நுழைந்த ராமநாதனை தடுக்க வழி தெரியாமல் அப்பா என்று கத்திக்கொண்டே அவர் பின் சென்றான் விஷ். பிராபவும் உள்ளே நுழைந்தான்.
உள்ளே நுழைந்த மூவரும் அங்கு கண்ட காட்சியில் உறைந்து போய் நின்றனர்.
விஷ்ஷுடன் வந்த குரு மலரின் அறைக்குள் நுழைந்தான் ,உள்ளே அவன் கண்டது துவண்டுபோன கொடியென படுக்கையில் இருந்த மலரைத்தான்.சுற்றுப்புறம் மறந்து வேகமாக அவளருகில் சென்றான்.
அவள் அருகில் முட்டிபோட்டு அமர்ந்து மெதுவாக
குனிந்து அவள் காதில் "வதூ.." என்று மென்மையாக அழைத்தான்.மிகவும் நெருக்கமான,தனிமையான நேரங்களில் மட்டுமே அழைக்கும் அவன் பிரத்தேக அழைப்பு அது.
எங்கோ சென்று கொண்டிருந்த உயிர் தன் இணையினை கண்டு வேகமாக அதனிடம் சென்று அதை அணைக்க துடிப்பது போல மலரின் இரு கைகளும் காற்றிலே அழைந்து எதையோதேடியது
( அறைக்குள் வந்த மூவரும் இக்காட்சியைதான் பார்தனர்.பல மணிநேரங்களாக உணர்வின்றி கிடக்கும் மலர்.குருவின் வதூ என்ற குரல் கேட்டவுடன் அவனை தேடியது கண்டு அங்கு இருந்த அனைவருக்கும் அவர்களின் காதலின் ஆழம் புரிந்துகொள்ளமுடிந்தது.)
நொடிக்குள் மலரின் கைகளை பற்றிய குரு,"வதூ எந்திரிடா நான் வந்துடேன் டா உன்னோட குரு வந்துட்டேன் என்னை பாருடா,இனி உனக்கும் ஒன்னும் இல்லைடா யாரும் உன்னை எதுக்கும் வற்புறுத்த மாட்டாங்க.ப்ளீஸ்டா என் செல்லம்ல" .என்று அவள் மனதின் ஆழத்தை தட்டி எழுப்பும் வார்த்தைகளையும் அவளின் பயத்தை போக்கும் வார்த்தைகளையும் கூறினான்.
கண்கள் மூடிய நிலையில் மலர்,"குரு வந்துடீங்களா என்னை பார்க்க வந்துடீங்களாஆனா என்னால கண்ண திறக்க முடியலையே ,உங்கள பாக்க முடியலையே "என்று புலம்பினாள்.
"உன்னால முடியும் டா என்னை பார்க்க ஆசையில்லையா உனக்கு கண்ண திறந்தா தானே என்னை பார்க்க முடியும்.ட்ரை பண்ணு மலர் உன்னால முடியும்,மெதுவா கண்ண திற."
மலர் மெதுவாக தன் கண்களை சிரமப்பட்டு திறந்தாள்.அவள் கண்ணிற்கு குரு வை தவிர வேற எதுவும் தெரியவில்லை.
தாயின் மடி சேரும் கண்றை போல குருவை கண்டவுடன் வேகமாக எழுந்து அவனை அணைத்துக்கொண்டாள்.
கண்களில் இருந்து கண்ணீீர் வந்துகொண்டே இருந்தது."குரு என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க இல்லைனா என்னை இவங்க உயிரோட கொண்ணுடுவாங்க,இங்க இருக்குற அத்தன பேருக்கும் நான் அவங்க ஸ்டேடஸை காட்டுற ஒரு பொருள் மட்டும் தான்.இன்னய்க்கு என்ன நடந்துங்சு தெரியுமா"
"ஸ்ஸ்ஸ்....வதூ வதூ ரிலாக்ஸ் ரிலாக்ஸ் கோவப்படாத நான் உன்னை கண்டிப்பா இவங்ககிட்ட விட மாட்டேன்.என் கூட கூட்டிட்டு போயிடறேன் சரியா,அழக்கூடாது கண்ண துடச்சுக்க,நீ என் கூட வருவ
தானே."
"என்ன குரு இப்படி கேக்குறீங்க கண்டிப்பா நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் ஏன்னு ஒரு வார்த்தை கேக்காம உங்ககூட வர தயாரா இருக்கேன்."
"ஆனா அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்"என்று கூறிய ராமநாதனை அனைவரும் திரும்பி நோக்கினர்.
அதுவரை குருவை மட்டுமே நோக்கிய மலர் அப்பொழுது தான் தன் சுற்றுபறம் உணர்ந்தாள்.தான் குருவின் தோல்களில் சாய்திருப்பதை உணர்ந்த மலர் அங்கு இருந்தவர்களை அச்சத்துடன் நோக்கி மேலும் குருவிற்குள் அடைக்களம் தேடினாள்.அவளின் மனநிலையை புரிந்து கொண்ட குரு அவளை மேலும் தன்புறம் சாய்த்துக்கொண்டு கேள்வியோடும் கோபத்தோடும் ராமநாதனை நோக்கினான்.
"அவளை உன் கூட கூட்டிட்டு போக உனக்கு என்ன உரிமை இருக்கு "என்று ஆவேசமாக கத்தினார் ராமநாதன்.
குருவோ எத்தவித பதட்டமுமின்றி,"ஒ இப்போ அது மட்டும் தான் உங்க பிரச்சனையா என்று கேட்டுக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் தாலி யை எடுத்து நிதானமாக அவள் கழுத்தில் கட்டினான்."
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro