34 நீ... நான்...
தன் முன் இருந்த அனைத்து பொருளையும் தள்ளி விட்டு உடைத்து தன் கோவத்தை வெளிபடுத்தினான் மன்ஸூர்.. அவனை அடக்க வழி அறியாது முளித்தவாறு இருந்தார் கந்தர்வன்.... மற்ற ரௌடிகள் அவனை கண்டு அஞ்சியவாறு இருக்க.... அவன் பைத்தியகாரனாட்டம் அனைத்தையும் உடைப்பதை கண்டு தன் அமைதியை கலைத்தார்...
கந்தர்வன் : தம்பி... மன்ஸூர் ஏன் யா இப்போ இவ்ளோ கோவப்படுர.... கொஞ்சம் பொருமையா இரு யா...
மன்ஸூர் : எவ்ளோ வர்ஷம் பொருமையா இருக்க சொல்றப்பா நீ... பத்து வர்ஷம் அந்த ஆதித்தன நெருங்க கூடாது அவன் ஊருக்கு வந்தா தான் நீ மோதனும்னு என்ன வெளி நாட்டுக்கு அனுப்பீட்டீங்க... அவனுக்கு எப்போ பாரு சப்போர்ட்டா இருக்க அந்த உத்ராவையும் விட்டுட்டு போனேன்... இப்போ அவன் திரும்ப இங்க வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது... அவ மேல இன்னுமே அவன் அன்பு வச்சிர்க்கான்னு தெரிஞ்சு அவள கல்யாணம் பன்னி சித்திரவதை பன்னி அத அவன பாக்க வச்சு வேதனையாக்கனும்னு நெனச்சேன்... ஆனா நா இங்க வந்து பெரியப்பாட்ட ஐஸ் வக்கிறதுக்குள்ள... எனக்கு முன்னாடி பொறந்து தொலச்ச அந்த தருதல ( அதான் பா சர்வதேசமரம்) அவள விரும்புறேன்னு வந்து நிக்கிறான்... நீங்களும் அத ஆதரிச்சு அவள பொண்ணு கேக்க என்னையும் அழச்சிட்டு போறீங்க.... சரி தமிழ் பொண்ணு தான வீட்டுக்கு அடங்கிக்கிட்டு ஒத்து போவா... அப்ரமா இங்க வந்ததும் போற்றலாம்னு பாத்தா.... இப்போ அந்த அழுத்தக்காரி கல்யாணம் வேணாம்னு மயக்கம் போட்டு விழுந்துர்க்கா... எல்லாம் அந்த ஆதித் மேல உள்ள பாசத்தால தான்...
கந்தர்வன் : அதுக்கு என்ன டா செய்ய சொல்ற.... அவங்க வீடே அவள தூக்கி வச்சு கொண்டாடுவாங்க... அவ சொல்ல மட்டும் தான் அவங்க எல்லாருமே கேப்பாங்க.... நாம ஒன்னும் பன்ன முடியாது....
மன்ஸூர் : எனக்கு பத்திக்கிட்டு வருது... அவன நா எதாவது பன்னனும்.... அவன் சந்தோஷமா இருக்க கூடாது.... சந்தோஷமா சிரிக்க கூடாது
தீரா : அவன் சிரிச்சு இவன் எப்போ பாத்தான்.... நானே அத பாத்ததில்ல...
கந்தர்வன் : கொஞ்சம் பொருத்து போகலாம் மன்ஸூர்...
மன்ஸூர் : முடியவே முடியாது... நீ பொருத்து போலாம் பொருத்து போலாம்னு சொல்லி சொல்லி இந்த பத்து வர்ஷத்துல எதுவுமே கிழிக்கல... இனி மேலும் நா பொருத்து போக மாட்டேன்... நீயும் உன் அப்பனும் பொருத்து பொருத்து போனதால தான் அந்த கெழவனோட இடத்தையும் பிடிக்க முடியல... உன்னால அந்த ஆதித்தோட அப்பா இடத்தையும் பிடிக்க முடியல... ஆனா நா ஆதித்தோட இடத்த புடிக்காம விட மாட்டேன்.... இன்னைக்கு அந்த விருந்து முடிச்சு நைட்டு அவன் எங்க இருக்கானோ அங்க வச்சே என் கையால வெட்டி கொல்ல போறேன்... என அவ்விடமே அதிரும் அளவு கத்தி விட்டு சென்றான்....
கந்தர்வனுக்கு பிறந்த மன்ஸூர் மட்டும் விதிவிலக்கல்ல.... குழந்தைகள் பிறப்பிலே எவரும் தீயெண்ணம் கொண்டவர்களாய் பிறப்பதில்லை...
சிலர் பிறப்பிலே தீயவர்கள் என கனிக்கப்படுவர்... ஏனெனில் அவர்கள் உலகத்தில் மலையளவு பாவத்தை செய்து விட்டு அதற்காய் தண்டனை அனுபவிக்க மீண்டும் பிறப்பெடுத்திருக்கும் கைதிகளாய் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.....
சாதாரண குழந்தைகள் வளரும் சூழ்நிலையோ... அல்லது வளர்ப்பவரின் அலட்சியம் தான் அவர்களின் வாழ்வின் பாதையை தவறாய் முடிவெடுக்க முதல் படியாய் அமைகிறது...
அது போல் தான் மன்ஸூரும்.... வெண்பஞ்சாய் இவ்வுலகில் தன் மென்பாதத்தை பதித்தவன் கந்தர்வனின் வளர்ப்பில் மொட்டிலே ஆதித்தின் மீதும் அவன் குடும்பத்தின் மீதும் வன்மத்தை வளர்க்க தொடங்கினான்... அதை சரியான தந்தையாய் வெட்டி எறியாமல் அலட்சியமாய் விட்டார் கந்தர்வன்... இன்று அது முற்றிலும் விஷமாய் மாறியிருக்க... இப்போதும் தன் மகனை தடுக்காது வேறு திட்டம் தீட்ட சென்று விட்டார் அவர்....
ரித்திக்கை பார்த்த சசிக்கலா காலில் விழாத குறையாக என்னை உத்ராவை மன்னிக்க சொல்லு பா என கூறி விட்டு சென்றார்....
ரித்திக்கும் விஷ்வாவும் விழாவிற்கு ஏற்பாடுகளில் சிலவை மேற்பார்வை பார்க்க வேண்டுமென கூறி சென்று விட... இப்போது அறையில் பெண்கள் மூவரும் தனித்து விட பட்டனர்... தன் சந்தேகங்களை இவள்களிடம் கேட்கலாமென திரும்பிய உத்ரா.. அன்கி மிரு இருவரும் மூஞ்சை தூக்கி கொண்டு அமர்ந்திருப்பதை கண்டு அவள்கள் காலிலே விழுந்து விட்டாள்...
உத்ரா : ஏதோ.... இருந்த மனநிலைக்கு மறந்துட்டேன் டி... தயவு செஞ்சி பேசி தொலைங்க டி...
மிரு : சரி சரி ரொம்ப கெஞ்சிர... எந்திரி....
உத்ரா : கால்லையே விழுந்துர்க்கேன் டி...
அன்கி : ஆமா கிழிச்சிட்ட டி... பெட்ல உக்காந்துக்குட்டு பெட்ல உக்காந்துருக்க எங்க இரெண்டு பேர் பக்கம் குப்பர படுத்துட்டு கால்ல விழுந்துட்டேன்னு டயலாக்கு விட்ரியா...
உத்ரா : ஈஈஈஈ
அன்கி : சரி எந்திரி...
உத்ரா : ம்ம்ம் நேத்து என்ன நடந்தது... என்ன யாரு கூட்டீட்டு வந்தா.... நா எங்க மயங்கி கிடந்தேன்...
மிரு : எங்களுக்கே சரியா தெரியல டி... நைட்டு பத்து மணி வரையுமே நீ எங்க போனன்னு தெரியல... எங்கள எல்லாம் எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க... அப்ரம் ஒரு பதினோறு மணி போல உன் ரூம்ல யாரோ இருக்குரத மாடில இருந்து பாத்தோம்... அதனால உடனே வந்தோமா... ரித்திக் அத்தான் தான் கதவ சாத்தீட்டு வந்தாங்க.... நாங்க உத்ரா எங்கன்னு கேட்டதுக்கு ரெஸ்ட் எடுக்குரா காலைல பேசுங்கன்னு அத்த சொன்னாங்க...
அன்கி : எங்க இருந்தா எப்டி கண்டுப்புடிச்சீங்கன்னு கேட்டதுக்கு... நீ பர்ஸ்ட்டு ஆத்தங்கரை பக்கமா ஓடுனத நம்ம பக்கத்து வீட்டு குட்டி வாண்டு சொல்லீர்க்கு... அங்க போய் தேடுனப்ப நீ இல்லையாம்.... அப்ரம் தேடி தேடி கடைசியில நீ தண்டவாளத்துக்கு பக்கத்துல அழுது அழுது கலச்சு போய் மயங்கி விழுந்து கிடந்தத பாத்துட்டு கூட்டீட்டு வந்தாங்ளாம்...
உத்ரா : ஓஹ்..... என இழுக்க.... அறைக்குள் வந்த கார்த்திகா மூவரையும் கிளம்ப கூறி குளியலறைக்கு துரத்தி விட்டார்....
விழாவின் வேலைகள் சிறப்பாய் முடிவடைந்திருக்க.... நீட்டான வெள்ளை ஷர்ட்டில்... சுருக்கமில்லா கருப்பு பன்ட்டில்... கை சட்டை முழங்கை வரை மடித்து விடப்பட்டு... முருக்கு மீசை முருக்கி விட பட்டு... தன் கூர் கண்களால் மண்டபத்தை மேற்பார்வை இட்டவாறு மிடுக்காய் நின்றான் நம் நாயகன் ஆதித்....
காலங்காத்தாலையே அவன் டிப் டாப்பாய் கிளம்பி வந்திருக்க.... ஏதோ வேலையாய் டௌன் சென்றவன் இப்போது தான் இங்கே வந்திருந்தான்.... இந்த ஒரே வாரத்தில் அவன் கைகள் பெற்ற பல வெட்டு காயங்கள் இன்று ஆறி தானாகவே மறைந்து போயிருந்தது... உள்ளங்கையில் மட்டும் சிறிய வடு இருக்க... அது காய்ந்ததனால் அவன் கண்டுகொள்ளவில்லை...
தீரா : இல்லனா மட்டும் சாரு கண்டுக்குட்டு மருந்து போற்றுவாராக்கும்....
சரியாய் அந்நேரம் பார்த்து சுற்றியிருந்த சிலரும் வேறு வேலைகள் பார்க்க செல்ல... ஏதோ யோசனையில் நின்ற ஆதித்தின் பின்... ஒரு கத்தியுடன் மெல்லமாய் நடை வைத்து வந்தான் அவன்.... அதை காணாது முன் பார்த்தவாறு இருந்தவனின் தோளை பற்றி ஒரே குத்தாக கத்தியை முதுகில் இறக்க.... ஆதித் அதிர்ந்து திரும்ப..... அவனோ கத்தியை திருப்பி பிடித்தவாறு நக்கலாய் சிரித்து கொண்டிருந்தான் தூர்தேஷ்....
தூர்தேஷ் : என்ன டா பயந்துட்டியா... என சிரித்து கொண்டே கேட்க...
ஆதித் : டேய் பையா... எப்போ டா வந்த.... வேற விளையாட்டே கெடக்கலையா உனக்கு.... என கேட்க....
தூர்தேஷ் : சும்மாடா அண்ணா.... என பேசி கொண்டிருக்கும் போதே.... யாரோ அவனை சட்டென திருப்பவும் தடுமாறியவன் தன் கன்னத்தில் விழுந்த பளாரென்ற அறையில் கன்னத்தை பிடித்து கொண்டு ஆதித் மேலே சாய்ந்தான்.....
அவன் முன் கோவத்தில் ருத்ரகாளியாய் நின்றாள் உத்ரா.... ஆதித் தூர்தேஷ் இருவரும் ஒரே போல் கொட்ட கொட்ட முளிக்க.... அவளோ திரும்பியும் பாராது எங்கோ சென்று மறைந்தாள்..... அவள் பின்னே பேசி கொண்டே வந்திருந்த மிருவும் அகியும் தூர்தேஷ் திடீரென ஆதித்தின் முதுகில் கத்தியை வைத்து குத்தியதை போல் விளையாடுவதை கண்டதும் அவன் அருகில் சென்ற உத்ரா பளாரென அறைந்து விட்டு செல்வதை அட்டக் வராத குறையாக இன்னும் அப்படியே பார்த்து கொண்டிருந்தனர்.....
ஆதித் அதை நினைத்து இதழோரம் பூத்த புன்னகையை மறைத்து கொள்ள.... அன்கியும் மிருவும் பழைய உத்ராவை பார்த்ததை நினைத்து மகிழ்ந்து கொண்டனர்....
தூர்தேஷோ " எப்பா... என்னா அறை " என தாவக்கட்டையை சரி செய்தவாறு புன்னகையுடன் சென்றான்...
ஏதோ ஒரு மரத்தின் அருகில் போய் அமர்ந்த உத்ரா தன்னையும் மறந்து எப்பொழுதும் போல் அவளின் நீர் வீழ்ச்சியை திறந்து விட்டிருந்தாள்.... அங்கு அவளை எவரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை... ஏனெனில் மரத்தின் பின் புறம் அமர்ந்திருந்தாள் அவள்...
உத்ரா : எனக்கு என்ன ஆச்சு... ஏன் நா இப்டிலாம் நடந்துக்குறேன்... நேத்து அந்த சர்ரெவதேசம் முன்னாடி நிக்கவே பயந்த நான் இன்னைக்கு அவன் மாமாவ குத்துரத பாத்துட்டு அறஞ்சிட்டேனே.... பத்து வர்ஷமாச்சே நா என் கோவத்த மறந்து.... எப்டி இதெல்லாம்.... நா ஏன் அவனுக்காக துடிக்கிறேன்... ஏன் அவனுக்காக பத்து வர்ஷமா விடாம அழறேன்... ஏன்... எனக்கு அவனுக்கும் என்ன சம்மந்தம்... நா ஏன் அவனுக்காக இப்டி இருக்கேன்... வீட்ல எனக்காக அத்தனை பேரு இருக்கும் போதும் ஏன் நா இவன மட்டுமே தேடுறேன்... ஏன்... இதுக்குலாம் என்ன தா அர்த்தம்... இறைவா... நா அவனுக்கு எப்பவுமே தொல்லையா தா இருக்கேன்.... அவன் கஷ்டப்படுரதுக்கு காரணமே நான் தான்.... என கத்தி அழ...
அப்போது திடீரென " நான் சொன்னனா உன் கிட்ட " என்ற ஆதித்தின் கோபமான குரல் சற்றே சத்தம் அதிகமில்லாமல் கேட்க.... திடுக்கிட்ட உத்ரா கண்களை துடைத்து விட்டு திரும்பி பார்க்க.... அங்கோ ஒரு நான்கடி தூரத்தில் ஷியாம் ஒரு கையால் காதை பொத்தியவாறு மறுகையால் தன் ஃபோனை அவன் காதிலிருந்து இரண்டடி தூரத்தில் தள்ளி வைத்திருந்தான்....
மீண்டும் அவன் குரல் கேட்டது.... " நா சொன்னனா டா... சாப்பாடுல ஸ்வீட் குடுக்க சொன்னனா " என கத்தி கொண்டிருந்தான்....
ஷியாம் : டேய் அண்ணா.... தெரியாமே பன்னீட்டேன் டா... கத்தி தொலையாத டா... நீ கத்துரது ஸ்பீக்கர் போடாமையே பத்தடி தூரம் உள்ளவங்களுக்கு கூட கேக்குது டா... என தன்னையே சுற்றி உள்ள அனைவரும் ஒரு மார்க்கமாய் பார்ப்பதை கண்டு தலையை சொறிந்தவாறே கூற... உத்ராவும் தன்னை குழப்பமாய் காண்பதை கண்டவன் ஈஈ எனை இழித்தவாறே அங்கிருந்து ஓடி விட்டான்....
மெல்ல புன்னகை பூத்த தன் இதழ்களை கண்டவளுக்கு....
உத்ரா : அது எப்டி மாமா... நா எவ்ளோ கஷ்டத்துல இருந்தாலும் எப்டியாவது அமைதி படுத்துர.... ஏன் டா இப்டிலாம் நடக்குது... உன் கிட்டையும் எனக்கு சரியான அரவணைப்பு கிடைக்கல... ஆனா என் மீதான உன் அன்பு இன்னும் குறையல... எனக்கு எல்லாமுமாவே இருக்க நீ என் வாழ்க்க முழுக்க வேணும் மாமா... நா உனக்காக தான் துடிக்கிறேன்... அழறேன்... மூச்சு கூட விட்ரேன்... ஆனா ஏன் டா....
மனசாட்சி : ஏ மண்டகாசயம்... எவ்ளோ நேரம் யோசிப்ப... எனக்கே காண்டாகுது... மரியாதையா எந்திரிச்சு போ டி....
உத்ரா : நா காரணம் தெரியாம போக மாட்டேன்....
மனசாட்சி : போய் உன் மாமன்ட்டையே கேளு போ...
உத்ரா : ஏன் அவன் என்ன ஊர விட்டு துறத்துரதுக்கா... நானே கண்டுப்புடிச்சிக்கிறேன் நீ போ...
மனசாட்சி : நீ இந்த ஜென்மத்துல திருந்த மாட்ட....
உத்ரா : ஓக்கே உத்ரா... குழப்பிக்காத பொருமையை மாமா வந்ததுல இருந்தே யோசி.... ம்ம்ம் நா பத்து வர்ஷமா தினம் ட்ரைய்ன்ல அவன் வரானான்னு போய் பாத்தேன்.... ஆனா அதே பத்து வர்ஷம் இங்க இல்லாத ரித்திக் அண்ணாக்காக நா இப்டி போய் நிக்கல... தீரா பர்டே அன்னைக்கும் இதே தான் நடந்துச்சு... அவன் வருவான்னு நா எதிர்பாத்தேன்... ஆனா அண்ணா வந்துச்சு... அட் தி சேம் டைம் அவனும் வந்தான்.... அன்னைக்கு நைட்டு நா அவன கட்டி புடிச்சப்ப பத்து வர்ஷம் இல்லாத நிம்மதிய பார்தேனே... அது என் குடும்பத்து கிட்ட கூட நா உணர்ந்ததில்லையே... அந்த அக்ஷாங்குர பேரு இன்னுமே அவன் மறக்கல... எவ்ளோ கோவத்துல இருந்தாலும் எனக்காக எல்லாமே பன்றானே... ஆனா நா அது எதையும் எதிர்பாக்கலையே.. தூர்தேஷ ஏன் அறஞ்சேன்... அப்போ அவன் கண்ணுல நா எதையோ பாத்தேனே... பழைய அக்ஷாவ பாத்த நிம்மதிய நான் பாத்தனே... என கூற..... அவள் மூளையில் பல குழப்பங்கள் விதவிதமாய் அவளை பாடாய் படுத்த இறுதியில் அவள் ஆதனின் சிரித்த முகம் வந்து சென்றது....
அப்போது பலவை அவளுக்கு விளங்க தொடங்கியது.... தான் செய்தவை அனைத்திற்கும் அவன் மீது தான் வைத்த ஏதோ ஒரு பாசமென நினைத்தவளுக்கு அது நேசமென புரிய தொடங்க.... ஒரு தீர்க்கமான தெளிவுடன் கண்களை திறந்தாள்.... அவளின் விழிகள் கன்னாடியை போல் ஜொளிக்க.... கண்ணீர் துளிகள் நச்சத்திரம் போல் மின்னி மறைந்தது...
உத்ரா : புரிஞ்சிடுச்சு மாமா.... ரொம்ப மடத்தனமா இருந்துர்கேன்.... உன் மேல எனக்கிருந்த என் உணர்வுகள எனக்கு புரிஞ்சிக்க தெரியல டா... இனிமே விட மாட்டேன்... உனக்கு இது வரை கிடைக்காத பாசத்த நா உனக்கு காமிப்பேன் மாமா... உன்ன விட்டு இனி இம்மியளவும் நகர மாட்டேன்.... உன் அக்ஷா உன் மனசுல இருக்கான்னு தெரிஞ்சும் உன் கோவத்த பாத்து நா ஒதுங்குனது தப்புதான்.... அப்போ நீ மனசில்லாம பன்னேன்னு நெனச்சேன்.... ஆனாலும் இன்னைக்கு வர அதெல்லாம் தூக்கி எறியல... அது உன் நியாபகமான்னு நெனச்சேன்.... பட் இப்போ தான் உயிருன்னே புரியிது.... இனிமே உன்ன விட மாட்டேன்.... ஐ லவ் யு மாமா என அவளையும் மறந்து கத்திவிட்டாள்.... நல்லவேளையாக அங்கு எவரும் இல்லை.... தன் நாக்க கடித்து கொண்டு அங்கிருந்து சிட்டாய் பறந்து விட்டாள்.....
தீரா : சப்பா... எப்டியோ லவ் புரிஞ்சிடுச்சு...
இரவு நடக்கப்போகுது விபரீதத்தை அறியாமல் செல்லும் இந்த பட்டாம்பூச்சியாய் பறந்து செல்வபவளை பார்த்து வருந்தியது விதி....
நீ... நான்...
ரிய்லி சாரி இதயங்களே... நிச்சயமா இது மொக்கையா தான் இருக்கும்.... நெக்ஸ்ட் யூடி சீக்கிரமே போடுற்றேன்.... ப்லீஸ்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro