என் தோழியே (S2)
சின்னஞ்சிறு குருவி கூட்டில் வளர்ந்தவள்... விண்ணில் சுகந்திரமாய் சிறகடித்து பறந்தவள்... உலகையும் உறவையும் புரிந்துக் கொள்ளும் வயதையும் தாண்டி சிறு பிள்ளையாய் எதற்கெடுத்தாளும் அழுவதே வேலையாய் வைத்திருந்தாள்.... தனிமை என்னும் வட்டத்தில் எவரிடமும் நெருங்காமல் இருட்டுலகத்தில் வாழ்ந்திருந்தவளை கண்ட எனக்குள் ஒரு புது உணர்வு.... தனிமையை பழக்கிக் கொண்ட என்னால் அவளின் வலியை புரிந்துக் கொள்ள முடிந்தது.... பாதி உடைந்து வளம் வரும் அவளை மேலும் அதே தனிமையில் விடக் கூடாதென்னும் முடிவெடுன் அவளிடம் உறையாட தொடங்கினேன்... அவளின் சிறு பிள்ளை தனத்தில் என்னை மறந்து வாழ தொடங்கினேன்.... அவளின் தனிமை உலகத்தை மறக்க வைக்கவே அவளின் வாழ்வில் இடை புகுந்த என்னை..அவள் வாழ்வின் ஒரு அங்கமாய் மாற்றிவிட்டாள்.... இன்று என் வாழ்வில் முக்கிய பங்கை வகுத்துவிட்டாள்.... யாருமின்றி தவித்தவளின் ஒவ்வொரு மனகுமறலையும் கேட்க நான் இருந்த பொழுதும்... நான் இல்லாத போது அவள் அனுபவித்த வலிகள் எண்ணில் அடங்காதவை... என் வாழ்க்கையின் இலட்சயத்தில் ஒன்றாய் என் தோழிகளுக்கு இரண்டாம் அன்னை ஆனேன்.... இன்றோ அன்னையான நானே என் தோழிகளை என் கோவத்தால் காயப்படுத்திவிடுவேனோ என்னும் அச்சத்தில் ஒதுங்கிவிட்டேனோ என்ற சந்தேகம் முளைக்கத் தொடங்கிவிட்டது.... இருந்தும்.... நான் நம்பும் என் நட்பின் மேல் உள்ள மிகப்பெரிய நம்பிக்கையால் உறுதியாய் கூறுவேன்.... அவள் வலிகளுக்கு என்றாவது நான் காரணமானாலும்... என்றும் அவ்வலிக்கு என் நட்பின் வடிவில் என்றும் நானே மருந்தாவேன்....
- உன் அன்பு தோழி
என் தோழி pinkypet😘😘😘😘😘
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro