தென்றல் 36
மித்ரனுக்கு கால் செய்த அர்ஜுன் திவ்யாவை மேகா சந்திக்க வேண்டும் என்று கூறியதை அவனிடம் கூற மித்ரனும் சரி என சம்மதித்து, எல்லோரும் கடற்கரையில் சந்திப்பது என முடிவானது.
ஷாக்சி, மித்ரன், திவ்யா மூவரும் கடற்கரையை அடைய அவர்களுக்கு முன்பாகவே அங்கு மேகாவும் அர்ஜுனும் இருந்தனர். பரஸ்பர நல விசாரிப்புகளின் பின் மேகா
"திவ்யா நிஜமா அர்ஜுன் உங்களுக்கு தாலி கட்டினாரா?" என்று கேட்க திவ்யாவோ
"இதை கேட்குறதுக்காப்பா இங்க எல்லோரையும் வர சொன்ன " என்று நக்கலாக கேட்க அவளை முறைத்த மேகா
"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க" என்று காட்டமாக கேட்டாள். மேகாவின் சீரியஸ்னஸ் எல்லோருக்கும் ஒரு வித பயத்தை கொடுக்க திவ்யாவோ
"ஏன் சார் சொல்லலயா? எனக்கு கட்டாய தாலி கட்டினத" என்று கேட்க மேகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அதை கண்ட ஷாக்சி
"ஹேய் மேகா, அது ஏதோ விளையாட்டா கட்டினதுப்பா. அத நினைச்சி நீ ஏதும் யோசிக்காத" என்று கூற அவளை முறைத்த மேகா
"தாலி கட்டுறது உங்களுக்கு எல்லாம் விளையாட்டா போச்சில்ல. ஏன் ஷாக்சி உன்னால மித்ரன் கட்டின தாலிய கழட்டி வீச முடியுமா?" என கேட்க அங்கிருந்தவர்களுக்கு இந்த சந்திப்பு சுமூகமாக முடியாது என்பது புரிந்தது. ஷாக்சி எதுவும் பேச முடியாமல் மெளனமாக இருக்க திவ்யாவோ
"மேகா அதெல்லாம் ஒரு விசயமே இல்ல. நான் க்றிஸ்டியன்பா. எங்களுக்கு ரிங்க் தான் முக்கியம்" என்று கூற கோவம் கொண்ட மேகா
"உனக்கு வேணா தாலி ஒரு பொருட்டா இல்லாம இருக்கலாம் திவ்யா. ஆனா எனக்கு அப்படி கிடையாது, ஆனா நான் அப்படி கிடையாது. என்ன கல்யாணம் பண்ணிக்க போறவரு எனக்குதான் முதன் முதலா தாலி கட்டனும்னு நினைக்குற சாதாரண தமிழ் பொண்ணு" என்று கூற இப்பொழுது எல்லோரும் அதிர்ச்சியுடன் மேகாவை நோக்க அர்ஜுனோ
"இப்போ என்ன மேகா சொல்ல வர" என்று கேட்க அவளோ
"எனக்கு சின்ன அவயசுல இருந்தே எனக்கு ஹஸ்பண்டா வர போறவரு எனக்கு மட்டும்தான் தாலி கட்டனும்னு நினைப்பேன். ஆனா இப்போ அது உங்க விசயத்துல இல்லைன்னு ஆகிடிச்சி. நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ திவ்யா கழுத்துல தாலி கட்டிட்டீங்க. ஐ அம் சாரி அர்ஜுன் என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்று கூற எல்லோரும் அதிர்ச்சியில் என்ன என்பது போல பார்க்க திவ்யாவோ
"அப்போ நீ அர்ஜுன.."என்று பேச தொடங்க மேகா
"உங்க எல்லோருக்கும் ஒன்னு சொல்ரேன் நல்லா கேளுங்க. கல்யாணம் பத்தி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். எனக்கு இருந்தது என் புருசன் எனக்கு மட்டும்தான் தாலி கட்டனும்னு. இது உங்க எல்லோருக்கும் சிறு பிள்ளைத்தனமா இருக்கலாம், ஆனா எனக்கு அப்படியில்லை. எனக்கு அதுதான் முக்கியம். திய்வா உனக்கு எப்படி தாலி செண்டிமெண்ட் முக்கியமில்லையோ அது போல எனக்கு தாலி செண்டிமெண்ட்தான் முக்கியம். இதுக்கு மேல நான் சொல்ல எதுவுமே இல்லை. இனி நீங்களாச்சும் திவ்யாவாச்சும் உங்களுக்குள்ள பிரச்சினையை நீங்களே பேசி தீர்த்துக்கோங்க. நான் வர்ரேன்" என்று அவ்விடத்தை விட்டு மேகா சென்றாள்.
மேகா பேசியது எல்லோருக்கும் புயல் அடித்து ஓய்ந்ததை போன்று இருந்தது. ஆனால் அவள் கூற்றிலும் நியாயம் இருப்பதை உணர்ந்த எல்லோரும் அவளை கட்டாயப்படுத்த விரும்பாமல் அவள் போக்கிலேயே விட்டனர். மேகா சென்றதும் மித்ரன்
"திவ்யா உங்க விளையாட்டு கல்யாணத்தால இவ்வளவு குழப்பம் வரும்னு யாருமே நினைக்கல. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் கடவுளா பார்த்து கொடுத்திருக்காரு. இனி நீங்க இரண்டு பேரும்தான் பேசி முடிவெடுக்கனும்" என்று கூற திவ்யா கொஞ்சமும் தாமதிக்காமல்
"எனக்கு அர்ஜுன பிடிக்கும்தான், அவரு மேகாவ கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்லும் போது மனசு வலிச்சது. ஆனா என்னால இப்போ அர்ஜுன கல்யாணம் பண்ண முடியாது" என்று கூற மித்ரனோ
"ஏன் முடியாது, நீயும் அர்ஜுன விரும்ப்புற அவனும் உன்ன லவ் பண்றான். இனியும் ஏன் நீ அவன கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்ர?" என்று கேட்க திவ்யாவோ அர்ஜுனை பார்த்து
"இங்க பாருங்க அர்ஜுன் முதல்ல உங்க கிட்ட நான் சாரி கேட்டுக்கிறேன். எனக்கு ஆரம்பத்துல இருந்தே எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா ஜானவி எதுக்காக என்மேல அப்படி கோவத்துல இருக்கான்னு தெரியாம உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க வீட்டுக்கு வந்து வாழ்றதுன்னு நினைச்சப்போ ரொம்ப சங்கடமா இருந்தது. அதனாலதான் என்மனசுல உங்க மேல ஆசை இருந்தாலும் அத நான் மறச்சிட்டேன்" என்று கூற மித்ரனோ
"அப்போ ஏன் இப்போ நீ வேணாம்னு சொல்ர. அதான் ஜானவியோட கோவத்துக்கு காரணம் தெரிஞ்சிடிச்சில்ல. அப்புறம் என்ன திவ்யா?" என்று கேட்க அவளோ
"ஜானவியோட கோவத்துக்கு காரணம் தெரிஞ்சி அந்த கோவத்துக்கும் எனக்கும் உண்மைலயே எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிஞ்சப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்திச்சி. அப்போ அர்ஜுன் கிட்ட என் மனச சொல்லலாம்னு இருந்தப்போதான் அவரு மேகாவ கல்யாணம் பண்ணிக்க போறேன்ன்னு பத்திரிகை கொண்டு வந்தாரு. என் கழுத்துல தாலி கட்டி என்ன லவ் பணறதா சொல்லி மூனு மாசம் கூட ஆகல்ல, அதுக்குள்ள அவரு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டாரு" என்று கூற திவ்யாவின் கோவம் அர்ஜுனுக்கு புரிய அவனோ
"ஐயோ திவ்யா அது அப்படி இல்ல, நிஜமாவே நான் உன்ன காதலிச்சேன். ஆனா நீ தான் எந்த பதிலுமே சொல்லாம யூஎஸ் போயிட்ட. பதில் ஏதும் சொல்லாம போனேன்னு சொல்ரத விட என்ன உனக்கு பிடிக்கலன்னு அன்னைக்கு கல்யாணத்துல எல்லோர் முன்னாடியும் ஓபனாவே சொல்லிட்டு போயிட்ட. நான் என்ன பண்ண சொல்லு. மேகாவும் ரொம்ப நாளா என்ன காதலிக்கிறேன்னு சொல்லிக்கிட்டே இருக்கா. அதுவும் நான் ரொம்ப வருத்தத்துல இருந்தப்போ அவ டெய்லியும் வந்து ஆறுதலா பேசுவா. ஒரு நாள் வந்து என்கிட்ட மறுபடி அவ என்ன லவ் பண்றதா சொன்னப்போ நான் பட்ட அதே மனகஷ்டம் அவளுக்கும் வரக்கூடாதுன்னு அவளுக்கு ஒக்கே சொல்லிட்டேன். இதுல என் தப்பு என்ன திவ்யா இருக்கு. அதுவும் நான் அவகிட்ட கொஞ்ச நாள் டைம் வேற கேட்டிருந்தேன் என் மனச மாத்திக்கிறதுக்கு" என்று கூற அவனைப்பார்த்து புன்னகைத்த திவ்யா
"அப்போ உங்க மனசுல இருந்து என்ன தூக்கி வீச கொஞ்சம் டைம் கொடுத்தா போதுமா. நீங்க வேணும்ன இன்னும் ஒரு ரெண்டு வருடம் எடுத்துக்கோங்க அர்ஜுன்.அப்படியே முழுசா உங்க மனசுல இருந்து என்ன தூக்கி போட்டுட்டு வேற ஒரு பொண்ண கட்டிக்கோங்க" என்று கூற இதில் தாங்கள் தலை இடுவது சரியில்லை என நினைத்து மித்ரனும் ஷாக்சியும் ஒதுங்கியே இருந்தனர். திவ்யா பேசியதை கேட்டு கொஞ்சம் சினம் கொண்ட அர்ஜுன்
"இங்க பாரு திவ்யா, நீ வேணாம்னு சொன்னதுக்கு அப்புறமும் உன்னையே நினைச்சி உருகிக்கிட்டு இருக்க இது ஒன்னும் சினிமா இல்ல. ரியல் லைப்ல அப்படி எல்லாம் இருக்க முடியாது. மூவ் ஒன் ஆகியே ஆகனும். எப்பவும் எதாரத்தமா பேசுற உனக்கு இது விளங்கலயா?" என்று கேட்க அவளோ
"எனக்கு எதார்த்தம் எல்லாம் தெரியும் அர்ஜுன், நான் ஒரு கேள்வி கேட்குறேன் அதுக்கு பதில் சொல்லுங்க. இப்போ நமக்கு கல்யாணம் ஆகி நமக்கு குழந்தைன்னு ஆனதுக்கு அப்புறம் நானும் குழந்தையும் காணாம போயிட்டோம்னா எங்கள 2 மாசத்துல மறந்துட்டு நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?" என்று கேட்க அர்ஜுனோ
" அது எப்படி திவ்யா பண்ணிப்பேன், என் வாழ்க்கை பூரா உங்கள தேடிக்கிட்டே இருப்பேன் " என்றவனை திவ்யா
"இப்போ வாழ்க்கை பூரா தேடுவேன்னு சொல்ரீங்க, ஆனா நீங்க என் கழுத்துல தாலி காட்டி முழுசா ஒரு வருசம் கூட ஆகல. சரி எனக்குத்தான் அந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு இருந்தாலும் நீங்க விரும்பித்தானே தாலி கட்டினீங்க. அப்படி பண்ண உங்களுக்கு நாங்க யூஎஸ் இருந்து வர்ர வரைக்கும் பொறுமையா இருக்க முடியாம போச்சே, அது ஏன் அர்ஜுன்? இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தையும் நானும் காணாம போனா வாழ்க்கை பூரா தேடுவேன்னு சொல்ர உங்களால ஏன் என் கழுத்துல தாலி கட்டி அட்லீஸ்ட் ஒரு வருசமாச்சும் காத்திருக்க முடியல" என்று கேட்க இப்போது அர்ஜுனால் பதில் எதுவும் கூற முடியவில்லை. தன் இயலாமையை வெளிப்படுத்தாமல் அர்ஜுன்
"சரி திவ்யா இப்போ கடைசியா நீ என்ன சொல்ல வர" என்று கேட்க அவளோ
"எனக்கு உங்கள பிடிக்கும் அர்ஜுன், ஆனா எனக்கு என்னோட லைப் பார்ட்னர் எனக்காக மட்டுமே யோசிச்சி எனக்காக எதுவும் செய்யக்கூடிய ஒருத்தரா இருக்கனும். அந்த ஒருத்தர் நீங்க இல்ல அர்ஜுன். எனக்கு உங்க மேல கோவம்லாம் எதுவுமே இல்ல. ஆனா நான் என்னோட லைப் பார்ட்னர் எப்படி இருக்கனும்னு நினைக்கிறேனோ அப்படி நீங்க இல்ல. அப்படி இல்லாம இருக்குற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி எல்லாத்தையும் மறந்துட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ஏதாச்சும் ஒரு பிரச்சினைல நான் இப்ப நடந்தத சொல்லிக்காட்டிட்டேன்னா நம்ம ரெண்டு பேரு வாழ்க்கையும் நரகமா ஆகிடும். சோ பெட்டர் நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சி போயிர்ரதுதான்" என்று கூற அர்ஜுன் இதற்கு மேல் எது பேசினாலும் திவ்யாவுக்கு புரியவைக்க முடியாது என்று எண்ணி மித்ரன் ஷாக்சியிடம் விடை பெற்று சென்றான்.
------
hi guys ..sister marriage..ooruku poren..oru 10 days...wattpad pakkam varave matten...aftr december 8 than ini ud pa....
so sorry guys..now i am in airport
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro