Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

21

Sema gaanda irupeenganu nenaikuren sry for the late update.ennoda wifi crash aayruchu phonela eludhalaamnaa adhuvum appapo hang aagi 4 dhadava delete aagi enna sodhichuruchu.mannichu

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஜான்விக்கும் கௌதமிற்கும் இடையிலான நெருக்கம் ஒரு நாளில் ஒரு முறையேனும் பேசாவிட்டால் அந்த நாளே முடியாது எனும் அளவிற்கு வளர்ந்தது .

ஒரு மாதம் கடந்திருக்க சனிக்கிழமை விடுமுறை ஆதலால் வழக்கம்போல் ஆதி ஓர் சுற்றுவதற்காக கிளம்பி இருக்க அவளோ சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது தந்தையோ அமர்ந்து இருந்தவர் அவளது அன்னைக்கு ஜாடை காட்டினார் பேச சொல்லி .

அவரோ கண்மூடி திரந்தவர் ஜான்வியிடம் திரும்பி "ஜான்வி"என்றழைக்க

அவளோ அவர்புரம் திரும்பியவள் "என்னம்மா? "என்றாள்.

அவளை நெருங்கி தனது அலைபேசியை அவளிடம் காட்ட அவளோ குழப்பமாய் வாங்கியவள் அதில் இருந்த ஒரு ஆணின் புகைப்படம் கண்டு ஏதோ புரிவதாய் அவளது அன்னையை கேள்வியாய் நோக்கினாள்.

அவரோ புன்னகைத்தபடி"பையன் பேரு வருண் .வயசு 25 .டாக்டரா வேலை பார்க்கிறான் கோயம்புத்தூரில். நல்ல குடும்பம் ஒரு கோயில்ல உன்னை பார்த்துட்டு பிடிச்சுருச்சுன்னு வந்து பேசினாங்க. உனக்கு ஓகேவா ?"என்று கேட்க

அவளிற்கோ மனதில் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. தயக்கத்தோடு தன் அன்னையை நோக்கியவள்"இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் அம்மா? "என்று கேட்க

அவரோ அவளின் தலையை வருடியவர்"அதில்லடா நீயும் படிச்சு முடிச்ச வேலைக்கு போய்க்கிட்டு இருக்க .நாங்க நல்லா இருக்கேலயே உனக்கு ஒரு கல்யாணத்த பாக்கணும் அப்படின்னு தான்டா அப்பா இன்னும் 3 வருஷத்துல retire வேற ஆயிருவாரு" என்று கூற

அவளோ தனது கையில் இருந்த அந்த ஆணின் புகைப்படத்தை பார்க்கவும் விரும்பாதவள் போல அவரின் கையில் கொடுத்தாள்" இன்னும் ஒரு ரெண்டு வருஷம் மட்டும் போகட்டும் அம்மா. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்." என்க

அதுவரை அமைதியாக இருந்த அவளின் தந்தை" ஏன் வேண்டாம்?" என்க

அவளோ" வேண்டாம்னா வேண்டாம். நான் கொஞ்ச நாள் வேலை பாக்கணும் அப்படின்னு நினைக்கிறேன்" என்று கூற

அவரோ" ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் வேலை பார்க்க கூடாதுன்னு யாரும் சொல்லலையே "என்று கூற

அவளோ பேச்சற்று அமைதியாக அமர்ந்திருந்தாள். மனதில் கௌதமின் பிம்பம் வந்து வந்து இம்சித்தது. அவன் இருக்கையில் எவ்வாறு இன்னொருவனை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியும்? என்ற எண்ணம் மனதில் அலைமோத மனதில் தோன்றிய எண்ணத்தை நினைது ஸ்தம்பித்தாள் ஜான்வி.

அவள் பேய் அறைந்ததை போல் அமர்ந்திருப்பதை கண்டு மனமிரங்கிய அவளின் அன்னை.அவள் தலையை வருடியவாறு"ஒன்னும் அவசரம் இல்லடா. ஜாதகம் பார்ப்போம் ஒத்து வந்தாள் பேசி பாரு பிடிக்களேனா கம்பெல் பண்ணல."என்க

அவளோ மனதில் எதுவும் பதியாது மண்டையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
மனமோ தனக்கு ஏன் அவ்வாறு தோன்றியது என்று சிந்தித்துக் கொண்டிருந்தது. தனக்கு திருமணம் என்று கூறிய உடன் தான் ஏன் கௌதமை நினைத்தோம்? ஏன் அந்த வரன் உடன் அவனை ஒப்பிட்டுப் பார்த்தோம் ?அவன் இருக்கையில் எவ்வாறு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தனக்கு ஏன் தோன்றியது ?என்று பல்வேறு சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவள் எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் அவளின் கைபேசி சினுங்கி அவளை இந்த உலகுக்கு அழைத்து வந்தது.

திடீரென்று அவளது அலைபேசி சிணுங்க அதை எடுத்தவள் கௌதமின் வீடியோ காலை பார்த்து தற்பொழுது இருந்த குழப்பங்களை புறம் தள்ளி லேசாய் புன்னகைத்து விட்டு video reject செய்தவள் text செய்வதற்கு முன்.

கெளதம் "ஏன் டி accept பண்ணல"என்க

அவளோ சுற்றி முற்றி பார்க்க அவளின் அன்னையும் தந்தையும் இன்னும் அங்கே தான் அமர்ந்திருந்தனர்.ஜான்வி"ஹால்ல இருக்கேன் டா "என்று பதில் அனுப்ப

அவனோ வம்பிழுக்க வேண்டி"இருந்தா என்ன attend பண்ணு"என்க

அவளோ தெருஞ்சுக் கிட்டே பழி வாங்கு என்று நினைத்தவள் எழுந்து அறைக்கு செல்ல போக அவளின் அன்னையோ"ஜான்வி எங்க போற?"என்று கேட்க

அவளோ இளித்தபடி திரும்பியவள்"அது அம்மா roomku போரன் அம்மா"
என்க

அவரோ அவளை குழப்பமாய் பார்த்தவர்"எதுக்கு உள்ள போகணும் ?சாப்டுட்டு உள்ள போ"என்க அவளோ முழித்தால் சமாளிக்க தெரியாமல்.

கெளதம் மீண்டும் அழைக்க அவனை மனதிற்குள்ளேயே திட்டி தீர்த்த ஜான்வி அவளின் தாயை பார்க்க அவரோ அவளை குருகுருவென்று பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் அழைப்பை துண்டித்தவள் மெஸேஜில்"அப்ரம் பேசுறேன் டா"என்க

அவனோ"வாய்ப்பே இல்ல "என்க

அவளோ வினையே என்று"ஒகே attend பண்ணுவேன் ஆனா பேசமாட்டேன்"என்று சொல்ல

அவனும்" சரி: என்றான் .தனது earphonesஐ எடுத்து போட்டுக்கொண்டவள் அவனின் அழைப்பை ஏற்று எதோ படம் பார்ப்பதை போல் பாசாங்கு செய்ய அவனோ கன்னத்தில் கையை வைத்து அவளையே ஒரு இரண்டு நிமிடம் பார்த்தான் .

அவனின் கண்களின் மொழியில் என்றும் போல் இன்றும் அவள் தொலைய இரண்டு நிமிடங்கள் இப்படியே கரைய அவளோ அந்த மோனநிலையில் இருந்து வெளிவந்தவள் எதாச்சு பேசு என்று கண்களால் ஜாடை செய்ய

அவளின் விழியின் மொழியில் தெளிந்தவன் சிரிப்புடன்"நா எங்க இருக்கேனு guess பண்ணு"என்க

அவளோ அப்பொழுதே பின்னால் கவனித்தவள் ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்தாள்.அவன் நின்றுக் கொண்டிருந்தது காந்திபுரம் பேருந்து நிலையம்.

அவள் கண்களில் இருந்த ஆச்சர்யத்தை கண்டு புன்னகைத்தவன் "நாளைக்கு இங்கதான் எக்ஸாம். எக்ஸாம் ரெண்டு மணிக்கு முடியும் .நீ என்ன பார்க்க வா. எப்போ ?எங்க ?அப்படின்னு நைட்டு கால் பண்ணேல சொல்றேன்." என்க

அவளும் எதுவும் கூற முடியாத தனது நிலையை எண்ணி நொந்து தன்னை மட்டும் ஆட்டிவிட்டு அந்த போனை வைத்தாள்.பின் அன்னை கொடுத்த உணவை உண்டவள் அறைக்குள் அடைக்கலமாக அவளிற்கு காலையில் இருந்த குழப்பம் மீண்டும் மனதை வியாபிக்க துவங்கியது.

ஏன் ஏன் என்று யோசித்தவள் இதற்கு மேல் தாங்காது என்று நினைத்து ஜீவிதாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

ஜீவிதா அப்பொழுது மாடியில் துணி காயப்பொட்டுக் கொண்டிருந்தவள் கைபேசி சிணுங்க துணியை ஓரமாய் எடுத்து வைத்துவிட்டு கையை துடைத்து விட்டு போனை எடுத்து"ஹலோ"என்க

ஜான்வியோ இந்த பக்கம் அதற்குள் பொரிய துவங்கி விட்டாள்"ஏன் ஜீவி எனக்கு அப்படி தோணுச்சு?பிரவீன் மாதிரி அவனும் friend தான. அப்போ எனக்கு இப்டி தோனி இருக்க கூடாது தான"என்க

ஜீவிதாவிற்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.ஜீவிதா"ஹே லூசு என்னடி ஒளருற?"என்க

ஜான்வி சற்று நிதானித்தவள்"ஜீவி காலைல அம்மா யாரோ பொண்ணு கேட்டாங்கனு photo காமிச்சாங்க டி"
என்க

ஜீவிதாவை மகிழ்ச்சி அடைந்தவள் "செமடி என்ன சொன்ன?" என்க

அவளோ உற்சாகமிழந்த குரலில் "இப்போதைக்கு வேணாம்னு சொல்லிட்டேன் "என்க

ஜீவிதா"ஏன்டி ?"என்க

அவளோ"அது... சொல்லுவேன் திட்ட கூடாது "என்க

ஜீவிதாவிற்கு அப்பொழுதே தெரிந்து விட்டது தோழியின் எண்ண ஓட்டம் .கள்ள சிரிப்பு சிரித்தவள் அவள் வாயாலேயே கூறட்டும் என்று அமைதி காக்க ஜான்வியோ "அது அவங்க சொல்லும் போது எனக்கு கௌதம் இருக்கேல எப்படி இன்னொருத்தனை நான் கல்யாணம் பண்ணிக்குவேன்? அப்படின்னு ஒரு நிமிஷம் தோனுச்சு டி. ஏன் அப்படினு தெரியலை .பிரவீன் மாதிரி அவனும் எனக்கு ஒரு நண்பன் தான். அப்படி தான் இத்தனை நாளும் நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். அவன் மேல ஒரு கிரஷ் இருந்தது உண்மைதான். ஆனால் கல்யாணம் என்று பேசுறப்போ அவன் ஞாபகம் வர அளவுக்கு இது இருக்கும்னு நான் நெனைக்கலை .இதுக்கு என்ன பேர்? இன்னும் எனக்கு தெரியல "என்க

ஜீவிதாவோ" பதில் உன்கிட்டயே இருக்கு ஜான்வி."என்க

ஜான்வி குழப்பமடைய

ஜீவிதாவோ "நான் ஒன்னு சொல்லுவேன் அதை ட்ரை பண்ணு " என்க

ஜான்வியும் "சொல்லு" என்றாள்

ஜீவிதா" முதல் தடவை பார்த்ததிலிருந்து கௌதமுக்கும் உனக்கும் நடுவுல நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் நினைச்சு பாரு. அதுவே உனக்கான பதிலை கொடுக்கும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிறது என்னன்னு. சில விஷயங்கள் சொன்னா புரியாது ஜான்வி நம்மளா உணர்ந்தால் தான் புரியும் .நீயே யோசிச்சுக்கோ."என்று கூறி அழைப்பைத் துண்டிக்க

ஜான்வினோ தனது கட்டிலில் அமர்ந்து ஒரு தலையணையை நெஞ்சோடு அணைத்யவள் அவனுடனான அவளது ஒவ்வொரு சந்திப்பையும் நினைவு கூற துவங்கினாள்.

முதல் முதலில் அவனை பார்த்தது, இரண்டாவது சந்திப்பில் திரையரங்கில் அவன் அவளது தேவையை அவளை கூறாமல் செய்தது அடுத்து அவனை காண்பதற்காகவே அந்த குறிப்பிட்ட நேரத்தில் பாலத்திற்கு சென்று அவனுடன் பேசும் அந்த பத்து நிமிடத்தை ஒரு வாரம் முழுவதும் நினைத்துக் கொண்டு அடுத்த வாரம் எப்போது அந்த நேரம் வரும் என்று ஏங்கியது, அதன்பின் அவர்களின் முதல் போன் உரையாடல் ,அவர்களின் முதல் கோயம்மபத்தூர் சந்திப்பு ,அவன் கோபம், அவனின் ரசனை ,அவனின் வலி அ வனது ஒவ்வொரு அசைவும் அவளுள் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை பேதை அவளோ ஆறு மாதங்களுக்கு பின் உணர துவங்கினாள்.

அவனின் வலியை தனதென உணர்ந்தது நட்பென்றால் அவனின் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்து நின்றதன் பெயர் என்ன?

அவனிடம் பேச துடிப்பது நட்பேன்றால் திருமணம் குறித்து பேசுகையில் அவன் முகம் மனதில் நிழலாடியது பெயரென்ன?

அவனின் முகத்தில் சிரிப்பை உண்டாக்க துடிப்பது நட்பென்றால் அன்று அவன் ஒரு பெண்ணை பற்றி கூறுகையில் முகமரியா ஒரு சிறு பெண்ணின் மேல் பொறாமை கொண்டேனே அதன் பெயரென்ன?
என்று அவன் நினைவுகளில் மூழ்கி இருந்தவள் கையில் இருந்த கைபேசியில் தவறுதலாக அவள் கைப்பட்டு பாடல் ஓட அதில் ஒலித்த பாடல் அவள்.தேடலுக்கான விடையாய் ஒலித்தது

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

பாடலின் வரிகளில் லயிதிருந்தவளின் மனம் அடித்து கூறியது அவன் மேல் அவள் கொண்ட உணர்வுக்கு பெயர் காதலென்று.

என் அத்துவின் மேல் எனக்கு காதலா ?என்று எண்ணியவளின் மனதில் மெல்லிய நிம்மதி ஒன்று பரவ மயிலிறகாய் அவனின் நினைவுக் அவள் இதயத்தை வருட இதழ்கள் முதல் முறையாக தான் அறிந்திராத வெட்கப்புன்னகையை ஏந்தி இருந்தது.

அடுத்த கணம் அவளின் மனதில் தனது குடும்பத்தினர் பற்றிய நினைவு வந்து பயம் நிரியய அந்த பயதை மீறி இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்தவளின் மனதில் காதல் அரும்பியது.நாளை அவனை காணப் போகிறோம் என்ற நினைவே உற்சாகத்தை தர அவனின் பிம்பத்தை வருடியவள் அவனின் நிழலாடு பேசினாள்" அத்து உனக்கும் என்ன பிடிக்குமா ?" என்று கேட்க அதில் இருந்த அவனின் பிம்பம் மேலும் சிரிப்பதை போல் தோன்ற அதில் ஒரு முத்தம் இட்டவள் நேரமாகிவிட்டது உணர்ந்து கீழே சென்றாள் உணவருந்த வேண்டி.

ஒரு கை என்றும் ஓசை எழுப்பாதென்று அவள் மறந்ததும் ஏனோ?

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro