16 நீ... நான்...
உத்ரா : அண்ணா... இப்போ விட போரியா இல்லையா.... என கத்த.... ரித்திக் அவளை முறைத்து கொண்டே பார்த்தான்....
தியா : அண்ணா உனக்கு தனியா சொல்லனுமா கைய எடு...
இருவரும் அவரவர் தங்கை பேச்சை அதிசயமாய் கேட்டு கையை எடுத்தனர்...
அம்ருதா : என்ன காரியம் பன்ன பாத்த... எதுக்கு டா உனக்கிந்த கோவம்...
ஆதித் : இவன் எதுக்கு இங்க வந்தான்... ஏன் என் கண்ணு முன்னாடி வர விட்டீங்க... என காட்டு கத்து கத்த..
ரித்திக் : எனக்கு மட்டும் உன் மூஞ்ச பாக்கனும்னு ஆசையா.... எல்லாம் இவங்களால வந்தது.... என மீண்டும் கையை முருக்க...
உத்ரா : அண்ணா நிறுத்து.... அவங்க உண்மைய தான சொன்னாங்க ஏன் கத்துர.... நா இராசி கெட்டவ தான...
அன்னப்பூரனி : அவளே ஒத்துக்குட்டா அதுக்கு சப்போர்ட் பன்ன இரெண்டு வெத்து வேட்டா... ரித்திக்கையும் அம்ருதாவையும் குறித்து கூறி வேண்டுமென்றே ஆடு தலையை விட....
கோவத்தில் ஏற்கனவே கையை முருக்கி கடினப்பட்டு அதை அடக்க முயன்ற ஆதித் அவரின் சொல்லை கேட்டு எரிமலையாய் வெடித்தான்....
ஆதித் : தாத்தா.... என அவன் கத்திய கத்தில் அவனின் இரு தாத்தாவும் அங்கு வந்து அட்டேன்ஷனில் நின்றனர்....
ராஜேந்திரன் : என்னாச்சு.... ஏன் எல்லாரும் இப்டி இருக்கீங்க... என்னடா கைல இரத்தம் வருது... பசங்களா... எப்போ வந்தீங்க...
அனைவரும் அவர் கேள்விக்கு பதிலளிக்க முடியாத படி இருந்தனர்...
நாராயனன் : ரித்திக்கு... நீ எப்போ பா வந்த... ஏன் இவ்ளோ கோவமா இருக்க....
ரித்திக் : என்ன மன்னிச்சிருங்க தாத்தா... இந்த வீட்டுக்குள்ள வரவே மாட்டேன்னு சொன்னேன்... ஆனா கேடு கெட்ட ஜென்மங்கள்னால வர வேண்டியதா போச்சு... என அன்னப்பூரனியை முறைத்து கொண்டே கூறினான்... " உன் மொறைப்புக்குலாம் நா அசரு வேணா " என்று முகத்தை திருப்பிய அன்னப்பூரனி ஆதித்தின் அனல் தெறிக்கும் முகத்தை கண்டு அஞ்சினார்....
நாராயனன் : என்ன நடக்குது இங்க...
ஆதித் : தாத்தா அவங்க எதுக்கு இந்த வீட்ல இருக்காங்க... எந்த உரிமைல இருக்காங்க...
நாராயனன் : உன்.... இல்ல தங்கதுரையோட மனைவிங்குர உரிமைல இருக்கா...
ஆதித் : அவரு தா இல்லையே... ஏன் இன்னும் இங்க இருக்காங்க....
அன்னப்பூரனி : வெளிய போன்னு... மறைமுகமா சொல்றியா... என அதிர்ச்சியுடன் கேட்க...
ஷியாம் : இதுக்கு மேலையும் எப்டி நேரா சொல்லுவாங்க... என அடக்கப்பட்ட கோவத்துடன் கேட்க.... அவனருகில் நின்ற அன்கி அவன் கைகளை பிடித்து அழுத்த.... அவள் கைகளை உதரி விட்டவன் அம்ருதா முறைப்பதை கண்டு விருட்டென வெளியே சென்றான்.... அவன் பின்னோடு ஓடினாள் அன்கிதா.... மிரு ரித்திக் மற்றும் ஆதித்தின் இடையில் நிகழ்ந்தேறும் பாராமுகங்களையே பார்த்து கொண்டிருக்க.... அவளை இழுத்து கொண்டு வெளியேறினான் விஷ்வா....
ஆதித்தும் ரித்திக்கும் ஒரே நேரத்தில் தியாவை ஏதோ அர்த்ததுடன் பார்க்க.... பின் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொண்டனர்.... அடுத்த நொடியே தியா உத்ராவை இழுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்....
மருதவேல் : மருமகனே... என ஆதித்தனை அழைக்க.... அவன் இவரை திரும்பி முறைத்த முறையில் நொடியில் அட்டக் வந்து சீரானது அவரின் இதயம்....
அன்னப்பூரனி : என்னாச்சு அண்ணே...
மருதவேல் : ஒன்னுமில்ல ஒன்னுமில்ல... அது ஆதித்தன்... நீ சொல்லிட்டா... என் தங்கச்சிய இந்த வீட்ட விட்டு அனுப்பீடுவாங்களா....
ஆதித்தன் : வேற யாரு சொல்லனும் மிஸ்டர். மருதவேல்...
அன்னம் : டேய் ஆதி...
ஆதித் : நா ஆதித்தன்.... நியாபகம் இருக்கட்டும்....
அன்னம் : மாமா வ போய் இப்டிலாம் பேசலாமா...
ஆதித் : கண்ட கண்ட உறவுகள எல்லாம் என்னோட இணைக்க முடியாது...
அம்ருதா : ஆதி...
ஆதித் : அம்மா நீ சும்மா இரு.... சொல்லுங்க மருதவேல் வேற யாரு சொல்லனும்....
மருதவேல் : ம்க்கும்... என்று தன்னுள்ளே வராத தைரியத்தை கடினப்பட்டு இழுத்து பிடித்து..... அத இந்த வீட்டு வாரிசு தான் சொல்லனும்....
ரித்திக் : யோவ்...
" அய்யையோ இப்போ இவன் ஏன் கத்துறான் " அனைவரும் அவனை நோக்க... அவனோ அவன் போனில் யாரிடமோ கத்தி கொண்டிருந்தான்.... அனைவரையும் தவிர்த்து ஆதித் மட்டும் மருதவேலை கண்கள் கொண்டு எரிக்க முயன்று கொண்டிருந்தான்....
ராஜேந்திரன் : எந்த தைரியத்துல தம்பி நீ இப்டி பேசுர... எங்க பேரன பார்க்க உனக்கு என்ன தோனுது...
மருதவேல் : ஐயா... நம்ம குடும்ப வழக்கப்படி இரெண்டு ஆண் பிள்ளை இருக்க வீட்ல ஒரு பையன் ஊரையும்... இன்னோறு பையன் தொழிலையும் பொருப்பேத்துக்கனும்... ஷியாம் தம்பி தொழில்ல சுயமா இருந்துட்டு வருது... ஆனா இவரு மாசத்துக்கு நாப்பது கம்ப்பெனி மாரிக்கிட்டு இருக்காரு... இவரு ஊரு பொருப்ப ஏத்துக்குட்டா தான இந்த வீட்டு வாரிசாக முடியும்... என நிச்சயம் ஆதித்தன் ஊர் பொருப்பை ஏற்க மாட்டான் என்ற நம்பிக்கையில் கூறினார்.....
" நல்ல வேளை அண்ணன் தம்பி இரெண்டு பேர்ல ஒருத்தன் இங்க இல்ல " என நிம்மதியடைந்து கொண்டார் அம்ருதா....
நாராயனன் : நிறுத்துங்க... என் பேரன பாத்து எந்த தைரியத்துல பேசிக்கிட்டு இருக்க நீங்க... அன்னப்பூரனி.... என கத்த...
அன்னம் : மாமா
நாராயனன் : உன் அண்ணனுக்கு கடைசி வாய்ப்பு தரேன்.... இங்க இருந்து போக சொல்லு...
மருதுவேல் : ஹ்ம் போய்ட்டு வரேன் தங்கச்சி... போய்ட்டு வரேன் ரேகா மேகா என முருக்கிக் கொண்டு சென்றார்....
அங்கே இருக்க விரும்பாத ரித்திக் உடனே வெளியேற.... ஆதித் அவன் அறைக்கு சென்று அந்த வீட்டிலிருப்பவர்களின் காதை செவுடாக்கும் முடிவுடன் கதவை பலத்த சத்தத்துடன் அறைந்து சாத்தினான்....
கோவத்தில் விண்ணை வெறித்து கொண்டு அமர்ந்திருந்த ஷியாமின் பின் கை கட்டியவாறு நின்றாள் அன்கி... வந்து பத்து நிமிடம் கடந்தும் இன்னும் அவன் நின்ற அதே பொஸிஷெனில் தான் இருந்தான்....
அன்கி : டேய் கருவாயா இன்னும் எவ்ளோ நேரம் டா சூரியன மொறப்ப.... அவர கண்ணெடுக்காம பாக்குரதால அவருக்கு லாஸ் இல்ல... உனக்கு தான் லாஸ்... கருத்த தீச்சட்டியாய்டுவ....
அவள் கருவாயா என அழைத்ததிலே நொடியில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோவம் புஸ்வானமாய் அனைந்திட... அவனையும் மீறி வந்த புன்னகையுடன் அவளை நோக்கி திரும்பினான்...
ஷியாம் : நா கருவாயனா.... என புருவத்தை உயர்த்தி கேக்க....
"அய்யையோ ஏதோ ஒரு நியாபகத்துல எப்பவும் போல கூப்ட்டுட்டோமே "என பேய் முளி முளித்த அன்கி சமாளிக்க வழி தேட.... ஷியாம் அடக்கமாட்டாமல் அவள் முளியை கண்டு சிரித்து விட்டான்...
அன்கி : டேய் எதுக்கு டா சிரிக்கிர...
ஷியாம் : உன் ஆந்த முளி இன்னுமே மாரல டி... என்றான் வாயை பொத்தி கொண்டு சிரித்தவாறே...
அன்கி : தீச்சட்டி... கருவாடே... கருவாயா... என்ன ஆந்தன்னு சொல்லாத டா... என பல பெயர் வைத்து அவன் காலை வார...
ஷியாம் : எப்டி எப்டி... நாங்க கருவாயன்... நீங்க மட்டும் ஐஷ்வர்யராயோட தங்கச்சி யா....
அன்கி : நா ரித்திக்ராவோட தங்கச்சி டா...
ஷியாம் : ஆமா பெரிய முகின்ராவ்.... கருவாச்சி... என கண்களை சுருக்கி கூற...
அன்கி : டேய் சிவந்தநிறத்துல இருக்க நா உனக்கு கருவாச்சியா
ஷியாம் : ஏன் டி சிவந்தநிறத்துல இருக்க நா மட்டும் எப்டி டி உனக்கு கருவாயனாவேன்...
அன்கி : பத்து வர்ஷத்துக்கு முன்னாடி மாநிறத்தில இருந்த நீ.. இப்போ இப்டி மாறுவன்னு நா என்ன ஜோசியமா பாத்தேன்... பாத்துர்ந்தாளும் உன்ன கருவாயான்னு கூப்புர்ர பழக்கத்த மாத்தீர்க்க மாட்டேன்...
ஷியாம் : மம்ம்ம் காலைல மேடம் ஏதோ நா யாருன்னே தெராயாதுன்னு சொன்ன மாரி நியாபகம்... ஆனா இத்தன வர்ஷமும் என்ன தா நெனச்சிட்டு இருந்தீங்க போலையே..... என அவளை நெருங்கி கொண்டே கூற...
அன்கி : அ... அது... காலைல பாக்க புதுசா கிருந்துச்சு...சோ தெராயல... அப்ரம் தான்தியாவ பாத்ததும் தெரிஞ்சிச்சு.... அப்டிலாம் ஒன்னும் இல்ல... என இவளும் பின்நகர்ந்து கொண்டே வாயில் வந்ததை அடித்து விட...
ஷியாம் : ஓஹோ... அப்டியா.... என செவுரில் போய் மோதியவளின் பக்கவாட்டில் தன் ஒரு கையை அரணாய் வைத்து கேட்க....
அன்கி :அப்டிதான்.... என மிக நெருக்கத்தில் அவன் முகத்தை கண்டு தந்தியடித்த இதழை மறைத்தவாறு கூற.....
ஷியாம் : ம்ம்ம்ம்ம் என ஒரு பெரிய ம்ம்ம் கொட்டியவன்.... பத்து வர்ஷமாச்சு....
அன்கி : என்ன பத்து....
ஷியாம் : நா அந்த த்ரீ மெஜிக்கல் வர்ட்ஸ உன் கிட்ட சொல்லி....
அன்கி : எந்...த த்..த்.ரீ... வ..ர்.ட்ஸ்... என ஏதோ ஒரு மயக்கத்தில் தொலைந்தவளாய் கேட்க.....
ஷியாம் : ஐ லவ் யு என்று அவள் காதருகில் குனிந்து ஹஸ்கி வாய்சில் கூற..... எதிலோ மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்த அன்கிதா அவனின் இதழ் அவளின் கண்ணத்தில் உரசி சென்றதில் மின்சாரம் பாய்ந்து நிலையடைந்தாள்..... கண்களை மூடி திறந்தவள்.... அவன் நெஞ்சில் இரு கைகளையும் வைத்து தள்ளி தன் சிவந்த கண்ணங்களை அவன் காணும் முன்னே.... திரும்பி பாராமல் ஓடிவிட்டாள்..... தன்னை தள்ளிவிட்டு ஓடிய காதலியை கேசத்தை கோதி சிரித்தவாறு பார்த்து நின்றான் அந்த காதலன்.....
மிரு : டேய் மண்டகசாயம்... எங்க டா இழுத்துட்டு போர என்ன... உன் பாசமிகு தொங்கச்சிகள விட்டுட்டு என்ன இழுத்துட்டு போர... என எங்கோ அவளை இழுத்து சென்று கொண்டிருந்த விஷ்வாவை நோக்கி கத்தி கொண்டே வந்தாள்.. அவனோ அசராது போய் கொண்டே தான் இருந்தான்....
மிரு : டேய் இப்ப என்ன விடுவியா மாட்டியா டா....
விஷ்வா : ஏன் டி கத்திக்கிட்டே வர... என சட்டென நிற்க.... அவன் நின்ற வேகத்தில்.... அவன் இழுத்த இழுப்பிற்கே வந்து கொண்டிருந்தவள் அவன் சட்டென நிற்கவும் பலென்ஸ் செய்து நிற்க இயலாமல் அவன் மீதே மோதி அவனையும் சேர்த்து ஒன்றாய் கீழே விழுந்தாள்...
தன் மேல் ஒன்றி கிடந்த காதலி எழும் முன்னே... இடையோடு அணைத்தவன் அவளின் கண்கள் விரிவதை சிரித்தவாறு காண தொடங்கினான்...
மிரு : டேய் வென்று... நடு தெரு டா இது... விட்டு தொல டா...
விஷ்வா : இது நடு தெரு இல்ல... நடு சந்து...
மிரு : ரொம்ப முக்கியம் இந்த க்லரிஃபிக்கேஷன்.... விட்ரா என்னைய... என அவனின் பிடியிலிருந்து நழுவ முன்றாள்...
விஷ்வா : கொஞ்ச நேரம் இரு டி...
மிரு : இதென்ன வீடா... ரோடு டா....
விஷ்வா : வீடா இருந்தா மட்டும் மேடம் அப்டியே மாமன கட்டி புடிக்க போறீங்களா...
மிரு : அப்பா மாமா இருக்க இடத்துல ச்சை...
விஷ்வா : சரி சரி ரொம்ப பிகு பன்னாத... எனக்கு பதில் மட்டும் சொல்லிட்டு போ...
மிரு : சரி என்ன கேட்டு தொல...
விஷ்வா : மிஸ் மிருனாளினி ஆகிய நீ... என்று மிஸ்ஸஸ் விஷ்வா ஆவாய்....
மிரு : அன்... ஃபெப்ரவரி 31... என கூறிய வேகத்தில் அவன் கையை கடித்தவள் அவன் வலியில் அசந்த நேரம் பட்டென எழுந்து கொண்டாள்.... விஷ்வா எழும் முன்னே... அங்கிருந்து ஓட்டம் பிடித்திருந்தாள் மிரு....
விஷ்வா : கிராதகி... இதே வாயால என்ன கல்யாணம் பன்னிக்கோ டா மாமான்னு சொல்ல வக்கிறனா இல்லையான்னு பாரு டி.... என சவால் விட...
மிரு : பாக்குறேன் பாக்குறேன்.. என திரும்பி பார்த்து சிரித்து கொண்டே ஓடினாள்.... விஷ்வாவும் தனியாக சிரித்து கொண்டான்....
தீரா : பாவம்... யாரு பெத்த புள்ளையோ... பைத்தியமா சுத்த போகுது.... ஒரே லவ்ஸா இருக்கு பா... இந்த எபி...அடுத்தது கொஞ்சம் சண்டையா போவட்டும்....
எக்ஸக்ட்லி... அடுத்த அத்யாயம்... ஆதித் மற்றும் ரித்திக்கை பற்றிய சில உண்மைகள்...
காதல் ஜோடிகளின் சில்மிஷகளை பெரியவர்கள் அறிவாரா...
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்...
நீ... நான்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro