Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

9.


அன்று விடுமுறை தினம். தூங்கிக் கொண்டிருந்தவனை காலிங் பெல் சத்தம் எழுப்பியது. சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து போய் கதவை திறக்க அங்கே சிவகாமி நின்றிருந்தார். வருண் வீட்டிலும் அந்த தெருவில் இருக்கும் இன்னும் இரண்டு வீடுகளிலும் வேலை செய்பவர் சிவகாமி. வீட்டை சுத்தப் படுத்தி விட்டு காலை உணவும் சமைத்து விட்டு போவார். அதனால் வழக்கமாய் காலை உணவு வீட்டிலும், மதியம் ஹோட்டலில் ஆர்டர் செய்து அலுவலகத்திலும் இரவு ரோஹினி வீட்டிலும் சாப்பிட பழகியிருந்தான் வருண்.

"வாங்கக்கா " என்று விட்டு உள்ளே வந்தவன் மீண்டும் தூங்கும் வேலையை தொடர்ந்தான். தூங்கி எழுந்து குளித்து விட்டு வர மேசையில் உணவு தயாராய் இருந்தது.

சாப்பிட அமர்ந்தவன் எதுவும் யோசிக்காமல் திவ்யாவுக்கு அழைத்தான். தினமும் அவள் முகம் பார்த்தே நாள் தொடங்கி பழகி விட்டதில் இப்போது குரலையாவது கேட்கலாம் போல இருந்தது.. அங்கே இதே சிந்தனையில் போனை கையில் வைத்த படியே கட்டில் புரண்டு கொண்டிருந்தவள் முதல் Ring இலேயே Answer செய்தாள்.

Good morning வருண்

Good morning, என்ன பண்ற?

சும்மா தான் இருக்கேன்.

சாப்டியா?

இல்ல, நீ சாப்டியா?

"சோம்பேறி, இன்னும் எந்திரிக்காம Bedல உருண்டுட்டு இருக்கியா? " இதை தான் பேசுகிறோம் என்றில்லாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மனதில் தோன்றியதெல்லாம் பேசிவிட்டு போனை வைத்தார்கள். கடந்த சில நாட்களிலே திவி நிறையவே மாறிவிட்டாள் எனத் தோன்றியது வருணுக்கு. பள்ளி நாட்களில் இருந்த அதே நெருக்கம், இல்லை அதை விட கொஞ்சம் அதிக உரிமையுடனே பழகினாள்.

திவ்யாவுடன் பேசிவிட்டு சாப்பிட்டு முடித்த ஐந்தாவது நிமிடம் அவன் மொபைல் சிணுங்கியது.

"சொல்லு " ரோஹினியை எதிர்பார்த்துக் கேட்டவன், "மாமா, அம்மா மினிக்கு அடிச்சா " மினியின் மழலை குரலில் அவளை சமாதானப் படுத்தத் தொடங்கினான். அவன் என்னென்னவோ சொல்லியும் மினி சமாதானம் ஆகாமல் போகவே "சரி இருங்க, அம்முவ பாக்க மாமா வரேன் " ரோஹினி வீட்டுக்கு கிளம்பிப் போனான். அப்பாவும் தாத்தாவும் தீர்த்து வைக்க முடியாத அம்மா மகளின் சண்டை வருணின் தலையீட்டில் முடிவுக்கு வந்தது. அதன் பின் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு நான்கு மணியளவில் தன் நண்பர்களை பார்க்கப் போனான்.

"வாடா நல்லவனே " வருண் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய Laptop இல் படம் பார்த்துக் கொண்டிருந்த அகில் அவனை வரவேற்றான். மாடியில் தனியே இருந்த அறையில் சிவாவும் அகிலும் தங்கி இருந்தார்கள். வீட்டு உரிமையாளர் வெளியூரில் இருந்ததாலும், கீழ் வீட்டிலும் யாரும் இல்லை என்பதாலும் நண்பர்கள் அங்கே வந்து போவதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

சிவா எங்க?

குளிக்க போனான், இப்போ வந்துடுவான்.

"என்ன Film? " கேட்டபடி படி வருண் அவன் அருகில் மெத்தையில் அமரவும், ராகேஷ் அங்கு வந்து சேரவும் சரியாய் இருந்தது.

எல்லாரும் என் ஆசைல மண்ணள்ளிப் போட்றதுலயே இருக்காங்க. Friends னு சொல்லி மூனு பரதேசிங்க நா காலேஜ்ல கரெக்ட் பண்ண எல்லா பொண்ணுங்களையும் என்ன பாத்து ஓட்ற மாரி பண்ணானுங்க. இப்போ இந்த அம்மா வேற!!

ராகேஷ் புலம்பிக் கொண்டிருக்க, அங்கே தலை துவட்டிய படி வந்த சிவா மற்ற இருவரையும் பார்த்து என்ன என்று புருவம் உயர்த்தினான். அகில் தெரியாது என கைகளால் காட்டிவிட்டு மீண்டும் தன் படம் பார்க்கும் வேலையை தொடர வருணும் படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். சிவா கண்ணாடியை பார்த்து தன் ஈர முடியை கலைத்து விட்டுக் கொண்டிருக்க யாரும் தன்னை கண்டு கொள்ளாத கடுப்பில் ராகேஷ் வருணை ஒரு உதை விடப் போக வருண் அவன் எதிர்பாராத விதமாய் அவன் காலை இழுத்து விட்டதில் மெத்தையில் விழுந்தான்.

Laptop ஐ பக்கமாய் வைத்து விட்டு அகில் ராகேஷை பார்த்து சிரிக்க, வருணும் அதில் இணைந்து கொள்ள, முறைத்துக் கொண்டு தலையணையால் ஒரு பெரிய தாக்குதலுக்கு தயாரான ராகேஷை மற்ற மூவரும் பிடித்து தடுத்து ஒரு வழியாய் அமர வைத்தார்கள்.

இடது கையை அகிலும் வலது கையை வருணும் பிடித்துக் கொண்டிருக்க மூவரையும் முறைத்தான் ராகேஷ்.

"இப்ப ஒனக்கு என்ன தான்டா Problem? " சிவா கேட்டதும், "அம்மா என்ன பொண்ணு பாக்க போக கூப்டறாங்க." சீரியஸாய் சொன்னான் ராகேஷ்.

"யாருக்கு? " உண்மையிலேயே புரியாமல் அகில் கேட்கவும் "ம்ம்ம் ... என் தாத்தாவுக்கு " எரிச்சலாய் சொன்னான் .

"தாத்தாவுக்கு இந்த வயசுல Marriage பண்ணி வெக்க போறாங்களா? " யோசனையாய் கேட்ட அகிலை சிவாவும் வருணும் பாவமாய் பார்க்க, காண்டாகி அவனை உதைக்கத் தொடங்கினான் ராகேஷ்.

மற்ற இருவரும் அவனை இழுத்துப் பிடிக்க, அவன் இன்னும் முறைத்துக் கொண்டு இருந்தான்.

"ஏன்டா, தாத்தாவுக்கு Marriage பண்ணி வெக்கிறது ஒனக்கு பிடிக்கலையா " உதை வாங்கிய இடத்தை கையால் தடவிய படி அகில் கேட்கவும், "டேய்!!! ஒன்ன கொல்லாம விட மாட்டேன்!!" கொலை வெறியில் ராகேஷ் அகில் மேல் பாய்ந்தான். ரெண்டுமே தேறாது என்பது போல சிவாவும் வருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மெத்தையில் உருண்டு சட்டையிட்டுக் கொண்டவர்கள், மற்ற இருவரும் தம்மை தடுக்கவில்லை என்று உணர்ந்ததும் விலகி அமர்ந்து இருவரையும் பார்த்தார்கள்.

நின்று கொண்டிருந்த இருவரையும் மாறி மாறி முறைத்து விட்டு ராகேஷ் அகிலை பார்க்க அவன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். " அப்போ, இவன் இவ்ளோ நேரம் நம்மள வெச்சி ஓட்டிட்டு இருந்தானா? " ராகேஷ் மனதில் நினைத்ததை வெளியே சொல்லிவிடவும், அகில் சத்தமிட்டு சிரிக்க மற்ற இருவரும் அதில் சேர்ந்து கொண்டார்கள்.

முறைத்தே கொன்று விடுபவன் போல ராகேஷ் உர்ரென்று மூவரையும் மாறி மாறிப் பார்க்க, "சும்மா விளையாட்டுக்கு பண்ணேன், மச்சி . யேன் ஒனக்கு பொண்ணு பிடிக்கலையா " என்று அவன் தோளில் கை வைத்தபடி அக்கறையாய் கேட்டான் அகில்.

இப்டி விட்ல பாக்கற பொண்ண கட்டிக்கிட்டா Love marriage தான் பண்ணிப்பேன்ற என்னோட லட்சியம் என்னாகுறது?

"சரி அது தான் எந்த பொண்ணும் செட்டாகலையே " என்று வருண் ஆறுதல் சொல்லப் போக, " செட்டாக நீங்க விட்டா தானே " மீண்டும் மூவரையும் முறைத்தான் ராகேஷ்.

"இப்போதைக்கு Marriage வேணாம்னு வீட்ல சொல்லிடு " அகில் சொல்ல,

எல்லாம் சொல்லிப் பாத்துட்டேன். அடுத்த வாரம் பொண்ணு பாக்க போயே ஆகணும்னு ஆர்டர் போட்டுட்டாங்க.

சரி, அப்போ சும்மா போய் பாத்துட்டு பிடிக்கலைனு சொல்லிடு " அகில் ராகேஷை சமாளிப்பதற்காக சொல்ல,

"புடிக்கலனு சொல்றதுக்கு எதுக்கு பாக்க போகணும்.?! ஒவ்வொரு தடவையும் தன்ன பாக்க வந்தவங்க Reject பண்ணிட்டு போனா அந்த பொண்ணுக்கு எவ்ளோ வலிக்கும். ஒனக்காக ஒரு பொண்ணு அலங்காரம் பண்ணிட்டு வந்து முன்ன நின்னா ஒனக்கு அது விளையாட்டா தெரியுதா? " சிவாவின் பேச்சில் மற்ற மூவருமே அமைதி ஆனார்கள். இரண்டு அக்கா, ஒரு தங்கையோடு வளர்ந்தவன் சிவா. அதிலும் அவன் இரண்டாவது அக்காவுக்கு நீண்ட காலமாய் திருமணம் அமையாமலே இருந்து போன வருடம் தான் அவளின் இருபத்தெட்டாவது வயதில் திருமணம் முடிந்தது. இது அவனை மிகவும் பாதித்தது என்பது மற்ற மூவருக்குமே தெரியும்.

"யாருக்கு தெரியும் இந்த பொண்ண பாத்த ஒடனே பிடிச்சாலும் பிடிக்கலாம்." நிலமையை சுமுகமாக்க எண்ணி வருண் சொல்லவும்,

"ம்ம், பாத்த ஒடனே பிடிக்கற மாரி தான் இருக்கா " ராகேஷ் யாரும் எதிர் பாராத பதிலை சொன்னான்

"ஓஹ், போட்டோ பாத்துட்டியா? "

"போட்...டோவும் பாத்தேன், But நேத்து காலேஜ் வாசல்ல நேர்ல பாத்தப்போ அத விட நல்லாவே இருந்தா " வெள்ளை சுடியில் தேவதையாய் தெரிந்தவளை மனதிலே ரசித்த படி தன்னை மறந்து கொண்டிருந்தவன், வருண் ஓங்கி ஒன்று விட்டதில் நிகழ்வுக்கு திரும்பினான்.

"ஹி ஹி ... லேட்டாகிடுச்சி . நா வேற இப்போ குடும்பஸ்தன் ஆகப் போறேன். சோ டயத்துக்கு வீட்டுக்கு போகனும். " இளித்துக் கொண்டே கிளம்பினான்.

"இதுக்குத் தான் இவ்ளோ சீனா, நா கூட ஒரு நிமிஷம் அவன காலேஜ்ல லவ் பண்ண விடாதது தப்போனு Guilty ஆ Feel பண்ணிட்டேன்." ராகேஷ் போன திசையை பார்த்தபடி சிவா சொல்ல,

"இன்னுமா நீ அவன புரிஞ்சிக்கல? " கோரஸாய் சொன்னார்கள் மற்ற இருவரும்.

"சரி நீங்க இன்னைக்கி உங்க Friend அ கூட்டிட்டு எங்கயும் போகல? " அகில் கேள்வி கேட்கவும், "இது நல்லதுக்கில்லையே " என்று எண்ணிய படி இருவரையும் பார்த்து விட்டு,

"எனக்கும் லேட்டாகுது டா . கெளம்பரேன் " அடுத்த கேள்வி வருமுன் அங்கிருந்து நழுவினான் வருண்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro