Episode 14
நாதன் குரூப்ஸ் ஆப் கம்பெனி,கட்டிடம் பிரம்மாண்டமாக எழுந்து நின்றது. இது தான் தலைமை அலுவலம் போல் செயல்படும்.
முக்கிய முடிவுகள் இங்கு தான் எடுக்கப்படும்.
இந்த கம்பெனியில் முக்கிய பதவியில் இருக்கும் பலருக்கும் இங்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருக்கும்.
நாதன் கட்டுமானங்கள், நாதன் பால் பண்ணை, நாதன் தானியங்கள்,இப்படி பல தொழில்களை உள்ளடக்கியது தான் நாதன் குரூப் ஆப் கம்பெனிஸ்.
விஷ்வநாதன் M.Dஎன்ற பொன்னிற எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் வாசு,விஷ்வநாதனின் காரியதரிசி.
"சார் அந்த கவர்மென்ட் பில்டிங் கு டென்ரர் அனுப்ப இன்னைய்க்கு தான் கடைசி நாள். நீங்க இன்னும் அமௌன்ட் சொல்லல, நீங்க சொன்னவுடனே அனுப்ப வேண்டியது தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் ரெடியாதான் இருக்கு."
"சரி நான் அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு ஒரு ஒன் அவர்ல கால்பண்றேன் பட் லேட் பண்ணாம சீக்கரமா வேலைய முடிச்சுருங்க."
"சரி சார் நான் அப்ப ஒரு மணி நேரம் கழிச்சு வரேன். "என்று கூறி விடைபெற்றான் வாசு.
விஷ்வநாதன், மாநிறத்தில் இருந்தாலும் பார்க களையான முகம்.அவனின் திடகாத்றமான தேகம் தினமும் உடல் பயிற்ச்சி செய்வதை எடுத்துக்காட்டியது. தந்தையுடனே யே வளர்ததால் அவரின் குணம் வந்துவிட்டதது.எடுத்து கூற யாரும் இல்லாததல் தனது தந்தை யை முன்னோடியாக கொண்டு வளர்ந்தான். தங்கை மீது பாசம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தெரியாதவன்.
தனது தந்தையை தொடர்ப்பு கொண்டு டென்டர் விஷயமாக பேசி முடித்தவுடன்
அவனது தரிப்பட்ட செல் அடித்தது ,அதில் மின்னிய பிரபாகரன் பெயரை பார்ததும் சிறு புன்னகையுடனேயே எடுத்து பேச துவங்கினான்.
(இவரை அனைவரும் விஷ் என்றே அழைப்பர் நாமும் அவ்வாறே அழைக்களாம்.)
விஷ்,"சொல்லு மச்சான் ."
..........................
"இப்ப கொஞ்சம் பிசிடா.ஈவனிங் ஃபிரி தான்.நீ எங்க வர சொல்றியோ வரேன்.நோ ப்ராம்லம்."
"..................."
"சரி டா நீ முடிவு பண்ணிட்டு மெசேஜ் அனுப்பு , டேக் கேர் பை"
இடம்: ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல்
நேரம் : மாலை.
முதலில் வந்த விஷ் பிரபாவிற்காக காத்துக்கொண்டிருந்தான். பிரபாவை பற்றி நினைக்கையில் அவன் இதழில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
பிரபாகரன், பிரபா கட்டுமண நிறுவனத்தினுடைய சேர்மன்.சிறிய வயதிலே பிரம்மிக்கவைக்கும் உயரத்தை தன் சொந்த முயர்ச்சியால் எட்டிய தொழிலதிபர்.
தாய் சிறு வயதிலே இறந்து விட தந்தையுடன் வாழ்ந்து வருபவன்.அவனது தந்தை நடத்தும் டெக்ஸ்டைல் பிசினசில் விருப்பமில்லாமல் ,சிவில் இன்ஜினியரிங் முடித்து வெளிநாட்டில் சென்று M.B.A முடித்து விட்டு தன் சொந்த முயற்சியால் இந்த கட்டுமண நிறுவனத்தையை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறான்.
பிரபாவும் விஷ் யும் லன்டன் யுனிவர்சிட்டியில் தான் M.B.A. முடித்தனர்.இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.
பிரபாவின் வரவு விஷ்ஷின் சிந்தனை யை தடை செய்தது,"வந்து ரொம்ப நேரமாயிடுச்சா மச்சான் ,சாரிடா கொஞ்சம் லாஸ்ட் மினிட் வொர்க் வந்துடுச்சு."
"இல்லைடா நான் வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது.சொல்லுடா அப்படி என்ன முக்கியமான விஷயம்."
"விஷ் நான் உன் தங்கையை விரும்புறேன்.நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது ,அவள கல்யாணத்துக்கு சம்மதிங்க வைக்கிறது உன்னோட வேலை."
தன் நண்பணிடமிருந்து இப்படி ஒன்றை எதிர்பார்காத விஷ் அதிர்ச்சியில் உரைந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro