❤️ KV ❤️
1. KV 💖 part 1💖(காவல் வீரா)
மக்களே... என்னோட. தனிப்பட்ட ஸ்பெஷல் கதை இது. கல்கி வீரா என்றழைக்கப்பட்ட "காவல் வீரா". (முதல் பாகம் - ஷேனாவின் காதல் மாயாவின் கையிலே)
கல்கி வீரா படிச்சவங்களுக்கு தெரியும் இந்த கதை போக்கு எப்டி இருக்கும்ன்னு... பட் அவங்களுக்கும் இது படிக்க கண்டிப்பா புதுசா தா இருக்கும்... 😁 படிக்காதவங்களுக்கு ஒரு குட்டி முன்னோட்டம் 😁🥰.. நெறைய விஷயம் சேத்து விட்டுறுக்கேன்... ஹிஹி...
முன்னோட்டம்.
"மறுமை பூமி"
அநியாயங்கள் நிறைந்த பூலோகம் தோன்றிய அதே நாளில் மாயங்கள் நிறைந்து தோன்றிய ஒரு லோகம்.
"இருள் சூழ வேண்டும்... பிரபஞ்ச மெங்கிலும்.... ஒளி என்பது துளியேனும் இல்லாது.. முழுவதும் இருள் சூழ வேண்டும்.. அதை இந்த இருளரசன் ஆழ வேண்டும்..."
பிரபஞ்சத்தை கைக்குள் வைக்க துடிக்கும் துஷ்டர்கள் ஒரு துருவம்..
✨✨✨
"குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டவிருக்கிறீர்கள்??.. "
"மகாராணி... முதல் பிள்ளைக்கு மாயா என்றும் இரண்டாமவளுக்கு ஹாசினி என்றும் பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளோம்.."
"ஹம்... மஹி மாயா... ரக்ஷஹாசினி... இனி தர்ம ராஜ்யத்தை காக்கும் இளவரசிகள் இவர்கள்...
இவ்விருவரின் பிறப்பும் பிரபஞ்சத்தின் சரித்திரத்தின் ஒரு முக்கிய பக்கங்களாக திகழும்.. இருளை அழித்து ஒளியை பெருக்கும் போராட்டத்தில் இந்த இரு பிஞ்சுகளின் பங்கு உயர்ந்திருக்கும்...
துஷ்டர்களை எதிற்கும் நாயகிகள் ஒரு துருவம்.
✨✨✨
என்னை மன்னித்து விடு அண்ணா... நான்... இங்கிருந்து செல்கிறேன்... எமக்கு என் சினேகன் வேண்டும்..
ஸ்ரீதேவி.. அவன்.. அவன் ஒரு துஷ்ட்டன்... நம் எதிரி... அவனை நம்பி ஏன் இவ்வாறு செய்கிறாய்?.. உன் பதவிக்கு மதிபளிக்காமல் இவ்வாறு துரோகியின் கரம் பிடிப்பது அநியாயம்.
அண்ணா... என் பதவி தான் என்னை தடுக்குமெனில்... இக்கணமே அதனை துரக்கிறேன்... இனி தர்ம ராஜ்யத்திற்க்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.. எமக்கு எம் காதலே அனைத்திலும் மேல்... யான் செல்கிறேன்.
★*****★
அனைத்தும் என் தவறு தான் கண்ணா.... என் குடும்பத்தை நீங்கி வந்து பெரும் தவறிழைத்து விட்டேன்... உன்னையும் துன்பத்தில் மூழ்கடித்து விட்டேன்.... நீ உண்மையை அறியாய் மகனே... அதை கூற இயலா நிலையில் நான் சிறைபட்டிருக்கிறேன்... தர்மத்தின் உதிரமடா நீ...
இரு துருத்தின் சங்கமத்தில் பிறப்பெடுக்கும் அற்புத நாயகன்..
✨✨✨
"தர்ம ராஜ்ய வாரிசு நம்மிடத்தில் பிறப்பது இனி எக்காலத்திலும் நடவாது காத்தியாயினி... என்ன நேர்ந்தாலும் சரி... அந்த ஷேனா நம் ராஜ்யத்தை விட்டு எங்கும் சென்றிட கூடாது.. அவன் சக்திகளே எம்மை மூலோங்கங்களுக்கும் அரசனாக்க போகிறது."
"அவன் அன்னையை சிறைபிடித்த்தாலே போதும் தமையா... அவன் எங்கும் செல்ல மாட்டான்... ஹாஹாஹா..."
அவன் சக்தியை உறிஞ்ச துடிக்கும் கயவர்கள்...
✨✨✨
உன்னால் நிச்சயம் அதர்மத்தின் வழி செல்ல இயலாது ஷேனா.... செல்ல முயற்சிக்காதே .. உன்னை அந்த துஷ்ட்டர்கள் தங்கள் வசம் கொள்ள துடிக்கிறார்கள்... அப்பக்கம் சென்றிடாதே மகனே... என்னுடனேயே இரு...
அவனைக் காக்க வழியறியாது தவிக்கும் தாய்.
✨✨✨
"மாயா... அர டப்பா சக்கரைய காணோம் டி.. அக்காவும் தங்கச்சியும் சேந்து மொத்தமா தின்னுட்டிங்களா?...
"ம்மா... இல்ல... நாங்க இல்ல... அந்தா... அந்த தீரா தா..."
"உம்ம்ம்.. அத்த... இல்ல... நா இல்ல..."
"அடிங்... அவ பாட்டுக்கும் குச்சி மிட்டாய் சப்பிகிட்டு இருக்கா நீங்க.."
.
"மம்மி.. நாங்க பிரின்சஸ்.. எங்கள திட்டாத... தீராவ திட்டு.... "
"என்னது.... வாயி.. வாயி... ரெண்டு பேத்துக்கும் சக்கர திங்குற வாயிலையே போடணும்.... ... ஏய்.. ஓடாத.... அடியே அருந்த வாலுகளா... எங்க டி ஓடுறீங்க..."
"ஹிஹி.. எதிரிகள வேட்டையாட மம்மி... டாட்டா..."
நாயாகனை காக்கவே பிறந்திருக்கும் சேட்டைகார நாயகி.
✨✨✨
இது எம் கோட்டை.. எம் ராஜாங்கம்.. இங்கு தலை வணங்க வேண்டியவன் நீயே தான் நிழல் தேசத்து இளவரசனே...
ஹ்ம்ம்... தாயை தவிர வேறு எவரின் முன்பும் என் தலை பணியாது... தர்ம ராஜ்ய இளவரசியே...
என்ன துணிச்சல் உமக்கு?.
உமக்கிருப்பதை காட்டிலும் ஒரு பங்கு அதிகமே..
நிராயுதபாணியாக இருப்பினும் என்ன ஆணவம்?
அதில் எமக்கு பெருமையே இளவரசியாரே.
நீ அதிகம் பேசுகிறாய் ஷேனா...
ஹாஹ்... உம்மை விடவா மாயா...
யான் இளவரசி.. நாமமிட்டு எம்மை அழைக்காதே...
அதே போல். யானும் இளவரசனே.... நாமமிட்டு அழைக்காதே...
ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...
கோபம்... குலத்தை கெடுக்குமாம்.
அ..மைதி..."
எதிரெதிர் ராஜாங்கத்தின் மோதலில் உண்டாகும் மாயாஜால காதல்.
💖💖💖
"கல்கி வீரா" UPDATED TO "காவல் வீரா"
TO
OCTOBER 3 onwards.. 😎
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro