NEW UPDATE - 8 💕
"ஹ்ம்ம்... சரி உனக்காக கொஞ்சம் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆ சொல்லுறேன்... ரெண்டு பேரும் அப்படியே கொஞ்சம் மேலே பாருங்க " என்று ஃபிளாஷ் பேக் சொல்வதற்கு கைகளால் சுருள் கோலம் போட்டான் ஆதிகன்.
"சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் தனியார் XYZ மருத்துவக் கல்லூரியில் ஜீவா, பூஜா, காவியா, மோனிகா அப்புறம் என்ன நானும் அங்கேயே தான் படிச்சேன்" என்று சொல்லி முடித்தான், ஆதிகன்.
"நீ சொன்ன மிக மிக வார்தையிலையே, நல்லா புரிந்ததுடா " என்று கௌதம் தலை ஆட்டும் பொம்மைப் போல் அவன் தலையை ஆட்டினான்.
"நீங்க கௌதம், படுச்சது வழந்தது எல்லாம் எங்கே? " என்று பூஜா கௌதமை பார்த்து அவனைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கேட்டாள்.
"நமக்கு பிறந்ததுல இருந்து மதுரை தாங்க, நல்ல வேளை இன்டர்ன்ஷிப்பும் இங்கையே போடுடாங்க, ஆமா நீங்க மட்டும் ஏன் சென்னையில இருக்கீங்க, இவுங்க கூட சேர்ந்து வந்திருக்கலாம் " என்று மனதில் எழுந்த ஆதங்கத்தை ஆதிகனைப் பார்த்த வாரேக் கேட்டான், கௌதம்.
"ஆமா , வந்திருகளாமே, ரெண்டு பேரும் பேசி முடிச்சுட்டு ஃப்ரீ ஆகிட்டு கூப்டுங்க, நான் போறேன்" என்று எழுந்தவனை தடுத்து நிறுத்தினாள், பூஜா.
"ஹே, லூசு, நில்லுடா...நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு போங்க. நான் இங்க ஒரு மேறேஜ் அட்டெண்ட் பன்ன அப்பா கூட மதுரை வந்தேன், டாடி காலிங், இதுக்கு மேலே ஒரு நிமிடம் கூட நான் லேட் பன்ன முடியாது, பை பாய்ஸ்! " என்று கைப்பேசியில் பேசிய வாரே கார் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றாள் பூஜா.
"ஹ்ம்ம்... இனிமே தான் நீ சீரியஸாக கவனிக்க வேண்டும், " என்று அவர்களிடம் நடந்தவற்றை முதலில் இருந்து சொல்ல அயுத்தமானான், ஆதிகன். (நீ ரெஸ்ட் எடு ஆதி பேபி, நான் கதை சொல்லிட்டு வரேன்)
ஆதிகன், ஜீவா மற்றும் பூஜா இவர்கள் மூவரும் மூன்றாம் வகுப்பில் இருந்தே நண்பர்கள். ஆதிகனின் தந்தை சிதம்பரம் M.L.A, தாயார் மல்லிகா. கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை. இரண்டாம் வகுப்பு வரை அவன் தாத்தா பாட்டியிடம் கிராமத்தில் வழந்தவனை அவர்கள் மறைவுக்குப் பின், அவனின் பெற்றோர்கள் சென்னையில் உள்ள டொன் போஸ்கோ பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்புச் சேர்த்தனர்.
அப் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்ந்த ஆதிகனிர்க்கு கிடைத்த நண்பர்களே ஜீவாவும் பூஜாவும். ஆதிகனிற்கு தனிமையாக இருக்கிறோம் என்ற நினைப்பு வராமல் குழந்தைப் பருவத்தை வானவிளாக மாற்றியது இவர்கள் இருவர் தான். சிறு வயதில் இருந்து, மருத்துவக் கல்லூரியில் பயிலும் வரை ஒன்றாக தான் எல்லாத்தையும் எடுத்து படித்தார்கள். பூஜாவின் உடல் நிலை சரியல்லாமல் போகவே, அவளின் இன்டர்ன்ஷிப்பை சென்னையிலேயே தொடங்கவேண்டிய கட்டாயம் ஆயிற்று.
இவர்களின் அடை மொழியே APJ (Aathigan, Pooja and Jeeva). எப்பொழுதும் ஒன்றாக சுத்தும் இவர்களுக்குள் பிரிவு எப்படி நடந்தது? காதல் ! இரு உள்ளங்களை ஒன்றினத்தால் தானே காதல்? ஆமாம்!அப்படி என்றால் இங்கு நடந்தது? நாடகம், எஸ்! காதல் நாடகம் அரங்கேறியது. ஓ, மோனிகாவிற்கும் ஜீவாவிற்கும் இடையில் உள்ள காதல் என்று தானே எண்ணுகிறீர்கள்? அதுவும் இல்லை. பின் ? மோனிகாவிற்கும் ஆதிகனிற்கும் இடையில் இருந்த காதல். (சரியாகத் தான் படித்தீர்கள், மேலும் சொல்லுகிறேன்.)
இவர்கள் மூவரும் யாருக்கும் அடங்காமல் ஒரு சேர சுற்றித் திரியும் நண்பர்கள். ஒரு வருடம் ஓடியது, முதல் காலேஜ் பங்க், முதல் திருட்டுத் தனம், முதல் அபோலஜி லெட்டர், முதல் ராக்கிங், முதல் திருட்டு டூர். இப்படி வாலிப பருவத்தை மகிழ்ச்சியில் கழிந்தது மூன்று வருடங்கள். இவை எல்லாமே தலைகீழாய் மாறியது மோனிகாவைப் பார்த்த அத்தருணத்தில் இருந்து.
மோனிகா - அவள் இவர்களுக்கு பக்கத்து கிளாஸ், அவளின் அழகின் திமிரிலும், தைரியத்தில் வல்லமையும் கண்டு வியக்க வைக்கும் பெண்மணி. எல்லா பசங்களும் இவள் பின்னாடி சுத்த, இவள் சுற்றியது ஆதிகனின் பின்னால்.
"ஹலோ, எக்ஸ்கியூ மீ, நீங்க தான் ஆதிகன்னா? " என்று காரிடாரில் நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்த ஆதிகனை, பின்னால் நின்ற படி அழைத்தாள் மோனிகா.
"ஹ்ம்ம்.. நான் தான் ஆதிகன். நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேண்டும்? " என்று அவன் இவளைப் பார்த்துக் கேட்டான்.
" நான் மோனிகா, உங்க பக்கத்து கிளாஸ் தான், காலேஜ் ஃபெஸ்ட்டாக்கு டான்ஸ் குரூப்க்கு பெயர் எடுக்க வந்தேன், ஷிவா சார் உங்களையும் சேர்துக்கச் சொன்னாரு...நீங்க தான் ஃபீஸ்டா (Festa) ஏற்பாடுகள் எல்லாம் பண்றது ? " என்று அவள் கையில் வைத்திருந்த லிஸ்ட் பேப்பரை காற்றில் அசைத்துக் கொண்டேக் கேட்டாள்.
"ஆமா..ஆனால் டான்ஸ் பிராக்டீஸ் க்கு நேரம் இருக்குமான்னு தெரியலை.. நான் சாயங்காலம் என் ப்ரெண்ட்ஸ் கிட்டையும் கேட்டுட்டு சொல்லுறேன், மோனிகா" என்று பொறுமையாக யோசித்து யோசித்து பேசி முடித்தான் ஆதிகன்.
"சரிங்க ஆதிகன் " என்று அவனைப் பார்த்து எப்படி யேணும் அவன் டான்ஸ் ஆட ஒத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டே நடந்தாள், மோனிகா. அப்போதுதான் அவள் எண்ணியவற்ற நடத்திக் காட்ட முடியும்.
"ஆதி, என்னடா, அழகான பொண்ணு எல்லாம் வந்து பேசிட்டு போது ? " என்று புருவத்தை உயர்த்திக் கொண்டு கேட்டாள், பூஜா.
"நம்ம கிளாஸ்ல தான் மொக்கை ஃபிகர்ஸ்சா இருக்கு. நீயெல்லாம் என் கிளாஸ்ல வரலனு யாரு அழுதா, நான் மோனிகா கிளாஸுக்குப் போறேன் " என்று பூஜாவை பார்த்துக் நக்கலாக கூறினான், ஜீவா.
"ச்சீ பே, நீ எல்லாம் உருப்பிடவே மாட்ட" என்று மொனங்கிக் கொண்டு வகுப்பறை நோக்கி நடந்தாள், பூஜா.
ஆதிகன் ஜீவாவிடமும் பூஜாவிடமும் டான்ஸ் கலந்துகொள்ளலாமா என்று கேட்டதுக்கு, அவர்கள் இருவரும் உற்சாகத்தில் ஒற்றுக் கொண்டனர். பின், அன்று மாலையே மோனிகாவை பார்த்து டான்ஸ் பிராக்டீஸ்சிர்க்கான நேரத்தையும் கேட்டு ஃபெஸ்டாவின் தீம் ஆகியவற்றையும் பேசி முடிவு எடுத்தனர்.
ஜீவா விற்கு மோனிகா மேல சற்று பிரியம் அதிகம், ஆனால் மோனிகாவிற்கு ஆதிகனை எப்படி ஏனும் காதலிக்க வைக்க வேண்டும் என்று அவள் மனதில் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள். அதற்கு தான் இந்த டான்ஸ் ஃபெஸ்டாவில் கூட கலந்து கொண்டதும்.
ஒரு வழியாக ஃபீஸ்டா முடிந்தவிட இரண்டு மாதத்தில் மோனிகாவும் இவர்களின் நட்புக் கூட்டணியில் ஒருவராக இணைந்து விட்டாள். அது தானே அவளின் திட்டமும். எங்கு சென்றாலும் இவர்கள் ஒன்றாக சுற்ற ஆரம்பித்தனர். மோனிகாவின் மேலும் இவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டானது.
ஆறு மாதங்கள் ஓடிய நிலையில் ஜீவாவிற்கு மோனிகா மேல் காதல் வந்தது, ஆனால் மோனிகா ஆதிகனை விரும்புவது தெரியும் என்பதால் அவன் அதை வெளிகாட்டிக்க வில்லை. ஆதிகனுக்கோ மோனிகாவின் மேல் நட்பை தாண்டி எந்த ஈடுபாடும் இல்லை.
ஒரே நாள் அன்று, பல இதயங்கள் சேர்வதும் உண்டு, பல இதயங்கள் உடைவதும் உண்டு. அந்த நாளுக்காக தான் அவ்வளவு மாதம் காத்துக் கொண்டு இருந்தாள் மோனிகா.
அன்று தான் காதலர் தினம், ஆதிகனின் வகுப்பறையில் ரெட் ரோஸ் சை கையில் வைத்துக் காத்துக் கொண்டு இருந்தாள் மோனிகா. ஆதிகனும் ஜீவாவும் வகுப்பறையின் உள் வர, மோனிகா எல்லார் முன்னாடியும் ஆதிகனிடம் அவள் காதலைச் சொல்ல, பதில் ஏதும் யோசிக்க முடியாத நிலையில் இருந்தான் ஆதிகன்.
"அக்ஸெப்ட் ஆதி...அக்ஸெப்ட் ஆதி... ஆதி... மோனி ..." என்று எல்லாரும் கூச்சல் இட்டனர்.
"ஐ லவ் யூ ஆதி " என்று வெட்கத்துடன் கூறினாள் மோனிகா.
இதை சற்றும் எதிர் பார்க்காத்ததால், என்ன சொல்வது என்று பதில் ஏதும் யோசிக்க முடியாத நிலையில் நெற்றியை தேய்த்தபடியேச் சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதிகன். பழகிய தோழியை எல்லார் முன்னணியிலும் நிராகரித்து கஷ்டப்படுத்த ஆதிகனின் மனம் இடம் கொடுக்க வில்லை.
தனியாக அழைத்து அவளிடம் இதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று மனதில் எண்ணியவாறு. "ஐ லைக் யூ " என்று மெதுவாக கூறி ரோஸ்சைக் கையில் வாங்கினான் ஆதிகன்.
எல்லாரும் சேர்ந்து கூச்சல் போட்டு அவர்களை உற்சாகப் படுத்தி வாழ்த்துக்கள் கூறிக் கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன் ஆசிரியர் வருகிறார் , எல்லாரும் ஆமைதியா இருங்க என்று கத்தி எட்சரிக்கை விட, இவர்கள் இருவரும் ஏதும் பேச முடியாமல் அடுத்த நொடி நகர்ந்தனர்.
ஒரு ரோஜாப் பூவில் மாட்டிக் கிட்டியே ஆதி என்று மனதில் எண்ணிய வாரே போலி வெட்க்கதுடன் ஆதிகனின் வகுப்பறையில் இருந்து வெளி ஏறினாள், மோனிகா.
Hi guys!
How is the update?
Ellathukum Monica jeeva pooja pathi oralavu therunchirukumnu ninaikiraen.
Comments solunga pls... Any suggestions and feedback naalum enaku msg podunga... Vote poda maranthurathinga...silent readers ninga koncham paarthu panunga pa.
Keep Supporting!
Story prblm naala three drafts delete aagiruchu... So intha story ah update yae poda mudiyama poiruchy... Sorry... Complaint panium Wattpad la response varala...romba sogathula intha update ah eluthirukae ...mokkai ah iruntha manichukonga.
Ipadiku romba sokathil irukum,
Mayuri!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro