எந்தையே
என் வானின் நீலமே !!
என் பாதையின் நீளமே !!
என் வாழ்வின் விளக்கே !!
உன் உயர்வே என் இலக்கே !!
உண்மையாய் வாழுமுன்னை ஊருலகம் தினம் கொண்டாடுமே !!
உன் உறுதுணை ஓர்நாள் இல்லையெனில் என் உறுதிச்சக்கரங்கள் மிகத்திண்டாடுமே !!
உன் உள்ள உடல்நலஞ்சிறக்க என்மனம் இறைவேண்டும் எந்நாளுமே !!
உயர்தரமாய் குருவாய் வழிநடத்து அன்பாய் தினம் அன்றாடமே !!
கொக்கரித்த கொம்பன்களையும் விரிநெஞ்சு வீரர்களையும் வேரோடு பெயர்த்தெறிந்து வேரிடத்தில் நட்டவரே !!
கொடுமைகள் பல உள்வாங்கி அடிகளைத்தன் சிரந்தாங்கி பட்ட வலி உண்டு பெரு ஏப்பம் விட்டவரே !!
தந்தையாய் மட்டுமின்றி நல்தலைவனாகவும் திகழ்கிறீரே !!
நாளும் நேரமும் நின்றாலும் நில்லாமல் தன் வேலையில் சிறக்கிறீரே !!
நான் உன் உதிரமென ஊரெங்கும் உரக்கக்கூறுவேனே !!
நான் உன் சித்திரமென நீ செருக்க வருநாளில் வாழ்வேன் நானே !!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro