39
இருவரும் உண்டு முடித்து உறங்க தங்கள் அறைக்கு சென்றனர் .ஜான்வி ஒரு ஓரத்தில் படுத்தவள் தன்னோடு ஹாஸ்டலில் இருந்து கொண்டு வந்த பெரிய சைஸ் teddybearரை அருகில் போட்டு கட்டிபிடித்துக் கொள்ள கௌதமோ அவளின் செய்கையில் அந்த teddybearai முறைத்தவன்" எங்க இருந்து தான் எனக்குன்னு எதிரிங்க வருதுன்னே தெரில" என்று கூறியபடி அதை அவள் கையில் இருந்து பறித்து கீழே போட்டான் .
தனது டேட்டிபெயரை பறித்து கீழே போட்டு விட்டான் என்று கோபத்தில் எழுந்து அமர்ந்தவள் "எருமை teddybearah குடு டா எனக்கு தூக்கம் வராது அது இல்லாம "என்று கூற
கௌதமோ அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தவன் "இந்த பெட்ல மனஷன்களுக்கு தான் இடம் அதுக்கெல்லாம் இல்ல "என்று கூறி படுத்துக்கொள்ள
அவளோ இடுப்பில் கை வைத்து முறைத்தவள் "டேய்ய் அநியாயம் பண்ணாத டா அது இல்லாம எனக்கு தூக்கம் வராது டா "என்று கூற கெளதம் அப்படியா என்பதை போல் பார்த்தவன் அவள் கையை பற்றி இழுத்து தன் மேல் விழ வைக்க ஜான்வியோ அவன் செயலில் விழி விரித்து பார்த்தவள் அவனின் அருகாமையில் வழக்கம் போல் இதயம் தடதடக்க ஆரம்பிக்க மிரட்சியோடு அவனை பார்த்தாள்.
அவள் பார்வையில் புன்னகைத்தவன் "இனி அது தேவைப்படாது தூங்கு "என்று தன்னோடு அவளை சேர்த்து அனைத்துக் கொள்ள முதலில் அவன் அருகாமையில் உடல் உதறியபடி இருந்தவள் பின் சற்று நேரத்தில் இயல்பாகி அவன் முகத்தை பார்த்தாள் .நிர்ச்சலனமாய் உறங்கி கொண்டிருந்தான் கெளதம் .முகத்தில் என்றையும் விட இன்று சிந்தனை ரேகைகள் அகன்று நிம்மதி நிலவுவது போல் தோன்றியது ஜான்விக்கு .காற்றில் அசைந்தாடும் அவன் கூந்தலை ஒரு சிரிப்புடன் களைத்து விட்ட ஜான்வி அவனோடு ஒன்றியபடி அவன் அணைப்பில் கண்ணயர்ந்தாள்.
அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் கெளதம் ஆறரை மணிக்கு எழுந்தவன் அருகில் தன் இணையை தேட அவள் படுத்திருந்த இடமே வெற்றிடமாய் இருந்தது ."எங்க இவ?எப்போவும் எட்டு மணி தான எந்திரிப்பா?"என்று நினைத்தவாறு எழுந்தவன் சென்று பல் துலக்கி முகம் கழுவி வெளியில் வர காபி மனம் நாசியை துளைக்க எழுந்து அடுப்படிக்கு சென்றான் .
அங்கே ஜான்வி அப்பொழுது தான் குளித்திருப்பாள் போல அவள் தலையில் கட்டி இருந்த துண்டிற்கு அடங்காமல் சில முடிக்கற்றைகள் அவளின் முதுகுப்புற சல்வாரை நனைத்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு பாடலை பாடியபடி காபி போட்டுக் கொண்டிருந்தாள்.என்ன பாடுகிறாள் என்று கூர்ந்து கேட்க
அவளோ நேற்றைய நினைவில் சிரித்தபடி
காதோரத்தில் எப்போதுமே உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
என்று பாடியவள் கொதித்த பாலை இரு கோப்பைகளில் ஊற்றி coffee கலக்க அடுப்படி வாசலில் கை கட்டி நின்றுகொண்டிருந்த கெளதம் கை தட்ட அந்த சத்தத்தில் திரும்பியவள் சிரித்தபடி "குட் மார்னிங் அத்து "என்று கூறி காபி கோப்பையை கொடுக்க
கெளதம் அவளை பார்த்தவன் "என்னடி எப்போவும் சூரியன் மூஞ்சில சுள்ளுனு அடிக்குறப்போ தான் முழிப்ப இன்னைக்கு என்ன இவ்ளோ சீக்ரம் எழுந்து coffeelaam போடுற ?"என்று கேட்க
ஜான்வி தனது கோப்பையை எடுத்துக் கொண்டவள் "அது என் மம்மி வீடு எனக்கு எல்லா வேலையும் என் அம்மா already பார்த்து வச்சிருப்பாங்க அதுனால அப்டி எந்திரிப்பேன் .இங்க நீயும் நானும் மட்டும் தான்.சும்மாவே பாதி வேலை நீ தான் பாக்குற அதான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னு "என்று கூற
கெளதம் நெஞ்சில் கை வைத்தவன் "என்ன ஒரு பாசம் என் பொண்டாட்டிக்கு "என்று கூறியவன் coffeeyai ஒரு முறை பார்த்து அவளிடம் நிமிர்ந்தவன் "நம்பி குடிக்கலாமா ?பால்ல தான போட்ட தயிறுல போட்டுரலயே "என்று கேட்க
அவளோ அவன் கையிலேயே அடித்தவள் "ரொம்ப வாராத இதெல்லாம் நல்லா தான் போடுவேன் "என்று கூற அவனும் சிரிப்புடன் குடித்தான் உண்மையிலேயே நன்றாக தான் இருந்தது .அதன் பின் கெளதம் காலை உணவு செய்ய இவள் வீட்டை பெருக்க என்று வேலைகளை பிரித்து செய்தவர்கள் தத்தம் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டனர்.
வாழ்க்கை தெளிந்த ஓடை போல் சென்று கொண்டிருந்தது அனைத்து ஜோடியருக்கும் . கெளதம் அனுமானித்ததை போல் அவனுக்கும் ஜான்விக்குள்ளும் புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருந்தது .கௌதமிற்கு வீடு சுத்தமாக இல்லை என்றால் கடும் கோபம் வர ஜான்வியோ அடுக்கி இருந்தால் அது பொருட்காட்சி களைந்து இருந்தால் தான் வீடு என்பாள்.அவன் நொறுக்கு தீனி தின்பது உடலுக்கு கேடு என்று கூறி ஒதுக்கினால் இவளோ நொறுக்கி தீனி தின்பதற்காகவே உயிர் வாழ்பவளை போல் நொறுக்கு தீனியை வாங்கி குவிப்பாள் .அவன் ஸ்போர்ட்ஸ் பார்க்க அமர்ந்தால் இவள் ரெமோர்ட்டை பிடுங்கி கார்ட்டூன் வைப்பாள் இப்படி இருவருக்குள்ளும் பல்வேறு கருத்து வேறுபட்டாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அவரவர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தும் நடந்து கொண்டனர் .சண்டைகள் இல்லாத வீடும் உப்பு இல்லாத உணவும் ருசி அற்ற ஒன்று தானே .
பிரவீன் இப்பொழுது டீம் லீடர் ஆகி இருந்தான் .ஸ்வேதா மற்றும் அவனிற்கு இடையிலான உறவு எப்படி பட்டது என்று இன்று வரை அவனால் வரை அறுத்து கூற முடியவில்லை.இரவு அவன் உண்ண செல்லும் பொழுது அவனிற்கு அழைப்பாள் .அன்றைய நிகழ்வுகளை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள் அதிகமாக அவள் பேச மாட்டாள் எனில் இவனை பேச தூண்டுவதை போல் கேள்விகள் கேட்டு அவன் பேச பேச அவள் கேட்பாள்.ஏதாவது பிரெச்சனை இருந்தால் அவனது குரலிலேயே உணர்ந்து ஆறுதல் போல் அல்லாமல் அவனது வார்த்தைகளால் அவனை பேச வைத்து அதற்கான தேர்வை கொடுத்து விடுவாள்.
அவளிடம் முதலில் பழகும் பொழுது தோன்றாத உணர்வுகள் அனைத்தும் இந்த மூன்று மாதத்தில் மெல்ல மெல்ல அவனின் மனதில் வேர் விட துவங்கி இருக்க அவளின் அழைப்பை பார்த்தாலே அவன் அனுமதி இன்றி இதழ்கள் புன்னகையில் விரிந்து விடுகிறது .
அன்று அப்படி அலுவலகத்திற்கு கிளம்பி சென்றவன் தன் வேலையில் மூழ்கி இருக்க அவனது மேனேஜர் அவனை அழைத்தார் .அவன் என்ன என்று சென்று பார்க்க அங்கே அந்த managerக்கு எதிரில் இருந்த இருக்கையில் புன்னகை முகமாய் அமர்ந்திருந்தாள் ஸ்வேதா .
திடீரென்று அவளை கண்டதில் மகிழ்ச்சி ,திகைப்பு ,குழப்பம் அனைத்தும் சேர managero " ஹாய் பிரவீன் இது ஸ்வேதா பெங்களூரு ப்ராஞ்சுல இருந்து இங்க transfer ஆகி இருக்காங்க .உங்க டீம்ல தான் இனி ஒர்க் பண்ண போறாங்க கிவ் ஹேர் ட்ரைனிங் "என்று கூறி வெளியே செல்லலாம் என்பதை போல் சைகை காட்ட அவனும் ஆமோதித்து தலை ஆட்டியவன் அவளை பார்த்தபடி வெளியே வந்தான் .
இருவரும் அவனின் கேபினிற்கு வர ஸ்வேதா அவனின் எதிரில் அமர்ந்தாள்.பிரவீன் ஏதும் பேசாமல் அவளையே பார்த்தபடி அமர
ஸ்வேதா அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் என்ன ?என்பதை போல் புருவம் ஏற்றி இறக்க ப்ரவீனோ அவளை முறைத்தவன் "நேத்து பேசேல கூட ஏன் ஸ்வே சொல்லல ?எங்க தங்கி இருக்க ?எப்போ இங்க வந்த ?"என்று வரிசையாய் கேட்க
அவளோ அவன் வாயை தன் காய் கொண்டு பொத்தியவள் "ஸ்ஸ்ஸ்ஸ் எப்பா ஏன் இவ்ளோ ஸ்பீடா கேக்குறீங்க ?ஒன்னொன்னா கேளுங்க "என்று கூற அவனோ திடீரென்று தன் அருகில் நெருங்கி வருவாள் என்று எதிர்பாராதவன் விழி விரித்து பார்க்க அப்பொழுதே ஸ்வேதா இருவர் மூச்சு காற்றும் மோதும் தூரத்தில் அமர்ந்திருப்பதை உணர்ந்தவள் சிறு வெட்க சிரிப்புடன் அவனை விட்டு விலகி அமர்ந்தவள் "first கேள்வி க்கு answer surpriseaah இருக்கட்டுமேனு தான் சொல்லல ,செகண்ட் உங்க பிளாட்டுக்கு ஆப்போசிட் பிளாட்ல தான் இன்னும் ரெண்டு காலேஜ் friendsoda தங்கி இருக்கேன் அவங்க வேற ப்ராஞ்சுல ஒர்க் பண்றங்க ,third நேத்து காலைல தான் வந்தேன் "என்று கூற
அவனோ சிரிப்புடன் "அவங்களா குடுத்த transferaa இல்ல நீ கேட்டு வான்குனியா ?"என்று கேட்க அவள் உதிர்த்த அசடு வழியும் சிரிப்பே உணர்த்தியது அவளாக கேட்டு வாங்கிய transfer இது என்று
.சில சமயம் அவனிற்கே தோன்றும் இத்தனை தன்னலமில்லா அன்பிற்கு தான் தகுதியானவனா ?தான் என்ன செய்துவிட்டோம் இப்படி ஒரு எதிர்பார்ப்பில்லா காதல் இவள் தன்னிடம் கட்டுவதற்கு என்று .அவன் பார்வையின் பொருளை உணர்ந்தவள் "ஹலோ டீம் லீட் என்ன பார்த்தது போதும் ப்ராஜெக்ட் பத்தி கொஞ்சம் சொன்னீங்கன்னா வேலைய பார்க்கலாம் "என்று கூற அவன் ஒரு குறுஞ்சிரிப்புடன் அவளிற்கு ப்ரொஜெக்ட்டை விளக்கினான் .
அன்று ஞாயிற்று கிழமை கௌதமும் ஜான்வியும் வீட்டை துடைத்து பல நாட்கள் ஆகிறதென்று ஆளுக்கொரு துடைக்கும் கட்டையை எடுத்து துடைத்துக் கொண்டிருந்தனர் .தொலைக்காட்சியில் பாடல் ஓடிக் கொண்டிருந்தது .ஜான்விக்கு துடைக்கும் பொழுதோ வீட்டை பெருக்கும் பொழுதோ ஆடிக்கொண்டே துடைக்கும் பழக்கம் இருந்தது .கெளதம் பல முறை கூறிவிட்டான் ஈர தரையில் ஆடாதே வழுக்கி விட்டு விடும் என்று ஆனால் அவள் அவன் கூறியதை இந்த விஷயத்தில் காதில் வாங்கியதாக சரித்திரமே இல்லை .
அன்றும் அப்படி தான் போட்டு தாக்கு என்று பாடலுக்கு ஆடியபடி துடைத்துக் கொண்டிருந்தவள் சோப் தெரியாமல் கெளதம் சோப் ஆயில் போட்டு வைத்திருந்த இடத்தில் காலை வைத்து வாரி வழுக்கி விழுந்தாள் .
கெளதம் வாசலின் அருகில் துடைத்துக் கொண்டிருந்தவன் டமார் என்ற சாதத்தில் திரும்பி பார்க்க ஜான்வி தான் இடுப்பை பிடித்தபடி தரையை அடித்துக் கொண்டிருந்தாள் "எரும எரும" என்று கூறியபடி அவள் செய்கையில் பலமாக சிரித்தவன் அவள் அருகில் வந்து நின்று தரையை சரி பார்க்க
ஜான்வியோ பிதுங்கிய உதட்டுடன் "எரும இங்க நான் கீழ விழுந்து கெடக்கேன் என்ன தூக்காம தரையை என்னடா பாக்குற ?"என்று கேட்க
அவனோ "இல்ல உன் வெயிட்டுக்கு இந்நேரம் தரை உடைஞ்சுருக்கணுமே அதான் பாக்குறேன் "என்று கூற
அவளோ மீண்டும் எழ முயற்சித்தவள் இடுப்பு வலியாலும் மீண்டும் காலின் கீழ் வழுக்கிய சோப்பாலும் மீண்டும் விழுந்தாள் .அவள் விழுந்ததில் சிரித்தவன் அவளின் வேதனையில் சுருங்கும் முகம் கண்டு வருந்தி அவளை தூக்கியபடி அறைக்கு சென்றான் .
pain கில்லர் எடுத்தவன் இயல்பாக அவளின் டாப்ஸை விளக்கி வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டபடி திட்டினான் "இதுக்கு தான் தேவை இல்லாம தைய தையானு குதிக்க கூடாதுங்குறது .சொல் பேச்சு கேட்க கூடாதுனு முடிவிலேயே சுத்துவியாடி நீ ?"என்று கேட்க
அவளோ முகம் சுருக்கியவள் அவன் முகம் காணாமல் முகத்தை திருப்ப அவனோ அவள் செய்கையில் சிரித்தவன் "சரி கெளம்பு "என்று கூற
அவளோ "எங்க ?"என்றாள்
அவன் மணியை காட்டியவன் "இதுக்கு மேல சமைச்சு சாப்பிட எனக்கு தெம்பு இல்ல வா restaurant போலாம்"என்று கூற
அவள் "என்னால ரெடியாக முடியாது டா"என்று கூற அவள் மேலே தன் டீ ஷர்ட்டை கழட்டி வீசியவன் "வேறொரு டீ ஷிர்ட்டை மாட்டியபடி "தூக்கிட்டு போக ரொம்ப நேரம் ஆகாது போய் ரெடி ஆகு "என்று கூறி வெளியே சென்று விட்டான் .அவன் தன் முகத்திலேயே எறிந்த டீ ஷீட்டை எடுத்து கீழே போட்டவள் முனகியபடி தயாரானாள் .
இருவரும் ஒரு உணவகத்திற்கு சென்று அமர கௌதமிற்கு அவனது அலுவலக நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது .அவன் அழைப்பை ஏற்றவன் பேசியபடி இருக்க ஐந்து நிமிடம் பொறுத்து பார்த்த ஜான்விக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை .
அவனின் டீ ஷர்ட்டை வைத்து விளையாடியபடி இருந்தவள் அவன் கையை பிடித்து நோண்டுவதும் அவன் டி shirtai இழுத்து இழுத்து விளையாடுவதாய் இருக்க சிறிது நேரம் பொறுத்து பார்த்த கெளதம் அவள் செய்கையில் ஏற்பட்ட எரிச்சலில் அவளை திரும்பி ஒரு முறை முறைத்தான்.
அவன் முறைப்பில் தானாக அவள் கை டீ ஷர்டில் இருந்து விலக வழக்கம் போல் லேசாய் கண்கள் கரிக்க ஆரம்பித்து விட்டது அவனின் உஷ்ணப்பார்வையில் .பின் அவள் சோகமே உருவாய் அமர்ந்து விட கெளதம் பேசி முடித்தவன் அடிக்குரலில் அவளிடம் சீறத் துவங்கினான் .
கெளதம் "அறிவுங்குறது உனக்கு கொஞ்சமாச்சு இருக்கா ஜான்வி ?பேசிக்கிட்டு இருக்கேன் பப்ளிக் ப்ளஸ்ல வச்சு டீ ஷர்ட்ட நோண்டிகிட்டு இருக்க ?கொஞ்சமாச்சு வயசுக்கு ஏத்த மாதிரி behave பண்றியா நீ ?be mature "என்று கூற அவளோ தன் ஒற்றை விரலை வாயில் வைத்தவள் சிறு குழந்தைகள் வகுப்பாசிரியர் மிரட்டும் பொழுது ஒற்றை விரலை வாயில் வைத்தபடி தலை ஆட்டுவதை போல் ஆட்ட கௌதமிற்கோ சிரிப்பை அடக்குவது பெரும் பாடாகிப் போனது.
கெளதம் "என்ன புரியுதா ?"என்று கேட்க
அவள் "சாரி அத்து "என்று காதில் கை வைத்து கூற .அவனோ சிரித்தாள் மேலும் தலையில் ஏறி மிளகாய் அரைப்பாள் என்று உணர்ந்தவன் அதன் பின் வேறு புறம் திரும்பி விட ஜான்வியோ சாரி சாரி என்று கேட்டு சோர்ந்தவள் அவன் கண்டுக்கொள்ளாமல் இருக்க புசுபுசுவென்று ஏறிய கோபத்துடன் அவனை முறைத்தாள் .மனதில் "உனக்கு மட்டும் தான் கால் பேச தெரியுமா எனக்கும் தெரியும் போடா "என்று நினைத்தவள் ஜீவிதாவிற்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தாள் .
கெளதம் தாங்கள் வந்து பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் வெயிட்டர் வராததை கவனித்தவன் அங்கே நடந்து கொண்டிருந்த வைட்டரை கை தட்டி அழைக்க waiterum வந்து சேர்ந்தார் .
ஆர்டர் அளிப்பதற்காக ஜான்வியின் புறம் திரும்ப ஜான்வியோ மிகவும் சுவாரஸ்யமாக நேற்று பார்த்த டாம் அண்ட் ஜெர்ரி எபிசொட் பற்றி ஜீவிதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் .இரு முறை கூப்பிட்டு பார்த்தவன் அவள் திரும்பாததில் எரிச்சல் கொண்டு அவள் தோளை பற்றி திருப்ப ஜான்வியோ அவனின் தொனியிலேயே "என்ன கெளதம் பேசிகிட்டு இருக்கேனு தெரியலையா ?be mature "என்று கேவலமாய் imitate செய்ய அவனோ பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரிக்க துவங்கி விட்டான் .
அவன் சிரித்த சத்தத்தில் பக்கத்துக்கு tableil இருந்தவர்கள் திரும்பி பார்க்க விழி விரித்து அதிர்ந்த ஜான்வி அவன் வாயை தன் கையால் மூடினாள் "எரும மெதுவா சிரி டா எல்லாரும் திரும்பி பாக்குறாங்க "என்று கூற waiteroh பைத்தியங்களா இதுங்க என்ற ரீதியில் பார்த்து வைத்தார் .
பின் தன் சிரிப்பை சிரமப்பட்டு கட்டுப் படுத்திய கெளதம் இருவருக்கும் ஆர்டர் செய்ய இருவரும் வழக்கம் போல் அடித்து பிடித்து உண்டுகொண்டனர் .கெளதம் கண்ணிற்கு இன்று அவளின் சிறு சிறு செய்கையும் இன்று ரசனையை தூண்டுவதற்கு இருந்தது .அவளிற்கு விருப்பமான உணவுகளை பார்த்ததும் விழி விரித்த பாவம் ,ஒவ்வொரு உணவையும் ரசித்து உண்ணும் அழகு அவள் உண்ணும் பொழுது அவள் போட்டிருந்த கிளிப்பிற்கு அடங்காமல் முன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஊதி தள்ளியபடி உண்ணுவது அதிலும் மிக மிருதுவாய் உதட்டு சாயமே இல்லாமல் சிவந்திருந்த அந்த இரண்டு இதழ்களின் இடைவெளியில் தேங்கி இருந்த ஐஸ்கிரீம் துளிகள் அவனின் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிக்கொண்டிருந்தது .
ஜான்வியோ அவன் அதிக நேரமாய் உண்ணாமல் இருப்பதை கவனித்தவள் என்ன என்று நிமிர்ந்து பார்க்க அவனின் பார்வையில் உடல் அங்கம் அங்கமாய் கூசி போனது .
அதன் பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை .அமைதியாய் உண்டு முடித்தவர்கள் வீடு வந்து சேர்ந்தனர் .
இருவருக்குள்ளும் இருந்த அந்த மௌனம் இரவு வரை நீண்டது .ஒரே கதிரையில் சற்று இடை வெளி விட்டு அமர்ந்திருந்தனர் இருவரும் .கண்கள் தொலைக்காட்சியில் பதிந்திருந்தாலும் இருவருக்கும் அது கருத்தில் பதியவில்லை .பின் மணியை பார்த்த ஜான்வி அது எட்டு இருபது என்று காட்ட மெல்ல இதழ் பிரித்து அவனை அழைத்தாள் "அத்து "என்று
கெளதம் அவள் புறம் திரும்பாமலே "ம்ம் "என்க
ஜான்வி "டைம் ஆச்சு தோசை ஊத்தவா ?"என்று கேட்க
அதற்கும் ம்ம் என்றவன் மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை .
அவளோ அவனின் இந்த அமைதி மனதில் லேசாய் வலிக்க ஏன் இந்த திடீர் அமைதி என்றே புரியாமல் சமயலறையில் சென்று வேலை பார்க்க துவங்கினாள்.இரண்டு நிமிடத்தில் அவள் stoveai பத்த வைக்க செல்ல பின்னங்கழுத்தில் சூடான மூச்சு பரவ திடுக்கிட்டு திரும்பியவள் அங்கே ஒரு இன்ச் இடைவெளியில் நின்று சமையல் மேடையில் அவளின் இருபுறமும் கை வைத்து சாய்ந்து நின்றவனை பார்த்ததும் இதயம் ததடவென்று துடிக்க துவங்க அவன் கண்களில் இது வரை அவள் கண்டிராத ஏதோ ஒரு உணர்வில் சிக்கி தொலைந்து கொண்டிருந்தாள் .
கௌதமோ அவள் ஒரு புற கன்னத்தை பற்றியவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி கண் மூடி நின்றான் .அவள் கண்களும் தானாய் மூட இரண்டு நிமிடம் கழித்து ஈனஸ்வரத்தில் கேட்டது அவன் ஆழ்ந்த குரல் "ஜானு "என்று
அவள் "ம்ம் "என்றால் அந்த குரல் அவளுக்கே கேட்டதா என்பது சந்தேகம் தான் .
இன்னும் நெருக்கமாய் ஒன்றி நின்றவன் "control பண்ண முடியலடி மே ஐ?"என்று கேட்க
அவள் புரியாமல் "எ.... என்ன பு ....புரியல?"என்று கேட்க
அவனோ சிரித்தவாறு அவளை இரு கைகளிலும் தூக்கியவன் "புரியவச்சுட்டா போச்சு பொண்டாட்டி "என்றவாறு நெற்றியில் முத்தமிட்டவன் உள்ளே தூக்கி செல்ல ஜான்வி அவனின் மார்பில் மேலும் ஒன்றிக்கொண்டாள் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro