24
பிரவீன் "அறிவுகெட்டவளே "என்க
ஜீவிதாவோ சற்று துளிர்ந்த கோபத்துடன் "இப்போ எதுக்கு ட இந்த கத்து கத்துற என்ன ?"என்று கேட்க
அவனோ "கத்தாம கொஞ்சுவாங்களா நா ஒரு வேலையா போனதே ஆதியோட தான் .ஆதிக்கு ரெபெரென்ஸ் புக் வாங்க தான் அவனும் பார்த்தான் ஜான்வியை நீ கௌதமோட அனுப்புறத "எங்க அவளோ அடிவயிறு கலங்க கண்ணில் பயத்துடன் அவனை பார்த்தாள்.
அவள் கண்ணில் பயம் அப்பட்டமாய் தெரிவதை பார்த்தவன் சற்று கனிந்து அவளை தோளோடு சேர்த்து அணைத்தவன் சற்று கனிந்த குரலில் "நா எப்போவும் என்ன சொல்லிருக்கேன் .ஏதாவது செய்றதுனா சொல்லிட்டு செய் அப்டினு சொல்லிருக்கேன்ல அவசரக் குடுக்க மாறி இப்டி பண்ணிட்டியே "என்க
அவளோ "இப்போ என்னடா பண்றது ?"என்க
அவனோ "ஒன்னும் பண்ண முடியாது .அவன் ரியாக்ட் கூட பண்ணல பாத்துட்டு பாக்காதது மாறி கெளம்பலாமா அண்ணான்னு சொல்லிட்டான் .என்ன பண்ண போறான்னு தெரில "என்று கூற
அவளோ சற்று குற்றவுணர்வுடன் நிற்க அவள் நிலை புரிந்தவன் தோளில் அழுத்தம் கொடுத்து பேச்சை மாற்றும் விதமாய் "ஆமா அங்கிள் சொல்லிக்கிட்டு இருந்தாரு மாப்ள பார்த்தாச்சாமே "என்க
அவளோ சற்று வெட்கம் பூச "ஹீஹீ நேத்து நைட் தான்டா காமிச்சாரு போட்டோ உன்கிட்டயும் ஜான்வி கிட்டயும் இன்னைக்கு நைட் சொல்லலாம்னு இருந்தேன் "என்க
அவனோ "அடியேய் வெட்கப்படாதடி ப்ளீஸ் பாக்குற சக்தி எனக்கு இல்ல "என்று கூற
அவளோ அவன் தலையிலேயே அடிக்க அவள் கையை பற்றி தடுத்தவன் "பைத்தியமே அடிக்காதடி .மாப்ள கிட்ட பேசுனியா புடிச்சுருக்கா ?"என்க
அவளோ "நேத்து நைட் பேசுனேன்டா .ரொம்ப ஜாலியா பேசுனாரு .நா உன்ன பத்தி ஜான்வி பத்தி எல்லாம் சொன்னேன். கொஞ்சம் பயந்தேன் எங்க நம்ம friendshippa மத்தவங்க மாறியே அவரும் தப்பா புரிஞ்சுப்பாரோன்னு ஆனா புருஞ்சுகிட்டாரு உன்கிட்ட கூட இன்ட்ரோ குடுக்க சொன்னாரு "என்க
அவனோ "பார்ரா மரியாதை எல்லாம் தூள் பறக்குது அப்போ புடுச்சுருக்கு போலயே "என்க
அவளும் சிரிப்புடன் "ம்ம் புடுச்சுருக்கு "என்க
அவன் "பிரதர் பேரு என்ன ?"என்க
அவளோ "ஆதித்யா .lectureraah work பன்றார் சென்னைல"என்று அவனின் புகைப்படத்தை காட்ட
அவனோ "எல்லாம் சரி தான் டி ஆமா இவர் எப்படி உனக்கு ஓகே சொன்னார் ?கண்ணுல ஏதும் ப்ரோப்ளேமோ "என்க அவளோ கீழே இருந்த குச்சியை எடுத்து துரத்த ஆரம்பித்து விட்டாள்.
இங்கு இப்படி இருக்க ஜான்வியோ அவன் கூறிய பதிலில் உள்ளே பூத்திருந்த காதலின் எதிர்காலம் கேள்விக்குறியாக கலக்கத்துடன் அமர்ந்தாள் எனில் ஏதோ மனதின் ஓரத்தில் ஒன்று அடித்து கூறியது அவனிற்கு உன் மேல் காதல் உள்ளது ஜான்வி என்று .
இப்போதைக்கு அதை நினைத்து கவலை கொண்டு அவனுடன் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் வீணாக்க அவள் விரும்பவில்லை .அவனிடம் திரும்பியவள் சற்று தொலைவில் குழந்தைகளின் சத்தம் கேட்க "அத்து எழுந்து என் கூட வரியா?"என்க
அவனோ "எங்கடி ?"என்க
அவளோ எழுந்து நின்று அவன் கையை பிடித்து இழுத்தவள் "வாடா play ஏரியா போகலாம் "என்க
அவனோ சிரிப்புடன் "ஏய் பைத்தியம் அதெல்லாம் குழந்தைங்க வெளயாடுறது அங்க போய் என்ன பண்ண ?"என்க
அவளோ அவன் கையை பிடித்து இழுத்தபடி காலை தரையில் உதைத்தவள் "எனக்கு ஊஞ்சல் ஆடணும் வா "என்று பிடித்திழுக்க
அவள் செய்யும் அளப்பறையில் தலையில் அடித்தவன் சிரிப்புடன் "வந்து தொலை "என்று கூறி அவளை அழைத்து சென்றான் .
அங்கு ஊஞ்சல் ,சறுக்கு மரம், சீ சா அனைத்தும் சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருக்க இரண்டு ஊஞ்சல் மட்டும் காலியாய் இருந்தது .அங்கு ஓடி சென்றவள் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு அவளை நோக்கி வந்தவரிடம் "சீக்ரம் வந்து ஆட்டு டா மச மசன்னு வர "என்க
அவனோ தலையில் அடித்தவன் "வேணுனா நீயே ஆடிக்கோ என்ன ஆட்ட சொல்லாத "என்க
அவளோ பாவமாய் முகத்தை வைத்து பார்க்க அவனோ அவள் முகபாவனையில் சிரித்தவன் "சரி சரி உடனே முகத்தை அப்டி வைக்காத ஆட்டுறேன் "என்று கூறி அவளின் பின்னே நின்று ஆட்டி விட்டான் .
அவளும் சிறு குழந்தை போல் ஊஞ்சலில் பின்னே தலை சாய்த்து புன்னகையாய் ஆட அவள் ஒவ்வொரு முறை பின்னால் வரும்பொழுதும் அவளின் முடி அவனின் முகத்தில் பட்டு ஒரு வித புது உணர்வை அவனின் மனதில் தோற்று வித்தது .நியாயமாக பார்த்தாள் அவள் கூந்தல் அவன் முகத்தில் படுவதற்கு அவனின் குணப்படி எரிச்சல் வந்திருக்க வேண்டும் ,எனில் ஏனோ அவனிற்கு அந்த கூந்தலின் மென்மையை இன்னும் சிறிது நேரம் உணர வேண்டும் என்று தோன்றியது .சிறிது நேரத்திற்கு பின் அவன் வேகமாக ஆட்ட வில்லை என்று அவளே ஆடிக் கொள்கிறேன் என்று கூற அதன் அருகில் நின்று அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம் .
அவனிற்கு பிடித்த அடர் நீல நிறத்தில் சல்வார்,பாட்டியாலா அணிந்து அதற்கு மேல் வெள்ளை நிறத்தில் நெட்டெட் துப்பட்டா அணிந்து இருந்தால் .அவள் மஞ்சள் நிற மேனிக்கு அந்த அடர் நீல சல்வார் இன்னும் அழகாய் அவளின் நிறத்தை எடுத்து காட்ட செயற்கை பூச்சு ஏதும் இல்லாமலே சிரிப்பில் மிளிர்ந்த முகம் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனிற்கு .
ஊஞ்சலில் சிறு குழந்தையென ஆடிக்கொண்டிருந்தவள் அவன் கண்ணிற்கு மட்டும் கொள்ளை அழகாய் தெரிந்து தொலைத்தாள்.மை தீட்டிய மான் விழி இரண்டும் ஆனந்தத்தில் விரிந்திருக்க அதிக சிவப்பில்லாமல் பிறந்த குழந்தையின் மெல்லிய இளஞ்சிவப்பில் இருந்த அவளின் உதடுகள் இரண்டும் இன்று அவனை கொல்லாமல் கொன்றது,கண்கள் களவாடிடும் அந்த இரு இதழ்களை தன் இதழ்கள் களவாட வேண்டுமென்று எண்ணம் வர .தன் மனம் அவளை ரசனையோடு அளவிடுவதை நேரம் கடந்தே உணர்ந்தவன் திடீரென்று திரும்பி தன் கழுத்தை அழுந்த தேய்த்தான் .
மூளையோ அவனை கொலையாய் கொன்றது "என்ன காரியம் செய்தாய் கெளதம் நீ .உன்னை நம்பி உன்னை சந்திக்க வந்திருக்கும் உன் தோழியை இப்படியா கீழ்த்தரமாக ரசிப்பாய்"என்று கேட்க
மனசாட்சியோ "தோழியை ரசிக்க மாட்டார்கள் தான் ஆனால் காதலியை ?"என்று கேள்வி எழுப்ப தன் மனதில் தோன்றிய எண்ணத்தை கண்டு விக்கித்தான் கெளதம் .
மூளை "எது காதலா என் ஜானுவின் மீதா எனக்கா வாய்ப்பே இல்ல "என்று அவன் அடித்து கூற
மனசாட்சியோ "அட மடையா உன் ஜானு என்று நீ கூறுவது காதல் இல்லாமல் என்ன உணர்வு ?"என்று கேட்க அதற்கு பதிலின்றி நின்றான் கெளதம் .எப்பொழுது எங்கே எப்படி இப்படி உணரத் துவங்கினோம் என்றே தெரியவில்லை அவனிற்கு. ஆனால் அவள் மேல் காதல் இல்லை என்று கூற ஒரு காரணமும் அவனிடம் இல்லை .ஏன் அவன் யோசனையில் இருக்கும் இந்த நிமிடங்களில் கூட கண்கள் நொடிக்கொருமுறை அவளை தொட்டு தானே மீள்கிறது .
அவன் சிந்தனையிலேயே இருக்க அவனின் சிந்தனையை கலைத்தது அவனின் அலைபேசியின் சிணுங்கல் .எடுத்தவன் பெயரை பார்க்க அதில் ஆதி அண்ணா சீனியர் என்று இருந்ததது .அதை பார்த்தவன் ஒரு சிறு சிரிப்புடன் எடுத்து "சொல்லுங்கண்ணா என்ன திடீர்னு கால் ?"என்க
அவனோ "அது வந்து டா .... சிங்கிள்ஸ் gangla இருந்து கூடிய சீக்ரம் நா resign பண்ண போறேன்டா "என்று கூற
கௌதமோ ஒரு நொடி விழித்தவன் பின் புரிய "ஹே எப்போ இது "என்க
அவனோ "நேத்து நைட் தான் பேசுனேன் புடுச்சுது ஓகே சொல்லிட்டேன் உன்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு கால் பண்ணேன் "என்று கூற
கௌதமோ "அப்போ ஜெனிஃபர் அக்கா வாழ்க்கை"என்று கூற
ஜான்வியோ இது வரை ஆடிக்கொண்டிருந்தவள் ஜெனிஃபர் என்ற வார்த்தையில் விழித்து எழுந்து வந்தவள் அவனின் பின் நின்று அந்த புறம் பேசுவது கேக்கலாம் என்று பார்க்க எங்கே அவன் தோள் பட்டை அளவிற்கு கூட வளர வில்லை இதில் எங்கு அப்புறம் பேசுவதை கேட்க ?
அதியோ அப்புறம் பதறியவன் "டேய்ய் அது ஏதோ காலேஜ் படிக்கேல நீயும் நானும் மாறி மாறி சைட் அடிச்சோம் இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு இன்னுமா நீ அதை புடுச்சு தொங்குற "என்க
கௌதமோ பின்னால் ஜான்வி இவன் பேசுவதை கேட்க குதிப்பதை அவன் முன் இருந்த concave mirror மூலமாக பார்த்தவன் ஒரு சிறு சிரிப்புடன் அவளை வெறுப்பேற்ற "என்ன இருந்தாலும் ஜெனிஃபர் அழகு வருமா "என்று கூற
அவளோ முகம் சிவக்க மீண்டும் சென்று ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள் நகத்தை கடித்தபடி .ஜான்வி "ஆமாமா பெரிய ஐஸ்வர்யா ராய் அவ இன்னும் இந்த டாக் ஜொள்ளு விடுது "என்று அவளறியாமல் சத்தமாகவே கூறிவிட அவனோ அவளின் செய்கையையும் அவள் கூறியதையும் கேட்டு சத்தம் வராமல் சிரித்தான் .
ஆதி அப்புறம் "டேய்ய் என்னடா பொண்ணு வாய்ஸ் கேக்குது திவ்யா வந்துருக்காளா என்க
அவனோ மறந்து போய் "திவ்யா இல்லன்னா என் ஜானு "என்க
ஆதியோ "எது உன் ஜானுவா எப்போ டா இது "என்று கூற
அவனோ உளறிவிட்டோமென்று புரிய தலையில் அடித்தவன் "ஐயா நீங்க நெனைக்குற மாறி எதுவும் இல்ல .friend தான் "என்று ஆதியிடமும் தன் மனதிடமும் கூற அந்தோ பரிதாபம் மனசாட்சி காதை மூடி பல நிமிடங்கள் கடந்திருந்தது
ஆதி " நம்புற மாறி இல்ல ஆனாலும் நம்பறேன் .எப்போ கல்யாணம்னு இன்னும் முடிவாகல முடிவானதும் சொல்றேன் மறக்காம வந்துருடா "என்று
கூற
அவனோ "நா இல்லாமையா ஜெனிஃபர் அக்கா வராங்களா ?"என்க
ஆதி "அவ வராமையா..வருவா "என்று கூற
கெளதம் "அது போதும் எனக்கு "என்றவன் பின் அழைப்பை துண்டித்து விட்டு ஜான்வியை பார்க்க அவளோ முகத்தை சுருக்கி கீழே இருந்த மண்ணை காலால் உதைத்துக் கொண்டிருந்தாள் .
சிரித்தவன் "எதுக்கு டி இப்போ கீழ போர் போடுற "என்க
அவளோ "நீ இவ்ளோ நேரம் உன் ஜெனிஃபர் நொக்கா கூட கடலை போட்டேல நா ஏதாச்சு கேட்டேனா ?"என்று கேட்டு முகத்தை திருப்ப
அவனோ மண்டியிட்டு அவள் முகத்திற்கு நேராய் அமர்ந்தவன் "ஏய்ய் அது ஆதித்யா அண்ணா டி என் சீனியர் கல்யாணம் ஆக போகுதாம் சொல்ல கூப்டாரு "என்று கூற அவளோ அதே போல் முகத்தை திருப்பியபடி தான் அமர்ந்திருந்தாள் .அவள் கையை தொட அவன் கையை உதறியவள் மீண்டும் முகத்தை திருப்பி "எதுக்கு என் கைய புடிக்குற போய் அவ கையவே புடி " என்க
அவனிற்கோ சிரிப்பு தான் வந்தது "எனக்கு ஓகே தான் ஆனா அவங்க புருஷன் என்ன கொலை பண்ணிருவாரே "என்று கூற
ஜென்னிபரிற்கு திருமணம் ஆகி விட்டது என்று கேட்டதும் முகம் பிரகாசிக்க அவனை நோக்கியவள் "கல்யாணம் ஆயிருச்சா "என்று கேட்க
அவனோ அவள் தலையில் கை வைத்து அதை கலைத்தவன் "ஆயிருச்சு டி குழந்தை கூட இருக்கு "என்று கூற அவளோ அசடு வழிய சிரித்தவள் எழுந்து அவன் கையை பிடித்துக்கொள்ள அவனோ அவள் பிடித்திருந்த தனது கையை பார்த்து சிரித்தவன் அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்தான் .
அவளும் அவன் கண்களை பார்க்க எதனை நேரம் அப்படி இருந்தனரோ திடீரென்று கேட்ட இடி சத்தம் இருவருக்கும் சுயநினைவை கொடுக்க மணி ஐந்தை தொட்டிருந்தது .
கௌதம்"நேரமாச்சு ஜானு கெளம்பனும் பஸ்ஸுக்கு "என்க இது வரை மகிழ்வுடன் இருந்த ஜான்வியின் முகம் சட்டென்று வாடி விட்டது போகணுமா என்பதை போல் அவள் பார்க்க முதல் தடவையும் இதே போல் தான் பார்த்தாள் அப்பொழுது அவனிற்கு சிரிப்பு வந்தது ஆனால் இப்பொழுதோ அவனிற்குமே செல்ல வேண்டுமா என்று தான் தோன்றியது .மனம் விசித்திரமாய் அவளை அணைத்து நெற்றியில் இதழ் ஒற்றி ஆறுதல் கூற சொல்லி நச்சரித்து .
அதை தலையிலேயே தட்டி அமைதிப்படுத்தியவன் அவள் கையில் ஒரு சிறு அழுத்தம் கொடுத்து "ஜீவிதாவை வர சொல்லு "என்று கூற
அவளோ "ம்ம் என்றவள் பின் ஞாபகம் வந்தவளாய் "biscuits ,ஸ்னாக்ஸ் வச்சுருக்கியா ?"என்று கேட்க
அவனோ சிரித்தவன் "எப்போ பாரு சோறு சோறு லூசு .எல்லாம் வச்சுருக்கேன் "என்று கூற
அவளோ முகத்தை பாவமாய் வைத்தவள் "அப்போ உனக்கு பசிக்கும்ல அதான் கேட்டேன் "என்று கேட்க அவனோ அவள் தலை முடியை களைத்து விட்டவன் ஜீவிதா வரும் வரை அவளுடன் நின்று பேசிக்கொண்டிருந்தான் .வழக்கம் போல் செல்வதற்குள் சமாதானப்படுத்த பெரிய சைஸ் டைரி மில்க் மிட்டாய் வாங்கி கொடுத்து சிறிது சமாளித்து வைத்திருந்தான் .அவள் அவன் கையை இறுக பற்றியவள் அவன் பேச பேச "ம்ம்" மட்டும் கொட்டிக் கொண்டிருந்தாள்.
பின் இருபது நிமிடத்தில் ஜீவிதாவும் வந்து சேர அவனை பார்த்தபடி கண்களாலேயே அவனிற்கு விடை கொடுத்தாள் ஜான்வி .அவன் கை அசைத்து விடை கொடுத்தவன் உதடுகள் அவள் சென்ற திசையை பார்த்து "மிஸ் யூ ஜானு அண்ட் .... i think i am in love with you " என்று .(இதை அவ இருக்கேல சொல்லிருக்கலாம்ல பக்கி)
ஜான்வியை வீட்டில் விட்ட ஜீவிதா பிரவீன் கூறியதை போல் ஆதி இவர்கள் இருவரையும் பார்த்ததை கூறாமல் "ஜான்வி பாத்து "என்று பொதுவாய் கூற அவளும் எதற்கென்று தெரியாமலே தலை ஆட்டி உள்ளே சென்றாள்.உள்ளே வீடு வெறிச்சோடி இருக்க ஆதி மட்டும் வரவேற்பறையில் இருந்த sofaavil அமர்ந்து கால்களை ஆட்டியபடி தாளை குனிந்து ஒரு வித இறுக்கத்துடன் அமர்ந்து இருந்தான் .
ஜான்வி "டேய்ய் சின்னு அம்மா அப்பா இல்லையா "என்க
ஆதியோ தலை உயர்த்தியவன் இறுகிய முகத்துடனே "எங்க போயிட்டு வர ஜான்வி ?"என்றான்
அவனின் இறுகிய முகத்தை கண்டு சற்று உதறல் எடுக்க அவனின் ஜான்வி என்ற அழைப்பே அவன் கோபமாய் இருக்கிறான் என்று உணர்த்தியது "நான் ஜீவிதாவோட ஷாப்பிங் போய்ட்டு வரேன்டா "என்று கூற
ஆதியோ புருவம் உயர்த்தியவன் மீண்டும் "எங்க போய்ட்டு வர ஜான்வி "என்றான் குரலில் சற்று கடுமை கூடி இருந்தது .
அவள் மீண்டும் சற்று நாவு தந்தி அடக்க "அது... ஷாப்பிங்..... "என்க
அவனோ அவளையே இரண்டு நொடி கூர்ந்து நோக்கியவன் பின் என்ன நினைத்தானோ "அப்பா அம்மா வெளியே போயிருக்காங்க கொஞ்சம் டீ போட்டு தரியா மினியன்"என்க
அவளோ தன் தம்பியின் விசித்திர செயல்களில் குழம்பினாள் "டூ மினிட்ஸ் டா வரேன் "என்று அவள் அடுப்படிக்குள் செல்ல அவனோ செல்லும் தன் தமக்கையின் பக்கவாட்டு தோற்றத்தையே வெறித்தான் அதில் எவ்வித உணர்ச்சியுமில்லை .தன் கைபேசியை எடுத்தவன் யாரிற்கோ மெசேஜ் அனுப்பினான் "சீக்ரம் நா சொன்னதை செய் "என்று
ஒரு வழியா tubelight ரெண்டும் எறிஞ்சுருச்சு பா
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro