55 நீ... நான்...
இருள் பரவிக்கிடந்த அவ்வறையில் சட்டென ஒளி பரவிட... மிருதுவான மூச்சு காற்றின் ஓசை மாத்திரமே அங்கு சூழ்ந்திருக்க... அபார அமைதி நிலவியிருந்த நேரமே... தென்றலுடனே வேறேதோ ஒரு விதமான ஓசையில்... மெல்ல தன் பொண் இமைகளை பிரித்தாள் நம் நாயகி உத்ரா...
கண்களை கசக்கி கொண்டே எழுந்தவள்... தான் எங்கு இருக்கிறோம் என தெரியாமல் சுற்றி முற்றி பார்த்தாள்... அந்த அறை அவளுக்கு முற்றிலும் புதிதாய் இருந்தது... ஒரு ஓரத்தில் இருந்த ஆதித்தின் புகை படத்தை கண்டே நிலையானவள்... எழுந்து சென்று அதை எடுத்து கொண்டு மீண்டும் வந்து அதே பெரிய கட்டிலில் அமர்ந்தாள்...
வெள்ளை டீ ஷர்ட் அனிந்து... கண்ணுக்கு கூலர்ஸ் அனிந்து... இதழை அழகாய் விரித்து புன்னகைத்து கொண்டு நிற்கும் புகைபடமது.... அதை மெல்ல வருடியவள்....
உத்ரா : இப்போ நீ என் மாமா இல்லல... ஹ்ம்... நா எங்கே இருக்கேன்... எனக்கு பயமா இருக்கு.... என அதை தன்னோடு அணைத்து கொண்டு கூற....
" போட்டோவ மட்டும் தா கட்டி பிடிப்பீங்களோ " என்ற குறும்பும் ஏதோ ஒரு கோவமும் கலந்த குரலை கேட்டு சட்டென திரும்பி பார்த்தாள் உத்ரா.... அவள் இவ்வளவு நேரம் படுத்திருந்த இடத்தின் பக்கவாட்டிலே.... கலைந்த கேசத்துடன்... தூக்கமில்லாமல் சிவந்த கண்களுடன்... வலுது கையை தலைக்கு முட்டு கொடுத்து விட்டு இடது கையால் ஃபோன் நோண்டி கொண்டிருந்தவனை பார்த்து அழகாய் தன் கண்களை விரித்தாள் அவள்....
இவள் மீண்டும் மீண்டும் தான் கனவு காணுகிறோமோ என கண்களை கசக்கி விட்டு பார்க்க... அப்போதும் அவன் அந்த பொஷிசனை மாற்றாமல் அப்படியே படுத்து கொண்டிருக்க... ச கனவு தான் என அந்த புகைபடத்தை வைத்து விட்டு எழுந்தவளை சட்டென இடது கையால் பிடித்திழுத்தான் இவ்வளவு நேரம் அவள் கனவென நினைத்திருந்த அவளின் ஆதன்...
உத்ரா : அப்போ நீ கனவில்லையா.... என கண்களை அகல விரித்து கேட்க...
ஆதித் : இல்ல இல்ல உன் கனவு தான் நான்...
உத்ரா : அதான.... அந்த எரும தான் அந்த மேனாமினிக்கய கட்டிக்கிட்டானே...
ஆதித் : அ... அதனால அவன் அந்த மேனாமினிக்க கூட இருக்கான்....
உத்ரா : அப்ரம் நீ எதுக்கு வந்த தொலச்ச...
ஆதித் : நா கனவு மா... எப்போ வேணா வருவேன்... அதெல்லாம் நீ கேக்க கூடாது... உன் அனுமதிய நானும் கேக்க மாட்டேன்...
உத்ரா : ம்க்கும்.. மனுஷனான என் புருஷனே வேற கல்யாணம் பன்னிக்க என் கிட்ட அனுமதி கேக்கல... நீ கனவு தான... கேட்டா என்ன... கேக்கலனா என்ன... என அவன் மீது தான் படுத்து கிடக்கிறோமென கொஞ்சமும் யோசிக்காமல் அவள் சிறுபிள்ளை தனத்துடன் அவன் மீதுள்ள கோவத்தை காட்டி கொண்டிருந்தாள்....
ஆதித் : ம்ம் அது சரி... ஆமா இவ்ளோ கோவம் இருக்குல்ல... அப்ரம் ஏன் அங்க பெரிய தியாகியாட்டம் நீயே போய் சாட்சி கையெழுத்து போட்ட...
உத்ரா : வேற என்ன செய்ய சொல்ற.... எனக்கு என்ன விட அவன் தான் முக்கியம்... அவன் அங்க தலைகுனிஞ்சு நிக்க கூடாது... அவன் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.... ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இருக்கும்... அதான் நானே போய் சைன் பன்னேன்...
ஆதித் : ஓஹோ.. என அவள் கூந்தலை ஒதுக்கி விட்டு கொண்டு கூற....
உத்ரா : ம்ம்ம் ஆனாலும் எனக்கு அவன்மேல நம்பிக்கை இருக்கு... பாவி பய... ஏன் பன்னான்னு தெரியல.... ஆனா நேர்ல மாட்டும் போது வச்சிக்கிறேன்....
ஆதித் : உன் புருஷன் வேற ஒருத்திய கல்யாணம் பன்னிகிட்டான்... நீ எப்டி இப்டி இருக்க...
உத்ரா : நா அழுதா அவனுக்கு புடிக்காது.... சேம் " உனக்குரியது உன் கிட்ட தான் இருக்கும்... உனக்கு புடிக்காதது எதுவும் இங்க இருக்காது " ன்னு அவன் சொல்லிர்க்கான்... சோ அவன் எனக்குரியவனா இருந்தா என் கூட தான இருப்பான்....
ஆதித் : ம்ம்ம் நீ எப்டி இங்க வந்தன்னுலாம் கேக்க மாட்டியா...
உத்ரா : ம்ம்ம் கூட்டீட்டு வந்தவன் வர்ர வர கேக்க மாட்டேன்...
ஆதித் : அதான் வந்துட்டேனே... என அவள் கழுத்தில் கிடந்த செய்னை பிடித்து கொண்டே கூற..
உத்ரா : நீ கனவு...
ஆதித் : நீ நம்புர வர தான்.... என செய்னின் கொக்கியை கலட்டினான்...
உத்ரா : ஆமா... கனவு எப்டி என் செய்னலாம் கலட்டுது... ஹே வெயிட்... ஏன் இப்போ அத கலற்ற...
ஆதித் : அ...டாலர மாற்றதுக்கு... என கொக்கியின் வழி இரண்டு மோதிர டாலரை மாட்டி கொண்டே கூற.... அவன் மேலே படுத்திருந்தவள் அதை கண்டு மீண்டும் கண்களை விரித்து....
உத்ரா : டேய்.... இந்த டாலரு உன் கிட்ட எப்டி வந்துச்சு... இது இந்த செய்னோட டாலரில்ல... நீ ஏன் அத ோடுர... என அவள் அடுக்கி கொண்டே போக. சட்டென..... டேய் அப்போ நீ கனவில்லையா.... என குழந்தை போல் கத்த...
ஆதித் : ஹப்பா... மகாராணிக்கு இப்பவாவது தெளிஞ்சிதே... என செய்னை சரியாய் மாட்டி விட்டு அதை பார்த்து சிரித்தவாறே கூறினான்...
உத்ரா : அடப்பாவி டேய்.... விட்ரா என்ன... விடு... என அவனிடமிருந்து எழ வேண்டி திமிற... அவனது முரட்டு கைகள் அவளுக்கு அணை போட்டிருந்தது...
ஆதித் : இவ்வளவு நேம் கனவுன்னு நம்பிக்கிட்டு சும்மா இருந்தல்ல.. இப்போ ஏன் டி துள்ளுர...
உத்ரா : எரும... வேணும்னா போய் அந்த மேனாமினிக்கய கட்டி பிடிச்சிக்கோ... என்ன விடு...
ஆதித் : ஓய்... நா அணைச்சா என் பொண்டாட்டி ஒருத்திய மட்டும் தா டி அணைச்சிப்பேன்...
உத்ரா : ம்ம் அப்போ தாலிய மேட்டும் எவ எஎவளுக்கோ கட்டுவியா...
ஆதித் : நோ நோ... அதுவும் என் பொண்டாட்டிக்கு மட்டும் தான்...
உத்ரா : அப்போ போய் அந்த மேனாமினிக்கயவே கட்டிக்க...
ஆதித் : நீ தான் செல்லம் என் பொண்டாட்டி...
உத்ரா : எப்போ
ஆதித் : எப்பவுமே...
உத்ரா : நா தான் அந்த செய்ன கலட்டீட்டேனே... நீ தான் சைன் போட்டு அவ கழுத்துல செய்ன போட்டுட்டியே...
ஆதித் : ஷு... ஒலறாத... அந்த செய்ன் இப்ப வர உன் கழுத்துல தான் இருக்கு... என குண்டை தூக்கி போட...
உத்ரா : ங என திமிறுவதை நிறுத்தி விட்டு முளிக்க...
ஆதித் : பின்ன.... இது அந்த செய்ன் தான்... என முன்னிருந்தே அவள் கழுத்தில் கிடந்த செய்னை காட்டினான்...
உத்ரா : உண்மையாவா...
ஆதித் : உண்மையா தான் டி பொண்டாட்டி... நா டாலர மட்டும் எடுத்துட்டு போய்ட்டேன்.... அந்த ரேகா நீ எனக்காக வாங்குன செய்ன உன் செய்னுன்னு நெனச்சி அந்த செய்ன எடுத்துட்டு போய்ட்டா... போதுமா...
உத்ரா : அப்போ என் செய்ன் எங்கையும் போகலையா... என சந்தோஷமய் கேட்க...
ஆதித் : எங்கைக்யும் போகல...
உத்ரா : அப்போ நீ ஏன் அவ கழுத்துல செய்ன போட்ட...
ஆதித் : நீ பாத்தியா....
உத்ரா : ஆமால்ல.... அங்க என்ன நடந்துச்சு... எனக்கு ஒன்னுமே நியாபகம் இல்லையே.... நா எப்டி இங்க வந்தேன்... அது இதுன்னுட்டு இப்போ நீ என்ன என் கூட இருக்க...
ஆதித் : ம்ம் நா என் பொண்டாடி கூட தான் இருப்பேன்...
உத்ரா : என்ன நடந்துச்சுன்னு சொல்லு... அப்ரமா நா பொண்டாட்டியா இல்லையான்னு சொல்றேன்...
ஆதித் : நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நீ தான் என் மனைவி... என இரு கைகளையும் எடுக்க.... அவள் உடனே எழுந்து கொண்டாள்...
உத்ரா : ரொம்பத்தான்... இது எந்த இடம்..
ஆதித் : சென்னை....
உத்ரா : அ... சென்னையா... இங்க எப்போ வந்தோம்...
ஆதித் : ஒரு நாளாச்சு...
உத்ரா : ஒரு நாளாவா... நா எவ்ளோ நேரமா தூங்குனேன்..
ஆதித் : தூங்கல அக்ஷாமா... மயங்கீட்ட... என திறுத்த...
உத்ரா : ரொம்ப முக்கியம் சொல்லு என்ன ஆச்சு...
ஆதித் : டென்ஸ் ஆகாத பொண்டாட்டி... இங்க வா... என மெத்தையில் அமர வைத்து கூற தொடங்கினான்...
கண் முன் நிகழ்ந்ததை நம்ப இயலாத பார்வையுடன் நின்றனர் அனைவரும்... மேடையில் ரேகா அதிர்ச்சியில் ஆவென வாயை பிளந்து கொண்டு நிற்க.... ரித்திக்கும் தூர்தேஷும் எவனையோ அசுர வேகத்தில் துரத்தி கொண்டு ஓட.... அண்ணா என கத்தி கொண்டே வந்த கிஷோர் கீழே விழ போன மேகாவை சட்டென பிடிக்க.... தன்னவனின் கைவளைவில் இருக்கிறோம் என்பதையே அறியாது ஆதித்தின் கையணைப்பில் மயங்கினாள் உத்ரா...
ஆதித் அவளுக்கு அரணாய் முன் நின்றிருக்க.... அவன் மீதே மயங்கி விழுந்தாருந்தாள் பெண்ணவள்.. அனைத்தும் ஒரு நொடியில் நடந்து விட... ரேகாவின் நினைவு ஒரு நிமிடம் முன் பயணித்தது...
ஆணவமாய் நின்றவளின் கழுத்தில் செய்னை போடுவதை போல் வந்த ஆதித் அருகில் நின்ற அவன் மனைவியின் கையில் கொடுக்க.... அதை அவள் உணரும் முன்னே பின் நோக்கிய ஆதித் அதிர்ந்து அக்ஷா என கத்தியவாறே அவளை தன்னுடன் பிடித்திழுத்து திரும்பி கொள்ள.... கிஷோரின் அண்ணா என்ற அலரலின் பின் இவன் ஓரடி நகர.... அதே வேகத்தில் திரும்பிய ஆதித் வலக்கையால் உத்ராவை தன்னுடன் சேர்த்தணைத்தவாறு இடக்கையால் முதுகில் சொருகியிருந்த பிஸ்ட்டலை எடுத்து இரு முறை சுட்டான்.... சீரி பாய்ந்து சென்ற புல்லட் இரண்டும் உத்ராவை குறி வைத்து சுட காத்திருந்த இரு தடியன்களின் தோளில் இறங்கியது...
தோளில் இறங்கிய புல்லட்டுடன் ஆதித் தங்களை கண்டு கொண்டான் என்ற பயத்திலே உடல் நடுங்க தப்பி ஓடிய ரௌடிகளை ரித்திக்கும் தூர்தேஷும் துரத்தி ஓட... தப்பிய ஓடிய இருவரில் ஒருவன் பயத்தில் எங்கோ தூக்கி எறிந்த கட்டை செவுரில் இடித்து தோழிகள் மீது விழ போக.... ஷியாம் விஷ்வா அந்நாழ்வரையும் தள்ளி விட.... அந்நேரம் சரியாக தான் வந்த வழியில் விழ போன மேகாவை பிடித்தான் கிஷோர்....
இவன் எங்கிருந்து வந்தான் என்பதை போல் அவள் அதிர்ந்து நோக்க... அவனோ படபடப்புடன் இன்னும் ஆதித்தை தான் நோக்கி கொண்டிருந்தான்....
என்ன நடக்கிறதிங்கு என கேட்க கூட இயலாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்க.... நெஞ்சாங்கூட்டில் திக்திக்கென துடித்த இதயத்துடன் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்திருந்தவளுடன் அசையாது நின்றிருந்த ஆதித்தின் சட்டையில் அவளின் கண்களில் இருந்து கசிந்த கண்ணீராலே கண்களை திறந்து மூடி நிலை பெற்றான்....
ஆதித் : அக்ஷா... அக்ஷா... என்ன பாரு டி... ஏ அக்ஷா... என அவள் கன்னத்தில் தட்ட.... தன்னையும் மீறி அவளுக்கு ஏதேனும் அடி பட்டிருக்குமோ என பயத்தில் நடுங்கியவாறே அவளை சரி பார்க்க... ஒரு சிறு கீறலும் இல்லாது அவன் அணைப்பிலிருந்தாள் அவள்.... உடனே அங்கிருந்த சோபாவில் அவளை படுக்க வைத்தவன் கோபமாய் திரும்ப..... அவன் முன் சென்று நின்றான் கிஷோர்....
கிஷோர் : அண்ணா.... அப்போதே அவனை கண்ட ஆதித் குழப்பத்துடன்...
ஆதித் : கிஷு... நீ எப்டி இங்க வந்த...
கிஷோர் : அது முக்கிம் இல்ல அண்ணா... அண்ணிக்கு என்ன ஆச்சு...
ஆதித் : ஷி ஈஸ் ஃபைன்.... நீ மட்டும் தான் வந்துர்க்கியா... என இவன் சந்தேகமாய் கேட்கும் போது... பாலாப்போன ரேகா அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தாள்...
ரேகா : என்ன நடந்துச்சு இங்க...
" பாத்தா எப்டி தெரியிது கல்யாணம் தான் " என அலட்சியமாய் கூறி கொண்டே உள்ளே வந்தான் தூர்தேஷ்... ஆதித் அவனை அர்த்தமாய் பார்க்க... அவனும் கண்சிமிட்டி தலையசைத்தான்...
ஷியாம் : டேய் அண்ணாஸ்... இருங்க டா... என்ன டா நடக்குது இங்க... எங்களுக்கு ஒன்னுமே புரியல...
தூர்தேஷ் : கூல் டா தம்பி... கூல்...
ரேகாவின் முன் பொருமையாய் போய் நின்ற ஆதித்....
ஆதித் : இப்போ நம்புரியா என் பொண்டாட்டி என் மேல வச்ச நம்பிக்கைய... என புருவமுயர்த்தி கேட்க....
ரேகா : என்ன
ஆதித் : நீ தான அக்ஷாட்ட கேட்ட உன் புருஷன் மேல அவ்ளோ நம்பிக்கையான்னு... இப்போ தெரியிதா...
ரேகா : ஹே.... நம்ம இரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆய்டுச்சு.... இவங்க எல்லாரு முன்னாடியும்...
ஆதித் : கனவுல கூட நடக்காது...
அம்ருதா : டேய் ஆதித்தா என்ன டா நடக்குது இங்க... இப்போ தான டா நீயும் அவளும் சைன் போட்டீங்க.... கல்யாணம் நடக்காதுன்னு சொல்ற....
ஆதித் : கல்யாணம் நடக்காதுன்னு தா சொன்னேன்... கல்யாணம் நடக்கலன்னு சொன்னனா...
தேவராயன் : என்ன டா ஒலர்ர... தெளிவா சொல்லி தொல டா...
ஆதித் : கல்யாணம் நடந்துச்சு...
ரேகா : அப்ரம் என்ன பெருசா பேசுர.... இனிமே நீ என் புருஷன்..
ஆதித் : மொளச்சு மூணு இலை விடல... நா உனக்கு புருஷனா... கல்யாணம் நடந்தது... எனக்கும் என் அக்ஷாக்கும் தான்... என இன்ப அதிர்ச்சியை தூக்கி போட...
அன்னம் : டேய் என்ன டா சொல்ற...
ஆதித் : உங்கள்ட்ட பேசுர மூட்ல நா இல்ல... அப்டியே ஒதுங்கிக்கங்க....
தியா : அண்ணா... உண்மையா தான் சொல்றியா.... கல்யாணம் உனக்கும் உருக்கும் தானா...
ஆதித் : ஆமா தியா குட்டி.... என் அக்ஷாவ விட்டு நா யாரையும் கனவுலையும் மனசளவுல நெனைக்க மாட்டேன் டா...
ரேகா : அப்ரம் எதுக்கு இவ்வளவும் பன்ன... என்ன கல்யாணம் பன்னிக்கிறன்னு எல்லார் கிட்டையும் சொன்ன...
ஆதித் : உன்ன கல்யாணம் பன்னிக்கிறன்னு நா எப்போ சொன்னேன்....
அன்னம் : என்ன டா விளையாடுரியா.... நீ தான டா என் அம்மா அசைபடி என் மாமா பொண் கட்டிக்க போறேன்னு சொன்ன...
ஆதித் : ஆமா சொன்னேன்... இப்பவும் என் அம்மா ஆசை படி என் மாமா மகளுக்கும் எனக்கும் தான் கல்யாணம் ஆகியிருக்கு...
ரேகா : நான் தான அது..
ஆதித் : அப்டீன்னு நா சொன்னனா... என் அம்மா ராம்லீலாவோட ஆசை அவங்க அண்ணன் மக உத்ராவ நா கட்டிக்கனும்ங்குரது தான்....
ஷியாம் : வாரே வா... செம்ம அண்ணா செம்ம...
ரேகா : வாட்... யாரு சைன் போராங்களோ அவங்க தா என் வொய்ஃப்ன்னு சொன்ன....
ஆதித் : ஆமா... சைன் போட்டது என் அக்ஷா தான்...
ரேகா : நான் தான பன்ன...
தூர்தேஷ் : நீ சைன் பன்னது அத இல்ல.... இத என ஒரு டாக்குமென்னைட்டை எடுத்து காட்டினான்... அதே நேரம் ரெஜிஸ்ட்டரில் ஆதித் மற்றும் உத்ராவின் கையொப்பங்கள் நேருக்கு நேரிருக்க.... கிஷோர் மற்றும் தூர்தேஷ் ஆதித்தின் பக்கத்தில் அவன் சகோதரன்களாய் கையொப்பமிட்டிருக்க.... உத்ராவின் பக்கத்திலிருந்து ரித்திக் அவளின் சகோதரனாய் கைபொப்பமிட்டிருந்தான்.....
இப்போது அக்குடும்பத்தின் மகிழ்ச்சியை விவரிக்க அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.... அத்துனை மகிழ்ச்சியில் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டிகொள்ள... ஆதித் கர்வமாய் புன்னகைக்க....
ரேகா : என்ன ஏமாத்தீட்டல்ல.... நா உன்ன சும்மாவே விட மாட்டேன்....
ரித்திக் : முதல்ல உன்ன சும்மா விடுராங்களான்னு பாரு மா... என கூற..... அவள் குழப்பமாய் திரும்பும் போதே.... தமிழனுக்கே உரிய முருக்கு மீசையுடன் அவனிற்கென உருவானதை போலான அவனின் அக்மார்க் புன்னகையுடன்.... விரைத்து உடலுமாய்... கட்டுமஸ்த்தான தேகத்தை காக்கி உடை சூழ்ந்திருக்க.... தோளில் இருந்த மூன்று நச்சத்திரத்துடன்.... RITHIK RAO IPS என்ற நேம் பட்ஜுடன்.... நின்றான் ரித்திக்....
அனைவரும் அவனை அந்த உடையில் கண்டு உறைந்து நிற்க.... தியா அதிர்ச்சியில் அன்கியின் மீதே சாய்ந்து விட்டாள்....
கை விலங்குடன் வந்தவன்... ரேகாவின் கையில் மாட்ட...
ரேகா : ஹே என்ன பன்ற நீ...
ரித்திக் : பாத்தா எப்டி தெரியுது... மிஸ் ரேகா மருதவேல் யு ஆர் அண்டர் அரெஸ்ட்...
அன்னம் : டேய் என் மருமக என்ன டா பன்னா... அவள எதுக்கு டா இப்போ அரெஸ்ட் பன்ற...
ரித்திக் : அவங்கள மட்டும் இல்ல... உங்களையும் தான்...
அன்னம் : என்னது... நாங்க என்ன செஞ்சோம்...
ரித்திக் : நீங்க என்ன செய்யல... பத்து வர்ஷத்துக்கு முன்னாடி கட்டிடத்துக்கு தீ வச்சது... வேணும்னே மிஸ்டர் தங்க துரைய அங்க அடச்சு வச்சு கொன்னது.... மிஸ் தியாராவ விஷம் கொடுத்து கொல்ல முயற்சித்தது... மிஸ்டர் ஷியாம் கார்த்திக் பனிரெண்டு வர்ஷத்துக்கு முன்னாடி டூர் போன ஸ்கூல் பஸ்ஸ அக்ஸிடென்ட் பன்ன சொல்லி பணம் கொடுத்தது... அதுல ஷியாம் கார்த்திக் மட்டும் இல்ல... அவரையும் சேர்த்து இருவது பேர் இருந்துர்க்காங்க.... அப்ரம் மிஸ் ரேகா மருதவேல் மிஸ்ஸஸ் உத்ரதக்ஷாயினி ஆதித்தன அப்சர்வேஷன்ல இருந்தப்போ கொல்ல முயற்சித்துர்க்காங்க.... இவ்வளவும் செஞ்சிட்டு அத எல்லாத்தையும் மறச்சதும் குற்றம் தான்... அதோட மிஸ்ஸஸ் ராம்லீலாவ அக்ஸிடென்ட் பன்னி கொல பன்ன முயற்சித்ததும்... என முடிக்க.... அனைத்தையும் கேட்டு அதிர்ந்த அனைவரிலும் ஆதித் சாதாரணமாய் முகமிருக நிற்க.... ரித்திக்கினது கடைசி கூற்றில் ஆதித்தும் அதிர்ந்தான்....
ரேகா : இல்ல.... நீங்க மொய் சொல்றீங்க... அப்டி எதுவும் நா செய்யல... இவங்க தா நீங்க சொன்ன எல்லாத்தையும் பன்னாங்க.... நா நேத்து உத்ராவோட செய்ன தான் திருடீட்டு வந்தேன்.... அவங்க தான் தங்கதுரை மாமாவ கொன்னது... தியா ஷியாம கொல பன்ன முயற்சித்தது... ராம்லீலா அத்தைய கொன்னது... அப்ரம் துரை மாமாவ கல்யாணம் பன்னிக்க வேணும்னே எல்லாரையும் தப்பா பேச வச்சு கல்யாணம் பன்னிக்கிட்டாங்க... எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல.... நா உத்ராவ கொல பன்ன முயற்சிக்கவே இல்ல....
தூர்தேஷ் : அப்போ இது யாரு உங்க ட்வின் சிஸ்டர் மேகாவா... என லப்டாப்பை காட்ட.... அன்று உத்ராவை மருத்துவமனையில் அனுமதித்ததும் அங்கு நடந்ததை உளவாளிகாள் மூலம் அறிந்து கொண்ட ரேகா உத்ரா மேலுள்ள கோபத்தில் கத்தியை எடுத்து கொண்டு எவரிடமும் கூறாமல் மருத்துவமனைக்கு வந்திருந்தாள்....
வந்தவள் உத்ராவின் அறையில் யாரும் இல்லாத நேரம் சென்று நடுங்கி கொண்டே அவளை குத்த முயற்சிக்கும் போது வெளியே ஏதோ சத்தம் கேட்டு அங்கிருந்து ஓடினாள்.... அது அப்படியே தெளிவாக சீசிடீவி கேமராவில் ரெக்கார்ட் ஆகியிருந்தது....
அதை கண்டு ரேகா பித்து பிடித்ததை போல் நிற்க... அதற்கு முன்னே அவவையும் அன்னத்தையும் சில போலீஸார் வந்து இழுத்து சென்றனர்....
ஆதித் இன்னும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்க.... மற்ற அனைவரும் ரித்திக்கை தான் பார்த்து கொண்டிருந்தனர்...
ரித்திக் : இப்போ ஏன் எல்லாரும் என்னையே பாத்துக்குட்டு இருக்கீங்க...
அன்கி : எப்போ டா அண்ணா போலீஸான...
ரித்திக் : நாழு வர்ஷமாவே நா போலீஸ் டா பட்டு...
அனைவரும் :ங.... உண்மையாவா...
தூர்தேஷ் : உண்மைதா... மர்ம ஐபீஎஸ் கேள்வி பற்றுப்பீங்களே... அவன் தான் அது...
மிரு : அடப்பாவி அத்தான்.... நீயா அது...
ரித்திக் :ஈஈஈஈஈ
அம்புஜம் :எனக்கே தெரியாதேடா...
ரித்திக் : அதான் தாயே சீக்ரெட்டு... சரி இருங்க வந்துர்ரேன்... என ஆதித்தினருகில் சென்றவன் அவனை போட்டு உலுக்க.... நிலையடைந்த ஆதித் அதிர்ச்சியுடன்....
ஆதித் : டேய் அம்மா தான் இறந்துட்டாங்களேடா... அப்ரம் ஏன் டா முயற்சித்ததுன்னு சொன்ன...
ரித்திக் : சாரிடா இத உன்ட்ட சொல்ல முடியல... அத்த உயிரோட தான் இருக்காங்க....
ஆதித் : வாட்...
ரித்திக் : எஸ் தயா.... யுவர் மாம் ஈஸ் அலைவ்...
ஆதித் : என்ன டா சொல்ற.... என இன்னும் நம்பாமலே கேட்க...
" நம்பு ஆதி.... உண்மை தான் " என்ற குரலை கேட்டு அனைவரும் திரும்ப.... வீட்டு வாயிலில் காட்டன் புடவையில் கண்களில் கண்ணீருடன் ரமலா நிற்க.... அவரை கண்டு கிஷோர் ஆச்சர்யமாக... ஆதித் குழம்ப... இளைஞர்களும் அவரை புரியாது நோக்க.... பெரியவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் நோக்கினர்....
தீரா : எல்லாருக்கும் தெரிஞ்சது.... தான்...
சாட்சாத் அங்கு நின்றது ராம்லீலாவே தான்...
நீ... நான்...
ஹாய் இதயங்களே... போன யூடில எல்லாருமே என் மேல கோவமா இருப்பீங்க... பட் அது எல்லாமே ப்லன் தான்... அடுத்த யூடில அதையும் விவரிக்கிறேன்... உங்க கமென்ட்ஸுக்கு வேற ரிப்லை பன்ன முடியல தைவசெஞ்சு மன்னிச்சிடுங்க... நாளைளேந்து என்னால ஆன்லைன் வரவே முடியாதுனு நெனகிறேன்... அதான் சீக்கிரமா முடிக்க போறேன்... எண்டிங் எப்டி வரும்னு எனக்கே தெரியல.... என்னாலான பெஸ்ட்ட குடுக்குறேன்... எதாவது குறை தெரிஞ்சா சொல்லுங்க மாத்திக்கிறேன்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro