4. அவனுக்காக
பதக்கத்துடன் பட்டம் கரங்களில்
பதட்டத்துடன் பார்வை வழியில்
பாதியாக மாறபோறவன் நினைவுகளில்
பாவையவள் மனம் பிரிவு வலிகளில்...
இவள் கொண்டாள் விழிநீர்
இடித்துக்கொண்டு நின்றது ஓர்
இரும்புகுதிரை கண்டு திகைக்க
இனியபுயலும் அவளை தாக்க..
முன் நின்றவன் அவள் காதலன்
முகில் என்ற பெயர் மேகமாய் வருவான்
முத்தமழை பொழிவான் இதமாய் தழுவுவான்..
முழுவதும் தன்னை அறிவான்... தனக்காக வாழுவான்....
அழைத்து செனறான் அவன் இல்லம்
அன்னை பிறந்த அவள் வாழப்போகும் இல்லம்...
அவன் விரும்பியதை இவளே சமைத்தாள்..
அவன் மனைவியாக தன்னை நினைத்தாள்....
எதிர்கால திட்டம் என்ன என அவள்
எதிர்காலமே கேட்டது அவளிடம்..
உன் உயிராக வாழுவது என மனம் நினைத்தது...
உன் படிப்பை தொடரு என உயிர் சொன்னது......
காலங்கள் சென்றது... கடைசி வருடம் படித்தாள்...
கன்னியவளுக்கு மணமகனை தந்தை அழைத்து வந்தார்...
கடைசிவரை அவனோடு தான் தன் வாழ்க்கை என நினைத்தாள்..
கள்ளத்தனமாய் வெளியேறி தன் மாமன் முன்நின்றாள்...
மீண்டும் வருவாள் அவனுக்காக......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro