41 நீ... நான்...
மூன்றரை வயதான ஆதித் குழந்தையாய் இருந்த போது.. அவன் அம்மா போதித்த சிலவை நினைவு பெற்று அவன் மாமாவை தேட தொடங்கினான்...
லீலாவிற்கு அவர் அண்ணன்கள் எவரேனும் ஒருவரின் மகளை தன் மகனுக்கு கட்டி வைக்க வேண்டுமென்ற ஆசை சிறு வயதிலிருந்தே இருக்க... அதை கருவுற்றதிலிருந்தே ஆதித்திற்கு தினம் மறவாமல் கூறி கொண்டே இருந்தார்... அதனாலோ என்னவோ மூன்றரை வயதிலும் யாரையோ அவன் தேடி கொண்டிருக்க.... ஐந்து வயதில் அவனுக்கு கிடைத்த அவன் தாயின் டைரி அவனை ஐந்து வயதிலிருந்து விஸ்வரூபம் எடுக்க வைத்தது...
வளரும் போதிலிருந்தே அன்னம் தான் அவனின் தாய் என கூறி வளர்த்திருந்தாலும் ஏனோ ஆதித் அன்னத்தை அம்மா என அழைத்ததில்லை... திரும்பியும் பார்த்ததில்லை... எது வேண்டுமானாலும் அம்ருதாவிடம் கேட்பான்... இல்லையேல் பாட்டிகளிடம்... இல்லையா... கேட்காமல் உள்ளுக்குள்ளே வைத்து விடுவான்... அதில் குறிப்பிட்ட ஒன்று தான் தாயின் அருகாமை...
என்ன தான் அம்ருதா அவனை கண்ணை போல் பார்த்து கொண்டாளும் பெற்ற தாய் அவரில்லை என்பதை அறிந்த போதிலிருந்து ஆதித்தால் அந்த அன்பை அவரிடம் எதிர்பார்க்க முடியவில்லை... அவன் எதிர்பார்க்க விரும்பவில்லை...
அந்த குடும்பத்திற்க்கேற்றார் போலே வளர்ந்தவன் அக்குடும்பத்திலிருந்த அனைத்து ஆண்மகன்களுக்கெல்லாம் ஒரு அடையாளமாய் உரு பெற தொடங்கினான்...
ஐந்தரை வயதில் ரித்திக்கிற்கும் அவனுக்குமான நட்பு அனைவரின் கண்களுக்கும் கன்னாடி திறையின் பின் மறைந்தது... பெரும்பாலும் அவ்விருவர் ஏனென்றே தெரியாமல் அனைவரும் இருக்கும் சமயம் சண்டை போட்டு தரையில் கட்டி உருண்டு விட்டு... அனைவரும் சென்றதும் தோள் மேல் கை போட்டு கதை அளக்க தொடங்கி விடுவர்...
துரையும் ராஜப்பனும் பல விஷயங்களை செய்து பார்த்தனர் இருவரும் இரு துருவங்களாய் இருப்பதாய் நினைத்து... இருவரும் ஒரே வகுப்பில் பயில்வதால்... ஏன்றேனும் எதாவது விஷேஷத்திற்கு ஆதித் ரித்திக் இருவரில் ஒருவரை அழைக்க வந்தாலும் மற்றையவனும் அவர்களுடனே தான் வருவான்... இது நாளடைவில் ராஜப்பனுக்கும் துரைக்கும் பழக்கமாகவே போனது... இதை நடைமுறை படுத்தியுமே அவர்கள் முன் துருவமாய் தான் இருந்தனர் இருவரும்....
தாத்தாவின் வளர்ப்பினாலும் தந்தை முகத்தில் என்றும் இருக்கும் சோகத்தினாலும் அன்னத்தின் மீதான வேறுபட்ட உணர்வுடன் வளர தொடங்கிய ஆதித்திற்கு லீலாவின் டைரி அன்னையாகவும் ஆசானாகவும் மாறியது...
அதில் லீலா முன்பே தான் மரண மடைய போகிறோம் என்பதை அறிந்தே இந்த டைரியை எழுத தொடங்கியதாகவும் எழுதியிருந்தாள்...
இந்த கூற்று அன்னம் அவனை பெற்ற தாய் தானா என்ற சந்தேகத்தை வலு பெற வைத்தது...
அதில் ஆதித் எப்படி தைரியமாய் வளர வேண்டுமென அவனுக்கு புரியும் படியான வார்த்தைகளில் எழுதியிருந்தார்... அப்படியும் ஏதேனும் வார்த்தை புரியவில்லையென்றாலும் அதை எப்படியாவது ஆசிரியரிடம் கேட்டு அறிந்து கொண்டான்...
குழந்தையிலே அவன் மனதில் வன்மத்தை வளர்க்க கூடாதென்ற முடிவுடனே அந்த டைரியை எழுதினார் லீலா... அன்னத்தின் மீதான சந்தேகங்கள் அனைத்தையும் வேறு ஒரு டைரியில் எழுதி அதை அவன் எளிதில் கண்டுப்பிடிக்க முடியாத இடத்தில் மறைத்து வைத்திருந்தார்....
மெல்ல மெல்ல கோவக்காரனாய் வளர்ந்தான் ஆதித்... அவனின் ஐந்தாம் வயதிலே இப்புவியில் அவள் குடும்பத்தின் இளைய தலைமுறையின் முதல் பெண் வாரிசாய் பிறந்தாள் நம் நாயகி...
அன்று ரித்திக்கை பள்ளியிலிருந்து அழைக்க வந்த ராஜப்பன் ஆதித்தையும் உடன் அழைத்து சென்றார்... தயக்கத்தோடே உள்ளே வந்த ஆதித்... மெத்தையில்... தலையணைகளின் நடுவில்... வெண்பஞ்சு நிறத்தில்... சிப்பி இமைகள் மூடி... குட்டி மூக்கு சிவந்து... பட்டு இதழ் சுருங்க... விரலளவு இருந்த சிறிய கைகளை மடக்கி... அழகாய் உறங்கி கொண்டிருந்த தேவதையை கண்டவன் அழகாய் சிரித்தான்....
நினைவு தெரிந்து அவன் முதலில் சிரித்தது அன்று தான்... ரித்திக் அவனை இடித்து விட்டு தன் தங்கையை பார்க்க ஓட... நிலையடைந்த ஆதித்தும் அவனுக்கு நேரெதிரே முறைப்பதை போல் பார்த்தவாறு அமர்ந்தான்... ரித்திக்கும் அவனை முறைப்பதை போலவே பார்த்து விட்டு உத்ராவை பார்க்க தொடங்கினான்...
இருவரும் முறைத்து கொண்டதை பெருமூச்சு விட்டு பார்த்தனர் அவர்களின் தந்தைகள்... அந்த இரண்டு குட்டி சாத்தான்களும் ஐந்து வயதிலே இந்த நாடகத்தையெல்லாம் போடுமென யார் அறிந்தார்... ஆனால் விளையாட்டாய் இவர்கள் ஆரம்பித்த இந்த நட்பு தான் வருங்காலத்தில் பல உண்மைகளை வேளிகொனர உதவும் என்பதை அந்த இணைப்பிரியா சண்டை காரர்களுமே எதிர்பார்க்கவில்லை...
அந்த குட்டியின் அருகில் சென்று ஆதித் மெய் மறந்து அமர்ந்திருக்க.... அவன் அம்மாவின் வார்த்தைகளெல்லாம் மறந்து போனது அவனுக்கு... இரைச்சல் ஒலியில் மெல்ல தன் விழிகளை திறந்த குழந்தை தன்னை சுற்றி பலர் இருப்பதை கண்டு.... முகத்தை சுருக்கி அழ தொடங்கி விட்டது... அவள் அழவும் ரித்திக்கும் ஆதித்தும் பயந்து பின் நகர.... அருகே வந்த துரை குழந்தையை தூக்கி வைத்து சமாதானம் செய்ததும் அவள் அமைதியாய் உறக்கத்தை தழுவிட... அதை கண்டு கண்களை விரித்த குட்டி வாண்டுகள் இருவரும்...
ரித்திக் : மாமா மாமா... பாப்பா காட்டுங்க... என எக்கி எக்கி குதிக்க....
ஆதித் : எனக்கு தான் முதல்ல காட்டு... என மழலை பொழியில் சண்டையிட...
ரித்திக் : இல்ல இல்ல... எனக்கு...
துரை : டேய் எல்லாத்துலையும் தனி தனியா இருந்துட்டு இப்டி அடம்ப்புடிகிரதுல மட்டும் செட்டு சேந்துக்குரீங்களே டா... இருங்க இருங்க காற்றேன்... அமைதியா இருக்கனும்... சத்தம் போட்டா பாப்பா எழுந்துடுவா... என கூறி கீழே படுக்க வைக்க...
ஆதித் : இவ அழாம நாங்க பாத்துக்குறோம்...
ரித்திக் : ஆமா... யாரும் என் தங்கச்சி பாப்பா பக்கம் வர கூடாது...
விஷ்வா ஷியாம் : அண்ணா நானு... என மூன்று வயதான இருவரும் கண்கள் மின்ன ஆசையுடன் ஒரே போல் கேட்க...
ஆதித் : பக்கத்துல போக கூடாது... எங்க மடிலையே உக்காந்து பாக்கனும்.. சரியா... என கேட்க.... மண்டையை ஆட்டி கொண்ட இருவரும்... ஆதித் மடியில் விஷ்வாவும்... ரித்திக் மடியில் ஷியாமும் அமர்ந்து அவளை பார்க்க தொடங்கினர்...
ஆதித்திற்கோ ஏனோ... அவன் வயதிற்கேற்ப... " என் பாப்பா இது" என தோன்றி கொண்டிருந்தது...
குழந்தைகளின் மனதில் வளரும் ஆசைகள் வயதை பொருத்து வளர்வதில்லை... தானாய் வளரும் ஏதோ ஒரு இணம்ப்புரியா அன்பு எந்த வழி செல்லும் என்பதை படைத்த இறைவனாலோ.. அல்ல வளரும் அக்குழந்தையின் மனதாலோ வருங்காலத்தில் முடிவு செய்யப்படுகிறது...
அதை தவறாய் முடிவெடுப்பதும்... சரியாய் முடிவெடுப்பதும்... குழந்தை வளரும் சூழ்நிலையிலும்... குழந்தையின் மனநிலையிலுமே இருக்கிறது...
அடுத்த இரண்டு மாதத்தில் அம்ருதா தேவராயனிற்கு தியா பிறந்தாள்.... அடுத்த வாரமே விஷ்வாவிற்கு அன்கிதா தங்கையாய் பிறந்தாள்... ஆண் பிள்ளைகள் குதூகலமாய் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்...
அன்கிதாவை முதலில் தன் மடியிலே தாங்கினான் ரித்திக்... அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அப்போது... குழந்தையான அன்கிதா அவன் விரலை தன் முழு கையால் பிடித்து கொண்டு உறங்குவாள்.... இவர்களுக்கு இருந்த மகிழ்ச்சியை இன்னும் பெருக்க.... மிருவும் அவள் காலடியை இந்த பூமியில் பதித்தாள்....
உத்ரா பிறந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தும்... தினம் ஆதித் அவளை பார்க்க வரவில்லை என்றால் அந்த வீடே அழுகையில் நிறையும்... ஏனெனில் இவள் அழுகை சத்தத்தில் அன்கிதா அழுவாள்.... அடுத்து மிரு அழுவாள்.... இம்மூவரும் அழுவதில் குழந்தைகளுடனே எப்பொழுதும் விளையாடும் விஷ்வா ஷியாமும் கத்தி அழ தொடங்கி விடுவர்...
ரித்திக் தான் முளி பிதுங்கி நிற்பான்.... உடனே பெரிய வீட்டுக்கு ஓடி அன்னத்தினால் திமிற திமிற இழுத்து செல்லப்பட்ட ஆதித்தை அவருக்கே தெரியாமல் இவன் இழுத்து கொண்டு வந்து விடுவான்.... ஆதித்தும் உத்ராவை பார்ப்பதெற்கென்றே எதை பற்றியும் யோசிக்காது அவனுடனே வந்து விடுவான்....
அவன் வந்த பிறகு அவன் நடுவிரலை தன் முழு கையால் பிடித்த பிறகே அழுகையை நிறுத்துவாள் உத்ரா... மெல்ல மெல்ல உதட்டை பிதுக்கி கண்ணீர் நிறைய... சிவந்த மூக்கை உறிஞ்சியவாறு அவனை பார்ப்பாள்...
அதன் பின் மெல்ல மெல்ல விஷ்வாவும் ஷியாமும் அழுகையை நிறுத்திட... அன்கி மிருவும் தன் அழுகையை நிறுத்தவர்.... அதற்கே வீட்டினவர்களுக்கு ஷப்பா என்றாகிவிடும்.... அதிலிருந்தே ஆதித்திற்கு அன்றைய விடியலும்.. மறைதலும் அவள் வீடாகி போனது....
நாட்கள் ஓட... மெல்ல மெல்ல நாழ்வரும் கண்களை திறந்த அழுதனர்... அதன் பின் சுற்றி கண்களால் அளசினர்.... பல்லில்லாத பொக்கை வாயையை மெல்ல திறந்து காட்டி சிரித்தனர்.... கைகளை ஆட்டி ஆட்டி விளையாடினர்.... குப்புற படுக்க தொடங்கினர்.... ஊர தொடங்கினர்... தெரிந்தவர்களை அடையாளங்கண்டு அழகாய் சிரித்தனர்... உக்கார தொடங்கினர்... எதையாவது பிடித்து கொண்டு எழுந்த நிற்க முயன்றனர்... ஒருவர் உதவியுடன் எழுந்ததும் தத்தி தத்தி நடக்க பழகினர்.... விதவதிமாய் பேச தொடங்கினர்... அவர்களின் மழலை மொழியில் பார்ப்பவர் அனைவரையும் இரசிக்க வைத்தனர்...
ஆதித்திற்கு உத்ரா வளரும் அழகை காண அத்துனை மகிழ்ச்சி உண்டானது... ஆதித் ரித்திக் அவர்களின் ஆறாம் வயதை அடைய... விஷ்வா ஷியாம் நான்கு வயதடைய... குழந்தைகள் நாழ்வரும் ஒருவயதை தொட்டனர்...
தினம் காலையில் கிளம்பி தியாவை ஷியாமுடன் கொஞ்சி விளையாடி விட்டு அவனை அழைத்து கொண்டு ரித்திக்கின் வீடு வருவான் ஆதித்... அங்கு எட்டு மணிக்கெல்லாம் சரியாய் அழ தொடங்கியிருப்பாள் உத்ரா... ஆதித் உள்ளே வந்ததும் பெரியவர்கள் ரித்திக் விஷ்வாவை கிளப்பும் வேலையில் மூழ்கி விட... ஆதித் உத்ராவுடன் விளையாடுவதில் மூழ்கி விடுவான்...
உத்ரா முதல் முதலில் சிரித்ததும் ஆதித்தை கண்டு தான்... முதல் முதலில் ஏதோ பேச முயற்சித்ததும் அவனிடம் தான்... தத்தி தத்தி நடக்க முதல் அடியை எடுத்து வைத்தது அவனுடன் தான்.... அவன் எதாவது கூறினாலோ அல்ல பாட்டு பாடினாளோ சுற்றி எதையும் கவனிக்காமல் அவன் என்ன வாயசைக்கிறான் என்று தான் கூர்ந்து கவனிப்பாள்.... அவன் குரல் கேட்டால் போதும் அழகாய் சிரித்து கொண்டே திரும்பி அவன் கூறுவதை கேட்பாள்....
அவள் மழலை மொழியில் கூறுவது புரியவில்லை என்றாலும் இவன் போடும் " ம்ம் " க்காகவே அவள் தொடர்ந்து பேசுவாள்....
ஆதித்திடம் அழுதாளும் அவன் மடியில் அமர்ந்து கொண்டு எதற்காகவாவது அடம்ப்பிடிப்பாள்... அதை ஆதித் செய்து முடிக்கும் வரை சண்டி தனம் செய்வாள்...
இவர்களின் உறவு இப்படியே வளர... அன்னத்தின் மீதான கோவம் தானாகவே ஆதித்தின் மனதில் வளர தொடங்கியிருந்தது.... தன் மகன் பத்து வயதிற்குள்ளாகவே இப்படி வளருவான் என்று துரையுமே எதிர்பார்க்கவில்லை....
தன்னை விரைவிலே பக்குவப்படுத்தி கொண்ட ஆதித் உத்ராவை பாதுகாப்பாதை தன் பொருப்பாய் ஏற்றான்.... உத்ராவிற்கு எத்துனை அண்ணன் இருந்தாலும் எத்துனை தோழிகள் இருந்தாலும் அவளை பார்த்து கொள்ள அன்னை தந்தை அத்தை மாமா பாட்டி என அத்துனை பேர் இருந்தாலும் அவள் தேடுவது அவள் மாமனை தான்...
மாமா மாமா என ஆதித் பின்னே தான் சுற்றுவாள்... அமைதியாகவும் அதே நேரம் அழுத்தாமாகவும் இருப்பவனாய் உரு கொண்டான் ஆதித்... பெரும்பாலும் எப்போதுமே அவன் அமைதி தான்.... உத்ரா முன் மட்டுமல்ல.... உத்ரா முன் இருக்கையில் வெறுமையை பறைசாற்றும் ஆதித்தின் கண்களில் கனிவும் மகிழ்வும் ஏதோ ஒரு இணம் புரியா உணர்வும் தெரிவதை கண்டு கொண்ட துரைக்கு அவர் மனைவியான லீலாவின் ஆசைகள் நினைவில் வந்து போனது...
தன் மகனை மாற்றும் ஒரே வழி உத்ரா தான் என அன்றே அறிந்திருந்தார் துரை... இருந்தும் அதை ராஜப்பனை தவிர்த்து வேறு எவரிடமும் அவர் வெளிப்படுத்தியதில்லை.... வருங்காலத்தில் வளர்ந்ததும் பிள்ளைகளுக்கு விருப்பம் இருந்தால் நம் விருப்பத்தையும் கூறலாம் என முடிவெடுத்தனர்.... ஆனால் அவ்விருவரின் விருப்பமும் அறியும் நேரம் இவர்கள் உயிருடன் இருக்க போவதில்லை...
முதல் நாள் பள்ளிக்கு செல்ல ஆர்வமாய் காத்திருந்தாள் மூன்று வயதான உத்ரா... ரித்திக் விஷ்வா அன்கி மிரு என நாழ்வரும் கிளம்பி வந்து விட... தன் இரெட்டை குடுமிகளை ஆட்டியவாறு... மீன் கண்களை அங்குமிங்கும் உருட்டி கொண்டு... கட்டில் மேல் ஒய்யாரமாய் இறங்க மாட்டேன் என அமர்ந்திருந்தாள் உத்ரா....
" இவளுக்கு எப்டி எட்டுச்சு " என சுற்றி பார்த்த ரித்திக்.... அங்கிருந்த வெங்கல குண்டத்தை தலை கீழாக தள்ளிவிட்டு அதன் மேல் ஏறி கட்டிலில் ஏறியிருக்கிறாள் என்பது புரிந்ததும்... " அவன் கூட சேந்து இவளும் கொரங்கு சேட்டை செய்ய ஆரம்ச்சிட்டா " என எட்டு வயதான ரித்திக் தலையிலே அடித்து கொண்டான்...
ரித்திக் : அம்மு... கீழ வா... ஸ்கூல் போனும்ல...
உத்ரா : நா வடமாட்டேன்...(வர மாட்னேன் ) என அவளின் மொழியில் கூறி முகத்தை சுருக்கி திரும்பி கொண்டாள்...
விஷ்வா : ச்கூல்ல அடிக்க மாட்டாங்க அம்மு... என ஆறு வயதானவன் அவனின் மழலை மொழியில் கூற....
உத்ரா : வட மாட்டேன் வட மாட்டேன்... என கண்களை மூடி கொண்டு கத்த...
மிரு : ஏ உட்ரா.... வடியா இல்லையா... என மிரட்ட....
உத்ரா : நா வட மாட்டேன்... என கத்த...
கார்த்திகா : ஏன் டி இப்போ அலப்பரை செஞ்சிட்டு இருக்க.... இப்போ அண்ணா கூட போ... மதியம் வந்து நா அழச்சிக்கிறேன்.... என அதட்ட...
உத்ரா : அ..... என கத்தி அழ தொடங்கினாள் உத்ரா...
ரித்திக் : சித்தி நா பாத்துக்குறேன்... அம்மு அம்மு.. ஏன் வரலன்னு சொல்லு...
உத்ரா : நா மாமா வந்தா தான் வருவேன்... என அழுது கொண்டே கூற..... அப்போதே ஷியாமும் தியாவை அழைத்து கொண்டு உள்ளே நுழைய.... உத்ரா அழுவதை கண்ட தியா ஓடி வந்து அந்த கட்டிலின் கீழ் நின்று அன்னாந்து பார்த்தவாறு...
தியா : ஏ உரு.. ஏன் அடுவுர.. என சிண்டை ஆட்டி கொண்டே கேட்க...
உத்ரா : நா ச்சூலுக்கு வர மாட்டேன்... என கண்ணை கசக்கி கொண்டே பதில் கூற....
தியா : ஏன்...
உத்ரா : மாமா வந்தா தான் வருவேன்....
ஷியாம் : அச்சச்சோ உத்ரா குட்டி அண்ணா இன்னைக்கு ச்கூலுக்கு வரலையே... என கையை விரித்து கூற...
உத்ரா : ஏன் என உடனே கண்ணை விரித்து கேட்க...
அன்கி : நீ வா நாம போவோம்... என இதுவரை கட்டை விரலை சப்பி கொண்டிருந்தவள் அன்னாந்து பார்த்தவாறு கூற....
உத்ரா : நா வர மாட்டேன்..... மாமா வந்தா தான் வருவேன்.... அ... மாமா என அழதொடங்கி வாட்டாள்...
விஷ்வா ஷியாம் : அழாத அம்மு... என எக்கி எக்கி கத்த....
வீட்டினுள்ளே ஓடிய ரித்திக்.... லன்லைனை தூக்கி கொண்டு பெரிய வீட்டிற்கு அடித்தான்... நல்லவேளையாக ராசையா ஃபோனை எடுத்தார்....
ரித்திக் : ஹலோ....
ராசையா : ஹலோ...
ரித்திக் : ராசையா... நா ரித்திக் பேசுறேன்...
ராசையா : ஹான்... சொல்லு கண்ணு...
ரித்திக் : நான் தான் பேசுறேன்னு சொல்லாம ஃபோன தயா கிட்ட குடுங்க.... என ஹஸ்கி வாய்சில் கூற.... இந்த இரு வாண்டுகளின் சேட்டைகளை அவர் அறிந்ததால் அவனிடம் கொண்டு போய் கொடுக்க...
ஆதித் : ஹலோ ராவ்...
ரித்திக் : தயா.... நீ ஸ்கூல் வல்லன்னு அம்மு அழரா டா... என அதிர்ச்சியாய் கூற.....
ஆதித் : அப்டியா.... சரி உடனே வரேன்... என ஃபோனை வைத்து விட்டு அறையிலிருந்து வெளியே ஓடினான்..... அவன் அறையிலிருந்து வெளியே ஓடுவதை கண்ட துரை " டேய் ஆதித் " என கத்த.... அவனோ அது எதையும் கேளாமல் வீட்டை விட்டே ஓடியிருந்தான்....
இன்னும் கண்ணை கசக்கி கொண்டிருந்த உத்ராவின் அட்டகாசத்தை தாங்காமல் ராமானுஜமே வந்து அவளை ஸ்கூலுக்கு விட கிளம்ப... அவளோ அவரிடம் சண்டை போட்டு அழுது கொண்டு மேலேயே அமர்ந்திருக்க.... கார்த்திகா அடிக்க வரவும் இன்னும் கத்தி அழுத உத்ரா வாசலில் " அக்ஷா " என அழைப்பை கேட்டு.... நீர் வீழ்ச்சி வற்றி போக.... மாமா என குதூகலமாகி விட்டாள்....
கருப்பு கட்டம் போட்ட வெள்ளை சட்டையும் கருப்பு பன்ட்டிலும் தவிப்புடன் உள்ளே வந்த ஆதித் சின்னவர்கள் அனைவரும் மேலே நோக்கி கொண்டிருப்பதும்... ரித்திக் உத்ராவை தூக்க முயல்வதும் அவள் அவன் கையை தட்டி விடுவதுமாய் இருந்ததை கண்டு புன்முருவலுடன் அவ்விடத்தை நெருங்கினான்.... அவன் வந்ததும் இனியே இவள இவன் பாத்துமப்பான் என பெரியவர்கள் நகர்ந்து விட...
உத்ரா : மாமா...
ஆதித் : அக்ஷாமா... ஏன் டா ஸ்கூல் போலன்னு அடம்ப்புடிக்கிர...
உத்ரா : நீ ஏன் வடல... நேத்து நா வந்து உன்ன ச்சூலுக்கு அழச்சிட்டு போறேன்னு தான சொன்ன... என ஆட்காட்டி விரலை ஆட்டி கேட்க
ஆதித் : அதுக்குன்னு... நீ ஸ்கூல் போகாம இருப்பியா.... சரி இப்போ தா நா வன்ட்டேன்ல... ஸ்கூல் போவோமா...
உத்ரா : போலாம்.... என சிரித்து கொண்டே கூற...
ஆதித் : சரி கீழ இறங்கு...
உத்ரா : ங.. என விழித்தவாறே மண்டையை சொறிய.
ஆதித் : எறங்கு டி...
உத்ரா : அத போட்டு ஏறிட்டேன்... ஆனா எப்டி எறக்கனும்... என உதட்டை பிதுக்கி கேட்க.... அங்கிருந்த அனைவருமே அவள் கேள்வியில் சிரித்து விட்டனர்.... சிரிப்புடனே அவளை தூக்கி கீழே இறங்கி விட்டான் ஆதித்....
அதன் பின் அவனின் கையை பிடித்து கொண்ட உத்ரா வாசல் வரை சென்று திடீரென நின்றாள்.... இப்போ என்ன என அனைவரும் பார்க்க.... அவளோ ஆதித்திடம் கையை நீட்டி தூக்க சொல்ல.... அவன் தூக்கி கொண்டதும்.... அவளின் குட்டி கையை அவன் கழுத்திலும் நெற்றியிலும் வைத்து பார்த்தாள்...
உத்ரா : அம்மா.... என உள் குரல் கொடுத்ததும் கார்த்திகா வர...
ஆதித் : எதுக்கு அக்ஷா அத்தைய கூப்புர்ர...
உத்ரா : அம்மா... மாமாக்கு சுடுது... நா ஸ்கூல் போல...
கார்த்திகா : சுடுதா... என்ன பா ஜுரமா...
ஆதித் : இல்ல அத்த... கொஞ்சம் உடம்பு அனத்துது... அதான் ஸ்கூல் போல....
கார்த்திகா : நீ வீட்டுக்கு கிளம்பு பா... அவள ரித்திக் பாத்துப்பான்...
உத்ரா : உஹும்... நா ச்சூல் போ பாட்டேன்.... என மீண்டும் தன் பாட்டை பாட..... " அய்யோ " என்றானது மற்றவர்களுக்கு....
கார்த்திகா : உன் மாமாக்கு தான டி உடம்பு சரி இல்ல.... நீ ஏன் போமாட்ட...
உத்ரா : ஏன் மாமாவ நான் டான பாட்டுக்கனும்.... எனக்கு சுட்டா நீ இம்டி தான கை வச்சு பாப்ப... மாமாவும் அப்டி தான் பாக்கும்... அப்போ நான் டான அவனுக்கு பாக்குனும்... என அவன் கழுத்தை சுற்றி கையை போட்டு கொண்டு அவன் மிதே சாய்ந்து கூற....
குமரி பாட்டி : பெரிய மனுஷியாட்டம்ல்ல டி பேசுர...
கார்த்திகா : மதியம் வந்து நீ உன் மாமாவ பாத்துக்க... இப்போ ஸ்கூல் போ... என சிரிப்புடனே கூற...
உத்ரா : அடுவர யாரு பாட்டுப்பா.... என இன்னோறு கேள்வியை வைக்க...
ஆதித் : அதுவர நானே பாத்துக்குறேன்... நீ சமத்தா போய்ட்டு வரனும் சரியா... என கேட்க...
உத்ரா : சரி மாமா... என தலையை பலமாய் ஆட்டி.... கீழிறங்கி அவனுக்கு ரித்திக்கை தவிர்த்து மற்ற அனைவருடன் டாட்டா காட்டி விட்டு பள்ளிக்கு ஒருவழியாய் சென்றாள்...
நீ... நான்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro