Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

✨திருடியே! மேரி மீ மேரி மீ-6✨

அத்தியாயம் 6
விழா நடந்து கொண்டிருக்கும் ராஜ் மஹாலின் கடைசி ஃப்ளோரில் இருந்த பால்கனியில் நின்று கொண்டிருந்தான் யாதவ்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது இன்னும் சொப்னா வந்த பாடில்லை.

ஆனால் என்னவோ அதுவும் நல்லதுக்கே என்று தான் தோன்றியது அவனுக்கு. கீழே அளவுக்கு அதிகமாக ஆட்களின் கூட்டமும் ஜே ஜே என்ற சுற்றத்தாரின் ஆர்ப்பரிப்பும் இன்றி ரொம்பவே அமைதியாக இருந்தது இங்கே....

பெரும்பாலும் அவனுக்கு இவ்வளவு கூட்டம் என்றாலே ஒத்து வராது. இன்று எப்படியோ சகித்து விட்டான். இன்னும் இரண்டு நாட்களுக்கு இதேநிலை தான் என்று இப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு ரொம்பவே எரிச்சலாக தான் இருந்தது ஆனால் வேறு வழி இல்லையே..இது அவன் திருமணமாயிற்றே!

அறியாத வயதில் பெரியவர்களால் பேசி வைத்த திருமணம்... அவன் நினைத்தால் நிறுத்த முடியும் தான்.. ஆனால் தன் திருமணத்தையே ஆவலாக எதிர்பார்த்திருக்கும் தனது குடும்பத்தினர் மனதை எரித்து சாம்பலாக்கி விட்டு அதில் குளிர்காய அவனால் முடியாதே? தனக்காக இல்லை என்றாலும் குடும்பத்திற்காக இந்த திருமணம் அவசியம் என்பது புரிந்ததால் தான் .. நேரடியாக பிடித்தமின்மையை வெளிப்படுத்தாமல் இதோ இப்பொழுது வரை அமைதியாக இருக்கிறான்.

ஆனால் தனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்பதை சொப்னாவிடம் தனது செய்கையினாலும் பேச்சினாலும் பலமுறை உணர்த்திருந்தான். அதை அவள் புரிந்து கொள்ளவில்லையா? இல்லை தான்தான் ஒழுங்காக அவளுக்கு உணர்த்தவில்லையா? என்பது அவனுக்கு விளங்கவில்லை.

தனது குடும்பத்தினருக்காக என்று பார்த்து இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை உடைக்க அவனுக்கு விருப்பமில்லை. அவளுக்கென்று பல கனவுகள் இருக்கலாம் அதை உடைத்து அவளை திருமண வாழ்க்கையில் அடைக்க அவன் யார்?

சரி கடைசியாக ஒரு முறை அவளிடம் தனக்கு திருமணத்தின் மீது பிடித்தம் இல்லை என்றும் பெண்களின் மீது நாட்டம் இல்லை என்றும் சொல்லிவிடுவோம் அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்வதும் கொள்ளாததும் அவளின் சொந்த விருப்பம் மட்டுமே என்று முடிவெடுத்தவன் தன் தங்கையின் மூலம் அவளை தனியாக பேச அழைத்திருந்தான்.

நேரம் தான் கடந்ததை தவிர அவள் வந்த பாடில்லை...

ராஜ் மஹால் பல பணக்காரர்களின் கனவு மாளிகை போன்றது. அச்சு அசலாக அந்த கால அரண்மனை மண்டபம் போல் விஸ்தாரமாகவும் அதேசமயம் ராஜாக்களின் திருமணம் அந்த காலத்தில் எவ்வாறு நடந்திருக்குமோ? அந்த அளவிற்கு திட்டமிட்டு நவீன காலத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டிருந்தது. உண்மையை சொல்லப்போனால் இது யாதவ்வின் தாத்தா வீர நரசிம்மன் கட்டியதுதான்... அதில் நவீன காலத்திற்கு ஏற்றவாறு சிறுசிறு மாற்றங்கள் மட்டுமே செய்திருந்தான் யாதவ்.

பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த அந்த அதி பிரம்மாண்டமான மண்டபம் சுற்றிலும் மரங்களால் சூழப்பட்டு நகரத்தின் மாசுபாடான சூழ்நிலைக்கு சற்று மாற்றாக அமைந்திருந்தது. எல்லாமே அவனின் தாத்தாவின் ஏற்பாடு தான்...யூகலிப்டஸ் மரம், வாடாச்சி மரம், தென்னை மரம் ஈச்சமரம் அரசமரம் ஆலமரம் வேப்பமரம் வாழை மரம் என்று பல மரங்கள் மண்டபத்தை சுற்றிலும் இருக்க, இடையிடையே அழகு செடிகளும் பூச்செடிகளும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.

இருள் படர்ந்த அந்நேரத்தில் நிலவொளியில் மரங்களோ செடிகளோ அந்த அளவிற்கு தெளிவாக தெரியவில்லை என்றாலும் அந்த இரவு நேர தென்றல் காற்று இதமாக அவன் கேசம் வருட, மற்றதை மறந்து அந்த நொடி இனிமையை ஆழ்ந்து அனுபவித்தான் யாதவ் ஜிதேந்திரன்.

சிறிது நேரத்தில் அவன் பின்னே யாரோ வரும் சத்தம் கேட்க, சொப்னா வந்து விட்டாள் என்று நினைத்தவன்,

அவளைப் பார்க்க விரும்பாதவனாய், "எதுக்கு இவ்ளொ லேட்? கிட்டத்தட்ட ஒன் ஹவருக்கு மேல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... ஆர் யு அவார் ஆஃப் இட்?"என்று சற்று அழுத்தத்துடனே கேட்க,

சொப்னாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதற்கு மாறாக ஷர்க் என்று ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்க, உள்ளுணர்வின் எச்சரிக்கையால் சட்டென்று திரும்பிய யாதவ், அவன் பின்னிருந்த பர்தா அணிந்த பெண்ணின் கத்தி வீசலில் இருந்து நொடி பொழுதில் தப்பித்திருந்தான்.

அவன் எதிர்பாராத நேரத்தில் நடந்த எதிர்பாராத தாக்குதல் இது...

யாதவ் அதிர்ச்சியுடன், நிலவொளியில் வரி வடிவமாக தெரிந்த அந்த ஒல்லியான உருவத்தை பார்த்திருக்க,

தன் தாக்குதலில் இருந்து அவன் தப்பிவிட்டதை உணர்ந்த அந்த பர்தா அணிந்த உருவம், மீண்டும் ஒரு முயற்சியாக கத்தியால் எதிரில் இருந்தவனை கீற முயல, அதை எதிர்பாராது தன் கை கொண்டு மட்டும் தடுக்க முயன்ற யாதவ்வின் கிளவுஸ் அணிந்திருந்த கைகளில் துணியோடு சேர்த்து அவனின் கையிலும் வெட்டுப்பட்டது.

வெட்டு விழுந்த இடத்திலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்க,
யாதவ் தன் வெட்டுப்பட்ட கைகளை கண்ணிமைக்காமல் பார்த்திருந்தான். இந்நேரத்தில் மற்றவர்களாக இருந்தால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்களோ என்னவோ? ஆனால் அவனோ உணர்வுகளற்று கைகளையே பார்த்திருக்க,
வந்த வேலை சுலபமாக முடிந்தது என்பது போல் ஓட முயன்ற அந்த உருவம், அடுத்த நொடி, நாடி நரம்புகள் புடைக்க ரௌத்திரமான யாதவ்வினால் கழுத்து நெறிக்கப்பட்டு சுவற்றோடு சுவராக சிறை எடுக்கப்பட்டிருந்தது.

கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்துவிட்ட அவனின் செயலால் மூச்சு விட முடியாமல் தவித்த அந்த உருவம் வேறு யாரும் அல்ல நம் சீட்டர் சீதாவே தான்....

தன் நண்பனை அடித்தவனை சும்மா விடுவதா? என்று நினைத்து தூங்க முடியாமல் தவித்தவள் சற்று நேரம் காற்று வாங்கலாம் என்று நினைத்து பார்லர் பெண்கள் தங்கி இருக்கும் அறையை விட்டு வெளியே வந்தாள். அவளின் நல்ல நேரமோ இல்லை யாதவ்வின் கெட்ட நேரமோ தெரியவில்லை யாதவ் அப்போதுதான் லிஃப்ட் மூலமாக எங்கோ செல்வதை மறைந்திருந்து கவனித்து விட்ட சீதாவிற்கு அப்போதுதான் ஒரு விடயம் நினைவிற்கு வந்தது.

அன்று மாலை நிச்சயதார்த்த விழா தொடங்குவதற்கு முன்பாக, அந்த அழகு சிலை யாரிடமோ அவள் திருமணம் செய்து கொள்ளப் போகும் யாதவ்வை தனியாக... அதுவும் ரகசியமாக கடைசி ப்ளோரின் பால்கனியில் சந்திப்பதாக பேசிக் கொண்டிருந்ததை சீதா உடன் பணிபுரியும் பார்லர் பெண் ஒருத்தி எதேச்சையாக கேட்க நேரிட்டது போலும்... அதைப்பற்றி தங்களுடன் பணி புரிந்த மற்ற பெண்களுடன் பகிர்ந்தவள்
"கல்யாணம் வர பொறுக்க முடியல போல இப்பவே ரொமான்ஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல" என்று தங்களுக்குள் கேலிப்பேசி சிரித்துக் கொண்டதையும் சீதாவும் கவனித்துக் கொண்டுதானே இருந்தாள்‌.

அவன் எங்கே செல்கிறான் என்பது தெரிந்ததும் சீதாவிற்கு அருமையான யோசனை ஒன்று வர, அதன்படி பார்லர் பெண்கள் தங்கியிருக்கும் அறைக்கு மீண்டும் வந்தவள், தனக்குரிய மெத்தை விரிப்பின் அருகே உள்ள விரிப்பில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த ஆயிஷா என்னும் பெண்ணின் பர்தாவை ஆட்டைய போட்டு அணிந்தவள்,"சாரி ஆயுசே.. வேலை முடிஞ்சதும் ஒத்த சுருக்கம் கூட இல்லாம உன்னாண்ட புர்காவ எடுத்த இடத்துல செட்டிலாக்கிடுறே.. அதுவரைக்கும் இது என் ப்ராப்பர்ட்டி.."என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்,
தனது ஆஸ்தான மடக்கு கத்தியை கைகளுக்குள் பொதிந்து கொண்டு வீறுகொண்ட சிங்கமாய் தன் நண்பனுக்காக பழி வாங்க தயாராகி வந்திருந்தாள் சீதா.

அவள் செய்யப் போவதை.. நினைத்தால் கொஞ்சம் அல்ல நிறையவே பயம் இருக்கத்தான் செய்ததது. இல்லை என்று சொல்ல மாட்டாள்...

ஆனால் அதற்காகவெல்லாம் இந்தப் பணக்கார வர்க்கத்தின் அடிமைப்படுத்தும் முறையை அவளால் ஏற்க முடியுமா என்ன? எவ்வளவு தைரியம் இருந்தால் தன் நண்பனையே கைநீட்டி அடித்திருப்பான் அவன்... பணம் இருந்தால் என்ன வேணாலும் செய்து விடுவானா? பெரிய கொம்பனா அவன் ? பார்க்க பல்க்காக பாகுபலி போல் இருந்தாலும் சிறு பிள்ளை போல் மனதுடைய தன் நண்பனின் கன்னத்தை வீங்க வைத்தவனின் உடம்பில் பூரான் போடாமல் விடக்கூடாது என்று மீண்டும் மீண்டும் தனது கோபத்தையே.. பயத்தை போக்கும் ஆயுதமாக எடுத்துக் கொண்டவள்,

சிசிடிவி கேமரா இருக்கும் அந்த லிப்டை உபயோகிக்காமல் கேமரா கண்ணில் மாட்டாமல் மிகக் கவனமாக படிக்கட்டின் மூலமாகவே அந்த மேல் தளத்திற்கு வந்திருந்தாள்.

வந்தவள் பார்த்தது என்னவோ வாழ்க்கையே வெறுப்பது போல் வானத்தை நோட்டமிட்டு கொண்டிருந்த யாதவ் ஜிதேந்திரனை தான்... ஏதோ வாழ்க்கையே சூனியம் ஆவதை போன்றும், உயிர்ப்பற்ற பார்வையுடன் இருந்தது அவனின் பார்வை.

அவனின் உணர்வுகளற்ற வெறுமையான முகத்தை பார்த்த சீதாவிற்கு கொஞ்சம்மே கொஞ்சம் அவனைப் பார்க்க பாவமாக இருக்க, வந்த வழியே திரும்பி போயிடலாமா? என்று கூட நினைத்தாள்.

ஆனால் கடினப்பட்டு தன் நண்பனின் வீங்கி போன முகத்தை நினைவிற்கு கொண்டு வந்தவள்,

"ச்சே இன்ன சீதா இந்த ரோபோ மூஞ்சிக்குகில்லாம் பாவம் பாக்குற.. அவ்ளோ லூசு பீஸாய்ட்டியா நீ... இவனுங்களுக்கெல்லாம் என்னா பெருசா ப்ராப்ளமு இருக்க போகுதுங்குற? இவனுங்களுக்கு பசின்னா என்னன்னு தெரியுமா? இல்லாகாட்டி ஒரு உருண்ட சோத்துக்காண்டி நம்ம படுற பாடுதான் தெரியுமா? எல்லாமே சொலபமா கிடைக்கிற இவனுங்களுக்கு என்னா பெருசா பிரச்சினை இருக்க போகுது? இதுகளுக்கெல்லாம் பாவம்பாக்கம இந்த பூரான் மேட்டர முடிச்சிட்டு போயிடுவோம்"என்று நினைத்தவள்,

அவன் அசந்த நேரத்தில் பின்னிருந்து அவனை தாக்க முயல... முதுகுக்குப் பின்னால் கண்கள் வைத்திருந்தானோ என்னவோ அவளது குறியிலிருந்து விலகி விட்டான் யாதவ்.

ஆனால் முயற்சியை கைவிடாது மீண்டும் அவனைத் தாக்கி அவனின் கைகளில் காயத்தை ஏற்படுத்திய திருப்தியோடு அங்கிருந்து தப்பி ஓட முயல இதோ இப்பொழுது அவனின் கையில் வசமாக மாட்டிக்‌ கொண்டிருக்கிறாள் சீதா இல்லை இல்லை சீட்டர் சீதா.

பர்தாவின் உதவியால் கண்களைத் தவிர முகத்தில் மற்ற பாகங்கள் மறைந்திருக்க, தன் அடிபடாத ஒற்றைக் கையினால் அவளின் கழுத்தை இறுக்கியப்படி சுவற்றோடு நசுக்கி இருந்தான் யாதவ். சீதாவின் கால்கள் தரையில் இருந்து ஒரு அடி தூரம் மேலே மிதக்க யாதவ்வின் கண்கள் மிருகத்தன்மையை காட்டியது.

அவன் கழுத்தை இறுக்கி பிடித்து இருந்ததால் மூச்சு விட முடியாமல் திணறிய சீதா, கண்கள் கலங்கியவாறு "விதுடா விதுடா.. இந்நாயி" என்று குரல்வளையின் நெருக்கத்தினால் வார்த்தைகள் தெளிவாக வராமல் அவள் கத்த,
என்ன நினைத்தானோ அவளின் கழுத்திற்கு விடுதலை அளித்தான் யாதவ்.

அவன் விட்ட வேகத்தில் கீழே பொத்தென்று விழப் பார்த்தவள் எப்படியோ சுவற்றை பிடித்துக் கொண்டு இருமிக் கொண்டே தன்னை நிலைப்படுத்த முயல, விடுவானா அவன்?

சீதாவின் அருகே மீண்டும் வந்த யாதவ் முன்னெச்சரிக்கையாக அவளின் கையில் இருந்த மடக்கு கத்தியை பறித்து கொண்டவன், எப்போதாவது அபூர்வமாக தான் கழற்சி வைக்கும் கிளவுஸை இரண்டு கைகளில் இருந்தும் கழற்றி எறிந்தான்.

அவன் கிளவுஸை கழற்றிக் கொண்டிருந்த நொடி அங்கிருந்து நழுவ முயன்ற சீதா, அடுத்த நொடி அதே வேதத்தில் சுவற்றோடு சுவராக அவனின் கைச்சிறையில் மாட்டிக் கொள்ள," இது என்னடா சீதாவுக்கு வந்த சோதனை" என்றுதான் அவளின் மனதிற்குள் ஓடியது. பின்னே அவர்கள் கூட்டத்திலியே அவளின் வேகம் யாருக்கும் வராது என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு வேகமாக எந்த ஒரு செயலையும் செய்து முடித்து இருப்பாள். அப்படிப்பட்ட அவளையே இந்த ரோபோ பிடித்துக் கொண்டால் அவளும் என்ன செய்வாள்?

சீதா தப்பி செல்லாதவாறு அவளின் இடுப்போடு அவளின் இரண்டு கைகளையும் பின்புறமாக பிடித்து சுவற்றோடு சிறை செய்திருந்தவன், "எவ்வளவு தைரியம் இருந்தா அதுவும் என்னோட இடத்துக்கு வந்து என்னயே அட்டாக் பண்ணுவ? நீ யாரு? உன்னை யார் அனுப்புனா?"என்று மிக மிக அமைதியாக அதே சமயம் அழுத்துத்துடன் அவன் கேட்க... அவனின் அந்த அமைதியில் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாகத்தான் சீதாவிற்கு தோன்றியது.

எச்சிலை கூட்டி முழுங்கியவள்,"ஓ சார் முஜே தமிழ் நகின் ஆதே ஹே.. முஜே கேத் ஹைய் கி முஜே லகா கி ஆப் ஏக் சோர் ஹைன் .."என்று அவள் தனக்குத் தெரிந்த ஹிந்தியில் தட்டு தடுமாறி பேச, யாதவ்வின் கண்கள் இடுங்கியது.

'அதாவது அவளுக்கு தமிழ் தெரியாதாம்.. அவனைத் திருடன் என்று நினைத்துதான் அப்படி செய்து விட்டாளாம்..'

யாதவ் ஒற்றைப்பருவத்தை உயர்த்தியவாறு அவளைப் பார்த்தவன், "என்ன பாத்தா ஜோக்கர் மாதிரி இருக்கா இப்ப கொஞ்சம் முன்னாடி தான் உன் கழுத்த நெறுக்கும்போது சுத்தமான தமிழ்ல என்ன விடுடா நாயே பேயேனு திட்டின? நவ் யுவர் மேக்கிங் எ லை லைக் யூ டோன்ட் நோ தமிழ்.. வாட் எ கிரேட் காமெடி.."என்று அவன் சிரிக்காமல் சொல்லிய போது தான், சீதாவிற்கு
தான் அவனை திட்டியது நினைவு வர, அவளுக்கோ நடு மண்டையில் யாரோ பாறாங்கல்லை போட்டது போல் இருந்தது.

அவளின் உடல் அதிர்வை வைத்தே அவளின் அதிர்ச்சியை உணர்ந்தவன்,
"ஸ்வீட் ஹார்ட்.. டூ யூ நோ ஒன் திங்க், என் மேல கை வைக்க நினைச்சா யாரும் உயிரோட போனதில்ல"என்று கண்களில் கோபத்தீ பளபளக்க யாதவ் சொல்லிய போது சீதாவின் முதுகெலும்பில் சுரீரென்று பயம் ஏறியது.

அதே நேரம் யாதவ் தன் மற்றொரு கையை அவளின் கழுத்தை நோக்கி கொண்டு வர,
அவன் பேசியதிலிருந்து
இன்று தன்னை கொலை செய்ய முடிவு செய்து விட்டான் இந்த ரோபோ ராட்சசன் என்று நினைத்த சீதா,'என்ன சீத்து இப்படி இவனாட்ட போய் சிக்கிக்கினியே? போயும் போயும் இவன் கையிலயா உன்னான்ட உயிர் போவுணும்...போச்சு போச்சு என் மொத்த பிளானும் போச்சு.. பூவு அடுத்த ஜென்மத்துல மீட் பண்ணுவோம் டா.. சாரிடா இந்த ஜென்மத்துல என்னால ஹெல்ப் பண்ண முடியல உனக்கு 'என்று தன் கண்களை இறுக்கமாக மூடியவாறு மரண பீதியில் அவள் கண்ணீர் வழிய மனதிற்குள் பிதற்றிக் கொண்டிருக்க,

அவள் நினைத்ததற்கு மாறாக அவளின் கன்னத்தை வருடியது அவனின் கைகள்.

'ஹான்ன் என்ன பண்றான் இவன்?
ஒருவேள அணு அணுவா சித்திரவதை பண்ணி போட்டு தள்ளுவானோ? கையில பிளேடு ஏதாவது வச்சிருப்பானோ??அதான் மொதல்ல கன்னத்துல இருந்து ஸ்டார்ட் பண்றான் போல'என்று நினைத்த சீதா அவனின் வருடலில் ஏற்பட்ட அசௌகரியத்தால் கண்களைத் திறக்க, ஏதோ இனம் புரியாத உணர்வால் நிரம்பி இருந்த யாதவ்வின் முகம் நிலா வெளிச்சத்தில் பன்மடங்காக மின்னியது.

பர்தாவினால் மூடி இருந்த அவளின் முகத்தின் மீதுதான் அவனின் பார்வை இருந்தது.. ஆனால் அந்த பார்வையின் பொருள் தான் அவளுக்கு விளங்கவில்லை?

'என்னடா லுக்கு? என்னா லுக்கு?'என்று வடிவேலு பாணியில் மனதிற்குள் நினைத்தவள், "போட்டு தள்ளுறதா இருந்தா சட்டு புட்டுனு சீக்கிரம் போட்டுத்தள்ளு? என்ன மாதிரி அட்டு பிகருக்கெல்லாம் இந்த ரொமான்டிக் லுக்கெல்லாம் செட்டாவாது... இப்போ என்ட மொகத்த காமிச்சேனு வையே மூணு நாள் நீ தூங்க மாட்ட அந்த அளவுக்கு படுகேவலமா இருக்கும் சாரே பீ கேரு ஃபுல்லு"என்று சீதா தன் பெண்மைக்கு தீங்கு வந்து விடுமோ என்ற பயத்தில் ஏதேதோ உளறி கொட்டிய சமயம்,

ஸ்ஸ்ஸ் என்று தன் வாயின் மீது விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்த யாதவ்வின் காதுகளில் அவர்கள் இருந்த பால்கனிக்கு வேறு யாரோ வருவது போல் சத்தம் கேட்க, அவசரமாக அவளை இழுத்துக் கொண்டு அதே மேல் தளத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த மெகா சைஸ் வாட்டர் டேங்க்கின் பின்புறமாக மறைந்தான்.

அவன் இழுத்த இழுப்பிற்கு அவனின் பின்னே சென்ற சீதாவை சற்று நெருக்கமாகவே அணைத்து கொண்டு யார் வருகிறார்கள் என்று பார்த்தான் அவன்.
வந்தது வேறு யாரும் அல்ல சொப்னாதான்...

சீதாவும் யார் வந்தது என்று பார்த்தவள்,
"ஓஓஓ நம்ம அழகு சிலை பளிங்குமல என்ட்ரியா... என்னடா ரொம்ப தாராளமா டிரஸ் பண்ணிருக்கா...ஓ இவள கரெக்ட் பண்ண தான் இந்த ரோபோ பயபுள்ள இங்கிட்டு வந்துச்சுல.."என்று தன்னை இறுக்கமாக பிடித்திருந்த யாதவ் முகத்தை சீதா பார்க்க, அவனும் அவளை அணைத்து பிடித்தபடி சொப்னாவை தான் பார்த்து அருவருப்புடன் முகம் சுளித்து கொண்டிருந்தான்.

வெல்வெட் துணியால் செய்யப்பட்ட இரவு உடையில் அதுவும் தோள்பட்டையை மறைக்கும் மேல் கோர்ட் அணியாமல், ஸ்லீவ்லெஸில் முட்டிக்கும் மேல் வரை இருந்த அந்த இரவு உடை அவளின் அங்கங்களை அபாரமாய் எடுத்துக்காட்ட,
அவள் முகத்தில் பூசி இருந்த மேக்கப் அந்த நிலவு ஒளியில் அவளின் முகத்தை ரொம்பவே பளபளப்பாக காட்டியது.

"என்னம்மா டாலடிக்கிறா இந்த அழகு செல.. ஓ இதுக்காண்டி தான் இந்தம்மா வர இம்புட்டு நேரமா..ரைட்டே" என்று அவளை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்த சீதாவிற்கு கணப்பொழுதில் வந்தது அந்த யோசனை...

"இந்த ரோபோட் மண்டையன் கிட்ட இருந்து நம்ம எஸ் ஆகணும்னா இந்த அழகு செல கிட்ட இவன கோத்து விடனும் போலையே" என்று தோன்ற, அதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள் சீதா.

இங்கு சொப்னா யாருக்காக இவ்வளவு மெனக்கெட்டு தயாராகி வந்தாலோ அவனையே காணோம்...

"ஷிட்ட்.. இங்கு வரக்கூடாதுன்னு தான் நினைச்சேன் ஏதோ ஒரு ஆர்வத்துல வந்தா அவன காணோம்... என்ன என்னன்னு நெனச்சிட்டு இருக்கான் அவன்" என்று வாய்விட்டு அவள் புலம்ப, சீதாவிற்கே அவளை பார்க்க பாவமாக தான் இருந்தது.

"பாவம் என் அழகு செல இந்த ரோபோ மேல எம்புட்டு பாசம் வச்சிருக்குபா.. "என்று அவள் நினைத்திருக்க, ஆனால் அவள் அடுத்து சொன்ன வார்த்தையில் அது சுக்கு நூறாக உடைந்தது.

" என் லவ்வர் ஜோஸ் வேற நாளைக்கு வந்துருவான்...
அதுக்குள்ள இவன் கூட ஒன் நைட் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சா இவன் வரவே இல்ல.. ரெஸ்பான்சிபில் இல்லாத இடியட் அப்போ எதுக்கு என்ன கூப்டனும்? ஐ காண்ட் டோலரேட் ஹிம்.. நான் எடுத்த டெசிஷன் தான் கரெக்ட்.. எவ்ளோ கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து ரெடியாகி வந்தேன்.. ஈவன் சேஃப்டி மெஷர்ஸ் கூட எடுத்துட்டு வந்தேன்.. எல்லாம் வேஸ்ட்.. அந்த மெண்டல் ஃபெலவ்வ நம்பி வந்தது என் தப்பு தான்"என்று புலம்பி கொண்டே சொப்னா வந்த வழியே கிளம்ப தயாராக,

'என்னையா இவ வந்தா பொலம்புனா போறா... இவ்வள நம்பி தானே எஸ் ஆவுற பிளான்ல இருந்தேன்' என்று மனதிற்குள் அலறிய சீதா, சொப்னா செல்வதை தடுப்பதற்காக "ஏய் நின்னு" என்று கத்த போக, அவளின் வாய் யாதவ்வின் இதழ்களால் அடைக்கப்பட்டது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro