💕தித்திக்கின்ற தீயே 7💕
"என்னடி இவளோ ஐஸ் கிரீம் .... நம்ம கிட்ட இருந்த காசுல இவ்ளோ வாங்கிருக்க முடியாதே..." என்று மெனில்லாவைப் பார்த்துக் கேட்டாள் ராஜி .
"அது காலையில பார்த்தோம்ல ஒரு ரவுடி பையன் அவன் வாங்கி கொடுத்தான்" என்று ஐஸ் கிரீமில் மெய் மறந்து கொண்டு இருந்தாள் மெனில்லா.
"என்னடி சொல்ற...அவன் எதுக்கு நமக்கு வாங்கிக் கொடுத்தான்?" என்று கேட்டாள் சுவாதி.
"டி...எனக்கு ஏதும் சரியா படலை, அவனும் இவளும் இடுச்சுக்கிட்டாங்க, அது மட்டும் இல்லடி, அவன் மேல இவ விழுக, இவ விழக் கூடாதுனு அவன் அந்த சாக்குல இடுப்ப பிடிக்க, அதை நீ பார்க்கலையே" என்று நேஹா அவர்களுக்கு நடந்தவற்றை கூறிக் கொண்டு இருந்தாள்.
"எனக்கு என்னமோ அவன் ஃபாலோ பண்ணிகிட்டு வந்திருப்பான் போலன்னு தோணுது" என்று மலர் மெனில்லாவைப் பார்த்துக் கூறினாள்.
"ஒரு வேளை லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா இருக்குமோ" என்று கண் அடித்துக் கொண்டு கூறினாள் சுவாதி.
"ஹேய் பைத்தியங்களா..போதும் நிப்பாட்டுரீங்களா ... இது just an accident ... அவ்ளோதான்... என்னமோ இப்போதான் அவன் என்னைத் தேடி வந்து லவ் பண்ண போறான் இல்ல நான் தான் அவனைத் தொரத்தித் தொரத்தி லவ் பண்ண போறேன் ... அவனே என்ன பாப்பானு அசிங்கப் படுத்திட்டான்" என்று சலித்துக் கொண்டு கூறினாள் மெனில்லா.
"ஹுகும்...அப்போ பாப்பாக்கு அங்கிள் மேல ஒரு கண்ணு இருக்கு.. " என்று நேஹாவும் மலரும் ஒரு சேர கூறினார்கள் .
"நோ நோ ... லவ்ன்றது கெட்ட வார்த்தை... பார்க்க நல்ல திராட்சை பழம் மாதிரி அழகாக இருக்கான், சோ சைட்டு மட்டும் அடிச்சுட்டு ஜாலியா இருக்கணும்" என்று தோளைக் குலுக்கிக் கொண்டே சொன்னாள் மெனில்லா.
"அஹான்... இப்படி சொல்றவுங்களை நம்பவே கூடாது ..." என்று தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு கூறினாள் மலர்.
"எருமை குட்டிங்களா... படத்துக்கு நேரம் ஆச்சு போகலாம் ... வாங்க " என்று வேகமாக கையில் ஐஸ்கிரீமை எடுத்துக் கொண்டு எழுந்தாள் மெனில்லா.
"இங்கத்தான இரண்டு கழுதையும் நின்னுக் கிட்டு இருந்துச்சுங்க" என்று ஆதிகன் வாஷ் ரூமில் இருந்து
பூஜாவையும் கௌதமையும் தேடிக் கொண்டு வந்தான்.
இங்கு இவர்கள் ஆதிகனைக் கண்டதும், "மென்னிலா... மென்னிலா...மென்னிலா...
மென்னினினினினினிலா... "என்று கோரசாக கத்திக் கொண்டே இருந்தனர்.
இவர்கள் வாயை மூடுவதற்கு படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தாள் மெனில்லா.
"பேசாம வாங்கடி ... பிளீஸ் டி ...அவன் பார்க்கிறான் ...." என்று மெனில்லா சிறு குழந்தைப் போல் கெஞ்சிக் கொண்டே அவர்களை இழுத்துக் கொண்டு நகன்றாள்.
"ஒஹ்ஹ் மெனில்லா... நல்ல பெயர் ஆனால் பெயரில் மட்டும் தான் மென்மை இருக்கு, பார்க்க திமிரா இருக்காளே" என்று நினைத்துக் கொண்டு இருந்தான் ஆதிகன்.
பூஜாவும் கௌதமும் ஒரு ஓரமாக கையில் ஜூசுடன் நின்றுக் கொண்டு இருந்தனர்.
ஆதிகன், அவர்களைப் பார்த்து அசடு வழிந்து கொண்டே அவர்கள் அருகில் வந்தடைந்தான். அவர்களோ இவனை சட்டை செய்ய வில்லை.
"என்ன ? என்னை விட்டுட்டு ஜூஸ் குடிச்சுட்டு இருக்கீங்க" என்று அவர்களின் மீது குற்றம் சாற்றினான் ஆதிகன்.
அதற்கும் பதில் ஏதும் அவர்கள் இருவரிடம் இருந்தும் வந்தபாடு இல்லை.
" சரி...ரெண்டு பேரும் உங்க மூஞ்சியவே மாறி மாறி பார்த்துக்கோங்க... நான் கிளம்புறேன் " என்று பொறுமை இழந்த ஆதிகன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
"டேய்..டேய் நில்லு... ரொம்பத்தான்... நீ தான் ஐஸ்கிரீமே சாப்பிட்டு வந்துருப்ப " என்று கௌதம் ஒரு புருவத்தை உயர்த்திக் கொண்டு கூறினான் கௌதம்.
"ஆமா ... யாருடா அந்தப் பொண்ணு ... என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை" என்றாள் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு பூஜா.
இருவரும் மாற்றி மாற்றி கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருந்தனர்.
"நீ வேற ஏன்மா? நானே இனிக்கு காலையில இருந்து தான் அந்த கேரக்டர் கூட டிராவல் ஆகிட்டு இருக்கேன் " என்று சொல்லி விட்டு "ஒரு சாதுக்குடி ஜுஸ், அண்ணா" என்று ஆர்டர் செய்தான்.
"இல்ல பூஜா, எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு, அது எப்படி சரியாக மாலுல ரெண்டு பேரும் சந்திக்குறாங்க ...முட்டிக் கிடுறாங்க சம்திங் ராங்" என்று அவனின் ஆப்பிள் ஜூசைக் காலி செய்து கொண்டு இருந்தான் .
"டேய் டேய்...வாயை மூடுடா, என்னமோ நான் தான் நம்பர் வாங்கி அந்த பிள்ளைய இங்க வர சொன்ன மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க " என்றான் ஆதிகன்.
"சொன்னாலும் சொல்லிருப்ப ... யாருக்குத் தெரியும் " என்று ஜுஸைக் குடித்துக் கொண்டு கூறினாள் பூஜா.
"அவன் தான் ஏற்கனவே கமிட்டட் ஆச்சே... இரு காவியா கிட்ட கொளுத்திப் போடுறேன்" என்று கௌதம் கூற, அதைக் கேட்ட பூஜாவிற்கோ சிரிப்புத் தான் வந்தது.
"அது எப்படி அவன் என்ன விட்டுட்டு கமிட் ஆவான் " என்று அவள் நக்கலாக சிரித்துக் கொண்டே கூற, கௌதமின் முகம் சுருங்க ஆரம்பித்தது.
"அவ என் பெஸ்டி தான், இஞ்சி திண்ண கொராங்கு மாதிரி மூஞ்ச வைக்காத... உனக்கு அவளை பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்" என்று கௌதமின் காதருகில் கூறினான் ஆதிகன்.
அது பூஜாவிற்க்கு பாதிக் கேட்டு விட, "ஹையோ தப்பா நினைச்சுட்டீங்களா , நான் அப்படி சொல்லலைங்க, நம்ம பிரண்ட மட்டும் கமிட் ஆகவிட்டுடா, நமக்கு போர் அடிகும்ல அதுக்குச் சொன்னேன்" என்று தெளிவு படுத்தினாள். அதைக் கேட்டதும் தான் கௌதமின் முகத்தில் தெளிவு பெற்றது.
"ஆமா, கௌதம்க்கு உன்ன நல்லாத் தெரியும். பூஜா, நீ எப்படி கௌதம கண்டுபிடிச்ச?" என்று கேள்வியாக கேட்டான் ஆதிகன்.
"ஒருத்தவுங்களுக்கு எல்லாம் தெரிஞ்சா போதும் மச்சான், இப்போ உன் வாயக் கொஞ்சம் மூடு மச்சான்" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான் கெளதம்.
"இல்ல ... உன் ஸ்டேட்டஸ்ல, நீ கௌதம் கூட நிறைய போட்டோஸ் போடுவியா, அப்போ பார்த்திருக்கேன் " என்று கடைக்காரரிடம் ஜூஸிர்கான ரூபாயைக் கொடுத்தாள் பூஜா.
"ஆனால், உங்களை எனக்கு ஜீவா பர்த்டே பார்டில இருந்தே தெரியும்ங்க" என்று வேகமாக கூறினான் கௌதம்.
"பாராஹ்... நான் தான் அப்போ கவனிக்கல போல, சாரி... நம்ம கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமே" என்று அமருவதற்கு இடம் தேடினாள் பூஜா.இவள் இப்படி கூறியதும், ஆதிகனிற்கு புரை ஏறியது.
" ஐயோ மச்சான்... பாரேன் என்னைய முன்னாடியே பார்த்துருக்காடா... செம்மல.." என்று ஆதிகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான் கெளதம்.
"டேய் .. அவ என் பெஸ்டீ ... ஒழுங்கா இரு " என்று பொய்யாக அதட்டினான் ஆதிகன்.
"சரி வந்த விஷயத்தைப் பேசுவோம்" என்று பூஜா அவர்கள் இருவரையும் சீரியஸாக பார்த்துக் கொண்டு கூறினாள்.
ஒன்றும் புரியாமல் அங்கு கெளதம் முழித்துக் கொண்டு இருந்தான். ஆதிகன் அவன் கூறிய காரியம் வெற்றியா என்று பூஜாவிடம் கேட்க, அவளோ இல்லை ஆனால் கிட்ட தட்ட வெற்றித் தான் என்றாள். மேலும் தொடர்ந்தாள், என்னோட ப்ரெண்ட் நிஷா அவளும் காவியாவும் ஒரே ஸ்கூல் தான், சோ அவளை வைத்து மோனிகாவை எப்படியாவது கையும் களவுமா பிடிக்கலாம் என்றாள்.
"மச்சான், கொலை வெறி ஆகுது, " என்று ஒன்றும் புரியாதவனாய் கெளதம் இவர்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான்.
"இதுக்கு மேல இவன் கிட்ட ஏதும் சொல்லாட்டி, கடிச்சு கொதறிடுவான் போலையே" என்று பூஜாவைப் பார்த்துக் கூறினான் ஆதிகன்.
"சொல்லுடா பாவம் கௌதம் " என்று கௌதமைப் பார்த்துக் கூறினாள் பூஜா.
"ஹ்ம்ம்... சரி உனக்காக கொஞ்சம் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆ சொல்லுறேன்... ரெண்டு பேரும் அப்படியே கொஞ்சம் மேலே பாருங்க " என்று ஃபிளாஷ் பேக் சொல்வதற்கு கைகளால் சுருள் கோலம் போட்டான் ஆதிகன்.
Any suggestions, doubts or comments?
I am open ears, constructive criticism are totally acceptable lovelies. Please share your views.
Next update will be within two days!
STAY SAFE!
With Lots of Love,
Lolita!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro