07 நீ... நான்...
கோட்டையை போல் உயர்ந்து நின்ற அந்த மாபெரும் பங்கலாவின் முன் நடந்து வந்து கொண்டிருந்தார் ராமானுஜம்... பலர் அங்கு சுற்றி முற்றி தோட்ட வேலை... மூட்டை தூக்கும்வேலை... வீட்டு வேலை... மாடி வேலை.. என பல வேலைகள் பார்த்தவாறிருந்தனர்... உள்ளே நுழைந்த ராமானுஜம்... எத்துனை முறை கண்டாலும் மீண்டும் மீண்டும் வரும் பிரம்மிப்புடன் சுற்றி பார்த்தார்... நீண்ட அழுத்தமான பலமான தூண்கள் நிலைதாங்கி நிற்க... பலபலவென மினுமினுக்கும் தரை.. விண்ணை தொட்டுவிடுமோ என எண்ணும் செங்குத்தான கூரை... அதை சுற்றி கீழிருந்து மேல் தளம் வரை இருக்கும் படிக்கட்டுகள்... அதை தொடர்ந்து அழகிய வண்ணங்கலால் அலங்காரமில்லாமலே கோலாகலமாய் தெரியும் சுற்றுசெவுரு... விதவிதமான புகைப்படங்கள்... அதில் நட்டநடுவில்... ஒரு பெரிய புகைப்படத்தில்... ஒரு ஆண்... மரியாதை குடியேறிய வதனத்துடன் கம்பீரம் தெரியும் தோற்றத்துடன் கடுமையின்று அன்பு தெரியும் குணத்துடன் இருந்தார் ஜெமீந்தாரின் மகன் தங்கதுரை.. அவர் முன் ஆட்டமாய் அடிக் கொண்டிருந்தது ஒரு பூ மாலை... அனைத்தையும் ஒரு முறை சுற்றி அலசியவர்... நேரே திரும்பவும்... ஜமீந்தார் நாராயனதுரை வரவும் சரியாய் இருக்க.... அவர் கால் பணிந்து எழுந்தார் ராமானுஜம்....
70 வயதிலும் கம்பீரமாய் நிலைத்து நிற்பவர் நாராயனன் தாத்தா... இருவது வருடம் முன்பே ஊர் தலைவர் என்னும் பதவியிலிருந்து நீங்கி கொண்டார்... அவர் மகன் தங்கதுரை பொருப்பேற்று பத்து வருடம் நிலைத்து நின்று அதன் பின் எதிர்பாராதவிதமாய் உயிர் நீத்தார்... ஆதலால் மீண்டும் அதே பதவீக்கு வர பட்டார் தாத்தா நாராயனன்...
ராமானுஜம் : வணக்கம் யா
நாராயனன் : ம்ம் வா ராமா... என்ன வேலைலாம் எப்டி போகுது...
ராமானுஜம் : எல்லாம் அமோகமா போகுதுங்கையா...
நாராயனன் : புள்ள எப்டி இருக்கா...
ராமானுஜம் : நால்ல இருக்காங்கையா...
நாராயனன் : சொல்லு பா என்ன வேலை...
ராமானுஜம் :அட்மிஷன் வேலை நேத்து முடிஞ்சிடுச்சு ஐயா... ராத்திரி வேணம்... பொரவு குடுத்துக்கலாம்னு இருந்தான்... அதான் சொல்லி குடுத்து போலாம் னு வந்தேன்...
நாராயனன் : எடுத்துட்டல்ல... அது போதும்... மருமொவள்ட்ட குடுத்துடு பா.. எனக்கு இதெல்லாம் தெரியாது...
ராமானுஜம் : அன்... சரிங்கையா...
நாராயனன் : அம்மாடி அன்னம்... இங்க வா மா... என உள்ளே பார்த்து குரல் கொடுக்க...
" வாரேன் மாமா " என்ற குரலுடன் வெளியேறினார் ஒரு 40 45 வயதில் இருக்கும் பெண்மணி... பட்டுபுடவை... பாதி நகையில் மறைந்த உடல்... முடியா குடுமியா என சந்தேகிக்கும் பின்னல்... ஆணவத்திற்கு குறைவில்லாமல்... வந்து நின்றார் ஜெமீந்தாரின் மருமகளுமான பெரிய ஊட்டம்மா அன்னப்பூரனி...
அன்னப்பூரனி : சொல்லுங்க மாமா
நாராயனன் : இந்தா மா... அட்மிஷன் முடிஞ்சிடுச்சாம்... போய் உள்ள வை...
அன்னம் : ம்ம் சரி மாமா... என்ன ராமாண்ணே... வீட்டு வேலைலாம் எப்டி போகுது...
ராமானுஜம் : நல்லா போகுதுங்க மா...
அன்னம் : உங்க மவ எப்டி இருக்கா.... எப்பொப்பாரு வெளிய சுத்துரதா கேள்வி பட்டேன்...
ராமானுஜம் : நல்லா இருக்கா தாயி... தோட்டத்துக்கும் வீட்டுக்கும் போரா... பொரவு இரயில் தண்டவாளத்துல அவங்க ஸ்நேகிதிங்க என் ஒன்னு விட்ட அண்ணன் மவ அன்கிதா கூடையும்... என் பங்காலி மவ மிருனாளினி கூடையும் போரா... அவ்ளோதானுங்க...
அன்னம் : ம்ம் .... மாமா என் அண்ணன் மக ரேகா... நாளை மறுநாள் வந்துருவா... அவ தங்குரதுக்கு எல்லாத்தையும் ஏற்பாடு பன்ன சொல்லிடவா...
நாராயனன்: ம்ம் சொல்லிடு மா...
அன்னம் : வாங்க மாமா சாப்டலாம்....
ராமானுஜம் : சரிங்கையா... வயல்ல வேல கிடக்கு... நா வரேன்.... என அங்கிருந்து நகர...
நாராயனன் : சாப்ட்டுட்டு போ ராமா...
அதற்கு அன்னப்பூரனி ஒரு மாறி பார்ப்பதை உணர்ந்து... தன் முதலாளியின் மனமறிந்தும்...
ராமானுஜம் : வேணாம்ங்கையா... நீங்க சாப்புடுங்க... நா பொரவு வரேன்... வரேன் மா... என அங்கிருந்து விடைப்பெற்றார்...
சென்னை
அம்ருதா : நா இனி மேலும் சும்மா இருக்க போறதில்ல அத்த... ஆதிய இங்க வரவச்சிட்டு தா மறுவேலை பாக்க போறேன்...
பிருந்தா : ஆனா என்ன சொல்லி அவன வர வைக்கிறது... எது சொன்னலும் கேட்டு தொலைக்க மாட்டானே...
அம்ருதா : என் புருஷனுக்கு நெஞ்சு வலி வந்துருச்சுன்னு சொல்லுவோமா....
தேவராயன் : அடிப்பாவி... நா என்ன டி பன்னேன்... என்ன ஏன் உன் மகனுக்காக படுக்கைல படுக்க வைக்கிற... என ஏதோ ஒரு ஃபைலை எடுக்க வந்தவர் நெஞ்சில் கை வைத்து கூற...
அம்ருதா : ஈஈஈ நீங்க எப்போங்க வந்தீங்க...
தேவராயன் : நீ என்ன ஹாஸ்பிட்டல்ல சேர்க்க முடிவெடுக்கும் போதே வந்துட்டேன்...
பிருந்தா :சரி இவன் வேணாம்... என் புருஷன பூட்டி வச்சிட்டு காணம்னு சொல்லிடலாமா...
ராஜேந்திரன் : நா என்ன சின்னபுள்ளையா காணப்போக... அப்டியே காணாம போனாலுல் உன் புருஷனுக்கு வீட்டுக்கு வர வழி தெரியும்னு உன் பேரன் சொல்லுவான்...
பிருந்தா : ம்கும் வேற என்ன தான் செய்ரது...
அம்ருதா : தெரியலையே...
பிருந்தா : சின்னவனுக்கு அக்ஸிடென்ட்னு சொல்லீடுவோமா... அதல்லாம் அவன் நம்பமாட்டான்... பேசாம நீ வரலல்னா... உனக்கு யாராவது சூனியம் வச்சிருவாங்கன்னு சொல்லீடுவோமா...
தீரா : ஏன் ஏன்... நானே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு ஹீரோ வச்சிர்கேன்... அவனுக்கு சூனியம் வக்க பாக்குறீங்க...
அம்ருதா : அப்போ அவன வர வைக்க என்ன தான் பன்றது... நீயே சொல்லு...
தீரா : அவனே வருவான் பாட்டி மா... யு பீ கூல்...
தேவராயன் : இதத்தான் நாழு வர்ஷமா சொல்லிக்கிட்டு இருக்க தீரா மா
தீரா : நம்புங்க தேவாப்பா... இந்த தீராவை நம்பினோர் கைவிடப்படார்...
ராஜேந்திரன் பிருந்தா : ம்க்கும்...
தீரா : ரொம்ப மட்டம் தற்றாங்கையா...
லண்டன்
ஆதித் : ஹலோ கிஷோர்....
கிஷோர் : எஸ் பாஸ்...
தீரா ம.வ : யாரிவன்...
ஆதித் : யாரு என் டீட்டெய்ல்ஸ அங்க சொன்னது...
கிஷோர் : தெரியல பாஸ்... பட் திடீர்னு இன்னைக்கு காலைல பாஸ் கோவத்துல கத்திக்கிட்டு இருந்தாங்க... " எப்டி அவன் அந்த கம்பெனிக்கு போவான்... சும்மா விட மாட்டேன் " னு..
ஆதித் : ஓக்கே... பீ கேர்ஃபுல்... நா வேற கம்பெனிக்கு சேன்ஞ் ஆய்ட்டேன்...
கிஷோர் : எந்த கம்பெனி பாஸ்...
ஆதித் : ஏன் போய் உன் அம்மாகிட்ட சொல்றதுக்கா...
கிஷோர் : பாஸ்...??? என இழுக்க...
ஆதித் : ஜஸ்ட் ஜோக்கிங்... உன்ன சந்தேகம்லால் பட மாட்டேன்... லண்டன் ல தான்... இருக்கேன்... நா அப்ரமா கூப்டுரேன்... டெக் கெர்... என போன வைத்தான்....
போனை அனைத்த கிஷோர் அவன் முன் திரும்பி சேரில் அமர்ந்திருந்த அந்த உருவத்தை நிமிர்ந்து நோக்கினான்...
கிஷோர் : போதுமா பாஸ்... என் ஆதித்தன் பாஸ் எந்த தப்பும் பன்னலன்னு நிரூபிச்சிட்டேன்....
பாஸ் : யு ஆர் ரைட்... பட்.... சீஈஓ வ வேலைய விட்டு தூக்கீட்டானே....
கிஷோர் : துரோகி மாரி தூது குடுக்க வர்ரவங்களுக்கு எங்க பாஸ் இந்த பதிலடி தான் தருவாரு... என்றான் நிமிர்த்தலாய்...
பாஸ் : ம்ம்ம் கண்டுப்புடிச்சிட்டியா... அப்ரம் ஏன் உன் பாஸ்ட்ட தெரியாதுன்னு சொன்ன
கிஷோர் : அவரு செஞ்ச தப்புக்கு... அவரு குடும்பத்த தண்டிக்க கூடாதுல்ல... அதான்.... தெரிஞ்சா பாஸ் அவர வேலைய விட்டு தூக்கீடுவாரு...
பாஸ் : ம்ம்ம் யு மே கோ
கிஷோர் :தன்க்யு... என அங்கிருந்து வெளியேறினான்....
சேரில் திரும்பி அமர்ந்திருந்த உருவம்... நிமிர்த்தலாய் புன்னகைத்து விட்டு அதன் முன் இருந்த கன்னாடி வழியே விண்ணை வெறித்தது....
அதே நேரம் ஒரு இருட்டு அறையினுள்... தன் முகத்தை மறைத்து அமர்ந்தவாறு போனை எடுத்து ஏதோ ஒரு நம்பரை டயல் செய்தான் புதிய தமிழன்...
ரீடர்ஸ் : விட்டா இவனுக்கு இதே பேர வச்சிடுவா போலருக்கே...
தீரா : சொன்னாலும் சொல்லாட்டியும்... இப்பொதிக்கு அவன் பேரு புதிய தமிழன் தான்..
சில நொடிகளில் காள் ஏற்க்கப்பட... அப்பக்கம் ஹலோ என்பதற்குள்ளே....
இவன் : அவன் ஃப்ரியாய்ட்டான்... இந்த நேரத்துல ஊருக்க வர வச்சா... கச்சிதமா எல்லாத்தைதும் முடிச்சிடலாம்...
அப்புறம் : சரி அவன சீக்கிரமா வர வைக்கனுமே...
இவன் : வருவான்... வருவான்.. எப்டியாவது வருவான்...
அப்புறம் : ம்ம்ம்ம்
ஆழ்ந்த இருட்டினுள் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தவளின்... முகத்தில் முத்து முத்தாய் வேர்வை வேர்க்க.... அவளின் கரங்கள் போர்வையை இருக்கி பிடிக்க... அவள் கண்மணிகள் மாராக அங்குமிங்கும் நடனமாட... புருவங்கள் முடிச்சிட.... உறக்கத்திலிருந்து விடுபட முயன்று ... இறுதியில் மின்னல் வேகத்தில் மின்னி மறைந்தது ஒரு ஆடவனின் முகம்... அதை கண்டவள் சட்டென கண்களை திறந்து எழுந்தமர்ந்தாள் உத்ரா...
மூச்சை இழுத்து இழுத்து விட்ட உத்ரா... தன்னை தானே அசுவாசப்படுத்திக் கொண்டு லைட்டை போட்டாள்... அவள் உடல் பாதி வேர்வையில் நனைந்திருக்க.... அவளின் மூளையோ குழம்பி தவித்தது...
உத்ரா : யாரது... என் கனவுல வந்தது... அவங்.க அவங்க.. ரொம்ப ரொம்ப நெருக்கமானவங்கன்னு தோனுதே... யாரு.... ஏன் எனக்கு நியாபகம் வர மாட்டுது... கனவுல என்ன என்னலாம் நடந்துச்சு... அவங்க முகத்த தவிற வேற எதுவும் நினைவில இல்லையே... யாரு அவங்க... முகமும் சரியா தெரியமாட்டுதே... என புலம்பி தவித்தாள் அந்த அர்த்தராத்திரியில்....
உத்ராவின் கணவில் வந்தவன் யார்...
புதிய தமிழன் யார்????
பொருத்திருந்து பார்ப்போம்...
நீ... நான்...
கதையை நகலெடுக்க வேண்டாம்.... வாசித்து கருத்தை தெரிவியுங்கள்....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro