Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

2.


அன்றிரவு சுஜிக்கு போன் செய்து வேலை கிடைத்ததை கூறினாள் திவ்யா.  தனக்கு வேலை கிடைத்ததில் தன்னை விட சுஜி உற்சாகமாய் இருப்பதாய் தோன்றியது அவளுக்கு. பின்னர் வருண் தன் பள்ளித் தோழன் என்பதையும் அவன் முன்பு போலவே சகஜமாய் பேசியதாயும் கூறி, தான் அவன் யாரென்று உணராமல் தடுமாறியதையும் சொன்னாள்.

சரி, விடு. School படிக்கும் போது பாத்துட்டு இப்ப இத்தன வருஷம் கழிச்சி Meet பண்ணா அப்டி தான். அவன் தப்பா எடுத்திருக்க மாட்டான்... Okay திவ்யா ... சுபாஷ் Call பண்றான்.  Good night.

Good night.

வேலை கிடைத்து விட்டது பெரிய நிம்மதியாய் இருந்தது திவ்யாவுக்கு. வருண் கூட இருப்பதால் பழைய இடத்தில் நடந்தது போல தப்பாக எதுவும் நடக்காது என்ற எண்ணமும் வந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் லேசாக இருப்பதாய் தோன்ற வேறு எதையும் யோசிக்காமல் உறங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலை, ஆபிஸ் வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள் திவ்யா. அவள் வருணுக்கு PA, வருண் அறையிலேயே அவளுக்கும் மேசை போடப்பட்டிருந்தது.  இதுவும் நல்லது தான், வெளியே இருந்தாள் யாருடனாவது பேச வேண்டும், சிரிக்க வேண்டும்.  இப்போது அந்த தேவை இல்லை.  தனியாக நிம்மதியாக வேலையை பார்க்கலாம்.  அவள் எண்ண ஓட்டத்தை கலைப்பது போல கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் வருண். அவன் திடீர் வருகையில் கொஞ்சம் திகைத்தவள் பின்னர் Good morning என்றாள்.  அவனும் பளிச்சென்ற புன்னகையுடன் Good morning சொல்ல, அப்போது தான் அவளுக்கு உறைத்தது தான் புன்னகைக்க மறந்து விட்டோம் என்பது. பின்னர், வரவழைத்த புன்னகையுடன் அவள் அவனை பார்க்க,

 "இங்க வா நெறய பேசணும் " என்ற படி தன் இருக்கையை நோக்கி நடந்தான். ஏதாவது வேலை சொல்லுவான் என்ற எண்ணத்தில் அவன் பின்னே சென்றவள், கேள்வியாய் அவன் முகம் பார்த்தாள். கையில் சின்னதாய் ஒரு நோட் புக் வேறு. ஏனோ அவளை பார்த்ததும் அவனுக்கு மீண்டும் புன்னகை அரும்ப,

உக்காரும்மா, official ஆ ஒன்னும் இல்ல.  நேத்து சரியா பேச முடியலைல, அதான் சும்மா பேசலாம்னு கூப்டேன்.

அவன் சொன்னதும் அவனுக்கு எதிரே அமர்ந்து அவன் முகம் பார்த்தாள் திவ்யா. என்ன பேசுவதென்று அவளுக்கு தெரியவில்லை.  அவனாக எதாவது கேட்டால் பதில் மட்டும் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாய் இருந்தாள். 

அவளிடம் பழைய நெருக்கம் இல்லை, இன்னும் அவள் சகஜ நிலைக்கு திரும்பவில்லை என்பது வருணுக்கு புரிந்தது. இத்தனை வருடங்களின் பின் பழைய நெருக்கம் இருக்காது தான் ஆனாலும் அவளை யாரோ போல நினைக்க வருணால் முடியவில்லை. 

"எங்க தங்கி இருக்க? " அவளுடன் நிறைய பேச வேண்டும் போலிருந்தாலும் எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியாமல் மனதில் தோன்றியதை கேட்டான்.

"ஹாஸ்டல் " ஒற்றை வார்த்தையில் பதில்.

ஹாஸ்டல் எங்க இருக்கு?

அவள் இடத்தை சொல்லவும், 

ம்ம் ... எப்போ சென்னை வந்த?

Few months இருக்கும்.

அடடா இங்கயே இருந்துட்டு தான் Meet பண்ணிக்காம இருந்திருக்கோமா?

"ம்ம் .."

இதுக்கு முன்னாடி எதாலும் Job பண்ணியா?

ஆமா, ஒரு சின்ன Problem, வேலைய விட்டுட்டேன்.

Accident ஆச்சுன்னு தெரிஞ்சதும் உன்ன பாக்கலாம்னு உன் வீட்டுக்கு வந்தேன் திவி. ஆனா உன்ன யாரோ Relatives கூட்டிட்டு போய்ட்டதா சொன்னாங்க.  உன் வீட்டு Land line Number மட்டும் தான் என்கிட்ட இருந்தது. அதான் Contact பண்ண கூட முடியல.

வாழ்வில் எந்த நாட்களில் அவள் நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சூனியமாய் மாறியதோ அந்த நாட்களை பற்றி பேசினான். அவள் பதிலேதும் பேசவில்லை.  அமைதியாய் இருந்தாள்.  மீண்டும் அவனே தொடர்ந்தான்.

"மது கிட்ட உன்ன பத்தி கேட்டேன்.  But அவளுக்கும் ஒன்னும் தெரியல. But கடைசியா மது Marriage க்கு போனப்போ, திவ்யா கூட டச்ல தான் இருக்கேன் அவளையும் Marriage க்கு Invite பண்ணி இருக்கேன்னு சொன்னா . அன்னைக்கி Full ஆ நீ வருவன்னு Wait பண்ணேன். Marriage முடிஞ்சதும் கெளம்பலாம்னு தான் போனேன்.  But நீ வருவன்னு reception முடிற வரைக்கும் இருந்தேன்.  நீ வரவே இல்ல." 

அப்போ எனக்கு Final exams நடந்துட்டு இருந்தது. Accident ஆனதுல ஆறு மாசம் நடக்க முடியாம வீட்டுல இருந்தேன்.  அதனால 10 th exam அந்த வருஷம் எழுதல. So எல்லாமே ஒவ்வொரு வருஷம் தள்ளிப் போய் காலேஜூம் ஒரு வருஷம் Late ஆ தான் முடிச்சேன்.... நீங்க எப்போ சென்னைக்கு ...

திவி... நானும் நேத்துல இருந்து பாக்குறேன், வாங்க போங்கனு ஒரே மரியாத மழைய பொழியுற.  நீ என்ன வாடா, போடானே பேசலாம் சரியா?

அவன் கட்டளை இடும் பாணியில் சொல்ல, தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் திவ்யா.

சரி சென்னைக்கு எப்ப வந்தனு கேட்டல்ல! அப்பா Business இங்க தான் இருந்தது. ஆனா அம்மா தான் திருவள்ளூர் விட்டு  வர மாட்டேனு பிடிவாதமா இருந்தாங்க.  அதனால தான் அங்கயே இருந்தோம். அம்மா இறந்ததும் அப்பா என்னயும் இங்கயே School சேந்துட சொல்லி கேட்டுட்டு இருந்தாரு. நா தான் நம்ம School விட்டு வர பிடிக்காம 12 th வர அங்கயே இருந்துட்டேன். School முடிஞ்சதும் இங்க வந்து College சேந்துட்டேன்.  Life அப்டியே போய்டுச்சி. 

அக்கா எங்க இருக்காங்க?

"அவளும் இங்க தான். அப்பாவுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்ல . So, நானே கூட இருந்து பாத்துக்குறேன்னு சொல்லி அவ வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா.  இந்த அப்பாவும் பேத்தியோட இருக்கப் போற குஷில என்ன அம்போனு விட்டுட்டு போய்ட்டாரு. என் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி தான் அவ வீடு . ஆனாலும் இப்ப வீட்ல நா மட்டும் தனியா இருக்கேன் " அவன் சோகமாய் சொல்லவும் அவளுக்கு லேசாய் புன்னகை அரும்பியது. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro